1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    சினத்தை நெறிப்படுத்துதல் - நல்ல தலைப்பு. தூய தமிழில் உரையாற்றியதும் நன்று. கோபமானி - எனக்கு இது புது வார்த்தை. கோபப்படுபவர்களை மூன்று வகையாக வகைப்படுத்தியது சிறப்பு. ஒன்று இரண்டு என்று எண்ண துவங்கி கோபத்தை கட்டுப்படுத்த நினைத்தால் நீர் மட்டம் போல உயரும் என்று சொன்னது சூப்பர்.

    கண்ணகி/பாஞ்சாலி - எனக்கு மாற்று கருத்து இருக்கிறது.

    பாஞ்சாலி - எல்லோர் முன்னிலும் முதலில் தருமரை கோவத்தில் பளார் என்று அறைந்தார்களா ?

    கண்ணகி - கோவத்தில் கோவலனை நாலு போடு போட்டார்களா? தட்டி கேட்டார்களா ?

    என்னோட இயல்பிற்கு எனக்கு சட்டுனு கோபம் வராதது நான் வாங்கி வந்த வரம். அதனால் தான் எல்லா இடத்திலும் சுமுகமா பொழப்பு ஓடுது. :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலகத்தில் அலுவல் காரணமாக எதிர்பாராத தொலை தூர பயணம் - பத்து நாட்களுக்கு மேலாக. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த நாட்டிற்கு. மூன்று ஆங்கிலேயர்கள் என்னுடன் பயணம் செய்தார்கள். விமானத்தில் பிசினஸ் கிளாஸ். தங்கியது ஐந்து நட்சத்திர ஓட்டலில். காலை உணவில் 40 வகைகள். நான் ரசித்து சாப்பிட்டது என்னவோ நாலு வகை மட்டுமே. வார இறுதியில் கொஞ்சம் ஊர் சுற்றி பார்த்தோம். கொஞ்சம் ஷாப்பிங். நிறைய வேலையோ வேலை. வேலை ரீதியாக நிறைய பேச்சு. பேச்சை கேட்பதற்கு 75 நபர்கள் இருந்தார்கள். அதுவும் மைக் கொடுத்தால்? சும்மா விட்டு விடுவேனா? சுமார் மூன்று மணி நேரங்கள் தொடர்ந்து பேசி இருப்பேன். நான் சொல்வதை புரிந்து கொண்டார்களா? என்பதை உறுதி படுத்த நிறைய கேள்விகள் கேட்டேன். உரையாடலில் எல்லோரையும் பங்கு கொள்ள செய்தேன். கடினமானவற்றை எளிய விளக்கம் கொடுத்து/வெள்ளை போர்டில் எழுதி புரிய வைத்தேன். கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.

    தொழில் நுணுக்கம்/அறிவு தந்த தன்னம்பிக்கை/ பொங்கி வழியும் எனர்ஜி/ ஆளுமை அதிகார தோணியில் பேச்சு - மாலை ஐந்து மணி - 75 நபர்களில் ஒருவர் கூட சீட்டை விட்டு நகரவில்லை. முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து கை தட்டினார்கள். உடன் பணிபுரியும் மூன்று ஆங்கிலேயர்கள் என்னிடம் வந்து என்னுடைய பேச்சை பாராட்டி விட்டு சொன்னது: "Motivational speaker" ஆக இருந்து இருந்தால் நீ எங்கோ சென்று இருப்பாய் என்று. அதற்கு புன்னகை மட்டுமே பதிலாக தந்தேன். என்னுடைய வாழ்வில் நான் மிகவும் மிகவும் பெருமிதமாக உணர்ந்த நாள் அது. அப்படி ஒரு ஹை!! கார்பொரேட் வேலை இன்னும் காந்தமாக இழுக்கிறது!! வேலையின் காரணமாக இங்கு வர இயல வில்லை.
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நண்பர்களுடன் நான் தியேட்டரில் பார்த்த புத்தம் புது படம் - வேட்டையன்

    Encounter - சரியா? தவறா?

    என்னை கேட்டால் சரி என்பேன். கடுமையான தவறு புரிந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படணும். இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

    தவறே செய்யாதவர்கள் என்றால்? திட்டமிட்டு அப்பாவியை encounter பண்ணிட்டு உண்மை குற்றவாளியை தப்பிக்க விட்டு விட்டால்? இந்த இடத்தில Encounter - சரியா? கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வேன்.

    இந்திய சட்ட ரீதியாக நியாயம் கிடைக்க எத்தனையோ வருடங்கள் போராட வேண்டும். சட்டத்தின் தீர்ப்பிற்காக காத்து கிடக்கணுமா? அதிகாரம் இருப்பவர்கள் தப்பு செய்தவர்களை உடனே encounter பண்ணலாமா? என்ன பதில் சொல்வதென்று தெரியலை.

    படிப்பு கண்டிப்பாக முக்கியம். டாக்டர் படிப்பு தான் படிக்க வேண்டும் என்று உயிரை கொடுத்து படிக்க முயற்சி செய்து/ இயலாத காரியம் என்று பின்பு அறிந்து உயிரை விடுவது சரியா? இவர்களது பெற்றோர்களின் நிலை?

    Shooting stars - போலீஸ் துறையில் திறமை இருந்து நேர்மை இருந்து அசாத்திய துணிச்சல் இருந்தால்? எனக்கு இந்த படம் பிடித்து இருந்தது. தலைவர் - சரியான படத்தை தான் தேர்வு செய்து இருக்கிறார்!!

    YT - மனசிலாயோ - வேட்டையன்
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,731
    Likes Received:
    1,877
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Story and theme is OK, but some scenes are disturbing and repeatedly replayed.
     
    Thyagarajan likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    12,749
    Likes Received:
    13,485
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #8092
    @singapalsmile
    I enjoyed reading your chaste Tamil expressing how you enjoyed the offshore lecturing and 5star extravaganza that reached a crescendo of question answer session.

    You narration taken me to the rendezvous or the spot where you had the relishing opportunity of delivering presentation speech that included desideratum.

    It transported my mind to such a lecture in a huge well-designed hall around a large elliptical table where the audience seated were drawn from various disciplines located from different parts of India engaged in mining uranium, producing atomic energy for basic & technological research. The subject of lecture was "intricacies in import and export for atomic energy departments".

    The scheduled lecturer was to arrive at Bombay Santacruz airport ex New Delhi. Time to start lecture 10am to 1pm.

    The coordinator Dr.J rushed to my chamber looking perturbed. Time was 9.15am. "Hello Good morning Mr T. The ongoing seminar in our complex is concluding today. The main speaker had just telephoned that his 7 O'clock flight departure is getting delayed due to technical snag in the aircraft. I want you to hold the stage and speak something related to shipping. I just gone through your previous exp and I know your capabilities. You will be able to handle the participants better".

    I looked at related papers and found the participants are very seniors and highly accomplished scientists with work exp over three decades. I will probably look ameture to lecture them and so I told Mr J politely to excuse me & that I may cut a sorry figure. He said he can't take no for an answer & I must help him and the save department face!

    I reluctantly nodded my head and J drove me to seminar hall; and at the podium he gave a short-speech about the prevailing situation and introduced me to the members awaiting lecture.

    I was dumb-struck for a while and vicariously I wished to my village deity and my Spouse! An idea flashed in my mind.

    I told them about one of my plights* when I as an officer still wet behind the ears. It was for almost an hour; and the members seem to have enjoyed.

    The aroma of fried rice pappad parrotha Kurma and other sabjis wafted through partition. Buffet was getting ready and participants did ask some tricky and serious questions which I could dodge with my witty bat.

    *
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,731
    Likes Received:
    1,877
    Trophy Points:
    325
    Gender:
    Female
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    எப்படி இருக்கீங்க?

    நான் உங்களது எதிரணியில் முதலாவதாக நிற்கிறேன். தகராறு செய்ய வரல. நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களை வாதிட வந்து இருக்கிறேன்.

    நீங்கள் குறிப்பிட்ட கடைசி வரிகள்: பண்டிகைகளின் நோக்கத்தில் விரிசல் இல்லை. விரிசல்களுக்கு காரணம் மக்களின் பேராசை, மயக்கம், உயர்வு தாழ்வு மனப்பான்மை, பண பாற்றாக்குறை, விசால மனமின்மை தான் பண்டிகை காரணமாக உறவுகளில் விரிசல் தான் அதிகம் என்பதை ஆணித்தரமாக உரைக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை அப்படி இருப்பவர்களால் என்றும் உறவுகளில் விரிசல் தான். குறைந்தபட்சம் நல்ல நாள் ஆன தீபாவளி திருநாளில் ஆவது கொஞ்சம் அடங்கி இருப்பார்கள்/அடங்கி இருப்பதாக நடிப்பார்கள். சீரான உறவு இருந்தால் பண்டிகைகள் மேலும் உறவை பலப்படுத்தும். விரிசல் இருக்கும் உறவுகளுக்கு சண்டை னு வந்துட்டா எல்லா நாளும் பட்டாசுதானே? தீபாவளிக்கு காத்திருக்கணுமா என்ன?

    பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க தாராளமா செலவு செய்யலாம். அதுவும் முதல் கட்ட கல்லூரி டிகிரி வரைக்கும் மட்டும் தான். மேற்படிப்பு செலவுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்க கூடாது. திருமண செலவிற்கு பொறுப்பு ஏற்க கூடவே கூடாது கூடாது. திருமண சீர் செய்யும் முறையை முதலில் தூக்கி எறியனும். பெற்றோர்கள் வயதான காலத்தில் செலவு செய்ய அவர்களுக்கு என்று பணம் வேண்டாமா? நான் நடுத்தர மக்களுக்காக பேசுகிறேன். (பெட்டி பெட்டியாக/மூட்டை மூட்டையாக பணம் வைத்து இருக்கும் பங்களா வாசி பெற்றோர்கள் எவ்ளோ வேணாலும் மனம் உவந்து தண்ணீராய் பணத்தை பிள்ளைகளுக்காக/திருமணத்திற்காக செலவு செய்யட்டும்/பிள்ளைகளுக்கு பணம் கொடுக்க மனமின்றி பணத்தை தண்ணீரில் வீணாக தூக்கி வீசட்டும். அதில் எந்த கேள்வியும் எனக்கு கிடையாது.) என்னை பொறுத்தவரை 21 வயதிற்கு பிறகு பெற்றோர்களின் தயவை பிள்ளைகள் எதிர்பார்க்கவே கூடாது. 21 வயதில் பிள்ளைகளை கரை ஏற்றி விட்ட பிறகு பெற்றோர்கள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து போகட்டுமே.

    சகோதரர்களில் ஒருவர் வசதியாக இருந்து மற்றொருவர் வசதி குறைவாக இருந்தால் தீபாவளி அன்று அவர்களுக்காக செலவு செய்வதில் என்ன குறைந்து விட போகிறது? பணம் இருந்து என்ன பிரயோஜனம்?
    நல்ல மனசு வேண்டாமா?

    ஒரு தாழ்மையான வேண்டுகோள். மாமியார் மருமகள் என்றால் இப்படி தான் என்ற தப்பான முத்திரையை இனிமேல் குத்த வேண்டாம். ஒரு தாய் க்கு மகள் மகள் தான் மருமகள் மருமகள் தான். அப்படியே இருந்துட்டு போகட்டுமே!! (இப்படியும் மாமியார் இருக்கிறார். தான் சேர்த்து வைத்த பொருட்களை எல்லாம் தனது புது மருமகளிடம் காட்டி உனக்கு எது வேணாலும் எடுத்து கொள் என்று சொன்னவர். 10+ வருடங்கள் கடந்தும் மாறவில்லை. இன்றும் அதே புராணம் தான். அந்த மருமகள் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டாள்; 21 வயதிற்கு பிறகு பெற்றோர்களின் தயவை எதிர்பார்க்காமல் இருப்பவள்; பெற்றோரின் பொருளே வேண்டாம் எனும் போது மாமியாரின் பொருட்களை வேண்டும் என்று சொல்வாளா? என்பதை அந்த மாமியார் என்று தான் புரிந்து கொள்வாரோ? மாமியார் பெற்ற மகன் போதாதா? :wink::wink:)

    .
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கேவலமான சில காட்சிகளை திரும்ப திரும்ப காண்பித்து இருப்பதை கண்டிப்பாக தவிர்த்து இருக்கலாம். Encounter சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் பொருத்தமான காட்சிகளை வைத்து திரைக்கதையை அமைத்து இருக்கலாம். சூழ்நிலையை பொறுத்து தான் தான் சரி தவறு என்று முடித்து இருக்கலாம்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகத்திற்கு விடுமுறைக்கு செல்வதால் கிப்ட்ஸ் வாங்கி கொண்டிருந்தேன். எங்கள் வீட்டு குட்டி பொன்னியின் செல்வனின் (PS) தோழியான ஒரு குட்டி பாப்பாவிற்கு என்ன கிப்ட் வாங்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். சட்டென்று Barbie doll நினைவிற்கு வந்தது. எனது Gen Z தோழியிடம் என்ன கிப்ட் வாங்கலாம் என்று கேட்டேன். கார் வாங்க சொன்னார். பெண் குழந்தைக்கு கார் பிடிக்குமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது (Gender bias). அந்த கேள்வி தப்பான கேள்வி அல்லவா? ஏன் இப்படி யோசித்தேன் என்று என்னை நானே திட்டி விட்டு எண்ணத்தை திருத்தி கொண்டேன். Hot wheels tracks/cars வாங்கி வைத்து இருக்கிறேன்.

    கடந்த வார இறுதியில் எனது வீடியோ உரையாடல் PS உடன்.

    V: உன்னோட friend M க்கு கார் பிடிக்குமா?
    PS: Girls க்கு கார் பிடிக்காது
    V: அதை M உன்கிட்ட சொன்னாளா?
    PS (யோசிக்கிறான்)
    V: உன்கிட்ட Kitchen set இருக்கா ?
    PS: இருக்கு
    V: Girls தான் Kitchen set வச்சு விளையாடுவாங்க. நீ எதுக்கு Kitchen set வச்சுருக்க? நீ girl aa?
    PS: Boys விளையாடலாம். என்னை கிண்டல் பண்ணாத (சொன்ன விதம் க்யூட் )
    V: உங்க அப்பாவும் cook பண்ணுவான் தானே? Kitchen set யாரு வேணாலும் விளையாடலாம். Girls/Boys cook பண்ணலாம். என்னோட கார் பார்த்து இருக்க தானே? Girls/Boys க்கு கார் பிடிக்கும்.

    கார் கொடுத்து M's reaction பார்க்க ஆவல்!! M க்கு kitchen set வாங்கணுமா? என்றும் யோசிக்கிறேன். அடுத்த வருடம் ஆரம்பத்தில் M's reaction பற்றி இங்கு எழுதுகிறேன்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,518
    Likes Received:
    2,521
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்தில் திரை அரங்கில் பார்த்த ஒரு படத்தை பற்றி எழுதாமல் விட்டு விட்டேன். Kalki 2898 AD - என்னை வேறு உலகிற்கு அழைத்து சென்ற பிரமாண்டமான படைப்பு. படம் பார்த்து முடித்தவுடனே நான் கேட்ட கேள்வி - எப்போ part 2 வரப்போகுது? Part 2 பார்த்த பிறகு எழுதுகிறேன்.

    வீட்டில் இருந்து பார்த்த படம் - லப்பர் பந்து. என்னை வெகுவாக ஈர்த்தது. இரண்டாம் முறையாக இந்த படத்தை பார்க்க ஆசை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அருமை. ஒவ்வொரு சீனும் ரசிக்க வைத்தது. நடுத்தர வயது காதல் செம! இந்த ரொமான்டிக் பாடல் படம் பார்த்து முடித்தும் காதில் ஒலித்து கொண்டிருந்தது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!!

    வீட்டில் இருந்து பார்த்த இன்னொரு படம் - மெய்யழகன். எனக்கு படம் பிடித்ததா? மனம் கலந்த உரையாடல் எப்பவும் எனக்கு பிடிக்கும். இந்த படம் பார்த்த பொழுது எனது வாழ்வில் நான் சந்தித்த/ இன்றும் என் வாழ்வில் பிணைந்து இருக்கும் மனிதநேயம் கொள்ளை கொள்ளையாக கொண்ட சில நபர்கள் எனது நினைவிற்கு வந்தார்கள். அவர்களை எல்லாம் கூப்பிட்டு பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அவர்கள் அளவிற்கு என்னால் அன்பை அவர்களிடம் திருப்ப செலுத்த தெரியாது. அவர்கள் உடன் இருக்கும்போது நான் வேறாக உணர்ந்து இருக்கிறேன்.

    இன்னொன்றும் சொல்லி கொள்கிறேன் இந்த படத்தை பார்க்கும்போது மூன்று முறை நேரத்தை பார்த்தேன். எப்போ படம் முடியும் என்று! கொஞ்சம் இழுவையாக இருந்தது. படம் பார்த்து முடித்து தூங்கி எழுந்த அடுத்த நாள் இந்த படத்தை பற்றி யோசித்தபோது எனக்குள் வந்த கற்பனை. திருமணம் இன்னும் ஆகாத 96 பட ஜானுவும் ராமும் மெய்யழகன் படத்தில் இருந்தால்? இருவரும் ஒரு உறவினரது திருமணத்தில் சந்தித்து எழில் நிறைந்த மெய்யழகன் வீட்டில் இரவில் தங்கி இருந்தால்? சொல்லாமல் ஊரை விட்டு போனாலும் இன்னும் காதலை சுமக்கும் ராம், திருமணம் ஆகாமல் இன்னும் சொல்லாத காதலை சுமக்கும் ஜானு, இவர்கள் இருவரது ஊடலும் உரையாடலும் இரவு முழுவதும் இருந்து காலையில் யமுனை ஆற்றிலே பாட்டை ஜானு பாட படத்தை முடித்து இருக்கலாம். என்னவெல்லாம் இவர்கள் இரவில் பேசி இருந்து/கடலை போட்டு இருப்பார்கள்? இதை Feb 2026 Special assignment ஆக வைத்து கொள்ளவா? :wink::wink:
     
    Thyagarajan likes this.

Share This Page