1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,656
    Likes Received:
    1,773
    Trophy Points:
    325
    Gender:
    Female
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,558
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:A far superior debate on the subject of true vs virtual emancipation of women in 20th century. I trust the viewers here and in LA debate hall would easily go with your points of view. I also trust you won the debate with resounding applause and standing ovation that you truly deserve.
    Thanks for sharing your video of debate.
    Regards.
    God Bless.

    Ps: I had browsed your other debates and songs competition held on specific dates when Tamilians and othernationals celebrate the day. Quite a fascination!
     
    vidhyalakshmid likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,656
    Likes Received:
    1,773
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Thanks so much Sir! Your feedback is always invaluable to me. It was well received but it was not a contest. So I went easy:blush:
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    அந்த காலத்தில் வள்ளுவர், பாரதி, அவ்வையார் அள்ளி தெளித்த கருத்துக்களை உணர்ந்து படித்து இந்த காலத்தில் ஏற்புடையதாக குறிப்பிட்டு பேசுவது உங்களுக்கு சரளமாக வருகிறது.

    அவ்வையார் - தையல் சொல் கேளேல்
    பாரதியார் - தையலை உயர்வு செய்

    எதிர்மறை பொருளை கோடிட்டு காண்பித்தது அருமை.

    அவ்வையார் எதற்கு அப்படி சொன்னார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நெட் ல தேடி பார்த்தேன். இந்த பொருள் மேலோட்டமாக கிடைத்தது: இளம் வயது பெண் பின்னாலே சுற்றி அவள் சொல்வதை எல்லாம் கேட்காதே. (உண்மையான பொருளுக்கு பல விதமான விளக்கங்கள் இருக்கிறது. அதை பற்றி தனி விவாதமே நடத்தலாம்)

    [ஏதாவது படித்தால் வேறு ஏதாவது எனக்கு தோணும். சில நேரம் எக்குத்தப்பா(க) தான். :grinning::grinning:அவ்வையார் மணம் புரிந்ததில்லை. காதல் வயப்பட்டதாகவும் நான் படித்ததில்லை. அதனால் ஆண்களை பம்பரமா பெண்கள் சுத்த வைக்கிற கெத்து அவரை ஈர்க்கவில்லையோ என்னவோ என்று எனது சிற்றறிவு சொல்கிறது. :wink::wink:]

    உங்களது உரைக்கு வருகிறேன். வாழ்க்கை துணை என்பதை இரு பாலருக்கும் வாழ்க்கை இணைவர் என்று மாற்றி அமைக்க சொன்னது உயர்ந்த எண்ணம். பாராட்டிற்கு உரியது. :clap2::clap2:

    மனைவி இடத்தில் அன்னையை தேடாதீர்கள் என்று சுகி சிவம் சொன்னதை நீங்கள் சொன்னது கேட்க நன்றாக இருந்தது. என்னை பொறுத்தவரை இதை மனைவிகளுக்கும் மாற்றி பொருத்தி பார்க்க வேண்டும்: கணவன் இடத்தில அப்பாவை தேடாதீர்கள்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பெண்கள் சுதந்திரம் பெயரளவில் தானா? இது பற்றி நான் ஏற்கனவே இங்கு விவாதித்து இருக்கிறேன். அதனால் no repeat.

    பிறந்த வீட்டில் சுதந்திரமா வளர்ந்த பெண்கள் சுதந்திரம் புகுந்த வீட்டில் பறிக்க படுகிறதா? ஆசை ஆசையாக பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்த்த பெற்றோர்கள் அந்த பெண்களை சுதந்திரமாக வாழ வழி விடுகிறார்களா? தயார் படுத்துகிறார்களா?

    எனக்கும் எனது உறவினர் ஒருவருக்கும் இடையில் மூன்று வருடத்திற்கு முன்னால் நடந்த விவாதம் எனது நினைவிற்கு வருகிறது. அவரது பெண்ணிற்கு 22 வயது ஆகிறது. கேம்பஸ் இன்டெர்வியூ ல வேலை கிடைத்து படித்து முடித்து வேலைக்கு போக காத்திருக்கும் பெண். இந்த பெண்ணிற்கு வரன் தேடுவதாக என்னிடம் சொன்னார். எனது உறவினரிடம் நான் கேட்ட கேள்விகள்/ சொன்ன பதில்கள்:

    செல்லமாக முழு சுதந்திரத்தோடு வீட்டில் வளர்ந்த ஒரே பெண். சுயமாக தன் காலில் நிற்க தெரியுமா? அட்ஜஸ்ட் பண்ண தெரியுமா? எதுக்கு சண்டை போடணும் எதுக்கு சண்டை போட கூடாது என்ற வித்யாசம் தெரியுமா? நட்பை/உறவை வளர்த்துக்கொள்ள தெரியுமா? தனது தேவைகளை தானே பூர்த்திக்கொள்ள தெரியுமா? பணத்தை கையாள தெரியுமா? குறைந்த அளவு சாப்பிடும் அளவிற்காவது சமைக்க தெரியுமா? பாலிடிக்ஸ் சமாளிக்க தெரியுமா? ஏமாற்றங்களை எதிர்க்கொள்ள தெரியுமா? வலியும் வேதனையும் வந்தால் தாங்கிக்கொள்ள முடியுமா? மொத்தத்தில் தன்னை தானே சார்ந்து இருக்க முடியுமா?

    முதலில் வேலைக்கு போகட்டும். பாலிடிக்ஸ் பார்க்கட்டும். அலுவலகத்தில் பாஸ் கிட்ட திட்டு வாங்கட்டும். ப்ராஜெக்ட் ல சின்ன தோல்விகள் சிந்திக்கட்டும். வீட்டை விட்டு தனியே சில வருடங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்டலில்/ரூமில் தங்கி இருக்கட்டும். அட்ஜஸ்ட் பண்ணட்டும். சம்பளத்தை எப்படி திட்டமிட்டு முதலீடு செய்யணும்/செலவிடனும் னு கத்துக்கட்டும். நண்பர்களிடம் வரும் கருத்து வேறுபாடுகளை /சண்டைகளை சமாளிக்க கத்துக்கட்டும். கொஞ்சம் சமைத்து பழகட்டும். தனக்கு என்ன தேவை எது தேவை இல்லை என்ற தெளிவு வரட்டும். சுயமாக வாழ கற்றுக்கொண்ட பிறகு 25 வயதில் திருமண பேச்சை ஆரம்பிங்க. அந்த பெண்ணிற்கு அவளே மாப்பிள்ளையை தேர்ந்து எடுக்கும் உரிமையை குடுங்க.

    குறிப்பு: இவ்ளோ பேச்சு கேட்ட பிறகு அந்த உறவினர் என்னிடம் இப்போதெல்லாம் கம்மியாக தான் பேசுவார். யாரவது என்னிடம் ஏதாவது கேள்வி கேட்டால் நான் குடுக்கற லெக்ச்சர் கேட்டு ஓடி விடுவார்கள். என்னிடம் கேள்வி கேட்கவே யோசிப்பார்கள்( குடும்பத்து நபர்களையும் சேர்த்துதான்) :grinning::grinning:

    சுதந்திரமா வாழ்வது பெண்ணின் கையிலும் இருக்கிறது. சுதந்திரத்திற்காக கை ஏந்தும் நிலை பெண்ணிற்கு இல்லவே இல்லை என்பதை பெண் ஆணித்தரமாக முதலில் நம்ப வேண்டும். தன்னை தானே செதுக்கணும்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று பொருள் புதைந்த ஒரு புத்தம் புதிய பாடல். Attitude இருப்பது தப்பே இல்லை. எங்கோ என்றோ படித்தது: It's not my attitude, it's my style. :grinning::grinning:

    இது பொல்லாத உலகம் - மாறன்

    இது பொல்லாத உலகம்
    நீ ரொம்ப ஷார்ப்பா இரு
    யாருக்கும் யார் என்ன குறைச்சல்
    நீ கொஞ்சம் மாஸா இரு
    அவன் ரைட்டுன்பான் ப்றோ
    இவன் தப்பும்பான் ப்றோ
    இத எல்லாத்தையும் கேட்டாக்க
    ஹவ் வில் யு ஃகிரோ

    உன்ன கிங்ன்பான் ப்றோ
    வுட்டா காடுன்பான் ப்றோ
    அப்றம் சங்கூத போறான்னு
    ஹவ் வில் யு னோ
    உன் ரூட்ட நீ போடு
    உன் மேட்ச்ச நீ ஆடு
    அட ஆறு பாலும் சிக்ஸர் அடிடா
     
    Thyagarajan likes this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,656
    Likes Received:
    1,773
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Super thought Veda! And thanks for your detailed analysis of the speech as always. Constructive feedback is good rather than general comment.
     
    singapalsmile and Thyagarajan like this.
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,656
    Likes Received:
    1,773
    Trophy Points:
    325
    Gender:
    Female
    புதிய சிந்தனையை கை தட்டி ஏற்றுக்கொண்டது
    மிக்க மகிழ்ச்சி!
    தங்கள் கருத்துகள் மற்றொரு பேச்சுக்கான நல்ல தூண்டுதல் !
     
    singapalsmile and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Sweet பிடிக்குமா? Song பிடிக்குமா? ஏதாவது ஒன்னு தான் சொல்லணும் என்றால் எதை தேர்ந்து எடுப்பீங்க?

    ரெண்டுமே சுவையில் ஒன்றுக்கு இன்னொன்று போட்டி போட்டு தாக்கும். என்னால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. கத்தி முனையில் கேட்டாலும் சரி. துப்பாக்கி முனையில் கேட்டாலும் சரி.

    இந்த poetic thread க்கு நெருங்கிய தொடர்புள்ள ஒரு நண்பர் WA ல எனக்கு இந்த பாடல் அனுப்பினார். பாடல் கேட்டு மதி மயங்கி விட்டேன். சொர்க்கத்து கிறக்கம் எனக்கு. பாடல் அனுப்பிய அந்த நண்பருக்கு இங்கும் இன்னொரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    கண்கள் இரண்டால் - Classic - Ghee Badam Halwa

    கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் - Ghee Poppy Seeds Halwa

    Ghee Badam Halwa பிடிக்குமா? Ghee Poppy Seeds Halwa பிடிக்குமா?

    ரெண்டுமே சுவையில் ஒன்றுக்கு இன்னொன்று போட்டி போட்டு தாக்கும். என்னால் இந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. கத்தி முனையில் கேட்டாலும் சரி. துப்பாக்கி முனையில் கேட்டாலும் சரி. :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் தேடாமல் என்னை இன்று தேடி வந்து மகிழ்ச்சி கொள்ள வைத்த ஒரு YT வீடியோ. அதுவும் IR சம்பந்தப்பட்டது பாடலுடன். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேணும்?

    தேடி பாடல் கேட்பது இன்பம் என்றால் தேடாமல் கேட்கும்/கிடைக்கும் பாடல் பேரின்பம்.

    IR இசை உலக அற்புதங்களில் ஒன்று என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த வீடியோ பார்த்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.

    IR இசை - தென் பாண்டி சீமையிலே - நிலா அது வானத்து மேலே

    தனுஷின் சொந்த தாலாட்டு பாடல் வரிகள் அருமை.

    இந்த இரண்டு பாடல்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன? அவரவர் கற்பனையை பொறுத்து இதற்கு பதில் வேறுபடும் என நினைக்கிறேன்.

    தென் பாண்டி சீமையிலே - நாயகன்
    நிலா அது வானத்து மேலே - நாயகன்

    IR/MR/Kamal னு சொல்றவங்க KG kids. :grinning::grinning: ஒரு PG Adult (அது யாரு என்பது சொல்லவும் வேண்டுமா) சொல்ற பதில் - தாலாட்டு பாடல். :wink::wink:
     
    Thyagarajan likes this.

Share This Page