1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Superb selection! Not only the title, songs too. Your memory tank is evergreen,it seems.
    Enjoyed all the songs.
     
    singapalsmile and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    காதலை போற்றுவதில் சிறந்தவர்கள் பெண்களா? ஆண்களா?

    நான் யார் பக்கம் என்பது இந்த பதிவின் முடிவில்.

    1: தபு சங்கரின் காதல் சொட்டும் காதல் ரசம் கவிதைகைளை படிச்சு இருக்கீங்களா? சில சாம்பிள் நெட் ல இருந்து எடுத்தது:

    கோலம்
    எதற்காக
    நீ கஷ்டப்பட்டுக்
    கோலம் போடுகிறாய்?
    பேசாமல்
    வாசலிலேயே சிறிது நேரம்
    உட்கார்ந்திரு, போதும்!

    ஒரு கவிதை கூட உன்னை மாதிரி இல்லையே
    எல்லா கவிதைகளுமே
    உன்னை பற்றியது எனினும்
    ஒரு கவிதை கூட
    உன்னை மாதிரி இல்லையே

    தேவதைகளின் தேவதை
    தான் வரைந்த ஓவியத்தை
    கடைசியாக ஒரு முறை
    சரி செய்யும் ஓவியனைப்போல
    நீ ஒவ்வொரு முறையும்
    சரி செய்கிறாய்
    உன் உடையை

    2: கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி அவர்கள் எழுதிய எத்தனையோ திரைப்பட ரொமான்டிக் பாடல்களில் காதல் தேனாக சொட்டவில்லையா? இவர்கள் மறைந்தாலும் இவர்களது பாடல் வரிகள் காலத்துக்கும் அழியாதது அல்லவா?

    3: சங்க கால இலக்கியங்களில் ஆண் படைப்பாளிகள் எழுதாத காதலா?

    இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது என்ன தெரிகிறது? காதலை பற்றி எழுதுவதில் ஆண்களை அடிச்சுக்க முடியாது. இவர்கள் முடிசூடா காதல் மன்னர்கள். என்னடா இப்படி நான் எழுதிட்டேன் என்று பார்க்கறீங்களா? பொறுங்கள். கொஞ்சம் யோசிங்கள். எழுதினா மட்டும் போதுமா? எழுதியதை செயலில் காட்ட வேண்டுமா?

    சயின்ஸ் என்றாலும் பெண்கள் பற்றிய வர்ணிப்பு என்றாலும் சுஜாதாவும் எழுதுவதில் கைத்தேர்ந்தவர் என்று நான் சொல்லியா தெரியணும்? இப்போ அவர் மனைவி சொல்வதை நேரிடையாக கேளுங்க.

    YT - சுஜாதாவை பற்றி Sujatha Rangarajan

    இப்படி ஆண்கள் அபரிதமான கற்பனையோடு எழுதியதை ஒரு வரி ஒரு புள்ளி விடாம படித்துவிட்டு அதெல்லாம் உண்மை என்று நம்பி காதலை வளர்த்துக்கொள்வதில்/போற்றுவதில் பெண்கள் தானே சிறந்தவர்கள். இதிலென்ன சந்தேகம்? அப்புறம் அதிகமா பல்புகள் வாங்கறதும் பெண்கள் தானே? :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வார தீம் #4 - காதல் கடிதங்கள்
    (இந்த ஸ்பெசல் மாதத்தின் கடைசி தீம்)

    1: இளம் பருவத்தில் ஒரு பெண் எழுதிய காதல் கடிதம்

    என் ரகசிய சிநேகிதனே,

    எனது பெரும்பாலான ரொமான்டிக் கவிதைகளுக்கு கருப்பொருளாய் இருந்தவன் நீதான். முப்பொழுதும் உன்னை பற்றிய கற்பனைகள். கனவில் காதல் கலவரங்கள். உன்னை பற்றிய நீங்கா நினைவு அலைகளால் தான் எனக்கு கவிதை கிறுக்குவது கைவந்த கலையாக இருந்திருக்கிறது; கவிதை காற்று என்னைவருடி இருக்கிறது. எனக்கு பிடித்த புத்தகங்களை உன்னோடு பகிர்ந்து அதே புத்தகங்களை நீ வாசித்தபிறகு நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

    உன்னிடம் நேரிடையாக பேச என்னுள் வெட்கம் கலந்த தயக்கம். உன்னோடு பேசுவதாக நினைத்து எனது வீட்டுக்கிளியிடம் நான் பேசிய நாட்கள் எவ்ளோவோ இருக்கிறது. பச்சைக்கிளி விடும் தூதாக நான் பேசுவதை எல்லாம் பச்சை பசேல் பசுமையோடு உன்னிடம் கொண்டு கிளி சேர்த்துவிடாதா? என்ற கிறுக்குத்தனம். வானவில்லை பார்க்கும்போதெல்லாம் நீயும் நானும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது ஏனெனில் என் வாழ்க்கையில் வண்ணங்களை சேர்க்கப் போகிறவன் நீயல்லவா?

    இருவருமே சேர்ந்து ரொமான்டிக் பாடல்கள் கேட்டு ரசிக்கும் போது குறும்பான வரிகள் வரும்போது உன் முக பாவனைகளை உற்று நோக்க ஆசை. இப்போதெல்லாம் ரொமான்டிக் பாடல்களின் இசை உனது இதயத்துடிப்பின் சங்கீதமாக என்னை தாலாட்டி தூங்க வைக்கிறது.

    வாசனை பிடிக்க நீ என்னுடன் இல்லாததால் மல்லிகைப்பூவை சூடிக்கொள்ள தோணவேயில்லை. சங்க கால தலைவன் தலைவி பற்றிய பாடங்கள் படித்தபோது எல்லாம் உன்னை நினைத்து ஏங்கிய நாட்கள் ஏராளம். பசலை படர்ந்து எனது சதைப்பற்று குறைவதற்கு முன்னால் விரைந்து வா என்னிடம்; விருந்தோம்பல் என்றால் என்னவென்று காட்டுகிறேன் உனக்கு. :wink::wink:

    சர சர சார காத்து வீசும் போது - வாகை சூடவா
    மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
    கொத்தவே தெரியல மக்கு நீ

    வளையோசை கல கல கலவென - சத்யா
    ஒரு காதல் கடிதம் விழி போடும்
    உன்னை காணும் சபலம் வர கூடும்

    2: அறுபது வயது பெண்மணி எழுதிய காதல் கடிதம்

    என் வயோதிக வசீகரனே,

    பரஸ்பர விருந்தோம்பல் முடித்து இருவரும் இளைப்பாறும் பருவத்தில் இருக்கிறோம். உனது வசீகரத்தால் அன்றும் இன்றும் என்றும் என்னை வீழ்த்தினாய்/வீழ்த்துகிறாய். முதல் முதலாக உன்னுடன் தோன்றிய முதல் காதலுடன் இன்றும் உனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறேன்.

    எனது நடை தடுமாறும் போது உனது நடுங்கும் கரத்தை கொண்டு எனது கரம் பற்றி எனக்கு திரும்பவும் நடை பயில கற்றுக் கொடுக்கிறாய். என்றாவது எனக்கு கோபம் வந்தால் நீ சாந்த ஸ்வரூபமாக மாறி என்னை சாந்தப்படுத்துகிறாய். நான் தடுக்கி விழும்போதெல்லாம் தூணாக நின்று என்னை தாங்குகிறாய். உன் கரம் பற்றி தூங்கினால் மட்டுமே எனக்கு நிம்மதியாக தூங்க முடிகிறது.

    நமது வாழ்க்கையில் என்னால் இயன்றதை எந்த வித நிபந்தனையும் இன்றி உனக்கு கொடுத்தேன். உன்னால் இயன்றதை எனக்கு கொடுத்தாய். கொடுத்ததெல்லாம் இருபக்கமும் சமமா? என்று தராசில் நிறுத்தி பார்க்க இது வணிக பரிவர்த்தனை அல்லவே. உனக்குள் நான் எனக்குள் நீ என்கின்ற வாழ்க்கை பரிவர்த்தனை அல்லவா? அன்னப்பறவை போல உனக்குள் இருக்கும் நல்லதை மட்டுமே பிரித்து பொக்கிஷமாக என் மனதில் பூட்டி வைத்திருக்கிறேன். கெட்டதை எல்லாம் எனது mental trash can ல கடாசி விட்டேன்.

    உயிர் விடைபெறும் தேதி விதியின் கையில். நான் தான் முதலில் போகவேண்டும் என்று ஒற்றை காலில் தவமாய் நிற்பது அர்த்தமற்றது. எஞ்சி இருக்கும் எனது கடைசி மூச்சு காலம் வரை உனக்கு இனிமையான நினைவுகள் மட்டுமே தருவேன் என்று சத்திய பிரமாணம் எனக்குள் எடுத்து வைத்து இருக்கிறேன். நான் இல்லாது போனாலும் எனது நினைவுகள் உன்னை வாழ வைக்கும். நீ இல்லாது போனாலும் நான் பொக்கிஷமாக சேகரித்து வைத்துள்ள உனது நினைவுகள் என்னை வாழ வைக்கும்.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!! நீ அந்த வரம் வாங்கி வந்தவன் என்பதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படித்து ரசித்தேன். எங்கோ எனை கொண்டு சென்றது.
    நன்றி.
     
    singapalsmile likes this.
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    தபூ சங்கரின் இந்த கவிதை என்னை அசத்தியது

    என்னுடையது என்று நினைத்து தான்
    இதுவரையில் வளர்த்து வந்தேன்
    ஆனால் முதல் முறை உன்னைப்
    பார்த்ததுமே, பழக்கப்பட்டவர்
    பின்னல் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
    உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு
    !

    தங்களின் பாயிண்ட்ஸ் சிறப்பு !
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Veda I’m in a hurry to let you know this . Sorry song edum podala. Here the new Ramani vs Ramani I think it’s for ott series
     
    singapalsmile and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    தபூ சங்கரின் கவிதை கலக்கலா இருக்கு. பகிர்ந்ததிற்கு நன்றி. ஆரம்ப காலத்து உளறல்கள் என்றுமே பொக்கிஷங்கள். இதோ தபூவின் இன்னொரு காதல் உளறல்..

    ஒரு வண்ணத்துப் பூச்சி
    உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது
    ஏன் இந்தப் பூநகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,

    எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்கள் கழித்து வருகை புரிந்து ஒரு அசத்தலான கிப்ட் குடுத்ததிற்கு மிக்க நன்றி. உங்களை மாதிரி நண்பர்கள் இருக்கும் வரை நம்ம poetic thread செழிப்போடு வாழும்; நானும் வாழ்வேன் :grinning::grinning:

    Ramany vs Ramany part 1 தேடி பார்த்து திரும்பவும் ரசித்தேன். இதோ என்னுடைய return gift உங்களுக்காக:

    Ramany vs Ramany part 1 - 11:09 to 13:36 - ரொமான்ஸ் அராஜகம்/அமர்க்களம்/அட்டகாசம்

    Full episode - வேற மாதிரி!! :wink::wink: அப்பவே A லெவல். இப்போ எந்த லெவேலோ? 3.0 பார்த்து ரசிக்க நான் waiting..
     
    Thyagarajan likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னோட ஒரு மாதிரி/வேற மாதிரி போஸ்ட் பார்த்து (உள்ளுக்குள் ரசித்தாலும்) வெளியே என்னை திட்டனும் என்று நினைக்கிறவங்களுக்கு இந்த போஸ்ட். :grinning::grinning:

    சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு அக்மார்க் குடும்ப படம். வித்யாசமாக இருந்தது. ஒரு நாள் முழுதும் தாக்கம் இருந்தது. நிறைய காட்சிகள் மனதை தொட்டது. நெகிழ வைத்தது. இந்த படத்தின் கதையில் உயிர் இருந்தது. அன்றைய தலை முறை இன்றைய தலை முறை கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு சித்தரித்த விதம் அழகு.

    நரை எழுதும் சுயசரிதம்
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page