1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,373
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    There was a time i considered it is all hocus-pocus. The zodiac is different depending on the calendar/ Almanac though month is stated somewhere here.

    I do not know astrology but tremendous faith in it. . The reason is in link
    A Date With An Astrologer
    I think by & by i digress from the theme of your thread. I apologise.
    You must be making valiant effort to keep in pipeline ready song sequence befitting
    Saint Thiruvalluvar’s undiluted milky chapter. Kudos to u.
    Those jottings are always gripping tales.
    Regards.
     
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நானும் உங்களை போல தான். கணிதத்தின் மேல் எனக்கும் காதல் இருக்கிறது. நீங்கள் Calculus உபயோகப்படுத்தியதால் கணித சம்பந்தமாக எழுத தோன்றியபோது logarithmic scale என் மனதில் சட்டென்று வந்தது.

    Log oda opposite exponent கொண்டு வந்து கேள்வி கேக்கறீங்க. Asymptote படித்ததாக எனக்கு நினைவே இல்லை. இருந்தாலும் வலைத்தளத்தில் கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டேன். தெரிந்ததை வைத்து விடை அளிக்கிறேன்.

    Asymptote படித்ததும் horizon நினைவிற்கு வந்தது. வானும் கடலும் தொட்டும் தொடாமல் இருப்பது.

    Exponential growth/Exponential decay - Continuous growth/continuous decline. Exponential function has no vertical asymptote. Domain/Range: All real numbers. 1/0 = undefined scenario மாதிரி stuck ஆகாது. Answer: It wouldn't touch y-axis asymptotically.

    காதல் கோடு - முழுமையாக தொட்டு விட இயலாதது.

    ஜோதிடத்தில் என்னுடைய அடிப்படை அறிவு செம strong என்று நம்புகிறேன். கைதேர்ந்த ஜோதிடர்களை கேள்விகள் கேட்டு என்னால் மடக்க முடியும் (சொந்த அனுபவத்தில் நிகழ்ந்து இருக்கிறது). ஜோதிடத்தில் Advance level படிக்க ஆவல். 15 ஆண்டுகளுக்கு பிறகு கற்கலாம் என்று இருக்கிறேன்.

    லக்கினத்தில் சூரியன் இருந்து மூக்கு கண்ணாடி அணியாதவர்களை கொண்டு வந்து நிறுத்த முடியுமா ? கண்டிப்பாக. நிறுத்தினால் இந்த ஜோதிடரின் கணிப்பு பொய் ஆகி விடும். ஒவ்வொரு விதிக்கும் உடைப்பதற்கு ஆயிரக்கணக்கான விதிவிலக்குகள் ஜோதிடத்தில் இருக்கும். இதை முற்றிலும் கற்றுக்கொள்வது கடலை கரைத்து குடிப்பது போல. சாத்தியம் இல்லாத காரியம். பலன் சொல்வது பலிக்குமா? பலிக்காதா? Probability பதில்: 50% இதற்கு ஜோதிடர் தேவை இல்லை. பூவா தலையா போட்டாலே போதும். :grinning::grinning:

    ஜோதிடம் பற்றி ஆராய்ச்சி செய்வதும் பேசுவதும் விவாதிப்பதும் எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. (கடந்த சில வருடங்களில் எனக்கு நேரமில்லை இதில் ஈடுபட.) ஆனால் பலனில் நம்பிக்கை கிடையாது.

    ஒன்று மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும் : ஜாதகத்தில் சுக்கிரன் hot seat ல எனக்கு இருப்பதால் 12 வருடங்கள் கடந்தும் இந்த poetic thread எனக்கு போர் அடிக்கவில்லை. என்னுடைய வாழ்வின் கடைசி பக்கம் வரை இப்படி தான்.

    என்னுடைய மூளைக்கு வேலை தரும் கணக்கு கேள்விகளை கேட்காதீர்கள். யோசிக்காமல் இருப்பதற்கு தான் இங்கு வருகிறேன். :grinning::grinning:
     
    Last edited: Feb 22, 2023
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.


    மு.வரதராசன் விளக்கம்:
    அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

    கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்

    சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
    என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


    நான் பிழை - காத்து வாக்குல ரெண்டு காதல்

    அடி அழகா சிரிச்ச முகமே
    நான் நெனச்சா தோணும் இடமே

    இந்த பாடலில் எத்தனையோ சீன்களில் முத்து முத்தான புன்னகைகள்.


    புன்னகை கண்டிப்பாக மனைவி க்கு தேவை என்று நான் நம்புகிறேன். 'இடுக்கண் வருங்கால நகுக' என்ற வள்ளுவரின் குறளுக்காகவா? தலைவிதியால் திருமண பந்தத்தில் மாட்டியாச்சு. சிரிச்சே சமாளிக்க வேண்டியது தான். :wink::wink:

    எப்பவும் சிரித்த முகமாய் இருந்தால் ஒரு சில நன்மைகள் கிடைக்கலாம்:

    வருடத்திற்கு ஒரு நாள்/சில நாட்கள் அழுதால் மதிப்பு அதிகம் - செம கவனிப்பு கிடைக்கலாம். (அடிக்கடி அழுதால் அழுமூஞ்சி என்ற பட்டப்பெயர் தான் மிஞ்சும். அழுகைக்கு அவ்ளோவாக மதிப்பு இருக்காது)

    வருடத்திற்கு ஒரு முறை சத்தம் போட்டாலும் அதிரடியாக பலன் கிடைக்கலாம். (அதிகம் தப்பு செய்யவில்லை என்றாலும் அதிகப்படியான தப்பு செய்தது தான் தானோ என்ற சந்தேகம் கணவனுக்கு வந்து சரண்டர் ஆகலாம்)

    குறிப்பு: கணவர் தான் புன்னகையை தனக்குள் வரவழைக்க வேண்டும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு வாழ்வை/யதார்த்தத்தை புரிந்து/ரசித்து மனைவி தானாக புன்னகையுடன் வலம் வரும்போது கணவனை அந்த புன்னகை தானாக கட்டி இழுக்காதா?:grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,373
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Thanks ma.
    அருமையான சொல் ஆட்சி. சின்திக்க வைக்கிற
    சொற்றடர்.

    பாடல் - வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே...
    இங்கு என் ப்ரொஃபைலிரல் குறிப்பிட்டுள்ளது நினைவிற்கு வருகிறது.
    கிட்டக்க வந்தா எட்டப்போ எட்டக்க இருந்தா கிட்டக்க வா.
    If at Closer proximity She utters - You get lost If At a safe distance
    She whispers -Why you are afar?

    Superஆ சொன்னீங்க. இதுதானோ asymptotic?

    கரைத்து குடிப்பது சாத்தியம் என்று எண்ணி
    1970 களில் subscribed to BV Raman’s Astrological Magazine.
    கால் கிணறு தாண்ட உதவியது!
    ஜோதிடர் சொல்லி ஒருவருக்கு சரியா வன்தால் அவர்கள் ஐன்து நபர்களுக்கு சொல்வார்கள் அவர்களில் ஒருவருக்கு ஜோதிடர் சொல்வது பலித்தால் அவர்கள் ஐன்து பேருக்கு ச்சொல்ல இப்படி exponetialலா டெவலப்பாகீ போய்க்கொண்டே இருக்கும். ஜோதிடர் காட்டிலே எப்பும் மழைதான் . (காட்டுல மழை பெய்யுது. எங்க பாட்டுல சுருதி.. . பாடல் cross the mind)

    அது சரி தான். சில கணக்குகளுக்கு மூளை தேவை இல்லை. உதாரணமாக த்யான கணக்கு.
    அப்பன்ன அப்ஒபடியே ஒரு புதிர் பக்கம் போய் வரலாமே...
    இது கணித சிக்கல் கேள்வி அல்ல. Apple Penne Neeyaaro பாடல் வரிகளை நினைவில் ஓட விடும். ஒரு படத்தை காட்டி தமிழ் சினிமா பாடல் கண்டுபிடிப்பது ஒரு வகை pastime.
    How Many Apples Here?
    Regards.
    God Bless.
     
    singapalsmile likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எது சொன்னாலும் அதன் தொடர்பாக எதையாவது எழுதி விடுகிறீர்கள். இது தான் அனுபவம் என்பதோ?

    இன்று நான் பதிவிடப்போவதும் இதை சார்ந்தது தான். பெண் என்பவள் நிலவாகவும் இருப்பாள் நெருப்பாகவும் இருப்பாள்.

    நன்றி. என்னுடைய பதில் asymptotic தான். அதற்கு தான் அப்படி எழுதினேன்.

    இன்னொரு நாள் சந்தர்ப்பம் அமைந்தால் உங்களது கால் கிணற்றில் நான் (எதிர்) நீச்சல் அடிக்கிறேன்.

    தற்போதைய மனநிலைக்கு Apple என்றதும் எனது நினைவிற்கு ஆப்பிள் பெண்ணே பாடல் நினைவிற்கு வராது. Apple spelling மறந்து AAPL (ticker symbol) நினைவிற்கு வருகிறது. எத்தனை Apples என்பதை விட எனது கவனத்தை எத்தனை AAPLs கையிருப்பு என்பது தான் ஈர்க்கும். :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்


    மு.வரதராசன் விளக்கம்:
    நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

    ஆகாய சூரியனை - சாமுராய்

    ஆகாய சூரியனை
    ஒற்றை ஜடையில் கட்டியவள்
    நின்றாடும் விண்மீனை நெற்றி
    சுட்டியில் ஒட்டியவள் இவள்
    தானே எரிமலை அள்ளி
    மருதாணி போல் பூசியவள்

    காதல் பார்வையில்
    பூமி வேறு தான் மார்கழி
    வேர்க்கும் சித்திரை குளிரும்
    மாறுதல் இங்கேதான்


    Scenes: மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

    மழையும் நீயே வெயிலும் நீயே
    நிலவும் நீயே நெருப்பும் நீயே
    அடடா உனைத்தான் இங்கு
    வாழும் மானிடர் காதல் என்பதா

    கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் நிலவிற்கு எத்தனை முகங்கள்: வளர் பிறை, தேய் பிறை, பௌர்ணமி, அமாவாசை (முகத்தை புதைத்து கொண்டிருக்கிறது). அது போல தான் பெண்ணின் மனநிலையும். உன்னவர் உன்னை புரிந்துகொள்ள வேண்டும் என்று துடிக்கும் நிலையற்ற நிலாப்பெண்ணே! என்றாவது ஒரு நாலாவது உன்னை நீயே புரிந்து கொண்டிருப்பாயா? முதலில் உன்னை புரிந்து கொள். சுட்டெரிக்கும் சூரியனாய் இருக்கும்போது மௌனம் சாதித்து குளிர்ந்த நிலவாய் இருக்கும்போது உள்ளம் திறக்கலாமே?

    குறிப்பு: மாறும் மனநிலைக்கு ஒரு காரணம் mood swing ஆக இருக்கலாம். விசித்திரமாக இந்த அனுபவம் எனக்கு இதுவரைக்கும் இருந்ததே இல்லை. அதனால் நான் புரிதல் இன்றி எழுதி இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் mood swing இருந்தாலும். பெண்களுக்கு எப்பவுமே என் முழு ஆதரவு உண்டு.:grinning::grinning: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் எப்பவுமே என் முழு ஆதரவு உண்டு. :wink::wink:
     
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,373
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி சொல்ல வேண்டும்.
    நீரும் நெருப்புமா படைத்து தங்கள் பதிவுகளை படிப்பவர் மனதில் "நாமும் சுத்தத் தமிழலில் வலம் வருவோம் "
    என்று ஏங்க வைக்கிறீர்கள்.

    ஓஒரு தென்றல் புயலாகி வருமே
    ஓ.
    ஒரு தெய்வம் படி
     
    singapalsmile likes this.
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,373
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    To be etched in gold . Super வரிகள் . வியக்க வைக்கும் எழுத்தாற்றல். தாலட்டவும் தலை ஆட்டவும் செய்யும். ( தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்)

    அவ்வளவு முகங்கள் வெண்ணிலவுக்கு ஏன்வி? விநாயகர் அளித்த சாபம் . விவரம் அறிய

    Moon Boon Lord & Kozhukattai
     
    singapalsmile likes this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,373
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பாடல் வரிகள் தான் இந்நூலின் ஆன்மா என்றால் .. குறிப்பு இந்த வரிகளுக்கப்பொருந்தும்.
    நிலவே என்னிடம் நெருங்காதே....பாடல்
    ஒரு
    நிலவு தூங்கும்நேரம் ......
     
    singapalsmile likes this.
  10. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,373
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:சரி அஅஅஅஅஆஆஆப்பிள் கணக்கு பாடல் வேண்டவே வேண்டாம். ஆப்பிள் பங்கு
    விலை எப்போ உயரும்? AI. Chatbot என்ன சொல்கிறது? Glucose monitor wrist watch ல் non invasive செயல்பாடு reached a new milestone. $140 லிருன்து $400 -2030 ல் .
    We asked ChatGPT what will be Apple (AAPL) price in 2030
     

Share This Page