1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த தலைப்பில் பட்டிமன்றங்கள் சுவாரசியமாக நடக்க தான் போகிறது. தலைப்பும் தங்களது பேச்சும் அருமை.

    Happily Married - Oxymoron, Better half - Bitter half, விட்டு கொடுத்தால் தான் கல்யாண கப்பல் பயணிக்கும், ரகிட - தகிட, பயணம் பற்றிய கருத்து, பத்து பொருத்தம் - வருத்தம் --> இதெல்லாம் என்னை ரசிக்க வைத்தது. அதுவும் தலைப்பை சார்ந்தே பேசியது குறிப்பிடத்தக்கது.

    என்னால் கண்டிப்பாக ஒரு பக்கம் இந்த தலைப்பில் பேச இயலாது.

    அதிக மகிழ்ச்சி தி மு தான்
    • திருமணம் பற்றிய எத்தனையோ கனவுகள்/கற்பனைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து இருக்கும் அல்லவா ?
    • ராணியாக தனிக்காட்டு ராஜ்யம் செய்யலாம்

    அதிக மகிழ்ச்சி தி பி தான்
    • சில நேரங்களில்/விஷயங்களில் கற்பனையில் நினைத்ததை விட அற்புதமான நிகழ்வுகள் திருமணத்தால் அரங்கேறும் பட்சத்தில் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று விட மாட்டோமா?
    • ராணியாக ராஜாவையும் சேர்த்து ராஜியம் செய்யலாம் :wink::wink:
     
    svpriya and vidhyalakshmid like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நாங்கள் இருவரும் எனது நண்பர்களுடன் சேர்ந்து திரையில் பார்த்த புத்தம் புதிய படம் - ஜெயிலர். எனது பார்வையில் இந்த படம் எப்படி இருந்தது?

    சில வருடங்களுக்கு பிறகு ஒரு திருப்தியான ரஜினி படம் பார்த்த உணர்வு எனக்கு. (லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தேன். படம் என்றால் அனுபவிக்கனும் ஆராய கூடாது) கதை பழசு என்றாலும் திரைக்கதையில் தொய்வில்லை. ரஜினிக்காக விசில் அடிக்க கூடிய பட்டாசான சீன்கள் இருந்தது. BGM இன்னும் தூக்கியது. ரஜினியை அழகாக காட்டி இருந்தார்கள். நீலாம்பரி மனைவியாக படத்தில் கொஞ்சம் கெத்து காட்டி இருந்து இருக்கலாம். வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையலை என்று இவரை இந்த படத்தில் ரஜினியை பார்த்து சொல்ல வைத்து இருக்கலாம். இடைவேளை சீன் - செம! கன்னட ஸ்டார், மலையாளம் ஸ்டார் வரும் காட்சிகள் மாஸ். காவாலா பாடல் - தூக்கல்.

    பாரதியார் பாடல் வரிகளை வைத்து வரும் காமெடி என்னை சிரிக்க வைத்தது. வில்லன் அசத்தி இருந்தார்/ மிரட்டி இருந்தார். இரண்டு இடங்களில் இவர் இவரது கும்பலோடு பழைய பாடல்களுக்கு ஆடுவது என்னை ரசிக்க வைத்தது. Dark comedy பிடித்தது. இன்னொரு முறை இந்த படத்தை என்னால் OTT இல் பார்க்க முடியும்.

    எனது இணைக்கு படம் ஓகே ரகம் (இயக்குனர் பாலா படத்தின் தீவிர விசிறி இவர். இவரது திரைப்பட விமர்சனம் பாலா படத்திற்கும்/சோக படத்திற்கும் மட்டும் தான் தூக்கலாக இருக்கும்). சாந்த சொரூபியாக இருப்பதால், ரத்தம் தெறிக்கும் காட்சிகள், இடியாக காதை துளைக்கும் இசை/பாடல்கள் எனது இணைக்கு பிடிக்கவில்லை. ரத்த களரியான சீன் தவிர்த்து இருந்து இருக்கலாம். எனது நண்பர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. ரஜினிக்கும் இயக்குனருக்கும் இசை அமைப்பாளருக்கும் பாராட்டுக்கள்!!

    ஜுஜுபி - ஜெயிலர்
     
    svpriya and vidhyalakshmid like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கும் கடைசி ஓவர்/பந்து வீசப்படுவதை பார்க்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? ஆரம்பத்தில் இருந்து சுவாரசியமாக செல்லும் ஒரு திரில்லர் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் திரை அரங்கில் பார்க்கும்போது எப்படி இருக்கும்? விறுவிறுப்பான ஒரு திரில்லர் புத்தகத்தின் முடிவை படிக்கும் தருணம் எப்படி இருக்கும்?

    இதெல்லாம் மீறிய "படப்படப்பான" மனநிலை தான் நான் இருந்தேன் - Chandrayaan 3 landing தருணத்தில். வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களில் 8:25 AM க்கு அரைகுறையாக கண் விழித்து 8:30 AM க்கு அலுவலக லேப்டாப் முன்னாடி சரியாக கண் முழிக்கும் நான் அன்றைய தினத்தில் சீக்கிரமாகவே எழுந்து ISRO Official YouTube la live ஆக நிகழ்வுகளை பார்த்து கொண்டிருந்தேன். ISRO control room la காண்பிக்கப்பட்ட அத்தனை நபர்கள் முகத்திலும் பதட்டம் இருப்பதாக எனக்கு தோன்றியது. எனக்கும் பதட்டம் கொஞ்சம் தொற்றி கொண்டது. Chandrayaan 1, Chandrayaan 2, Chandrayaan 3 பற்றி ஏராளமான வீடியோக்கள் பார்த்து சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். Vikram Lander நிலாவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியதை பார்த்தபோது எனக்கு விவரிக்க முடியாத சந்தோசம்/ தாயகத்தை பற்றிய பெருமிதமான எண்ணம். ISRO Scientists/Engineers வெற்றி களிப்பில் இருந்தார்கள். இவர்களை எவ்ளோ பாராட்டினாலும் தகும்!! :clap2::clap2:

    இந்த பொக்கிஷமான நிகழ்வுகளை பார்த்த எனக்கு நிலா பாடல் வரிகள் எதுவுமே அப்போ தோணல. அங்கு இருந்த எத்தனையோ ISRO Engineers la ஒன்றாக நான் ஏன் அங்கு இல்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. தாயகத்தில் நான் படித்த நான்கு வருட படிப்பிற்கு கண்டிப்பாக நிறைய சம்பந்தமுள்ள வேலை இது. தாயகத்திற்கு நான் எந்த விதத்தில் திருப்பி கொடுத்து இருக்கிறேன் என்ற கேள்விக்கு என்னிடத்தில் எந்த பதிலும் இல்லை.

    விருப்பமான படிப்பு படிப்பது சந்தோஷம் தருமா? எதில் திறமை இருக்கிறதோ அதனை சார்ந்த படிப்பு படிப்பது சந்தோஷம் தருமா? படித்த படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தம் இருப்பது சந்தோஷம் தருமா? தாயகத்திற்கு பெருமை சேர்க்கும் வேலையில் இருப்பது சந்தோஷம் தருமா? எல்லாமே பட்டி மன்ற தலைப்பிற்கு பொருந்தும்.

    என்னுடைய தற்போதைய உத்யோகம் மீது எனக்கு தீர காதல் உண்டு. இதை தாண்டி எந்த வேலையில் இருக்க ஆசை படுகிறாய் என்று என்னை கேட்டால் இரண்டை சொல்வேன்:
    1) தமிழ் திரை பட இயக்குனர் - directing one and only romantic movies :wink::wink:
    2) ISRO Engineer

    உங்களது விருப்பப்பட்ட வேலை துறை என்னவாக இருக்கும்?
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலக வேலை ஓட்டம் தற்போது அதிகமாக இருப்பதால் பாடல் எதுவுமே கேட்கவில்லை. அதிசயமாக ஒருத்தர் அவர் ரசித்த ஒரு புது பாடலை என்னை கேட்க சொன்னார் (அந்த நபர் யார் என்று சொன்னால் தான் தெரியுமா? :wink::wink:) பாடல் கேட்டேன். ரசித்தேன்! பகிர்ந்து கொள்கிறேன்!

    YT - நெஞ்சமே நெஞ்சமே - மாமனிதன்
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    August month - நம்ம poetic thread anniversary!!

    Aug 2010 - நம்ம poetic thread ஆரம்பித்த மாதம்/வருடம். எத்தனை வருடங்கள் கடந்து வந்து இருக்கிறேன். ரொமான்டிக் பாடல்கள் விஷயத்தில் அப்போ எப்படி இருந்தேனோ இப்பவும் நான் அப்படி தான் இருக்கிறேன். துளியும் மாறவில்லை/திருந்தவில்லை/திருந்தப்போவதும் இல்லை!! :wink::wink:

    என்னுடன் இங்கு ஆரம்ப காலத்தில் பயணித்தவர்களை இன்று நினைத்து கொண்டேன். அதெல்லாம் ரசனையான மலரும் நினைவுகள்!! அவர்கள் அனைவருக்கும் இங்கு இன்றும் வருகை புரிகிறவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    பாடல்களை விட சிறந்த பரிசு இருக்க முடியுமா? இந்த கலவையான பாடல்களை கேட்டு மகிழுங்கள்!
     
  6. gamma50g

    gamma50g Finest Post Winner

    Messages:
    310
    Likes Received:
    398
    Trophy Points:
    123
    Gender:
    Female
    I'm not sure if it qualifies as poetic but one of the most memorable lines from tamil cinema is 'Naan oru thadava sonna nooru thadava sonna maathri' from Baasha
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi γ (Gamma),

    Welcome to the thread!!

    In my opinion, the line you have posted qualifies as electrifying punchline. Can you modify it to sound romantic/poetic? :wink::wink:

    Examples:

    "Nee oru thadava pesirupa naan nooru thadava adhai ninaithu paarthu urugi iruppen"
    நீ ஒரு தடவ பேசிருப்ப நான் நூறு தடவ அதை நினைத்து பார்த்து உருகி இருப்பேன் (APK line) :grinning::grinning:

    "Unadhu mudhal sparisathai naan aayiram thadava ninaithu paarthu silirthu iruppen"
    உனது முதல் ஸ்பரிசத்தை நான் ஆயிரம் தடவ நினைத்து பார்த்து சிலிர்த்து இருப்பேன் (A1 line) :wink::wink:
     
    gamma50g likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Cinnamon sticks, Cardamom, Clove, Bay leaf, Stone flower - இதெல்லாம் ஒரு பதார்தத்தில் சேர்த்தால் எப்படி இருக்கும்? சிலருக்கு திகட்டலாம்; சிலருக்கு ருசிக்கலாம்; சிலருக்கு குமட்டலாம். புத்தம் புதிய ஒரு மாஸ் மசாலா படத்தை திரை அரங்கில் நண்பர்களுடன் பார்த்த எனக்கு அந்த படம் எப்படி இருந்தது?

    முதலில் இந்த trailer பாருங்க. பிடித்து இருந்தால் மேற்கொண்டு படிங்கள்; பிடிக்கா விட்டால் ஜூட் விட்டு விடுங்கள்.

    ஒரு வார்த்தையில் என்னை விமர்சிக்க சொன்னால்: அதகளம்.

    படம் பார்த்த கிக் என்னை விட்டு போக 24 hours ஆச்சு. படம் முடிந்தவுடன் என்னது அதுக்குள்ள படத்தை முடிச்சிட்டாங்களா? இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்க கூடாதா? என்று நினைத்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை (F1) ரேஸ் விறுவிறுப்பு. Time travel வைத்து நேர்த்தியான ஜனரஞ்சகமான திரைக்கதை. பேச்சில்/ பின்னணி இசையில்/ சண்டையில் Sound அதிகம், costumes/set பளபளப்பு அதிகம் ஆனாலும் வைத்த கண் வாங்காமல் படத்தை பார்க்க வைத்தது. சில கட்சிகளுக்கு நான் கைகள் தட்டினேன். சில காட்சிகளில் சத்தமாக சிரித்தேன். அத்தனை நபர்களின் சிரிப்பொலியில் திரை அரங்கமே அதிர்ந்தது. இந்த அளவிற்கு ஜாலியோ ஜிம்கானா வாக ஒரு மாஸ் மசாலா படத்தை கடைசியாக எப்போ பார்த்தேன் என்ற நினைவு எனக்கு இல்லவே இல்லை. இன்னொரு முறை திரை அரங்கில் இந்த படம் பார்க்கலாமா என்று கூட நினைத்தேன். கண்டிப்பாக OTT யில் பார்ப்பேன். முடிந்தால் இந்த படத்தை திரை அரங்கில் குடும்பத்துடன் மற்றும் பக்கத்துக்கு வீட்டு குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!!

    எனக்கு இந்த படத்தில் என்னவெல்லாம் குறிப்பாக ரொம்ப ரொம்ப பிடித்தது:

    • SJ Surya's double role - double delight; கொளுத்தி இருக்கிறார்
    • Dad SJ Surya vs Son SJ Surya - Telephone calls - காமெடி கலக்கல்/உச்சம்
    • Vishal - கடைசி பத்து நிமிடங்கள் பட்டாசு
    • Vishal imitating SJ Surya - அட்டகாசம்
    • 'Silk' scenes - SJ Surya's dialogues/dance/ஜொள்ளு - செம
    • குஷி, வாலி, அன்பே ஆருயிரே படங்களில் இருந்து வந்த references - கலகலப்பு
    • 80s/90s hit songs - வருது வருது விலகு விலகு , அடியே மனம் நில்லுன்னா நிக்காது, பஞ்சு மிட்டாய் சேலை கட்டி - திரை அரங்கமே அதிர்ந்தது - SPB/SJ combo/Malaysia Vasudevan's voice - Nostalgic!
    • Dad/Don Vishal - His wife: உறவு - ஓஹோ ரகம்
    • Son Vishal - Ritu: உறவு - ஓகே ரகம்
    • Time travel concept - எளிமையான rules
    • GV Prakash - BGM/Songs - ரகளை/அடிதடி
    • Selvaraghavan - Club scenes - cool
    • Interval - வச்சு செஞ்சுட்டாங்க. இன்னும் என்ன இருக்கு என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டும்
    • Climax - இரண்டாம் பாகம் எப்போ வரும் என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டியது

    இந்த படத்தை இயக்கிய Aadhik Ravichandran கண்டிப்பாக தமிழ் திரை உலகை கலக்குவார் என்று நம்புவோமாக!! இவருக்கு வாழ்த்துக்கள்!! இப்போ தான் இவர் சரியான பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். இவரது முந்தைய 3 படங்களை மன்னித்து மறந்து விடுங்கள் (நான் எதுவும் பார்க்கல). இப்போ தான் இவருக்கு நல்ல நேரமே ஆரம்பித்து இருக்கிறது. Mark Antony il 100 marks எடுத்து Last bench ல இருந்து First bench க்கு வந்து விட்டார். ஏகோபித்த வாழ்த்துக்கள்!!
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    துப்பாக்கி? இந்த வார்த்தையை கேட்டதும் உடனே என்ன நினைவிற்கு வருகிறது?

    தமிழில் கலக்கிய துப்பாக்கி படமா? சின்ன வயதில் பொம்மை துப்பாக்கியை வைத்து வெடித்த பொட்டு வெடிகளா ? தண்ணீர் துப்பாக்கியில் விளையாடியதா? ரப்பர் புல்லெட் வைத்து சுவற்றை/பொருட்களை நோக்கி சுட்டதா? பீச்சில் குறி பார்த்து பலூன்களை சுட்ட விளையாட்டு துப்பாக்கியா?

    உப்பு சத்தியா கிரகமா? புல்லட் தாக்குதலா? நான் கண்டிப்பாக இரண்டாவது ஆக சொன்ன கட்சியில் தான் சேர்வேன். பிறப்பில் இருந்தே இருக்கும் என்னுடைய இயல்பு. கையில் துப்பாக்கி கிடைத்தால் என்ன தோன்றும்? தப்பு செய்தவர்களை சுட்டு தள்ளனும் என்று தானே தோன்றும்?

    இந்த போஸ்ட் எங்க போகுது னு கவலையோடு யோசிக்கறீங்களா?
    All is well. நான் ஜம்முனு இருக்கேன். :grinning::grinning:

    முதல் முறையாக எனது கொள்கையில் ஒரு முரண்பாடை சந்தித்தேன். அது பற்றி எழுத தோன்றியது. துப்பாக்கி சுடும் இடத்திற்கு/பயிற்சி மையத்திற்கு எனது Gen Z நண்பர்கள் என்னை சமீபத்தில் அழைத்து சென்றார்கள். நானும் ஏதோ விளையாட்டு துப்பாக்கியை மையத்தில் வைத்து இருப்பார்கள் என்று தான் நினைத்து சென்றேன். அங்கே போனவுடன் தான் தெரிந்தது. அத்தனையும் நிஜமானது என்று. அணிவதற்கு ஸ்பெஷல் கண்ணாடியும் headset ம் கொடுத்தார்கள். ID cards நகல் எடுத்து கொண்டார்கள். இந்த கம்பெனி எதற்கும் பொறுப்பேற்காது என்று எங்களது கை எழுத்தையும் ஒரு பேப்பரில் வாங்கி விட்டார்கள். Headset அணிந்தும் சத்தம் காதுகளை துளைத்து விட்டது. நண்பர்கள் நிஜ துப்பாக்கியில் சுட்டு விளையாட ஆரம்பித்தார்கள். ஏன் என்று தெரியவில்லை என்னுடைய முறை வந்ததும் நான் விளையாட மறுத்து விட்டேன். மனம் ஒப்புக்கொள்ளவில்லை. துப்பாக்கியை வாங்கி பார்த்துவிட்டு திருப்பி கொடுத்து விட்டேன். அந்த இடத்தை விட்டு உடனே வெளியே வந்து விட்டேன். கடையை நடத்துபவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு கொண்டிருந்தேன். அவரும் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருந்தார். எனக்கு இது வித்யாசமான அனுபவமாக இருந்தது.

    மனதளவில் என்னை தீவிரவாதி என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். அஹிம்சைவாதியாக ஒரு போதும் எண்ணியதில்லை. எனக்குள் நான் சந்தித்த முரண்பாடு. ஒன்றை மட்டும் வாழ்க்கை எனக்கு உணர்த்தி இருக்கிறது. நாம் என்ன வேணாலும் நினைக்கலாம். Hypothetical கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில் சொல்லலாம். ஆனால் நிஜமான சூழல் அமையும்போது பதில் முரண்படலாம்.

    புத்தகம் பிடித்த கரங்கள் கரண்டி பிடித்த கரங்கள் துப்பாக்கியையும் பிடித்துவிட்டது சுடவில்லை எனினும். :grinning::grinning:
     
    vidhyalakshmid likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,457
    Likes Received:
    2,431
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கு Water parks ரொம்பவே பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே தண்ணியில் விளையாட பிடிக்கும். நீச்சல் தெரியாது. ஆனாலும் தண்ணீருக்கு பயந்ததில்லை. அசாத்திய துணிச்சலோடு தண்ணியில் இறங்கிவிடுவேன் கடலாக இருந்தாலும்!!

    சமீபத்தில் அதே நண்பர்களுடன் ஒரு water park சென்றேன். ஒரு ride கூட விடவில்லை. எல்லாவற்றையும் விளையாடினேன். Adventurous rides!! ஒரு Water slide - முற்றிலும் இருட்டாக இருந்தது. கடைசியில் 8 feet தண்ணீர் நிரம்பிய இடத்தில slide முடியும். கண்களை கட்டி காற்றில் விட்ட மாதிரி திரில் ஆக இருந்தது. 8 feet தண்ணீருக்குள் மூழ்கி விட்டேன். வேலை பார்க்கும் guard என்னை பற்றி இழுத்தார். இதுவும் வித்யாசமான அனுபவமாக இருந்தது. ஆனாலும் தண்ணீரில் விளையாடும் மோகம் குறையவில்லை.

    அடுத்த வித்யாசமான அனுபவத்திற்கு என்னை ரெடியா என்று நண்பர்கள் கேட்டார்கள். அது என்னவென்றால் helicopter பயணம். அரை மணி நேரம் தரையில் பயிற்சி (Simulation). கொஞ்சம் மேலே பறந்தவுடன் helicopter நாமளே ஓட்டலாம். நான் ஓட்ட வேண்டாம். அவர்கள் ஓட்டுவதை வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக இருக்கையில் உள்ளே அமர சொன்னார்கள். நான் இந்த ஆட்டத்திற்கு வரல என்று சொல்லி விட்டேன். ரிஸ்க் எடுக்கறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?

    ஒருத்தருக்கும் துளியும் உயிர் பயமில்லை. வாழ்க்கையை அனுபவிக்க துடிப்பவர்கள். இந்த வருடத்தில் எனது வாழ்வையும் வண்ணமாக்கி கொண்டிருப்பவர்கள். இது வரையிலும் இந்த வருடம் எனக்கு வித்யாசமான இனிய அனுபவங்களை கொடுத்து இருக்கிறது. வருட கடைசியில் எழுதவத்திற்கு பதில் இப்போவே எழுதி விட்டேன். அப்போ ரொம்பவே பிஸியாக இருக்க போகிறேன் எனது குடும்பத்து நபர்களோடு. :grinning::grinning:
     

Share This Page