1. What Movie Did You Watch Today? : Post Here
  Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

 1. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,319
  Likes Received:
  2,214
  Trophy Points:
  338
  Gender:
  Female
  ஒருத்தர் படம் பார்க்கறதே ஜாலியோ ஜிம்கானாக்கு தான். சீரியசான இன்டென்ஸ் படங்கள் பார்க்கணும் என்றால் ஸ்பெஷல் மூட் இருக்கணும். இன்னொருத்தர் சீரியஸ் படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். டைரக்டர் பாலா படங்கள் பார்ப்பதில் பிரியர். கடந்த வார இறுதியில் இவரை ஒரு படம் தேர்ந்து எடுக்க சொன்னது தப்போ?

  அந்த படத்தில் இருந்து ஒரு இனிய பாடல்.

  உசுரையே உலுக்குதே - தேன்

  படத்தில் இயற்கை காட்சிகள் கண்களை கொள்ளை கொள்ளும். ஆனால் ஒரே சோக ரசம். படம் நிதர்சனம் ஆக இருக்கலாம். படத்தின் போக்கு ஆரம்பத்திலே தெரிந்து விட்டதால் ஏனோ இந்த படம் பார்க்க தெம்பு இல்லை. இந்த மாதிரி படம் போட்டு கொன்றதிற்கு பிராயச்சித்தமாக படம் தேர்ந்து எடுத்தவர்க்கு பிடித்த பாடல்கள் ஒளிபரப்பவும் என்று உத்தரவு போட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டது. படத்தை காட்டிலும் பாடல்கள் படுத்திவிடுமோ என்று உள்ளூர ஒரு பயம் இருக்க தான் செய்தது. எவ்ளோவோ பார்த்தாச்சு. இதையும் பார்த்து விட வேண்டியது தான் என்று மனதை திடப்படுத்தி கொண்டாயிற்று. :wink::wink:

  ஒரு பாடலின் வரிகள் அத்தனையும் மனப்பாடமாக தெரிந்து பாடல் ஓட ஓட அந்த வரிகளை பாடியது 48 மணி நேரங்கள் கடந்தும் இன்னும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு அந்த இருவர் மனத்திலும் ஒரு நிரந்திரமான இடம் என்று சொல்லவும் வேண்டுமா?

  அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்
   
  vidhyalakshmid likes this.
 2. sweetsmiley

  sweetsmiley Platinum IL'ite

  Messages:
  982
  Likes Received:
  3,012
  Trophy Points:
  263
  Gender:
  Female
  Nandri @singapalsmile Kattayam piditha varigalai matum post seigiraen.. :thumbsup:
   
  singapalsmile likes this.
 3. sweetsmiley

  sweetsmiley Platinum IL'ite

  Messages:
  982
  Likes Received:
  3,012
  Trophy Points:
  263
  Gender:
  Female
  Idhayam (1991) (இதயம்)
  பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

  I like these lines..

  மௌனம் பாதி மோகம் பாதி
  என்னை கொல்லும் எந்நாளும்


  யாப்போடு சேராதோ
  பாட்டு தமிழ் பாட்டு
  தோப்போடு சேராதோ
  காற்று பனிக்காற்று
  வினா தாள் போல் இங்கே
  கனா காணும் காலை
  விடை போலே அங்கே
  நடை போடும் பாவை
   
 4. sweetsmiley

  sweetsmiley Platinum IL'ite

  Messages:
  982
  Likes Received:
  3,012
  Trophy Points:
  263
  Gender:
  Female
  Idhayam (1991) (இதயம்)
  Song : Poongodi Thaan Poothathamma

  Such a beautiful song..

  Silarukku sila neram thunichalgal pirakkaathu
  Thunichchalgal pirakaamal kadhavugal thirakkaathu

  Thaai kooda azhukindra pillaikuth thaane
  Pasiyendru pariyodu paalootta varuvaal
  Un veetu kannaadi aanaalum kooda
  Mun vanthu nindraal thaan mugam kaatum inge
  Manadhukkul pala kodi ninaivugal irunthaalum
  Uthadugal thiranthaal thaan udhavigal perakkoodum
  Kozhaikku kadhalenna oomaikku paadalenna.
   
 5. vidhyalakshmid

  vidhyalakshmid Platinum IL'ite

  Messages:
  2,368
  Likes Received:
  1,371
  Trophy Points:
  290
  Gender:
  Female
 6. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,319
  Likes Received:
  2,214
  Trophy Points:
  338
  Gender:
  Female
  அழகான வரிகள். எனக்கு இன்னொன்று தோன்றும். காதலை சொல்லாமல் இருப்பவர்கள் கோழைகள் என்று சொல்ல மாட்டேன். காதலை சொல்லி தோற்பதை விட சொல்லாமல் வென்றவர்கள் - நட்பை.
   
 7. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,319
  Likes Received:
  2,214
  Trophy Points:
  338
  Gender:
  Female
  Hi V,

  மேடை பேச்சில் கலை தேர்ந்தவரே!! நேர்க்கோட்டில் சிந்திப்பவரே!! உங்களது பேச்சு வழக்கம் போல அருமை. தலைப்பை பார்த்தவுடனே நான் எந்த பக்கம் என்பதை முடிவு பண்ணிவிட்டேன். இன்று எதிரணியில் நின்று திடமாக வாதிக்க போகிறேன்.

  1: ஒருத்தரின் எண்ண ஓட்டம்/சிந்தனை அவர் வளர்ந்த/சந்தித்த தனிப்பட்ட சூழ்நிலையை பொறுத்தது--பெற்றோர்கள் உடன்பிறந்தவர்கள் நண்பர்கள் சுற்றுவட்டார நபர்கள் ஆசிரியர்கள் சந்திப்பை/ சிந்தனையை ஒரு வகையில் சார்ந்தது. மற்றும் படித்த புத்தகங்கள். பார்த்த சினிமாக்கள். இணையதள பட்டி மன்ற பேச்சு அவ்ளோ எளிதாக ஒருவரை மேம்படுத்திவிடாது.

  2: இணையதளத்திற்கு நான் வருவதே பொழுது போக்கிற்கு மட்டும் தான். வீட்டு எண்ணங்கள் அலுவலக வேலை பழு இருக்கற இதர பிரச்சனைகள் மறந்து சற்று இளைப்பாற இணையதளம் வந்தால் இங்கும் பாடமா? என்ற சலிப்பு தான் தோன்றும்.

  3: வேறு ஒரு பட்டி மன்றத்தில் இன்று பேசிய தலைப்பிற்கு எதிராக பேச சொன்னாலும் நீங்கள் பேசுவீர்கள் தானே? பட்டிமன்ற பேச்சாளாருக்கு ஒரே நிலைப்பாடு இல்லை. இன்று ஒரு பேச்சு. நாளை மற்றொரு பேச்சு. இதை கேட்டு எந்த பக்கம் நியாயத்திற்கு நாங்கள் சாய்வது ?

  4: நான் பார்த்தவரையில் அந்நிய தேசத்து குழந்தைகள் தமிழ் கிளாஸ்க்கு போவதையே தலைவலியாக தான் பார்க்கிறார்கள். இதில் இவர்களை பட்டி மன்ற பேச்சை வேறு கேட்க சொன்னால் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்று தான் நான் சொல்வேன். இவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. தமிழ் ஆர்வம் தானாக வரணும். திணிக்க கூடாது. அதுபோல தான் தனிமனித மேம்பாடும். தானாக வரணும்.

  5: சமூக மாற்றம்/மேம்பாடு என்பதெல்லாம் தொலை நோக்கு பார்வை. தனிமனித மேம்பாடு என்பதே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில். நீயா? நானா ? பார்த்துவிட்டு கற்றுக்கொள்பவர்களை விட கருத்து பரிமாற்றத்தில் வேறுபாடு இருந்து சண்டைபோடும் தம்பதிகள் தான் அதிகம். (பட்டி மன்றம் என்றாலே ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவரை போல ஓடுவார் எனது இணை. அதுமட்டும் அல்லாமல் அளந்து அளந்து பேசுபவர் இணையாக இருந்தால் இந்த பிரச்னை வரவே வராது. :wink::wink:)
   
  vidhyalakshmid and Thyagarajan like this.
 8. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,319
  Likes Received:
  2,214
  Trophy Points:
  338
  Gender:
  Female
  என்னவோ சமையல் கலை மீது இப்போது ஒரு மோகம். கடையில் வாங்கிய பட்டர் (Kerrygold Irish butter unsalted) உருக்கி வீட்டில் செய்த நெய். மிக்ஸியில் அரைத்த மாவில் பூப்போன்ற இட்லி அடுத்த நாள் அதே மாவில் சுட்ட நெய் தோசை. சட்னிக்கு பதிலாக செய்த பருப்பு இல்லாத டிபன் சாம்பார். இந்த டிபன் சாம்பாருக்காகவே எக்ஸ்ட்ரா இட்லிஸ் சாப்பிட்ட இணை - எனக்கு செம சந்தோசம். ஈ அடிச்சான் காபி போல நான் அப்டியே கடைப்பிடித்த டிபன் சாம்பார் ரெசிபி இதோ. நீங்களும் அசத்துங்க!!

  வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகம் செல்வது உற்சாகமாக இருக்கிறது. டீமில் புதுசாக சேர்ந்தவர்களுக்கு ட்ரைனிங் குடுக்க சொன்னார்கள். 4 பேரோடு முடிய வேண்டியது 30 நபர்களுக்கு என்றானது. பக்கத்துக்கு டீம்களில் இருந்து பலரும் கலந்துகொண்டார்கள். தெரிந்ததை அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. மீட்டிங் நேரம் முடிந்து அரை மணி நேரங்கள் தாண்டியும் மாலை நேரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்து கிடைத்த பதில்களில் நிறைவுற்று பாராட்டு பத்திரம் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி.

  இந்த வருடம் stockaholic என்று எந்த நேரத்தில் தீம் சொன்னேனோ? பரிதாப நிலையில் Stock market இருக்கிறது. FAANG stocks நிலை அந்தோ பரிதாபம். மண்டைக்குள் தினமும் stock tickers ஓடிக்கொண்டிருக்கிறது. பொன்னான நேரமாக கருதி முழு வீச்சில் இன்றும் ஸ்டாக்ஸ் வாங்கி கொண்டிருக்கிறேன். Adrenalin rush!! இன்னும் 13% பாசிட்டிவ் ரிட்டர்ன் ல இருக்கிறேன் என்பது மிக்க மகிழ்ச்சி.

  தற்போதைய சந்தோசமான மனநிலைக்கு இந்த புதிய பாடல்:

  JollyO Gymkhana - Beast
   
  vidhyalakshmid and Thyagarajan like this.
 9. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,319
  Likes Received:
  2,214
  Trophy Points:
  338
  Gender:
  Female
  கவிதையை /ரசனையை/கருத்தை வெளிப்படுத்துபவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாக இருக்கலாம். நபர்களின் ஒழுக்கத்தை / பின்புலத்தை ஆராயணுமா? சொல்லப்பட்ட கவிதை /ரசனை /கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா? ரசனை இருக்கும்பட்சத்தில் ரசிக்க தானே தோணனும் ? நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டாமே என்று தான் நான் சொல்வேன்.

  பாடல் வரிகளில் விளக்கங்களில் காதல் ரசம் தேனாக சொட்டுகிறது. சமீபத்தில் நான் வெகுவாக ரசித்தது இந்த பேட்டி தான்.
   
  Thyagarajan likes this.
 10. Thyagarajan

  Thyagarajan IL Hall of Fame

  Messages:
  9,366
  Likes Received:
  10,148
  Trophy Points:
  490
  Gender:
  Male
  ஆழம் காண முடியாத நிலை. ஃபேட், Dow, S & P துரித இரக்கம், பண வீக்கம் இவை இன்திய பங்குசந்தையை படுகுழியில் தள்ளி தள்ளாட வைத்துள்ளது. ஜஸ்ட் ஹோல்டிங் !
   

Share This Page