1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,412
    Likes Received:
    2,363
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதற்கு கண்டிப்பாக சாத்தியம் இல்லை. :grinning::grinning: 3 பால்களில் 1330 குறள்கள் எழுதியவரை குறைந்தது 3990(3X) கேள்விகள் கேட்டு இருப்பேன். இதோ சாம்பிள் கேள்விகள்:

    அறத்துப்பால் - அறம் என்றால் என்ன? இல்லறத்தில் அறத்துடன் தான் நடந்து கொண்டிருந்தாரா? எந்த சூழலில் அறத்துடன் நடக்கவில்லை என்பதை நடந்த சம்பவத்துடன் விளக்கி இருப்பேன்.

    பொருட்பால் - Investment strategy/Hedging/Budgeting/Asset allocation/ Retirement corpus - இதிலேயே 1330 கேள்விகள் கேட்டு துளைத்து இருப்பேன்.

    கடைசி பால் - இதிலேயே 1330 கேள்விகள் கேட்டு பெண்களுக்கு சாதகமா எழுத சொல்லி இருப்பேன்.

    கேட்கும் கேள்விகளுக்கு பயந்து திருக்குறள் எழுதுவதை விட்டு இருப்பார். திருக்குறள் பிழைத்தது!

    Bonus விளக்கம்: தினமும் சாப்பிடும் வேளையில் toothpick க்கும் தண்ணீர் கிண்ணமும் வைத்து இருக்கவே மாட்டேன். நான் பின் தூங்கி முன் எழுவதெல்லாம் நடக்கற காரியமா?

    உங்களது மற்ற போஸ்டஸ் படித்தேன். பாராட்டு மழையில் நனைந்த மாதிரி உணர்வு. You made my day/month/year!! 108 sweet கொழுக்கட்டை க்கு மிக்க நன்றி. :grinning::grinning:

    சிறு குழந்தையாக இருந்ததில் இருந்து இன்று வரைக்கும் வாழ்க்கையில் நிறையயா பாராட்டுக்களை வாங்கி இருக்கிறேன். இப்போதெல்லாம் பாராட்டு ஒரு சிறிய மகிழ்ச்சியை தான் எனக்கு தருகிறது. முழு ஈடுப்பாட்டுடன் நான் செய்யும் செயல்கள் தான் பெருமகிழ்ச்சியை தருகிறது. நான் இங்கு வருவது பொழுதுபோக்கிற்கு மட்டுமே. நேரம் கிடைக்கும்போது வருகிறேன். நான் நானாக இருந்து நினைத்ததை கிறுக்கிவிட்டு போகிறேன். நான் போக வேண்டிய தூரம் எவ்ளோவோ இருக்கிறது!

    நான் எழுதுவது சங்க தமிழ் என்றால் சங்க கால புலவர்கள் சங்கத்தமிழில் என்னை திட்டி விட்டு போவார்கள். :grinning::grinning: IL கவிதை தளம் நண்பர்களும் தான். தமிழ் வாழ்க! வளர்க!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,412
    Likes Received:
    2,363
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதைத்தான் அனுபவம் என்பது. அருமை!! :worship2::worship2:

    கண்ணால் மிரட்டிய சொந்த அனுபவம் கிடையாது. நான் முன்னரே சொல்லி தயார் படுத்தி விடுவேன் - இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும். யாரிடமும் இதை பற்றி பேச வேண்டாம் என்று. இருவருமே எங்களுக்குள் சீக்ரெட்ஸ் வைத்துக்கொள்வோம். வெளியே போகாது!!

    நினைவிற்கு வந்த ஒரு சம்பவம்:
    பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கசகசா அல்வா நான் செய்வதற்கு முயன்ற போது கொஞ்சம் தண்ணீர் அதிகமாகி பாயசம் ஆகிவிட்டது. இதை அவர் நண்பர் ஒருவருக்கு எடுத்து சென்றார். பாயசம் என்று சொல்ல சொன்னேன். ஒரு பார்வை பார்த்தார். நான் கண்டுக்கொள்ளவில்லை. கடைசியில் நான் சொன்னது போலவே சொல்லிவிட்டார்!! அந்த நண்பரும் அதை பாயசம் என்று நம்பி சாப்பிட்டு எனக்கு போனில் நன்றி தெரிவித்தார் :grinning::grinning:

    உங்களது உப்புமா அனுபவம் படித்தேன். நெய் வாசனை மூக்கை துளைத்தது. எதையும் நுணுக்கமாக எழுதுகிறீர்கள். உப்புமா பிடிக்காதவர்களுக்கும் உப்புமாவை பிடிக்க வைத்து விடும் உங்களது பதிவு!! நீங்கள் இருவரும் சேர்ந்து சமையல் அறையில் வேலை செய்வதை படிக்கும்போது சந்தோசமாக இருந்தது. சொந்த அனுபவம் இருப்பதால் என்னால் இன்னும் தொடர்பு படுத்தி சந்தோசப்பட முடிகிறது.

    சிறிய குறிப்பு: உப்புமாவிற்கு நீங்கள் சொன்னது தான் எங்களது செயல்முறையும். சீரகம் கொஞ்சம் சேர்த்துக்கொள்வேன். ஒருமுறை சீரகத்திற்கு பதிலாக சோம்பு சேர்த்தேன். உப்புமா பிரமாதமாக வந்தது!!
     
    Thyagarajan likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,412
    Likes Received:
    2,363
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று ஒரு புத்தம் புதிய ரொமான்டிக் பாடல். மணம் கமழும் வரிகள். மனதை தொடும் மெல்லிசை. இந்த வயதிலும் இவரின் குரல் காந்தமாய் ஈர்க்கும். ஏற்றி இறக்கி பாடல் பாடிய பெண்ணின் குரலில் (Ananya Bhat) வசீகரம்.

    பத்து முறைக்கு மேல் தொடர்ந்து இந்த பாடல் கேட்டு விட்டேன். பாடல் பித்து துளியும் குறையவில்லை. தீவிர ரசிகை அல்லவா? தீராது பாடல் மோகம். :wink::wink:

    வழி நெடுக காட்டுமல்லி - விடுதலை 1 - Triple Delight - IR - Musician, Lyricist, Singer

    வழி நெடுக காட்டுமல்லி
    கண்பார்க்கும் கவனமில்லை
    காடே மணக்குது வாசத்துல
    என்னோட கலக்குது நேசத்துல

    கிட்ட வரும் நேரத்துல
    எட்டி போற தூரத்துல
    நீ இருக்க உள்ளுக்குள்ள
    உன்ன விட்டு போவதில்ல

    ஒலகத்தில் எங்கோ மூலையில
    இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
    இரு சிறு உயிரு துடிக்கிறது
    நெசமா யாருக்கும் தெரியாது
    சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
    காட்டுல வீசிடும் காத்தறியும்
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    10,370
    Likes Received:
    11,176
    Trophy Points:
    590
    Gender:
    Male
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    10,370
    Likes Received:
    11,176
    Trophy Points:
    590
    Gender:
    Male
    ரசித்தேன்.
    ஒருமுறை மணமாகாத காளையாக மற்ற இரு நண்பர்களுடன் அருமையாக ரவா உப்புமா செய்ய முயல அது பாயசமாக மாறிவிட்டது. "வேஸ்ட் செய்யாதேடா ரவா கேஸரியா மாற்ற முயற்சி செய்" என்று நண்பர்கள் கூர அன்த பாயாசம் ஒரு வினோத பொருளாக மாறியது. (1970ல்)

    உங்கள் வயதா அல்லது பாடகரின் வயதா?
    பாடலை கேட்கும் போது it reminds me of
    Begum Parveen Sultana பாடும் Patiala Gharana
    Cross the mind.
    God Bless.
     
    vidhyalakshmid likes this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid Platinum IL'ite

    Messages:
    2,496
    Likes Received:
    1,556
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    10,370
    Likes Received:
    11,176
    Trophy Points:
    590
    Gender:
    Male
    தத்துவம் நிறைந்த காதல் பாடல் கண்ணதாசன் இயற்றியது ஏராளம்.
     

Share This Page