1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,528
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதுவரைக்கும் இந்த வருடம் எனக்கு பிரமாதமான வருடமாக அமைந்தது என்றே சொல்லலாம்.
    சொல்ல போனால் 100% நிம்மதி. சந்தோத்திற்கும் எந்த குறையும் இல்லை. உறவுகள் மேலும் பலப்பட்டு இருக்கிறது. வேலை ஜம்முனு போகுது. சொகுசான ஒரு தொலை தூர தொழில் பயணம். ஒரு விலை உயர்ந்த ஷாப்பிங். செய்த அத்தனை முதலீடும் MIDAS TOUCH.

    இந்த வருட ஆரம்பத்தில் நான் பதிவிட்ட பதிவிற்கும் இந்த வருடத்தின் இந்த கடைசி பதிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. :grinning::grinning:

    2024 தீபாவளி வாரத்தில் ஒரு விலை உயர்ந்த ஷாப்பிங் முடித்து விட்டு நானும் எனது இணையும், இந்த வருடம் மணம் புரிந்த எனது நெருங்கிய Gen Z தோழியும் அவரது இணையும், முதல் முறையாக சேர்ந்து ஒரு ஹோட்டல் சென்றோம். எங்கள் எல்லோருக்கும் பிடித்த தாயகத்து உணவுகள் (Appetizers, Soup, Main course, dessert) ஆர்டர் செய்தோம். மெயின் சாப்பாடு வந்ததும் எனது இணை எனது தட்டில் முதலில் சாப்பாடு எடுத்து வைத்தார்/உணவு பரிமாறினார். இதை பார்த்து எனது தோழியின் இணையும் உடனே எனது தோழியின் தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தார்/உணவு பரிமாறினார். ஒருவரது அன்பின் வெளிப்பாடு பக்கத்தில் இருப்போரையும் தொற்றிக்கொள்ளும் போது கிடைப்பது இரட்டை சந்தோஷம் - அடடா ரகம்!!

    இந்த வருடம் ஆரம்பத்தில் தான் எனது இணையின் கல்லூரி நண்பர்களோடு (5 couples - C1, C2, C3, C4, C5) தாயகத்து trekking சம்பவம் நடந்தது. இந்த வருட கடைசியில் அதே நண்பர்களுடன் தாயகத்தில் புகழ்பெற்ற பீச்சில் என்ன சம்பவம் எங்களுக்கு காத்திருக்கிறது? Jan 2025 ல கிறுக்குகிறேன். Happy 2025!! :grinning::grinning:
     
    vidhyalakshmid likes this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,745
    Likes Received:
    1,883
    Trophy Points:
    325
    Gender:
    Female
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,528
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    தமிழரின் அடையாளத்தை வளர்க்கும் விதத்தில் பட்டிமன்றத்தில் சாதகமாக பேசி இருப்பதற்கு பாராட்டுக்கள். சிறு தானியங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். - இங்கு இதில் மட்டும் தான் எங்கள் இல்லத்து இட்லி/தோசை. அரிசி சேர்ப்பதில்லை. அப்படியே சேர்த்தாலும் கருப்பு கவுனி அரிசி தான். வெள்ளை நிறமற்ற இட்லி சாப்பிட எப்படி இருக்கும் ? சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. தக்காளி சட்னி தான் காப்பாத்துது. நான் தமிழர் அடையாளத்தை வளர்க்கிறேனா?

    பாராளமன்றத்தில் திருக்குறள் சொல்வதை சொன்னீங்க. கடந்த இரண்டு நாட்களாக தாயகத்து பட்ஜெட் அலசல் பார்த்து கொண்டு இருந்தேன். (PC விமர்சனம்) கனிமொழி தெரிவித்த கருத்து தான் எனது நினைவிற்கு வந்தது - மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை.

    உண்மையை சொன்னால் தமிழரின் அடையாளம் வளர்க்கப்படுவதாக எனக்கு தெரியல. என்னை கேட்டால் தமிழரின் அடையாளம் என்பதை விட தனிமனித அடையாளம் வளர்ப்பது தான் முக்கியம் என்பேன். நீங்கள் கடைசியாக சொன்னது போல தமிழ் சிகரத்தை தொட்டால் எனக்கு சந்தோஷம் தான்.
     
    vidhyalakshmid likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,528
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அனைவருக்கும் வணக்கம்.

    தாயகத்தில் இருந்து கிளம்பி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்து விட்டது. மனம் இன்னும் அங்கேயே தான் இருக்கு. நிறைய என்ஜாய் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன். மனசு மக்கர் பண்ணுது. ஏனோ தானோ என்று அலுவலக வேலை பார்த்து கொண்டிருக்கிறேன். Hey AI, எப்போ தான் என்னோட வேலையை நீ எடுத்துக்க போற? அதுவும் சீக்கிரமா செய்யேன் என்று புலம்பி கொண்டு இருக்கிறேன். தாயகத்து நினைவு பாதி நடைமுறை பாதி என்று இருக்கிறேன். வருடம் தோறும் செய்யும் blood work - result நன்றாக இருந்தது கொஞ்சமே கொஞ்சம் கொலஸ்ட்ரால் தவிர. திட்டமிட்டு செய்த உணவு மாற்றம் தினந்தோறும் நடக்கும் நடை தக்க பலனை தந்து இருக்கிறது. ஆயுள் இருக்கற வரைக்கும் தெம்பா இருக்கணும் ஊர் ஊரா நாடு நாடா கடல் கடலா சுத்தணும் என்பதற்கு தான். இந்த வருடத்து தீம் - Healthy உணவு முறையை பின்பற்றுவது.

    இந்த முறை பயணத்தில் ஒன்றை உணர்ந்து கொண்டேன்: பயணம் - அதி அற்புதமான விஷயம். இனிமேல் உள்நாடு/ கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வெளி நாட்டு பீச் பீச் ஆக தனியாகவும் இணையுடனும் நண்பர்களுடனும் சுத்தலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.
     
    vidhyalakshmid likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,528
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இப்போ தான் நாங்கள் ஊர் சுத்தி விட்டு வந்து இருக்கிறோம். எனது இணையின் நண்பர்கள் அவர்களது குடும்பத்து நபர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு WhatsApp க்ரூபில் நாங்கள் இருக்கிறோம். இந்த வருட கடைசியில் அடுத்த பயணம் எங்க போலாம்? என்று இப்பவே பேச ஆரம்பித்து விட்டோம். இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. கண் மூடி கண் திறப்பதற்குள் நாட்கள்/மாதங்கள் கடந்து விடாதா?

    Feb ஆரம்பித்து விட்டது. யோசித்து Special assignment செய்ய எனக்கு இப்போ மூளை வேலை செய்யவில்லை. 96 படத்தின் part 2 வரும். நான் அந்த தீம் எடுக்கவில்லை. அதை Feb 2026 ல எழுத முயற்சிக்கிறேன். 2026 ல எழுதுவதாக தான் போஸ்ட் #8100 ல கிறுக்கி இருக்கிறேன். Typo நல்லதா போச்சு!!

    Feb 2025 Special assignment - Contrasting Couples. சொந்த அனுபவங்கள் மற்றும் இடது/வலது பக்கத்து வீட்டு/ எதிர்த்த வீட்டு அனுபவங்களை வைத்து கிறுக்கலாம் என்று இருக்கிறேன்.

    Feb 2025 CC - #1 தம்பதிகளில் ஒருவர் ஒரு ரூபா கொடுத்தால் ஒரு கோடிக்கு பேசுபவர்; இன்னொருவர் ஒரு பைசா விற்கு பேசுபவர் :wink::wink:

    பைசாவுக்கு மதிப்பு இருக்கா? கோடிக்கு மதிப்பு இருக்கா?

    உலகம் - mind voice: பேசி பேசியே கைக்குள்ள போட்டு வைத்து கொள்ள வேண்டியது. பாவம் - வாயில்லா பூச்சி.

    இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியமில்லை. தம்பதிகள் அவர்களுக்கு என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

    1 crore - mind voice: பேச வேண்டியது தான? வாயில என்ன கொழுக்கட்டை யா இருக்கு?
    1 paisa - mind voice: பேச்சை நிறுத்த வேண்டியது தானே? கொழுக்கட்டை வைத்து வாயில் அடைத்தால் என்ன?

    பொதுவான கேள்வி: இந்த தம்பதிகளில் பேசாதவர் பாவமா? :wink::wink:

    CC #1 க்கு பாடல்கள் (பேச்சு vs மௌனம்)
    YT - பேசுவது கிளியா (பேச்சு)
    YT - மௌனமே பார்வையால் (மௌனம்)
     
    vidhyalakshmid likes this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,745
    Likes Received:
    1,883
    Trophy Points:
    325
    Gender:
    Female
    சிறு தானிய தோசை செய்தேன்,சப் சப் என்று இருந்தது. நீங்கள் சொன்னது போல் வெங்காய சட்டினி செய்ததால் தப்பித்தேன். நார் சத்து சேர்க்கிறோம் என்ற எண்ணம் தான். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
     
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,745
    Likes Received:
    1,883
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Both songs good choice and contradictory. I like the KOZHUKATTAI punch, I may use it if there is no copyright issue!:yum:
     
    singapalsmile likes this.
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,745
    Likes Received:
    1,883
    Trophy Points:
    325
    Gender:
    Female
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,528
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நா பயிற்சி - முயற்சி செய்யலாம். எந்த தலைப்பை கொடுத்தாலும் ஆராய்ந்து பேசும் உங்களுக்கு பாராட்டுக்கள். திரௌபதி க்கு நாக்கு நீளமாக இருந்து இருக்கலாம். ஆனால் இழைக்கப்பட்ட அநீதி எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது.

    இந்த தலைப்பை எனக்கு கொடுத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துருப்பேன். "நா" என்றதும் எனது நினைவிற்கு ஒன்று தான் வந்தது - சுவை அறிதல். Healthy ராகி சேமியா டின்னர் க்கு ஆச்சு. இப்போ தான் ரசமலாய் கேக் சாப்பிட்டேன் (பாதி தான்) - இன்னொரு பாதி சாப்பிட நாக்கு துடித்தாலும் மூளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறது. மூளையை எப்படி சலவை செய்து மீதி பாதி கேக் சாப்பிடலாம் என்று மூளையிடமே மன்றாடி கொண்டிருக்கிறேன். :grinning::grinning:
     
    vidhyalakshmid likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,528
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நார்சத்து க்கு Chia seeds சாப்பிடுங்கள். நான் கடந்த ஆறு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறேன். எடை கொஞ்சம் குறைந்து விட்டது. பத்து வருடத்திற்கு முன்பு வாங்கிய Slim fit jeans இப்பவும் கனகச்சிதமாக பொருந்துகிறது.

    தாயகத்தில் இருந்தபோது நாக்கிற்கு ருசியாக மட்டுமே மூணு வேளை சாப்பிட்டு (வீட்டு மற்றும் நிறைய ஹோட்டல் சாப்பாடு) ஸ்வீட் காரம் ஐஸ் கிரீம் என்று தாறு மாறாக சாப்பிட்டும் அதே வெயிட் தான். தாயகத்தில் இருந்து திரும்பி வரும்போது பொதுவாக ஒரு கிலோ எடை கூடி இருப்பேன் சந்தோஷமும் சேர்ந்து. இந்த முறை வெயிட் கூடாதது எனக்கு ஆச்சர்யம்.
     
    vidhyalakshmid likes this.

Share This Page