1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Camera print ல நேற்று இரவு பார்த்த இந்த படம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பட்டியல் போட்டு பெருமை படுத்தும் அளவிற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் என்னவோ ஒன்று இருந்தது. Feel good films list la கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம். மற்றொரு முறை பார்ப்பதற்கு OTT ரிலீஸ் க்கு ஆவலுடன் waiting..

    இந்த பாடலிலும் ஏதோ ஒரு கிக்.

    YT - மேகம் கருக்காதா - திருச்சிற்றம்பலம்
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Waiting to see the movie ma!
     
    Thyagarajan likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    தங்களது பட்டிமன்ற விவாதத்தை கேட்ட பிறகு அலை அடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. பொங்கி எழுந்த பேச்சு/வீச்சு. சுதந்திரம் அன்று நம் நாட்டில் தேசிய கொடி ஏற்றி சாக்லேட் தருவார்கள் (இது தான் எனக்கு தெரிந்த பால்ய நினைவு). தேசிய சிந்தனையை கொடியோடு இணைத்து பேசியது அருமை. அதுவும் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயமும் தேசிய சிந்தனையில் அடங்கும் என்று பாரதியின் குறிப்பை நீங்கள் கோடிட்டு காட்டியது மிகவும் அருமை. தங்களின் தமிழ் மொழி பற்றும் பிரமிக்க வைக்கிறது. மகாகவியின் வம்ச வழித்தோன்றலுடன் மேடையை பகிர்ந்தது பாக்கியம். நிறைய வாய்ப்புகள் கிடைத்து மேன்மேலும் நீங்கள் உயரமாக செல்ல என் வாழ்த்துக்கள்.

    நான் எந்த பக்கம்? நம்ம poetic thread க்கு உண்மையா இருக்க வேண்டாமா?

    1: இந்த இரண்டு பாரதி பாடல்களில் பொங்கி வழியாத காதல் ரசமா ?

    YT - காற்று வெளியிடை கண்ணம்மா
    YT - வீணையடி நீ எனக்கு

    2: பாரதியின் கவித்துவமான கண்ணம்மா/ செல்லம்மா பெயர்களை கேட்டால்/ அந்த பெயர்களை கொண்டு காதலோடு அழைக்கப்பட்டால் மயங்காத பெண் உண்டோ ? (கண்ணம்மா என்ற வார்த்தை இடம் பெற்ற பாடல் வரிகளை கொண்டு நான் இங்கு கண்ணம்மா collection போட்டு இருக்கிறேன். மேலே போஸ்ட் பண்ண இரண்டு பாடல்களிலும் கண்ணம்மா வரும்.)

    3: Freedom fighters - மூன்று நபர்களை சட்டென்று சொல்லுங்கள் என்று யாரவது கேட்டால் அதில் கண்டிப்பாக பாரதி இடம் பெற்று இருக்க மாட்டார். சுதந்திரம் கிடைப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே பாரதி மறைந்து விட்டார். பாரதியின் மறைவு தினம் - 11 Sept 1921. இவரது எழுத்தில் தேசிய சிந்தனை மேலோங்கி இருக்கலாம். பாரத தேசத்திற்கு இவரது பங்களிப்பை மறுப்பதற்கு இல்லை. அதான் சுதந்திரம் வாங்கி 75 வருடம் கடந்து விட்டோமே? நாட்டிற்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்பதை விட நாட்டை முன்னேற்ற பாதையில் எப்படி எடுத்த செல்லலாம் என்ற சிந்தனை தான் இப்போதைய தேவை.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பாரதியார் என்றதும் எனது நினைவிற்கு வரும் அவரது வரிகள் மற்றும் எனது தனிப்பட்ட எண்ணங்கள்:

    1: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை

    எனக்கு உரமிட்ட வரிகள் இவை. அநியாயம் செய்தவர்கள் எல்லாம் தெனாவெட்டா சுத்தும்போது நியாயமா நடந்து கொள்ளும் நான் எவ்ளோ தெனாவெட்டா சுத்தலாம் ? எதற்கு/யாருக்கு பயப்பட வேண்டும்? பயம் என்பது எனது அகராதியில் கிடையாது.

    2: மனதிலுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்.


    எது நடந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம். கவலை பட்டாலும் படாவிட்டாலும் வாழ்க்கை ஓடும். கவலை பட்டால் என்ன பிரயோஜனம்? வாழ்க்கையில் எல்லாமே Math problems இல்லை. எல்லாத்துக்கும் solution இருக்காது. Solve பண்ணனும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. Solve பண்ணுவோம் இல்லை என்றால் சமாளிப்போம் :grinning::grinning: எந்த சூழ்நிலையையும் எதிர்க்கொண்டு எதையும் சமாளிக்க முடியும் என்ற உறுதி வேண்டும்.

    நல்லதை நினைப்போம் நல்லதை பேசுவோம்.

    3: நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;


    “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

    படிச்ச கெத்து இருந்தால் பாரதி குறிப்பிட்ட வரிகள் தானா பொருந்தும். :grinning::grinning:

    பாரதி கண்ட புதுமை பெண் என்ற எண்ணம் பத்தாது. நானே பாரதி; எனது வாழ்க்கைக்கான வரிகளை நானே நிர்ணயிப்பேன்.

    ஓவர் ஆக கிறுக்கிட்டேன்னா ? நான் இதெல்லாம் சொல்லிட்டு நிஜ வாழ்வில் சுத்த மாட்டேன். தானாக எனது செயலில் வெளிப்படும்.

    பாட்டு போடாமல் போக முடியுமா ? இப்போ இன்னொரு கண்ணம்மா பாட்டிற்கு போவோம்.

    YT - கண்ணம்மா கண்ணம்மா - ரெக்க
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Hi Veda,
    நம்ம poetic thread க்கு உண்மையா இருக்க வேண்டாமா? - Really like that.
    தாங்கள் குறிப்பிட்ட கண்ணம்மா பாடல்களை
    ரசிக்காத தமிழன் உண்டா ? அதிலும் வீணையடி
    நீ எனக்கு - எனக்கு பிடித்த பாடல்.
    மனம் கனிந்த வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.
    இந்த கோடி பாயிண்ட் நிறைய பேருக்கு பிடித்தது.
     
    singapalsmile and Thyagarajan like this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
    அச்சமில்லை அச்சமில்லை - இப்போதும் சோர்ந்த
    காலத்து தைரியம் ஊட்டும் ! ஒரே ஒரு சிறு திருத்தம் -
    “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” இது
    அவ்வையாரின் வரிகள்.
    பாரதி கண்ட புதுமைப்பெண் வேதா என்று சொல்லலாம்.
    சிறப்பான மேற்கோள்கள் !
    Song also super and apt.
     
    singapalsmile and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    திருத்தியதற்கு நன்றி. தூக்கத்தில் எழுதியதால் பெயர் சார்ந்த தவறு நேர்ந்து விட்டது. அவ்வையார் மன்னிப்பாராக!! :grinning::grinning:

    பாரதி கண்ட புதுமைப்பெண் - அடைமொழி வேண்டாமே..என்னை பொறுத்தவரை நம்மை நாம் எப்போதும் உயர்வாகதான் எண்ண வேண்டும். அந்த தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முதல் படி. நாலு பேரு நாலு விதமா சொல்வாங்க. அதெல்லாம் கேட்டுட்டு இருந்தா நார் நாரா கிழிந்து விடுவோம். சூழ்நிலை கைதியாக இல்லாமல் எல்லா சூழலிலும் நியாயமாக நடந்தும் நல்லது கெட்டது பகுத்து அறிந்தும் நடந்தாலே போதும். வாழ்க்கை நிம்மதியாக ஓட்டலாம்.
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    படம் பார்த்து மூன்று நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் படத்தின் நினைவுகள் என்னை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. எழுதிய கவிதைகள் வரைந்த ஓவியங்கள் உயிர் கொண்டு எழுந்து நம்மோடு உரையாடினால் எப்படி இருக்கும் ? எத்தனையோ Poetic exchanges - படத்தில் அழகாக இடம்பெற்று இருக்கிறது. மென்மையான ரொமான்ஸ் தாக்கும். கண்ணாலே பேசுவது என்றால் என்னவென்று படம் பார்க்கும்போது புரியும். இனம் புரியாத உணர்வு தோன்றும். கதாநாயகனும் நாயகியும் நடிப்பில் கலக்கி இருப்பார்கள். இடைவெளியில் வரும் ட்விஸ்ட் கண்டிப்பாக சுண்டி இழுக்கும். நேர்த்தியான கதை அமைப்பு. ஒரு நிமிடம் கூட படம் போர் அடிக்கவில்லை. கண்டிப்பாக ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம். Amazon Prima la இருக்கிறது.

    பாடல் காட்சிகளில் ஓவியங்களை உலாவ விட்டு இருக்கிறார்கள் என்பேன்.

    சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும் மூன்று புத்தம் புது பாடல்கள். மதன் கார்க்கியின் வரிகள் அபாரம். தமிழ் மொழி இவ்ளோ இனிமையா என்று எண்ண வைத்து தமிழ் மேல் மேலும் காதல் கொள்ள வைக்கும்.

    1) Hey Sita Hey Rama - Sita Ramam
    நம்ம SPB வாய்ஸ் கேட்ட மயக்கம். அவரது வாரிசு பாடிய பாடல். இவர் நிறைய பாடல்கள் பாடி அசத்துவார் என்று நம்புவோமாக!

    2) கண்ணுக்குள்ளே - Sita Ramam
    கேள்வி பதில் அத்தனையும் ஹைக்கூ!

    3) குறுமுகில் - Sita Ramam
    உயிருள்ள/உயிரோட்டமான ஓவிய கண்காட்சி!
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
    I fell in love with Charan`s voice. Both telugu and tamil version are melodious and mettiflous. First I watched telugu version, then seeing your post watched tamil version too. Usually I prefer the originals, rather than the dubbed ones. But this SITA RAMAM is the exception.
     
    Thyagarajan likes this.

Share This Page