1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பதில் காரணத்துடன் தன்தமைக்கு நன்றி.
    பாட்டை ரசித்தமைக்கு நன்றி.
    ஈர்த்தவரி எது?
     
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Super topic for the debate!:grimacing:
     
    Thyagarajan likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Interestingly written. PS நல்லா வருவான்!:)
     
    singapalsmile and Thyagarajan like this.
  5. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,211
    Likes Received:
    519
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi vedha epidi irukeenga. Thanks for keeping this thread alive. Romba nall kazhuchu oru pattu share panna vandhen, my favorite

    [​IMG]
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஆரம்ப காலத்தில் இருந்து இந்த poetic thread follow பண்றவங்களுக்கு என்னை ஈர்த்த வரி தெரியும்.

    Clue: என்னை ஈர்த்த அந்த வரி C போஸ்ட் செய்த பாடல் வரிகளிலும் வரும்.
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,

    வணக்கம். எப்படி இருக்கீங்க? நான் சூப்பர்.

    அடிக்கடி இந்த பக்கம் வந்து பாடல் போஸ்ட் பண்ண முயற்சிக்கவும். உங்களோட fav பாடல் சூப்பர்.
     
    cinderella06 and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகத்தில் எனக்கு trekking shoes எதற்கு ?

    எனது இணைக்கு தாயகத்தில் அவருடன் கல்லூரியில்/ க்ளாசில் படித்த அஞ்சு ஆண் நபர்கள் மிக நெருங்கிய நபர்கள். இன்றும் அவர்களுடன் நட்பு பலமாக தொடர்கிறது. தாயகம் சென்றால் இவர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். முதல் முறையாக இந்த முறை இவர்களை சந்திக்க என்னையும் அழைத்து சென்றார். ரிசார்ட்டில் சந்தித்தோம். அனைவரும் அவர்களது இணையுடன் குழந்தைகளுடன் வந்து இருந்தார்கள். 5 couples. எங்களையும் சேர்த்தால் 6. எல்லோருமே நன்கு படித்து தாயகத்தில் நல்ல வேலையில் இருப்பவர்கள். நல்ல பேசினோம். இனிதாக பொழுதை கழித்தோம். கேம்ஸ் விளையாடினோம். இரவு நேரத்தில் எல்லோரும் பசுமை நிறைந்த திறந்த வெளியில் சேரில் அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தோம். இவர்களது குழந்தைகளிடம் (பெரிய பசங்க/பொண்ணுங்க) நான் கேள்வி கேட்டு கொண்டிருந்தேன் - என்ன படித்து எதிர்காலத்தில் எந்த வேலையில் சேர போறீங்க? எந்த துறை தேர்ந்து எடுக்க போறீங்க? என்ன பிளான் வைத்து இருக்கீங்க? தெளிவாக பதில் சொன்னார்கள். எல்லோரையும் எனக்கு பிடித்து இருந்தது. இந்த Q & A session முடிந்தவுடன், எனது இணையின் நண்பர்களில் ஒருவர் என்னிடம் வந்து, நல்ல கேள்விகள் கேக்கறீங்க. Couples க்கு மட்டும் ஒரு Q & A session நடத்துங்க என்றார். என்னை கேள்வி கேட்க சொன்னால் எனக்கு லட்டு/அல்வா சாப்பிடும் உணர்வு தான். அதுவும் couples வைத்து கேள்விகளா ? கலக்கி இருக்க மாட்டேனா? எல்லோர் முகத்திலும் சந்தோச பொழிவு. Couples Q & A session நடத்தி அந்த சந்தோஷம் குறைந்தால்? வேண்டாங்க. எல்லோரும் இப்படியே சந்தோசமா ஊருக்கு போகணும், அடுத்த முறை Q & A பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன்.

    அடுத்த நாள் இவர்களுடன் trekking plan. ஒரு மணி நேரம் நடப்போம் என்று தப்பாக நினைத்து விட்டேன். எத்தனை நேரம் ஆனது தெரியுமா? 6 to 7 hours நடை. காடு மேடு செங்குத்தான கற்கள் தான் பாதி பாதை முழுவதும். வழுக்கி/தடுக்கி விழுந்தால் எழும்பு முறிவு நிச்சயம். காட்டு விலங்குகள் நடமாட்டமும் உண்டு. டவர் கிடையாது. போன் சிக்னல் கிடைக்காது. குழந்தைகள் கூட்டமா சேர்ந்து கட கட வென்று நடந்து விட்டார்கள். திரும்பி வந்தபோது மொத்தமா சோர்வு அடைந்து விட்டார்கள். குழந்தைகளுக்கு இந்த நிலைமை என்றால்? 6 couples (C1, C2, C3, C4, C5, C6) நிலைமை ?

    C1 - பத்து நிமிடங்கள் தான் நடந்து இருப்பார்கள். இருவருக்கும் கால் வலி மூட்டு வலி. நடக்க முடியாது என்று சொல்லி ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து விட்டார்கள். மலை அடிவாரத்தில் அங்கு ஒரு பாட்டி ஒரு சின்ன கடை நடத்தி கொண்டிருந்தார். இந்த C1 நல்ல காரியம் செய்தார்கள். பாட்டிக்கு பணத்தை கொடுத்து சமையல் பொருட்கள் வாங்க சொல்லி தக்காளி சோறும் சூப்பும் பஜ்ஜியும் சுட சுட ரெடி பண்ணி வைத்து இருந்தார்கள் - நாங்கள் திரும்பி வந்து சாப்பிடுவதற்கு வசதியாக. பாட்டியிடம் கதை பேசி மலை வாழ் மக்கள் வாழ்வை பற்றி தெரிந்து கொண்டார்கள்.

    C2 - இவர்கள் இருவரும் செம active வேலையின் காரணமாக. ஒருவர் கல்லூரி நாட்களில் விளையாட்டு வீராங்கனை. வெற்றியாக இருவரும் சேர்ந்து நடந்து விட்டார்கள்.

    C3 - ஒரு முறை இங்கு ஏற்கனவே வந்து நடந்தவர்கள். இவர்கள் சொல்லி தான் இந்த இடம் எங்களுக்கு தெரியும். ஒருவர் - தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்பவர். இன்னொருவர் - நன்றாக நடப்பவர். சாப்பாட்டிலும் கண்ட்ரோல். வெற்றியாக இருவரும் சேர்ந்து நடந்து விட்டார்கள்.

    C4 - விடா முயற்சி வெற்றி நிச்சயம் என்று நினைத்து விடாப்பிடியாக நடந்தவர்கள். சுத்தமாக உடற்பயிற்சி கிடையாது. தன்னம்பிக்கையுடன் நடந்து உயரத்தில் எல்லையை 90% தொட்டு விட்டார்கள். திரும்பி வேறு நடக்க வேண்டும். ஒருவர் 90% நடந்தவுடன் இனிமேல் முடியவே முடியாது என்று அமர்ந்து விட்டார். இவரது துணையும் இவருக்காக அங்கேயே முடித்து விட்டார்.

    C5 - நாங்கள் தான். எனது இணைக்கு இந்த இடம் ஜுஜுபி. எனக்கு? இமாலய முயற்சி. ஆரம்பத்தில் எனது இணை அவரது நண்பர்களோடு சேர்ந்து நடந்தார். நான் மற்ற நண்பர்களுடன் (C2, C4, C6) பேசி கொண்டு நடந்தேன். C6, அப்போ அப்போ என்னுடன் ரெஸ்ட் எடுத்தார்கள். C2, C4 - எனக்கு முன்னரே நடந்து விட்டார்கள் ரெஸ்ட் எடுக்காமல். மலையில் இறங்கி வருபவர்களிடம் இன்னும் எத்தனை நேரம் ஆகும் என்று கேட்டு கொண்டே இருந்தேன். மேலே செல்வதற்கு இன்னும் 2 hours ஆகும் என்று சொன்னதை கேட்டபோதே எனக்கு தலை சுற்றி விட்டது. திரும்பி வேறு வர வேண்டுமே? தினமும் முப்பது நிமிஷத்து நடை நடந்து தான் பழக்கம். இதெல்லாம் எனக்கு சாத்தியப்படாத முயற்சி.
    எப்படியோ 80% நடந்து விட்டேன். அதற்கு அப்புறம் முடியவே முடியாது. பத்து நிமிடத்து நடைக்கு பிறகு நான் தனியாக இங்கு இருந்து கொள்கிறேன். திரும்ப வரும்போது கீழே சேர்ந்து நடக்கலாம் என்றேன். நீங்கள் (C6) தொடருங்கள் என்று சொல்லி விட்டேன். என்னை எப்படி தனியாக விட்டு நடக்க முடியும் என்று C6 யோசித்தார்கள். சொன்னால் நம்புவீர்களா என்று தெரியவில்லை. எனது நடையை நிறுத்தி என்னுடன் C6 ரெஸ்ட் எடுக்க அமர்ந்த இடத்தில எனது இணை நின்று கொண்டு இருந்தார். நிம்மதி பெரு மூச்சு எனக்கு வந்தது. என்னை பற்றி எனது இணைக்கு தெரியாதா என்ன? போதும் நீ நடந்தது என்று சொல்லி விட்டார். நாங்கள் இருவரும் அமர்ந்து கதை அடித்து நன்றாக ரெஸ்ட் எடுத்து கீழே சேர்ந்து நடந்தோம்.

    C6 - இருவரும் உடற்பயிற்சி என்ன விலை என்று கேட்பவர்கள். C1, C2, C3, C4, C5 - ஒரு வழியாக கீழே வந்து விட்டோம். ஒரு மணி நேரம் கடந்தும் C6 கீழே வரவில்லை. என்ன ஆச்சு என்ற பதைபதைப்பு எங்கள் அனைவருக்கும். மலை வாழ் பாட்டியிடம் சென்று கொஞ்சம் பார்த்து விட்டு வர சொன்னோம். அந்த இடம் அவருக்கு பரிச்சயம் என்பதால். அரை மணி நேரத்தில் அவர் திரும்பி வந்து விட்டார். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் C6 தென்படவில்லை என்று. டென்ஷன் அதிகமானது. மேல திரும்ப நடப்பதற்கு யாருக்கும் தெம்பு இல்லை. C6's kids பரிதாபமாக இருந்தார்கள். எனது இணையும் அவரது C1 நண்பரும் C6 தேடி செல்ல மேல நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து அனைவரும் திரும்பி வந்தார்கள். C6 - சுத்தமாக முடியல. மெது மெது மெது மெதுவாக நடந்து வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் எங்கள் எல்லோருக்கும் நிம்மதி பெரு மூச்சு.

    என்னோட வாழ்க்கையில் ஒரே நாளில் நான் அதிகமாக நடந்தது இந்த நடை சாதனை தான். செம த்ரில் அனுபவமாக எனக்கு இருந்தது.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    விடைபெறும்போது எல்லோரிடமும் சொன்னேன் - இந்த விஷப்பரீட்சை போதும். அடுத்த சந்திப்பு எந்த இடத்தில் என்பதை பெண்கள் தான் முடிவு செய்வோம். அதுவும் சில்லுனு ஒரு பக்கா பீச் இடம் சொல்லி விட்டேன். செலவு ரொம்ப அதிகம் ஆகும் என்றாலும் எல்லோருக்கும் அந்த இடம் ரொம்பவே பிடித்து இருந்தது. அனைத்து நண்பர்களும் எங்கள் இருவரது வருகைக்காக இந்த வருட இறுதியில் வெயிட் பண்ணுவாங்க என்று நம்புகிறேன்.

    அன்று கிடைத்த தனிமையில் எனது இணைக்கு கொஞ்சமாக டோஸ் விட்டேன். வயதான காலத்தில் இந்த trekking தேவையா என்று ? கொஞ்சமாவது யோசனை வேண்டாமா? பெண்கள் கேட்டு trekking முடிவு பண்ணீங்களா? இனிமேல் எங்களை கேட்காமல் இடத்தை முடிவு பண்ண கூடாது.

    Trekking அடுத்த நாள் காலையில் எங்களுக்கு ரயில் பயணம். இரவில் எப்போ தூங்கினேன் காலையில் எப்போ எழுந்தேன் என்றே எனக்கு தெரியாது. Train AC ல அசதியில் தூக்கம் கண்ணை சுழற்றி அடித்தது. Berth ல தூங்கினேன். மதிய உணவிற்கு என்னை எனது இணை எழுப்பினார். Paneer Biriyani. தூக்கத்தில் பாதி சாப்பிட்டு விட்டு மீதியை அவருக்கு கொடுத்து விட்டு திரும்பவும் தூங்கி விட்டேன். பயணத்தில் அஞ்சு நிமிஷம் தான் நான் முழித்த நேரம். மாலையில் ரயில் பயணம் முடிந்தவுடன், ஸ்டேஷனலில் A2B ல அவர் சுட சுட காபி வாங்கி விட்டு எனக்கு சுட சுட பால் வாங்கி குடுத்தார். எங்கே சென்றாலும் கையோடு bournvita எடுத்து செல்வேன். சுட சுட பாலில் 3 ஸ்பூன் வழிய வழிய bournvita மிக்ஸ் பண்ணி குடிக்கும் சுவை என்றுமே எனக்கு இதமானது. அன்று இரவு WFH - புத்துணர்ச்சியோடு அலுவலக வேலை பார்த்தேன். WFH செய்யும்போது 3 AM, IST க்கு கண்களில் தூக்க கலக்கம். எப்படியோ இரண்டு வாரங்கள் WFH செய்து விட்டேன். பகலில் ஊர் சுற்றி விட்டு இரவில் வேலை பார்ப்பது கடினமோ கடினம். வயதின் காரணமா? இந்த தாயகத்து அனுபவங்கள் இன்னும் அஞ்சு மாதங்களுக்கு பிறகு தொடரும். இத்துடன் இந்த வருடத்து தாயகத்து அனுபவங்கள் முடித்து கொள்கிறேன்.

    விமான டிக்கெட் விலை இப்பவே எகிறுது. நாங்கள் புக் பண்ணிவிட்டோம். தாயகத்தில் கிடைக்கும் அனுபத்திற்கு எத்தனை செலவு செய்தாலும் தகும்!!

    சொர்க்கமே என்றாலும்
     
    Thyagarajan likes this.
  10. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Super jottings. Mere reading lends vicarious enjoyment of trekking with that agile group c1 to c6. I read all your posts here and enjoyed a lot reading it. ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தி.
    இறுதியாக sôrgāmé enrālum பாட்டு போட்டு இருக்கீங்க. நன்றி. அந்த பாடல் பற்றி - அழகிய இசைக் கோர்வையும், தொடர்ந்து வரும் சரணத்தை அழகாக இணைக்கும் வயலினும் கேட்கும். Hamsanadam super.
    வெளிநாட்டுக்குப் போய் நிம்மதியாக வெற்றிலை போட்டுத் துப்ப ஒரு இடம் கிடைக்கவில்லையே என்று நம் நாட்டை நினைத்து ஏங்கிப் பாடும் பாடல்.
     
    singapalsmile and vidhyalakshmid like this.

Share This Page