1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi KNBG,

    எப்படி இருக்கீங்க? நீண்ட வருடங்களுக்கு பிறகு இங்கு வருகை புரிந்து போஸ்டஸ் க்கு லைக் கொடுத்ததிற்கு மிக்க நன்றி. :grinning::grinning: உங்களிடம் கேட்க வேண்டும் என்றே ஒரு பிரத்யேகமான கேள்வி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்.

    கேள்வி கேட்க நான் ரெடி. விடை அளிக்க நீங்க ரெடியா?
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று ஒரு தத்துவ பாடல்.

    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை - அன்னை

    பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
    மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
    பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

    அடுத்த பதிவில் - Feb Special Assignment. :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படித்து ரசித்தேன். அகலம் ஆழம் நிறைய. அருமை. நன்றி.
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    மிக அருமையாக அர்த்த செறிவுடன் சொன்னீர் அம்மா. ஒரு காலம் அல்லது வயதுவரை பேயாக ஸ்மார்ட்டாக உழைத்து பணம் சேர்த்த பிறகு வயோதிகத்தில் நிம்மதியாக உறங்குபவரில்சிலர்.
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    வேதா,
    மெய்நிகர் சில்லறை நோட்டுகளை பொறுக்கி கொண்டேன்.
    நன்றி , நன்றி !
    பணம் இல்லை இல்லை என்று புலம்புவர்களிடம் பணம் சேர்வதே இல்லை.
    இருக்கும் பணத்தை ஆராதிக்கும் போது அது இடம் பெயர முயற்சிப்பதில்லை.


    எப்படி இந்த வரிகளை சொன்னீர்களோ ? மனோ தத்துவ நிபுணர்களும்
    இதை ஒட்டியே பேசுகிறார்கள் .
    ஜோதிடக் குறிப்பும் சேர்த்து போட்டது சிறப்பு!
    உலகத்திலே எனக்கு சுகமானது தூக்கம் தான். This one Super!
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    உண்மையிலேயே இந்த பதிவை கண்டு ஆச்சரியப்பட்டேன்.
    சென்ற வாரம் தான் இந்தப் பாடலை பாட்டு மன்றத்தில்
    எடுத்துப் பேசினேன்.Great minds think alike!:grimacing:
     
    singapalsmile and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சும்மா அடிச்சு விட்டேன். மனோதத்துவ நிபுணர்கள் இதை பரிந்துரைப்பார்கள் என்றே எனக்கு தெரியாது. நடைமுறையில் பார்த்தால் இந்த விளக்கம் தர தோணுது:

    Free cash = Cash inflow - Cash outflow

    Cash inflow: படித்து அல்லது அனுபவ அறிவால் தகுதியை வளர்த்து வருமானத்தை பல நியாயமான வழிகளில் ஈட்டுவது. இது ஓரளவிற்கு நம் கையில் இருக்கிறது. Cash flow அதிகமாக வ(ளர்)ந்து கொண்டு இருக்கும்போது Postive free cash.

    Cash outflow: இது நம் கையில் இருக்கிறது என்று சொல்லவும் முடியும் /சொல்லவும் முடியாது. சொல்ல முடியாதது: மெடிக்கல் செலவுகள், குடும்பத்து அடிப்படை பொருளாதார சூழ்நிலையால் அதிகமான கடன், நிறைய தவிர்க்கமுடியாத financial commitments.
    இது நம் கையில் இருக்கிறது என்று சொல்ல முடிந்தது: ஆடம்பர வாழ்க்கை வாழாமல் இருப்பது, வீண் ஜம்ப செலவுகள், பந்தாவுக்காக பங்களா வாங்கறது, சீன் போட branded பொருட்கள் வாங்கறது, பார்ட்டி என்று தண்ணியா செலவிடுவது தவிர்க்க முடியும் (பணம் கொட்டி கிடந்தால் எப்படி வேணாலும் செலவிட்டு கொண்டாடுங்க (No questions asked). அப்படி இல்லாத பட்சத்தில் வரவுக்கேற்ற செலவு பண்ணுங்க). வரவிற்கு மேல் செலவு இருந்து Negative free cash ஆக இருந்தால் பணம் இல்லை னு பொலம்பறதை நிறுத்தி விட்டு எப்படி இன்னும் அதிகமா சம்பாதிக்கணும் னு யோசிக்கணும். முடிந்தால் செலவை குறைக்கணும். அவ்ளோ தான்!!

    நான் மேலோட்டமாக தான் சொன்னேன். சிறப்பாக சொல்லவில்லை. இதை ஆழ்ந்த ஜோதிட குறிப்பாக எடுத்து கொள்ளுங்கள்:

    11th house: House of gain (லாபஸ்தானம்)
    12th house: House of loss (விரயஸ்தானம்)

    Positive free cash: 11th house >> 12th house (வரவு அதிகம்)
    Negative free cash: 12th house >> 11th house (செலவு அதிகம்)
    Zero free cash: 11th house == 12th house (வரவும் செலவும் சமம்)

    எந்த வீடு (11th or 12th) வலிமையானது/ வீர்யம் நிறைந்தது என்று பாருங்கள். எப்படி வலிமையை கண்டுபிடிப்பது? வீட்டின் அதிபதியின் நிலை (House lord), அந்த வீட்டை பார்வையிடும் கிரஹங்கள் (House aspect), அந்த கிரஹம் அமர்ந்து இருக்கும் நட்சத்திரம் (Planet's star), நட்சத்திரத்தின் டிகிரி, கிரஹம் ஸ்தான பலம் (உதாரணம்: லக்கினத்தில் குரு வலிமை பெற்றவர், பத்தாம் இடத்தில சூரியன் வலிமை பெற்றவர்), வர்கோத்தம நிலை, பகை/நண்பர்/சம வீட்டில் அதிபதி இருப்பது, நவாம்சத்தில் அந்த கிரஹத்தின் நிலை எல்லாம் சேர்ந்து வலிமையை தீர்மானிக்கும். Vedic astrology + KP astrology கலந்து இருக்கிறேன்.

    Shortcut: பிறந்த நேரம் துல்லியமாக இருந்து ஜாதகம் கணித்து இருந்தால் Ashtagavarga points of 11th and 12th houses பாருங்க. Points வைத்து வீட்டின் வலிமை தெரிந்து விடும்.

    Positive free cash: 11th house points > 12th house points
    Negative free cash: 12 house points > 11th house points
    Zero free cash: 11th house points = 12th house points

    நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று தான் ஜோதிடம் பேசுகிறேன். 15 வருடங்களுக்கு பிறகு ஜோதிடம் ஆராய்ச்சியில் ஈடுபடும் எண்ணமும் எனக்கு இருக்கிறது. ஜோதிடம் மேல் கொஞ்சமே கொஞ்சமாக நம்பிக்கை இருக்கிறது. ஜோதிடர்கள் மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. ஜோதிடம் பார்த்து எந்த செயலிலும் இறங்க மாட்டேன். இது எனக்கு பொழுதுபோக்கு மட்டுமே!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Feb 2023 Special

    மயிலிறகே மயிலிறகே - அன்பே ஆருயிரே

    ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
    அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
    உனக்கும் எனக்கும் விருப்பம்
    அந்த மூன்றாம் பால் அல்லவா


    எதற்கு இந்த பாடல் வரிகள் போட்டேன் என்று யோசிக்கறீங்களா ? இது தான் Feb 2023 special assignment. விருப்பம் இருப்பவர்கள் பங்கு கொள்ளலாம்.

    வள்ளுவர் எழுதியதில் மூன்றாம் பாலில் உங்களுக்கு பிடித்த குறளை போட்டு, விளக்கம் கொடுத்து (நெட் ல சுடலாம்), பொருத்தமான ரொமான்டிக் பாடல் வரிகளை/சீன்ஸ் தேர்ந்து எடுத்து, முடிந்தால் கொஞ்சம் கலாய்க்கவும் செய்து உங்களது சொந்த கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.:wink::wink:

    குறிப்பு: வள்ளுவர் ஒரு சில குறள்களில் வரைமுறை தாண்டினாலும் நீங்கள் சபை நாகரீகம் கருதி அப்படி பட்ட குறள்களை இங்கு பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.


    சாலமன் பாப்பையா விளக்கம்:
    காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

    பார்த்தேன் பார்த்தேன் - பார்த்தேன் ரசித்தேன்

    கண்ணும் கண்ணும் மோதிய வேளை
    சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
    கடவுள் பார்த்த பக்தன் போலே
    கையும் காலும் ஓட வில்லை


    இந்த ரொமான்டிக் சீன் (1:16 - 1:28) பாருங்க. இதுதான் கண்களால் இருவரும் பேசிக்கொள்வது என்பது. ரொமான்ஸ் சாரல்!! :wink::wink:

    கொஞ்சம் கலாய்க்கலாமா? ரொமான்ஸ் விஷயத்தில் பத்து தடவை வாயால் சொன்னாலே பெரும்பாலான ஆண்களுக்கு ரொமான்ஸ் புரிய வைப்பது கஷ்டம். இதுல கண்களால் ஜாடை காட்டி எப்படி புரிய வைக்க முடியும்? :wink::wink:

    APK members: கண்களால் பேச முடியும் என்று இவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறேன். கண்களால் எப்படி கரெக்ட் பண்ண முடியும் னு கொஞ்சம் இங்க வந்து எழுதிட்டு போங்களேன். படிச்சு நானும் புதுசா ஒன்னு கத்துக்கறேன்!! :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து.

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்

    முழுப்பொருள்:
    மனதிற்கு இனியவர் காதலர் ஒரு பெண்ணின் மனதில் நிறைகிறார். அப்படிபட்டவர் பெண்ணின் மனதில் குடிகொள்வதனால் அவள் உணவு உண்ணும் பொழுது மிகுந்த கவனம் கொள்கிறாள். ஏன் என்றால் சூடான உணவோ அல்லது காரமான உணவோ உண்டால் அவை மனதிற்கு துன்பம் தரும் (யோசித்துப் பாருங்கள், நெஞ்செரிச்சல் வந்தால் தகாத உணவை உண்டு இருப்போம் என்கிறோம்). ஆகவே காதலருக்கும் துன்பம் வருமாம்.

    ஆகவே சூடான உணவையோ காரமான உணவையோ உண்டால் கணவருக்கு துன்பம் வரும் என்று முன்னரே தெரிந்ததனால் அவள் அத்தகைய உணவை அஞ்சுகிறாளாம் தவிர்க்கிறாளாம்.

    கேட்க பேதமையாய் இருந்தாலும் அதுவே காதலின் சிறப்பு! பேதமை இல்லா காதல் எங்கே!

    குறிப்பு: இது நெட் ல இருந்து சுட்ட விளக்கம்!! என்னுடைய கிறுக்கல் அடுத்த பதிவில். :wink::wink:
     
    Last edited: Feb 7, 2023
    Thyagarajan likes this.

Share This Page