1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Priya,
    நீங்க 'பக்கா' பண்பாளர் என்று பதிலில் தெரிகிறது. :clap2::clap2: எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் என்று சொல்பவர்கள் என்னை பொறுத்தவரை இளிச்சவாயர்கள். நான் இளிச்சவாயர்கள் உடன் நட்பு கொள்வதில்லை என்று ஒரு கொள்கை வைத்து இருக்கிறேன். :grinning::grinning:

    எனக்கு அன்றைய தினம் என்ன தோணுதோ அதை இங்கு கிறுக்குவேன். என்னோட கிறுக்கல்களை படித்து பிடித்து பதில் அளிக்கறீர்கள். மிக்க நன்றி. உங்களிடம் நான் கேட்டது வெறும் warm up question தான். உங்களுக்கு ragging assignment கொடுப்பதற்கு நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். விருப்பம் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க. உங்களது பதில் பார்த்து கேள்விகள் இன்னும் தொடரும்.

    1) அடிக்கடி சண்டையிடும் கணவன் அமைந்தால் மனைவியின் அணுகுமுறை என்னவாக இருக்கணும் - அஹிம்சையா ? இம்சையா ? :wink::wink: அஹிம்சைக்கும் இம்சைக்கும் ஒரு நடைமுறை உதாரணம் தரவும்.
     
    svpriya likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    சங்க கால சாம்பார், புறநானுற்று புளிக்குழம்பு - முதல் முறையாக இப்போ தான் கேட்டேன். புன்னகைத்து கொண்டேன். ஒட்டகம் - பெட்டகம் , வசந்த - கசந்த என்று TR பாணியில் வார்த்தைகளை சுழற்றுகிறீர்கள். தங்களின் பேச்சு வீச்சாகவே இருந்தது. :clap2::clap2:

    புறமுதுகு காட்டாமல் என் தரப்பு வாதத்தை தங்கள் முன் வைக்கிறேன். :grinning::grinning:

    1 - திருமணத்திற்கு முன்பே சமையல் வேலையை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பேசி இருக்கலாம் அல்லவா? இருவரும் மாற்றி மாற்றி சமைத்தால் தினமும் சுட சுட சாப்பிடலாமே ? சாப்பிட்ட மீதம் Fridge ல வைக்கலாம். Fridge ல வைப்பதற்கு என்றே சமைக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

    2 - தாயகத்தில் இருந்த காலத்தில் பள்ளி கல்லூரி சென்ற நாட்களில் விடுமுறை தினங்கள் சனிக்கிழமையோ ஞாயிற்று கிழமையோ வந்தால் ஒரு நாள் லீவ் போச்சே என்று நினைத்து வருத்தப்பட்டு இருப்பீர்கள் தானே? வார இறுதி நாட்களில் கொண்டாட்டம் வந்தால் தொடர்ந்து வரும் வார நாளில் விடுமுறை கிடைப்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் அல்லவா ? Example: 26 Dec 2022 - Christmas observed holiday)

    3 - தாயகத்தில் தீபாவளி அன்று நரகாசுரன் வதம் பற்றியா பேசி கொண்டு இருக்கீறார்கள் ? நாள் முழுவதும் டிவி முன்பு அல்லவா பெரும்பாலானோர் அமர்ந்து ப்ரோக்ராம் பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இது இயந்திர தனம் இல்லையா?

    4 - Long weekend - தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பது எவ்ளோ நல்ல விஷயம் தெரியுமா ? வேலை பற்றிய சிந்தனை எதுவும் இன்றி திட்டமிட்ட குறுகிய பயணம் மேற்கொள்ளலாம். புத்துணர்ச்சி பெறலாம்.

    5 - GPS - பக்கத்தில் தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இன்றும் google directions பார்த்து வழி தீர்மானித்து தான் காரை நான் எடுப்பேன். Unlimited data plan இருப்பதால் எதற்கு எடுத்தாலும் போனில் maps போட மாட்டேன். போகும் இடத்தில வழி தொலைந்தால் மட்டுமே GPS. அதுவும் ஒரு இடத்தில காரை நிறுத்தி போகும் வழி சரி பார்ப்பேன். நான் எங்க போறேன் என்று எனக்கு தெரியணும். GPS ஜிலேபி பாதை தீர்மானிக்க கூடாது. :grinning::grinning:

    6 - Mixie, Grinder, Vaccum cleaner, Dishwasher, Washing machine, Food processor, Electric kettle - இதெல்லாம் உழைப்பு நேரம் இரண்டும் மிச்சப்படுத்தி அந்த நேரத்தை/ உழைப்பை வேறு வழியில் உபயோகப்படுத்தலாம் - பொழுது போக்கிற்கும் அறிவை வளர்த்து கொள்வதற்கும் உறவுகளை நட்பை பலப்படுத்தவும் உடல் பயிற்சி செய்வதற்கும்.

    7 - பலமான நட்பு இருந்தால் இரவு பன்னிரண்டு மணி ஆனாலும் போன் போட்டு அவசர உதவியை நாடலாம். அப்படிப்பட்ட பரஸ்பர நட்பை நாம் தான் வளர்க்கவேண்டும். ஆபத்துக்கு 911 ஓகே. ஆறுதலுக்கு ? நெருங்கிய நண்பர் வேண்டும் அல்லவா ?

    8 - பொருள் ஈட்டவும் தானே ஏழு கடல் தாண்டி வந்து இருக்கிறோம்.

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு
    ~~ திருவள்ளுவர்
    நெட் ல படித்ததில் பிடித்தது:
    Money can't buy happiness, but it can make you awfully comfortable while you're being miserable.

    இது என்னுடைய பார்வை : பணத்தால் சந்தோசம் வாங்க முடியாதா ? இதை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். சந்தோஷம் தரும் பொருள் எல்லாம் வாங்க முடியும், செலவு செய்து பயணித்து சந்தோசமான நினைவுகள் பெற முடியும், பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து அடுத்தவர் படும் சந்தோஷம் பார்த்து நாமும் சந்தோஷம் கொள்ள முடியும். பொருள் இல்லாதவர்களுக்கு படிக்க பண உதவி செய்யும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது அல்லவா ?

    இன்பம் என்பது இடத்தை சார்ந்தது அல்ல. மனதை சார்ந்தது. மனம் இருந்தால் மார்க்கம் மட்டும் அல்ல மகிழ்ச்சியாக எங்க வேணாலும் இருக்க முடியும் பொருள் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி என்று கூறி எனது வாதத்தை நிறைவு செய்கிறேன்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இது ஒரு ஜாலியான போஸ்ட்.

    நீங்க எல்லோரும் எதற்காக படங்கள் பார்க்கறீங்க ? குறிப்பாக பொழுது போக்கிற்கு தானே? நான் ஜாலிக்காக தான் படங்கள் பார்ப்பேன். விரும்பி விரும்பி தேடி தேடி பார்த்து பார்த்து Romantic tamil movies ரசிப்பேன். :wink::wink:

    நீங்க படம் பார்க்கும்போது ஒரு ரொமான்டிக் சீன் வருது. உங்களது reaction என்னவாக இருக்கும்? எனக்கு ஒரு கிக் கிடைக்கும். மூளைக்குள் பிரகாசமா ஒரு பல்பு எரியும். அவ்ளோ தான். ரொமான்டிக் கற்பனைக்கு எல்லை கிடையாது. ஆனால் நிஜ வாழ்வில் ? கற்பனைக்கும் நிஜத்திற்கும் இருக்கும் வித்யாசம் புரிந்தவர்களுக்கு ரொமான்ஸ் என்றுமே சலிப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். உளறிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கறீர்களா ? எல்லாம் நான் கேமரா பிரிண்ட் ல பார்த்த ஒரு படத்தின் தாக்கம் தான். :grinning::grinning:

    இந்த படத்தில் தான் திரைப்படங்களில் பார்த்த ரொமான்டிக் காட்சிகள் உள்வாங்கி எழுதி வைத்து அது தான் ரொமான்ஸ் என்று நினைக்கிறார் ஹீரோ (தத்தி reel ஹீரோ). Intellectual heroine (real). இவர்கள் இருவரும் திருமணம் முடித்தால் என்ன ஆகும் என்பது தான் படம். இந்த concept எனக்கு செமயா பிடிச்சது. ஆனால் execution எனக்கு பிடிக்கல.

    மௌன ராகம் , ரோஜா படத்தில் வரும் MR's signature romantic scenes இந்த படத்தில் ஒன்று இரண்டு இடங்களில் references வரும், Hero's ஷர்ட் வாசனை heroine பிடிக்கும் இடம் என்று சில சீன்ஸ் மிகவும் ரசித்தேன். ஒரு சில இடங்களில் சீன்ஸ் பிடிக்கலை - கலைநயம் இல்லை. எனக்கே கொஞ்சம் ஓவர் ஆக பட்டது. ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்தை தொட்டு விடும் அபாயம் இருந்தது. கண்டிப்பாக பெரியவர்கள் குழந்தைகள் சேர்ந்து பார்க்கும் குடும்ப படம் இது இல்லை. First half - சில சீன்ஸ் ரொமான்டிக்காக இருந்தது. Second half - கொஞ்சம் சொதப்பல். அவ்ளோவாக பிடிக்கல. Happy ending!!

    Butterfly எட்டி நின்று ரசித்தது உண்டு. Metal பூக்கள் வீட்டு அலங்கார பொருளில் magnet butterflies வைத்து இருக்கிறேன். Sita ramam படத்தில் வரும் Butterfly காட்சிகள் கண்களை கொள்ளை அடிக்கும். இந்த படத்தில் Butterfly வைத்து சில சீன்ஸ் வரும். எனக்கு செமயா பிடித்தது. அர்த்தம் ஆழமானது!!

    இந்த மஜா படம் Strictly not for APKs!! யான் பெற்ற இன்பம் பெறுக இந்த A1C வையகம் :wink::wink:

    YT - காலங்களில் அவள் வசந்தம் - Trailer
    YT - லாட்டரி பெண்ணே - காலங்களில் அவள் வசந்தம்
     
    svpriya and Thyagarajan like this.
  5. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    நன்றி,

    எனக்கு அதில் அனுபவம் இல்லை :innocent:
    அது அந்தந்த சூழ்நிலை பொறுத்தது... என் பொதுவான கருத்து என்னவென்றால் எல்லா நேரமும் அஹிம்சை வேலை செய்யாது... Self respect மிகவும் முக்கியம்..அது பாதிக்கப்படும் என்றால் இம்சை தவறில்லை... (மனைவி மீது தவறு இல்லாத பட்சத்தில்)
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Good points Veda, may be I will utilize these points in the upcoming speech:grinning:.Thanks for the feedback.
     
    singapalsmile and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Priya,

    இந்த அனுபவம் கிடைக்காமல் என்றென்றும் உங்களுக்கு இதே குடுத்து வைத்த குடிப்பினை இருக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்!! :grinning::grinning:


    கலக்கறீங்க..ஒரு சின்ன கேப் கூட விடாமல் எல்லா இடங்களையும் சுத்தி வளைத்து பதில் சொன்னதுக்கு பாராட்டுக்கள். அர்த்தமுள்ள தங்களின் பதில் படிப்பதற்கு இதம். நன்றி.

    இது என்னுடைய அபிப்ராயம்: தவறு என்பதன் அளவுகோல் ஆள் ஆளுக்கு வேறுபடும். ஒருத்தருக்கு தவறாக படுவது இன்னொருவருக்கு சரியாக படலாம். தவறு செய்யாத மனைவியையும் தவறு செய்யாத கணவனையும் பார்க்கவே இயலாது. தவறின் அளவு வேண்டுமானால் சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம்.

    உங்களுக்கான அடுத்த கேள்வி #2 (நானும் சுத்தி வளைத்து கேள்வி கேட்பேன் :wink::wink: )
    கீழே குறிப்பிட்டுள்ள மூன்று விதமான தம்பதிகளில்
    எந்த மனைவி குடுத்து வைத்தவர்? ஏன்? மூன்று காரணங்கள் குறிப்பிடவும்.
    எந்த மனைவி குடுத்து வைக்காதவர்? ஏன்? மூன்று காரணங்கள் குறிப்பிடவும்

    a) மீனாட்சி ஆட்சி - Dominating wife
    b) நடராஜர் ஆட்சி - Dominating husband
    c) அர்த்தநாரீஸ்வரர் ஆட்சி - Equal partnership
     
    svpriya and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    என்னுடைய வாழ்க்கை பக்கங்களில் ஒரு பக்கத்தை இங்கு வெளியிட்டதை உங்களது உரைக்கு நீங்கள் பயன்படுத்தினால் எனக்கு அதிகம் சந்தோஷமே!! :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பணம் - இது பற்றி எத்தனை நபர்கள் வெளிப்படையாக பேசுவார்கள்? கிறுக்குவார்கள்? எனக்கு சந்தோஷம் அளிக்க கூடிய பல விஷயங்களில் பணத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

    இது என்னோட சொந்த பஞ்ச்: பணம் பிடிக்கலாம் ஆனால் பண(ம்) பைத்தியம் பிடிக்கற அளவிற்கு பிடிக்கக்கூடாது.

    எப்படி செலவு கம்மி பண்ணனும் னு யோசிக்க கூடாது. எப்படி அதிகமா நேர் வழியில் சம்பாதிக்கணும் என்று யோசித்து செயல்படனும்.

    சேர்த்து வச்சதை மேலயா கொண்டு போக முடியும்? எதிர்காலத்திற்கு திட்டமிட்டும், இருக்கும் காலத்தில் சந்தோசமா பணம் செலவழிக்கணும்.

    வயதான காலத்தில் உடல் நிலை பற்றிய கவலை இருக்கலாம் பணப்பற்றாக்குறை மட்டும் இருக்கவே கூடாது.

    Wealth creation - படிப்படியாக தான் பண்ண முடியும். நீண்ட காலம் பொறுமை தேவை. சின்னதா குறிக்கோள் அது அடைந்தபிறகு அடுத்த கட்டம் செல்லலாம். என்னை பொறுத்தவரை இது ஒரு number game. 1X -> 2X -> 4X -> 8X.

    இந்த வருடம் நான் என்னுடைய சுய சம்பாத்தியத்தில் ஒரு பெருமிதமான மைல்கல் அடைந்து விட்டேன். சந்தோசம் பொங்குகிறது. 16X நோக்கி பயணம் தொடர்கிறது. எல்லாமே எனது சொந்த முயற்சி. யாரும் எனக்கு கற்று கொடுக்கவில்லை. நானாக கற்றுக்கொண்டேன்.

    என்னுடைய நண்பர்களுக்கு நான் personal financial advisor (free service). நாலு பசங்க என்னிடம் தொடர்ந்து கன்சல்ட் பண்ணுவாங்க. இது எனக்கு ஒரு கிக் குடுக்கும். :grinning::grinning:

    பணத்தை சேமிக்காதீர்கள். முதலீடு செய்யுங்கள்!! YouTube videos பார்த்து Financial literacy வளர்த்து கொள்ளுங்கள்!!
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    காலங்களில் அவள் வசந்தம் - படத்தில் சீன்ஸ் பற்றி எழுதிய மயக்கத்தில் டயலாக் பற்றி குறிப்பிடாமல் விட்டு விட்டேன். :wink::wink:

    படத்தில் எவ்ளோவோ beautiful dialogues. அதில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தது: திகட்ட திகட்ட சந்தோசம் தரதை விட கஷ்டமே தராதது தான் உண்மையான love.

    இந்த படத்தில் ஹீரோவின் அப்பா அம்மாவிற்கு இடையில் இருக்கும் உறவு அழகாக இருக்கும். இன்னும் அழுத்தமான காட்சிகள் வைத்து இவர்களது உறவை மேம்படுத்தி காட்டி இருந்து இருக்கலாம். அப்பா - தன்னோட மகனுக்கு துணை போகாமல் மருமகளின் நலனுக்காக பேசுவது அருமை. அம்மா - வெள்ளேந்தியானவர்.

    இந்த ரொமான்டிக் பாடலை நான் இங்கு கண்டிப்பாக போஸ்ட் பண்ண வேண்டும் - ஆணின் பார்வையிலும் பெண்ணின் பார்வையிலும் வரும் வரிகள் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

    களவாடும் கள்வனே - காலங்களில் அவள் வசந்தம்

    பெண் : சிறுமுத்தம் காணா இரவே
    உன் சட்டை துணையாய் அருகே
    உன் வாசம் தேடி அலைகிறேன்


    ஆண் : அறைகள் உன் வாசம் கேட்கும்
    அதிகம் பேசாமல் நான்
    அழகே நம் தொட்டிச் செடிகள்
    உனக்கென பூக்குதே
    எதிர்பார்த்தே ஏங்குதே

    ஆண் : இளமாலை வேளை நானும்
    இசையோடு நீயும் வேண்டும்
    மழலை போல் மனசு தேடுதடி
     

Share This Page