1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சினிமா துறைக்கு வந்ததும் போனதும் தெரியாமல் இருந்தாலும் தனக்கான ஒரு தடம் பதித்தவர் ஜென்சி. இவரது பாடல்கள் பதிவு ஆரம்பித்த வேகத்திலே நான் முடித்தும் கொள்கிறேன். இந்த பாடல்கள் எல்லாம் காலத்துக்கும் அழியாதது. எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் இனிமை துளியும் குறையாது. சிறிய இடைவேளைக்கு பிறகு SPB பாடிய பாடல்கள் கேட்கும்போது தோன்றும் உணர்வுகளை விவரிக்கவே இயலாது. மெய் மறந்து போனேன்.
    இந்த பதிவின் பாடல்கள் வரிகள் பட்டாசு. IR இசை அதற்கும் மேலே.

    முதல் பாடல் இசை ஷங்கர் கணேஷ். மற்ற நான்கு பாடல்கள் இசை IR.

    பாடல்கள் கேட்க தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் கண்கள் மூடி ரசிக்க வைக்க தோணலாம். யார் மீதாவது கண் வைக்கும் வேலை இருந்தால் இந்த பாடல்கள் கேட்பதை தவிர்த்து விடவும். :wink::wink:

    Jency songs Playlist 61

    பனியும் நானே - பனி மலர்
    பூ மலர்ந்திட - டிக் டிக் டிக்
    மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை
    காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை
    ஆயிரம் மலர்களே - நிறம் மாறாத பூக்கள்

    இந்த பதிவில் இடம்பெற்ற பாடல்கள் பாடிய ஒரு பாடகர் பாடல்கள் அடுத்த playlist.
     
    maalti and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    பட்டிமன்ற தலைப்பு நான் சொல்வதற்கு மூல காரணம் உங்களது கருத்து தான். நடுவராக இருந்து இரண்டு பக்கமும் ஜால்ரா அடித்து தப்பிக்க பார்க்காதீங்க. :grinning::grinning:

    மாட்டியாச்சு. நானே கணவர் சார்பாக பேசுகிறேன்.

    அப்படியே யோசித்தாலும் சொன்ன யோசனையை மனைவி எப்படியும் செயல்படுத்த போவதில்லை என்று அனுபவம் தந்த பாடத்தில் யோசிப்பதை மறந்தது போல நடிக்கிறோம். இப்படி நடிப்பதும் குடும்ப நலத்துக்கு தானே? :grinning::grinning:

    -----------------------------------------------------

    இந்த வீடியோ WAல எனக்கு வந்தது. 5:25 - 5:47 கருத்து கேட்கவும். 5:48 - 5:55 reaction பார்க்கவும். :wink::wink:
     
    Thyagarajan likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஆணின் மனதிற்குள்ளும்பெண்மை இருக்கிறதே -- > இந்த வரியை ஆண் கவிஞர் சட்டுனு எழுத முடியுமா? Male ego தடுக்காதா?
    நீங்கள் நாயன்மார்கள் திருமுறைகள் மற்றும் ஆழ்வார்களின் பாசுரங்கள் கேட்டதில்லையா? இறைவனை பெண்ணாகவோ, ஆணாகவோ எண்ணி, எழுதிய பாடல்கள் எவ்வளவோ உள்ளனவே? ஆண் என்பதும், பெண்ணென்பதும் ஒரு நிலை தானே? மகத்தான எழுத்தாளர் தி.ஜானகிராமன் வரிகளில், "மனம் ஒரு நபும்சக லிங்கம் தான்!" படைப்பவரின் உணர்வின் பாற்பட்டது அது. இங்கே ஈகோ ஒரு தடுப்புச்சுவர் மட்டுமே. பேரவையால் நடக்கவும் முடியும். ஆனால் அதை நடக்க மட்டும் பயன்படுத்துவேன் என்பது போல!

    தொடக்கத்தில் பிறரது ஆமோதிப்பும், பாராட்டும் எதிர்பார்த்துத் தான் எழுதினேன். அதனுடன், பிறரது பார்வையைத் தெரிந்து கொள்ளவும் தான். அவை கிடைக்காத போது ஒரு சோர்வும் வருகிறது. ஆனால், இந்த எதிர்பார்ப்பு, எண்ணத்தில் தாக்கம் ஏற்படுத்தி விடுகிறதில்லையா? எழுதியதில், நம் கருத்தை சரியாக முன் வைத்தோமா? என்பது பின்னூட்டத்தில் தெரிகிறது. மேலும், படிப்பவரின் பார்வையும், ரசனையும், நம் கருத்தை இன்னும் மேம்படுத்தி, ரசனையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்டவர்கள், நம்மை ஊக்கப்படுத்தி இன்னும் மெனக்கெட வைக்கிறார்கள். எனவே வெறும் விருப்பம் தெரிவிப்பது ஒரு அங்கீகாரம் எனினும், பிறரது பார்வை நம் உலகை விரிவாக்குகிறதில்லையா? எனவே தான் இன்னும் எழுதுகிறேன். சில சமயம் விருப்பமோ, பின்னூட்டமோ வராது. பரவாயில்லை. மீண்டும் எழுதலாம்!
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    "பேரவையால் நடக்கவும் முடியும். ஆனால் அதை நடக்க மட்டும் பயன்படுத்துவேன் என்பது போல!"
    அது பேரவை இல்லை. பறவை :)
     
    Thyagarajan likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கடந்த சில நாட்களாக மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்தப் பாடலை.
    அருமையான இராஜா மெலடி பாடல். வருடும் இசையும், தெளிவான குரலும், இனிய வரிகளும் நல்ல அனுபவத்தைத் தருகின்றன.
     
    Thyagarajan likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    எழுத மனம் எனக்கு இருந்தாலும் இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இரண்டு மணி நேரங்கள் இங்கே செலவழிக்கணுமா? அலுவலகத்து வேலை அந்த நேரத்தில் செய்ய வேண்டுமா? குடும்பத்துக்கு அந்த நேரம் போக வேண்டுமா? யோசித்து செயல்பட வேண்டியதாக இருக்கிறது. நேரத்தின் மதிப்பு நன்றாக புரிகிறது. நேரம் எடுத்து தாங்கள் அளிக்கும் பதில்களுக்கு முதலில் நன்றி.

    ஆன்மிகம் என்றாலே அந்த இடத்தில இருந்து ஓட்டம் பிடித்துவிடுவேன். எனக்கு விருப்பம் இல்லாத துறை.

    பின்னூட்டம் பற்றி நன்றாக எழுதி இருக்கீங்க. உங்களது உலகை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லும்.

    Q#17: புத்தகங்கள் படிக்கும்போது புதுசாக ஏதோ ஒன்று நமக்குள் பதிந்து விடுகிறது. புது மனிதனாக மாற்றுகிறது. புத்தகமோ கவிதையோ படித்து ஒரு கருத்து பசு மரத்து ஆணியாக மனதில் பதிந்து விட்டால் அந்த கருத்தின் படி வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்குமா?

    Q# 18: காதலன் ஒரு அரை கிறுக்கன். கவிஞன் இன்னொரு அரை கிறுக்கன். காதல் கவிஞன் ஒரு முழு கிறுக்கன். தனி உலகம் அமைத்து கொண்டு வாழும் சாத்திய கூறுகள் இருக்கிறது. சுற்றி இருப்பவர்கள் பாவம் இல்லையா? இது அன்றாட வாழ்வை பாதிக்காதா ? கற்பனை போதையில் மூழ்கி விடாமல் எல்லை கோடுகள் வகுப்பது எப்படி?
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பாடல்கள் அந்தாதி என்று வைத்து கொள்ளுங்கள். இதற்கு முன்னர் பதிவிட்ட பாடல்கள் பதிவில் கடைசி பாடல் பாடிய பாடகர் playlist இன்று ஆரம்பம். இவரது பாடல்கள் நிறைய பதிவிட போகிறேன். வலைதள தகவல் படி 8000 பாடல்கள் பாடி கலக்கி இருக்கிறார். IR இசையில் பாடிய பாடல்கள் ஏராளம். சில பாடல்கள் தாராளம் :wink::wink:

    இவரது குரலில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கிராமிய பாடல்கள் என்றாலும் ரொமான்டிக் என்றாலும் மசாலா என்றாலும் சோகம் என்றாலும் குத்துப்பாட்டு என்றாலும் எல்லாத்துலயும் அசத்தி இருக்கிறார். மலேசியாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இவரது தமிழ் உச்சரிப்பு சிறப்பு.

    முழுதும் கிராமத்து மணம் கமழும்/காட்சி அமைப்பும் அமைந்த என்றென்றும் பசுமையான மெலோடிஸ். அதுவும் வழக்கம்போல கொஞ்சும் குரலில் SJ இணைந்த IR ரொமான்டிக் பாடல்கள். கண்டிப்பாக இந்த பாடல்கள் கேட்கும் நேரம் சொர்க்கமாக தோன்றும்.

    MV songs Playlist 62

    தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு
    வெட்டிவேரு வாசம் விடல புள்ள நேசம் - முதல் மரியாதை
    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி - தர்ம யுத்தம்
    கோவில் மணி ஓசை தனை கேட்டதாரோ - கிழக்கே போகும் ரயில்
    ஆத்து மேட்டுல ஒரு பாட்டு - கிராமத்து அத்தியாயம்
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    குடும்பம் போர்க்கோலம் கொள்ளாமல் இருக்க இப்படித்தான் இருன்தாக வேண்டி உள்ளதம்மா!

    Women க்குள் men ladyக்குள் lad
    The effeminate or otherwise in person is determined by quantum of harmon & enzymes - estrogen & testosterone

    அருமையான சிந்தனை.
    • சமஸ்க்ருதத்தில் கீதம் என்கிற சொல் நபும்சக லிங்கம். ஆனால் பகவத் கீதா என்ற சொல்லில் கீதா என்பது ஸ்த்ரிலிங்கமாக இருக்கிறது. வேதங்களில் ஞான காண்டமான உபநிஷத் என்கிற பெயர் கூட ஸ்த்ரி லிங்கம் தான்!
    இதை முழுவதும் நான் ஏற்கிறேன்.

    உயர்ந்த உள்ளம் உளமாரப்பாராட்டு. Rgs க்கு.
     
    Last edited: Sep 17, 2021
    singapalsmile likes this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    வருக வருக மாமயில் ஏறி தரக தருக மேலும் மேலும் பதிவு செய்pக. ...Play list 62.

    1975 ல் என்னை ஈர்த்த பாடலில் *ஒன்று மட்டும் ரொம்ப சிறப்பானது.
    அன்த பாடல் அவங்களுக்கும் பிடித்த ஒன்று.
    இப்பாடல்கள் அனைத்தும் இரவு உறங்கியும் உறங்காமலும் கேட்பது பிடிக்கும்.
    நன்றி.

    *கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
    இங்கு வந்ததாரோ ...
    பாஞ்சாலி பாஞ்சாலி

    கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
    அவர் என்ன பேரோ ...
    பரஞ்சோதி ... பரஞ்சோதி
    ..
     
    maalti and singapalsmile like this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    வேதா,
    சிந்தனையை தூண்டும் கேள்வி. சில கருத்துகள்
    படிக்கும் போதோ கேட்கும் போதோ ஆழமாக
    பதிந்து விடும். ஆனால் திரும்ப , திரும்ப நினைவில்
    நிறுத்தினாலே அடுத்த கட்ட செயலுக்கு வரும்.
    சமீபத்தில் பாவேந்தரின் வரிகளை ஒரு பேச்சில்
    கேட்டேன். அந்த கருத்திலும், சொற்களின் தேர்விலும்,
    ஆழத்திலயும் கட்டுண்டு , மறுபடி மறுபடி நினைக்கிறேன்.
    `அறிவை விரிவுசெய் ! அகண்டமாக்கு !
    விசால பார்வையால் விழுங்கு உலகை!`
    மீண்டும் சிந்தனையில் நிறுத்த என்னை தூண்டுகின்றன.
     
    maalti, singapalsmile and Thyagarajan like this.

Share This Page