1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகத்தில் போகும் இடமெல்லாம் எனது காதில் விழுந்த ஒரு புது பாடல்.

    முதல் முறை கேட்டவுடனே மயங்கி விட்டேன். Item number மாதிரி ஆரம்பிக்கும். ஆனால் அப்படி பட்ட பாடல் இல்லை. கவிஞர் தாமரையின் கைவண்ணத்தில் ஆழமாக அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள். இசையும் பாடி இருக்கும் விதமும் எங்கோ அழைத்து செல்லும்.
    நம்ம poetic thread ல கண்டிப்பாக இருக்க வேண்டிய பாடல் இது.

    மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே - வெந்து தணிந்தது காடு
     
    vidhyalakshmid likes this.
  2. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    In recent films I liked the songs from Sitaramam...
    குருமுகில் என ஆரம்பிக்கும் பாடல் மிகவும் அழகாக இருந்தது...
    "கம்பன் சொல்லவந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ " எனும் வரி அருமை...
     
    singapalsmile likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    உங்களை எதிர் கட்சியில் போட்டது போல்
    சொல்கிறீர்களே? ஒவ்வொரு பூக்களுமே -
    பாடலை எதிர் அணி பேசினார்கள்.
    நன்றி வேதா!
     
    Thyagarajan likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    First 2 minutes not impressed, but when tried to put me in the emotions of separation got it.
     
    Thyagarajan and singapalsmile like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Priya,

    Welcome to the thread. :grinning::grinning:

    இதைப்போன்ற கவித்துவமான வரிகளை தொடர்ந்து இங்கு பதிவிடுவீர்கள் என நம்புகிறேன். தங்களது attendance இங்கு திருப்திகரமாக இருந்தால் உங்கள் அனுமதியுடன் கேள்விகள் கேட்டு மதிப்பளிக்கிறேன். :wink::wink: அருமையான பாடல் வரிகள் தொடரட்டும்.
     
    svpriya likes this.
  6. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Thank you :blush:
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இரண்டு வாரங்கள் தேவை பட்டிருக்கிறது எனக்கு - தூக்கத்தில் இருந்து வேலை வரை திரும்பவும் செட் ஆவதற்கு. தாயகம் உள்ளங்கையில் தான் என்னை தாங்கி பிடித்தது. அடுத்தவருடம் செல்லும் வரை அசைபோட எண்ணற்ற இனிய அனுபவங்கள். கல்லூரி செல்லும் உறவினர்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து அட்வைஸ் மழை. பொறுமையாக கேட்டார்கள். விடைபெறும்போது என்னுடைய போன் நம்பர் கேட்டு வாங்கி கொண்டார் ஒருவர். என்னை பொறுத்தவரை நான் செய்த ஒரு உருப்படியான காரியம் இது.

    அடுத்த தீபாவளிக்கு இன்னும் 13 மாதங்கள் இருக்கிறதே? கண்டிப்பா வந்துடு என்று என்னை ஒரு "பண்டிகை பெண்ணாக" கெளரவம் கொடுத்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்து நபருக்கு நன்றி. தாயகத்தில் நான் காலையில் எழுந்தவுடன் தேடி போகும் நபர் இவர். இந்த வருடம் இந்த நபரின் குட்டி வாரிசு (பொன்னியின் செல்வன் - காரணப்பெயர்) காலையில் எழுந்தவுடனே என்னை தேடி வந்தார். எங்களுடன் இவர் தியேட்டர் சென்று பார்த்த முதல் படம் 'பொன்னியின் செல்வன்' தான். படத்தில் இவர் பெயர் வரும்போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்தது கொள்ளை அழகு.

    இன்னும் ABCD எழுத தெரியாத இவருக்கு கரம் பற்றி ABCD எழுத கற்று கொடுத்தேன். கொஞ்சம் கணக்கு சொல்லி கொடுத்தேன். கற்பூர புத்தி. கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்திற்கு அளவே இல்லை. நேரம் போனதே தெரியவில்லை. எங்கு சென்றாலும் எனது கரங்களை பற்றிக்கொண்டு நடந்து வருபவர். பார்க்கும் தூரத்தில் நான் இல்லை என்றால் எங்கே எங்கே என்று தேடுபவர். கடைசி நேரத்தில் நான் கிளம்பும்போது ஏர்போர்ட் வந்து எனது கைகளை பற்றிக்கொண்டு என்னுடன் வர அடம்பிடித்த காட்சி இன்னும் கண்களை விட்டு அகலவில்லை. கடந்த வார இறுதியில் போனில் (Video call) பேசியபோது தன்னை விட்டு சென்ற கோபத்தில் பேச மறுத்து பேச மாட்டேன் போ என்று சொன்ன போது என்ன toys வேணும் Amazon ல ஆர்டர் பண்ணலாம் என்று சொன்னவுடனே toy cars பட்டியலிட்டு மழலையில் பேசியது இன்னும் காதில் கேட்கிறது.

    Trip சந்தோசமாக இருந்தது. எப்போதும் என்னை சுற்றி நபர்கள் இருந்தார்கள். ஊர் சுற்றினோம். நிறைய பேசினோம். ஆனால் சிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். எனக்கான personal space மிஸ் பண்ணேன். வசிக்கும் இடத்தை /சுதந்திரத்தை மிஸ் பண்ணேன். வேலை மிஸ் பண்ணேன். Silence மிஸ் பண்ணேன். பேசாமல் என்னை கொல்பவரையும் மிஸ் பண்ணேன். முதல் முறையாக அந்நிய தேசம் எனக்கு அந்நியமாக படவில்லை. எனக்கான இடம் இது தான் இன்னும் 10-15 வருடத்திற்கு என்பதில் சந்தோசமே. :grinning::grinning:
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Moral policing பண்றவங்க இந்த படம் பார்க்காதீங்க :wink::wink:

    இந்த படத்தின் trailer பாருங்க. மொத்த கதையும் புரிஞ்சிடும். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இல்லை.

    சம்பள வேலை / சொந்த வேலையின் காரணமாக படம் பார்க்க நேரமே இல்லை. நேற்று இரவு படம் பார்க்க நேரம் இருந்தது. இந்த படத்தை பார்த்தேன். என்ன ஒரு அனுபவம்! குறும்புகளை ரசித்தேன்; விழுந்து விழுந்து சிரித்தேன்; சிந்திக்கவும் செய்தேன்; செம ஜாலி மூட் ல இருந்தேன்!!

    இதுவரைக்கும் இந்த வருடத்தில் நான் பார்த்த படத்தில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த படம் இந்த படம் தான். Happy ending என்பதில் செம சந்தோஷம்.

    எனக்கு கொள்கை பிடிப்புகள் அதிகம். எனக்காக நான் கடைப்பிடிக்கிறேன். பிறரும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை. எனது கொள்கைக்கு முரண்பாடான நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இன்றைய தலைமுறையினர் பார்வையை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவரவர் வாழ்க்கை அவரது கையில்.

    A1 Club members - கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் !! படத்தின் தாக்கம் 24 மணி நேரங்கள் கடந்தும் என்னை விட்டு அகலவில்லை. ஒரு விஷயத்தில் பழையதை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து விட்டார் இயக்குனர். :wink::wink:சபை நாகரீகம் கருதி அது என்ன என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!
     
    Thyagarajan likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    லாஸ்ட் போஸ்ட் ல பாட்டு போடாம போய்ட்டேன். அந்த romcom படத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்:

    1a. YT - சாச்சுட்டாளே ஆள சாச்சுட்டாளே - Love today (APK)
    APK members - உங்களுக்கு 1a link. :grinning::grinning:

    Special 1b. YT - சாச்சுட்டாளே ஆள சாச்சுட்டாளே - Love today (A1C)
    A1C members - உங்களுக்கு special 1b link. :wink::wink:

    பாட்டு வரிகளையும் இந்த படத்தின் இயக்குனர் தான் எழுதி இருக்கிறார். கவிதையான வரிகள் இல்லை என்றாலும் ரசிக்கும்படியாக தான் இருக்கிறது எனக்கு. பாடலை படம் பிடித்த விதம் அருமையோ அருமை - mall, rain, bike ride, beach, waves, night time, moon, FUN FUN scenes super chemistry கலந்து. :wink::wink:

    படம் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் கேமரா பிரிண்ட் என்றாலும் பரவாயில்லை என்று ஆன்லைன் ல பார்த்துவிடுவேன். தியேட்டர் ரசிகர்களின் சத்தம் சேர்ந்து ஆடியோ வரும். தனியாக படம் பார்த்தாலும் கூட்டத்தோடு கூட்டமா படம் பார்க்கற பீல் வரும். ஓசியில் படம் பார்க்கும் போது இதற்கு மேல் எதிர்ப்பார்க்க கூடாது அல்லவா?

    எனது வாழ்க்கை துணை/இணை க்கு HD பிரிண்ட் வேண்டும். இந்த படத்தின் HD print இப்போது இணையதளத்தில் இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த படத்தை இந்த வாரம் பார்க்க ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறேன் - பொழுதுப்போக்கான எக்குத்தப்பானா வினாத்தாளுடன். (Rapid fire questions) கேள்வி கேட்பவர் பதில் சொல்பவர் சம பங்கில் easygoing ஆக இருந்தால் மட்டுமே சுவாரசியம். இல்லை என்றால் விஷப்பரீட்சை தான். விபரீதங்கள் தவிர்த்து விடுங்கள்.
     
    Last edited: Nov 23, 2022
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் நான் கேட்டு ரசித்த ஒரு புத்தம் புதிய romantic பாடல். Poetu Dhanush's எளிய வரிகள் - பெண்ணின் பார்வையில். பாடல் கேட்பதற்கு இதம்.

    YT - வா வாத்தி - வாத்தி
     
    Thyagarajan likes this.

Share This Page