1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hello T,

    நீங்கள் பதிவிட்ட அழகான painting போலவே ஒன்று என்னிடம் இருக்கிறது. பார்த்து ரசித்தேன்.

    ராமன் பாடலுக்கும் சம்பந்தப்பட்ட பதிவிற்கும் நன்றி. இன்டர்நெட் ல இதே கருத்தை எங்கோ எப்போதோ படித்த நினைவு எனக்கு. நெட் ல இருந்து பதிவை இங்கு பதிக்கும் போது /பகிரும் போது source குறிப்பிட்டால் பகிர்ந்தவர்க்கு நன்றியும் கருத்து இயற்றியவர்க்கு பாராட்டும் பொருத்தமாக சேரும். இந்த பதிவை தவறாக படிக்காமல் புரிந்து படித்ததிற்கு நன்றி.:grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலகத்தில் ஒரு சவாலான வேலை எனக்கு கொடுத்து இருந்தாங்க. என்னோட பாஸ் க்கு அந்த வேலை பற்றி அவ்ளோவா தெரியாது. ஆரம்பத்தில் நானும் சுத்தம். ஒண்ணுமே தெரியாது. பாஸ் ஓட பாஸ் என்னிடம் நேரிடையாக தொடர்பு கொண்டு இந்த வேலை எனக்கு கொடுத்தார். இரவும் பகலும் பாராமல் மூளையை கசக்கி பிழிந்து ஒரு மாதம் கடின உழைப்பிற்கு பிறகு வெற்றிகரமாக போன வாரம் அந்த வேலையை முடித்து விட்டேன். கிடைத்த பாராட்டு குளிர்ச்சியாக இருந்தது. ஈடுபாடுடன் வேலை செய்யும்போது தக்க பலன் கிடைக்கும் போது வரும் திருப்தி அளவிட முடியாதது. சந்தோசமா இருக்கேன்.

    ******************************************

    தாயகத்தில் தற்போது நிலவரம் கலவரமாக இருக்கிறது. எனது சொந்தத்தில் சில உயிர் இழப்புகள். என்னை பொறுத்தவரை உயிர் இழந்த பிறகு ஒருவரை பற்றி பெருமையாக பேசுவதை விட, உயிருடன் இருக்கும்போது அவரை எவ்ளோ பெருமையாக நடத்தி இருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த விதத்தில் எனக்கு தெரிந்த வரை நான் யாருக்கும் குறை வைக்கவில்லை. நிறைவான மனநிலையில் தான் இருக்கிறேன். குடும்பத்து நபர்களிடம் வாரம் ஒரு முறை மட்டுமே பேசுவதை பல வருடங்களாக கடைபிடித்து வந்தேன். இப்போது இரண்டு நாளுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் பேசுகிறேன். மறுபடியும் நேரில் பார்க்கும் கொடுப்பினை இருக்குமா இருக்காதா என்றெல்லாம் தேவை இல்லாமல் குழப்பி கொள்ளாமல் இந்த நிமிடம் எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த குறையும் வைக்காமல் சரியாக பயன் படுத்தி திருப்தி பட்டு கொள்கிறேன்.

    ஒருவர் பிறக்கும்போதே இறப்பு நிச்சயிக்க படுகிறது. வாழும் வாழ்வை கொண்டாடி கழிப்போம்.
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Golden oldies போஸ்ட் பண்ண போறேன்.

    நான் ஜெனெரேஷன் மாறி பிறந்து இருந்து இருந்தால் இந்த மெலடி மன்னன் பாடகரின் பரம விசிறியாக நான் இருந்து இருப்பேன். இப்பவும் எப்பவும் SPB தான் என்னோட most fav பாடகர். SPB ல இருக்கற முதல் எழுத்தை கடைசி எழுத்தா மாற்றி போட்டால் PBS. SPB க்கு அடுத்தபடியாக என்னை கொள்ளை கொண்டவர் PBS.

    PBS/PS சேர்ந்து பாடினால் காதில் தேன் பாயும் என்று சொன்னால் மிகவும் குறைச்சலான பாராட்டு. தேனிற்கும் மேல. தேவாம்ருதத்திற்கும் மேல. என்று சொல்லிக்கொண்டே போகலாம். இரவில் PBS + PS பாடிய இந்த பாடல்களை கேட்டு கொண்டே கண் உறங்குவது சுகம்.

    PBS songs Playlist 52

    பால் வண்ணம் பருவம் கண்டு - பாசம்
    போக போக தெரியும் - சர்வர் சுந்தரம்
    தாமரை கன்னங்கள் - எதிர் நீச்சல்
    நாளாம் நாளாம் திருநாளாம் - காதலிக்க நேரமில்லை
    காற்று வெளியிடை கண்ணம்மா - கப்பல் ஓட்டிய தமிழன்
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அருமையான இந்த அந்த
    நாள் ஐந்து பாடல்கள்
    கேட்டேன் சுகம் சுகம்
    உறங்கப்போகின்றேன்
    கருப்பு சிவப்பில் நாலு
    நாளாம்
    நாளாம் மட்டும் வண்ணம்.

    நன்றி.
     
    singapalsmile likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #7423
    PBS
    HE WAS THE JUDGE TO DECLARE WINNER OF JAYA TV RAGAMALIKA .
    THE ENTIRE STUDIO was waiting for his arrival. An hour gone by. I went close to open emplevator and received him. He whispered into my ears with bit of saliva sprayed on to my ears. I & his car driver at once held his hand on either side escorted him to wash. Ten minutes gone by. Driver & I were worried.
    Then he occupied his chair watched the proceeding of shoot . Participants sang in competition for a place in final. He adjudged my daughter the number one. She sand swarnalathas shathrian song - மாலையில் யாரோ மனதோடு பேச.....to conclude that shoot, PBS Sang the lines காலங்களில் அவள் வசந்தம்...


    Some months gone by. With family & daughter at around 4 met him at a table in Drive in Woodlands. He remembered my daughter & I. We had the pleasure of receiving his blessings. We all had hot bonda sambar.
     
    rgsrinivasan and singapalsmile like this.
  6. Tubinbataye

    Tubinbataye Gold IL'ite

    Messages:
    145
    Likes Received:
    159
    Trophy Points:
    100
    Gender:
    Female
    " உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே..! "

    A short poem as a dialogue delivered by Prakashraj(voice:Aravindsamy,written by Vairamuthu,Movie:Iruvar)
    காதலும் கம்பீரமும் நிரம்பி வழியும் வரிகள்...
     
    singapalsmile and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வணக்கம் T.

    எப்போதும் போலவே கவனித்து பாடல்கள் கேட்டு பொருத்தமான பதிவு தாங்கள் போஸ்ட் பண்ணதுக்கு நன்றி. தங்களது பதிவை படித்து ரசித்தேன்.

    கருப்பு வெள்ளை பாடல்களில் வரிகள் சிவப்பை கொண்டிருந்தாலும் சிவப்பு வண்ணம் வெளிப்படையாக தெரியாது என்பதால் ஒரே ஒரு பாடல் மட்டும் வண்ணம் சிவப்பு வண்ணம் வெளிப்படுத்துவதற்கு. :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    TBB,

    Rang de basanti padathil varum Tu Bin Bataye paadalin aaramba varthaigalai konda user id vaithu, காதலும் கம்பீரமும் நிரம்பி வழியும் வரிகள் kondu first post potta ungalai ragging kelvigal kettu varaverkaamal vittaal indha poetic thread members ennai summaa vida maataargal..:wink::wink:

    Idho ungalukkaana mudhal ragging kelvi:

    " உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே..! "

    இந்த வரிகளில் சில வார்த்தைகள் மட்டுமே மாற்றி காதலும் காமமும் நிரம்பி வழியும் வரிகளாக மாற்றவும்.

    தற்போதைய சூழல் உங்களுக்கு சரியாக இல்லாமல் இருந்து கேள்விக்கு பதில் எழுதும் மன நிலையில் இல்லாமல் இருந்தால் இந்த கேள்வியை ஸ்கிப் பண்ணிடுங்க..:grinning::grinning:

    நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லி விடுகிறேன்.
    இந்த பாடலை பதிலாக நினைத்து கொள்கிறேன்.
     
    suryakala and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் கேட்ட பழைய பாடல்களில் ஏடா கூடாமா வரிகள் வருது..கவிஞர் கண்ணதாசனின் வரிகள் என்றால் சும்மா வா? எந்த பாடல் அந்த பாடல் என்று நீங்களே கெஸ் பண்ணுங்க ..என்னால் முடிஞ்சது கொளுத்தி போட்டாச்சு..:wink::wink:

    PBS + PS பாடிய இனிமையோ இனிமையான அமுத கானங்கள் இன்றும் தொடர்கிறேன்.

    PBS songs Playlist 53

    நீ போகும் இடமெல்லாம் - இதய கமலம்
    ரோஜா மலரே ராஜ குமாரி - வீர திருமகன்
    காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை
    யார் யார் யார் அவள் யாரோ - பாச மலர்
    பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யு
     
    suryakala and rgsrinivasan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தற்போது பழைய பாடல்கள் கேட்டு ரசித்து கொண்டிருப்பதால் புது பாடல்களை அம்போ வென்று விட்டு விட முடியுமா? கிக்கில் அது ஒரு விதம் இது இன்னொரு விதம்.

    என்னை ஒரு வழி படுத்திய இரண்டு புது பாடல்கள் இன்று பதிவிடுகிறேன். இரண்டுமே நடிகர் தனுஷ் நடித்த படங்கள்/தனுஷ் பாடிய பாடல்கள்.. முதல் பாடல் - தாயகத்து கிராமிய மணம் மயக்குகிறது. இரண்டாவது பாடல் - அந்நிய தேசத்து வாசம் வசப்படுத்துது. அந்நிய தேசத்தில் அறிந்தும் அறியா இளம் வயதில் கண்ட காட்சிகளின் தாக்கத்தை நினைவு படுத்தியது. :wink::wink:

    தட்டான் தட்டான் - கர்ணன்
    நேத்து - ஜகமே தந்திரம்
     
    suryakala likes this.

Share This Page