1. What Movie Did You Watch Today? : Post Here
  Dismiss Notice
 2. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 3. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

 1. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  இயற்கை எழில் கொஞ்சும் மலை சார்ந்த பசுமை நிறைந்த இடத்தில் பத்திரிக்கை ஆசிரியருடன் ஒரு நாள்

  தமிழோசை பத்திரிக்கை ஆசிரியர் அவர்களுடன் குந்தவியும் சிவாவும் செலவிடும் ஒரு நாள் அருமையிலும் அருமை. இவர்கள் மூவரது உரையாடல் intellectual kick எனக்கு கொடுத்தது. தேர்ந்து எடுத்த எழில் மிகுந்த இடமும் ரம்மியமாக இருந்ததது படிப்பதற்கு இன்னும் விருந்து.

  நல்ல பெண்ணப்பா இவள்...இலக்கிய குப்பையில் மறைந்து கிடைக்கும் மாணிக்க கவிதைகள்..இலக்கு மாறி இதய கடலுக்குள் துளைக்கிறது..சின்ன நிலவு துண்டங்கள்..செதுக்கி..வைரப்பூச்சில் இழைத்து..அற்புதமான பெண். சமீப காலமா உன்னோட கவிதையில் ரொம்ப தீவிரமா காதல் தெரியுது. இப்படி ஒரு ஆள் கிடைச்சா நீதான் என்ன செய்வ?

  கவிதைக்கு இலக்கணம் வேண்டுமா வேண்டாமா என்ற பேச்சு வந்தபோது, அது எனக்கு தெரியல. ஆனா உயிர் இருக்க வேண்டும் என்றாள்.

  சமீப காலமாக எனக்கு ஒரு சந்தேகம். கவிதை என்பது மொழித்திறமை இருக்கிறவர்கள் சொற்களை லாவகமாக மாற்றி போடுகிற விளையாட்டு தானே? கொஞ்சம் வொக்கபுலரி இருந்தா போதும் தானே. இது என்ன பிரமாதம் னு அப்பப்ப ஒரு எண்ணம். எனக்கு கூட கவிதை வருகிறதே என்றாள்.

  இல்ல மா. கவிஞனுக்கும் சாதாரண மொழி வல்லுனனுக்கும் வித்யாசம் இருக்கம்மா. கவிஞன் உணர்வுகளில் வாழ்பவன். கவிஞன் எல்லாத்தையும் கவனிக்கிறான். ஆர்வமாகிறான். அன்பு செலுத்துகிறான்.

  படைப்பாளிகள் எல்லாமே உணர்வு மயமானவர்கள்.


  ஓஷோவின் வரி: உணர்வுகளை எதிர்த்து போராடாதே. குதித்து விடுன்னு சொல்றார்.
  காதலை மறுக்காதே..மூழ்கி காமம் கடந்து செல் னு தானே சொல்றார்.


  இன்னும் என்ன என்ன படிச்சிருக்கே மகளே?
  என்னென்ன படிச்சிருக்கேன் என்பது முக்கியமில்லை. என்னென்ன மனசில புடிச்சிருக்கேங்கறது தான் முக்கியம். உணர்வுகள். நுணுக்கரிய நுண்ணுணர்வேன் னு சொல்லி இருக்காங்களே..The Minutest feeling of the minutest னு சொல்றாங்க..எங்கே போய் புரிஞ்சுக்கறதுனு புரியலையே என்றாள்.
  இவனை புடிச்சிக்கோ என்று சிவாவை குறிப்பிடுவார்.

  படைப்பாளி என்று வரும்போது ஆணென்ன? பெண்ணென்ன? பொது தான்.

  சிந்திக்கிற பெண்ணை ரசிக்கறவன் ரொம்ப அபூர்வம் அம்மா. நீ அவனோடு சேர்ந்து சிந்திக்கலாம். எந்த பொண்ணுக்கும் கிடைக்காத பாக்கியம் அம்மா.

  குந்தவி மேடம், கோயில் த்யான மண்டபம் பார்த்து வீட்டுக்கு சாப்பிட போயிறலாமா?
  டாக்டர் சார் சொன்னா அதற்கு மேல் அப்பீல் ஏது என்றாள்.
  ஆனா டாக்டரோட அப்பீல் தான் கவனிக்கப்படறதில்ல. ஹே, அங்கிள் க்கு சொக்குபொடி போட்டாச்சு என்றான்.
  உங்க வசியக்கலைக்கு ஈடாகுமா என்று அவள் நகர்ந்து விட்டாள்.

  தகுதிக்கு மீறின நினைப்பு தான் இவருக்கு என்றாள் குந்தவி
  பொதுவா சொல்ல கூடாது மேடம். எதுல நினைப்பு - எது தகுதின்னு சொல்லணும் என்றான் சிவா.


  வீட்டிற்கு வந்து ஒரு கவிதை சொல்வாள் (உன்னிடம் இருக்கும் என் இதயத்தை எடுத்து கொண்டு என்னிடத்தில் இருக்கும் உன் இதயத்துக்கு வந்து சேர்..) அவன் உணர்ச்சிமயமாய் நிற்பான். வந்தியத்தேவன் வண்டி கட்டிட்டு போயிற வேண்டியது தான் என்றான்.
  புறமுதுகு காட்டிட்டு போயிருவாரா என்ன? படைக்கலத்துக்கு பதில் வாங்கணும் ல.
  படைக்கலத்துக்கு பதில் உண்டா? கண்ணம்மா.
  உங்க படைக்கலத்துக்கு பதில் - அடைக்கலம் தான்.
  தட்ஸ் லவ்லி கண்ணம்மா.

  YT - செந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் - இயற்கை எழில் வர்ணனை வரிகள்
   
  suryakala likes this.
 2. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  MR க்கு தோட்ட கலை மேல் காதல். மண் வளம், விதை, செடி/கொடி பராமரிப்பு பற்றி பேசினால் விவரமான தகவல் தருவார். பதியம் போட்டு ரோஜா பூ மலரும் வரை பொத்தி பாதுகாப்பார். மழை வந்தால் அவரது மினி தோட்டத்துக்கு இயற்கை நீர் பாய்ச்சல் என்று சந்தோஷப்படுவார்.

  KK க்கு மேல சொன்ன தோட்டக்காரர் மேல் மட்டும் தான் காதல்.:wink::wink: செடியில் பூத்திருக்கும் ரோஜாவை ரசிக்க தெரியும். ரசித்த கொஞ்ச நேரத்தில் ரோஜா ரோஜா, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதல் ரோஜாவே என்று என்னென்ன ரோஜா பாடல்கள் இருக்குனு மைண்ட் பட்டியல் போட ஆரம்பித்து விடும். மழை வந்து மண் வாசனை பிடித்தால் ஐயையோ நெஞ்சு அலையுதடி பாடலும் கவிதை கிறுக்க பேனாவும் பேப்பரும் தேட தோணும்.

  MR க்கு மிகவும் பிடித்த தோட்டம் சம்பந்தப்பட்ட தாயகத்தில் இயற்கை எழில் மிகுந்த ஒரு இடத்திற்கு KK அழைத்து சென்றார். அன்றைய நிகழ்வுகள் எப்போது நினைத்தாலும் KK மனசுல ஒரு மழை சாரல் அடிக்கும். ஒருவருடன் இருக்கும்போது நாம எப்படி உள்ளுக்குள் உணர்கிறோம் என்ற உணர்வு ரொம்பவே முக்கியம். ஒருவர் பேசாமல் அமைதியா இருந்தாலும் புரியும் சின்ன சின்ன செயல்கள் இன்னொருவர் ஆழ் மனதில் மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பி விவரிக்க முடியாத ஒரு வித சந்தோசம் குடுக்கும். :wink::wink:
  • MR அப்போ/இப்போ எல்லாம் 5 km சர்வ சாதாரணமா நடப்பார். KK அப்போ 0.5 km/ இப்போ 1.5 km நடப்பார். KK's nataraja service capacity தெரிந்து அன்று ரொம்ப தூரம் நடக்க விடாம முக்கால்வாசி தூரத்திலே அந்த எழில் மிகுந்த இடத்தில இருந்து திரும்ப சொன்னது
  • வரும் வழியில் இளநீர் வாங்கி குடித்தபோது எதுக்கு என்னோட இளநீர் ல மட்டும் தேங்காய் இல்லை எப்படி தேங்காய் இருக்கா இல்லையா னு கண்டுபிடிப்பீங்க னு இளநீர் விற்றவரிடம் KK கேள்வி கேட்பதை பார்த்து இளநீர் விற்றவர் MR க்கு வெட்டி தந்த தேங்காயை மேலும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி KK சாப்பிடுவதற்கு இலகுவாய் தந்தது
  • ஓட்டலில் வெஜ் தாளி சாப்பிடும்போது KK க்கு பிடித்தவற்றை எல்லாம் MR தனது தட்டில் இருந்து KK தட்டிற்கு மாற்றியது
  • திரும்பி வரும் வழியில் சென்ற ஒரு பெருமாள் கோவிலில் இருவரது பெயருக்கும் (KK's நட்சத்திரம் நினைவில் வைத்து) அர்ச்சனை கொடுத்தது
  YT - என்ன இது என்ன இது என்னை கொல்வது - நளதமயந்தி
   
  suryakala likes this.
 3. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  கவிதை பரிமாற்றங்கள்

  வந்தியத்தேவனும் குந்தவிதேவியும் (கலாரசிகனும் கவிதை பெண்ணும்) பரிமாறும் கவிதைகள் (திருமணத்திற்கு முன்). இந்த பகுதியில் என்னிடம் இருந்து 100 மதிப்பெண்கள் பெறுகிறார் எழுத்தாளர் JS. படிச்ச மயக்கம் போறதுக்கு பல மணி நேரங்கள் ஆச்சு..:wink::wink:

  அவளது முதல் கவிதை புத்தகத்தில் வெளியானதை படித்தவுடன் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று அவளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவளிடம் நடந்து கொள்ளும்/கொல்லும் விதம் (பேசிய வார்த்தைகள்+கவிதை கொஞ்சல்கள் + செல்ல தீண்டல்கள்) படிக்க படிக்க வந்தியத்தேவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கிறுக்கு பிடிக்க வைத்தது.

  நீ கவிதை கூட எழுதுவியா?
  கவிதை..குந்தவி..எனக்கு பிடித்த இரண்டு விஷயங்களும் ஒன்றாய் உன்னிடத்தில்..எனக்கு கிறுக்கே பிடித்து விட்டது..

  சிவா, கவிதை என்றால் அவ்வளவு இஷ்டமா?
  பின்னே இத்தனை நாளை எப்படி சமாளிக்கிறேன் என்று ஒரு கத்தையை எடுத்து போட்டான். கவிதை படிக்க அனுமதித்தான்.

  பார்த்த பார்வையில்
  என் நெஞ்சம் கலந்தாய்
  நீர்த்துருகி என்
  உதிரங் கலந்தாய்
  வேர்த்து விறுவிறுத்தென்
  உள்ளே கலந்து
  சேர்த்து...தான்
  செய்வது எப்போது?


  இட்டு நிரப்புங்கள் மேடம்..நீங்க தான் கல்வியாளர் ஆச்சே..புள்ளி எங்கே வைப்பது நீங்குவது என்று உங்களுக்கு தெரியுமே என்று அவன் குறிப்பு கொடுத்தபோது அவளுக்கு உயிரே போனது போல இருந்தது.

  அவன் எல்லை மீற அவள் கலங்கி போவாள். சாரி குந்தவி என்பான். மன்னித்தோம் வந்தியத்தேவனை என்பாள்.

  அவள் ஒரு பேப்பரில் ஒரு சிறிய கவிதை எழுதி நீட்டுவாள்:
  எனது சின்ன சாம்ராஜ்யத்தின்
  சிற்றரசே சிவநாதா
  என்னது எல்லாமும்
  உன்னது தான் என்று
  எப்படி நிரூபிக்க?
  வழி கண்டுபிடித்து வை
  வந்து சேருகிறேன்


  குந்தவியின் முதல் கவிதை படித்து உணர்ச்சி வசப்பட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி தனது செயினை அவளுக்கு பரிசளிப்பான். அந்த கவிதையை புத்தகத்தில் வெளியிட அவளுக்கே தெரியாமல் அவள் தம்பி தான் அனுப்பி இருப்பான்.

  மாமா எல்லா ஏற்பாடும் செய்து கவிதை வெளி வர செய்வது நாங்க. கழுத்து செயின் அக்காவுக்கா?
  ஆமாடா என்னது எல்லாமும் உன்னதுதான் னு அவ எதை கேட்டாலும் குடுப்பா. நீ குடுப்பியா?
  ஐயையோ அவங்க கொடுக்கறது எல்லாம் நாங்க குடுக்க முடியுமா? அதாவது நாங்க அன்பை கொடுப்போம். அவங்க மட்டும் தானே கவிதை கொடுக்கறாங்க. அதை சொன்னேன்.

  குந்தவி அவனுக்கு புரிகிற மாதிரி கோபம் காட்டிவிட்டு சிவா எல்லோரையும் கெடுத்து வச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு எழுந்து போவாள். அவனும் அவள் பின்னாலே போவான். அவள் அவன் மார்பில் முகம் புதைத்து சிரிப்பாள். அவன் அவள் தலையை அன்புடன் தடவி கொடுத்தபடி நின்று கொண்டிருப்பான். பிறகு அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தபோது அவளுக்கென்றே தான் வைத்திருந்த எல்லாம் கலந்த அந்த பளீர் சிரிப்பை வெளியிட்டான். அவள் மயங்கி நின்றாள்.
  (இதன் தொடர்ச்சியும் இந்த நாவல் பற்றிய எனது கடைசி பதிவும் நாளை.)

  YT - கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா - கவிதை - Duet
   
  Thyagarajan and suryakala like this.
 4. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  MR and KK ஒரு முறை அந்நிய தேசத்தில் ஒரு மாலை நேரம் பீச்சில் இருந்தாங்க. அந்திப்பொழுதில் அதுவும் பீச்சில் அதுவும் MR பக்கத்தில் இருந்ததால் KK's மனநிலை எப்படி இருந்தது என்று எழுதி தான் உங்களுக்கு புரிய வைக்கணுமா? :wink::wink:அந்த நேரம் பார்த்து MR கேட்டது: உன்னோட கவிதை ஒன்னு சொல்லு.

  முதல் முதலாக KK சொன்ன சொந்த கவிதை இது தான்:

  கண்ணாடி காட்டி கொடுத்தது
  அவனது கழுத்து சங்கிலியில்
  அவளது சிங்கப்பல் பென்டென்ட்


  இந்த கவிதை கேட்டு MR என்ன ரியாக்ஷன் குடுத்து இருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

  அன்று KK எடுத்த முடிவு: MR இடம் கவிதை சொல்லாமல் இருப்பது தான் MR க்கு கவிதைக்கு KK க்கு நல்லது என்று. :grinning::grinning:

  YT - நான் இனி காற்றில் நடக்க போகிறேன் - யாக்கை
  தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி

  ********************************************

  கிறுக்கினால் தான் கவிதையா? MR's இந்த செயல்கள் கவிதை கணக்கில் வராதா?

  தமிழ் திரைப்பட ரொமான்டிக் பாடல்கள் டிவியில் போட்டு விடுவது

  முதல் முறையாக இருவரும் போட்டிங் போன இடம் இன்னும் நினைவில் வைத்து அந்த இடத்தை போன வருடம் காட்டியது

  பழைய பர்சில் இருந்த இருவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பார்த்து,
  இது மேரேஜ் சர்டிபிகேட் காக நாம ரெண்டு பேரும் தாயகத்தில் அந்த இடத்தில எடுத்த போட்டோ தானே இது? என்று சமீபத்தில் நினைவு கூர்ந்தது

  தாங்களது வேலை தாங்களே செய்ய வேண்டும் என்பது வீட்டில் கடைபிடிக்கும் ரூல்.
  ஒரே ஒரு முறை வேலையின் காரணமாக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. என்னோட லாண்டரி பண்ணிடுங்க என்று சொன்னதை செய்து சொல்லாததிற்கும் மேலாக
  உடைகள் மடித்து அழகாக ஷெல்ப் ல அடுக்கி வைத்தது

  சமைக்கும்போது அருகில் இருந்தால் கனமான பாத்திரம் சூடாக இருக்கும்போது இறக்கி வைப்பதை பார்த்தால் கேட்காமல் தானே வந்து பாத்திரத்தை இறக்கி டைனிங் டேபிள் மேல எடுத்து வைத்து விடுவது

  மிகவும் பிடித்த உணவை சமைத்து வைப்பது; மிகவும் பிடித்த மாதுளம் பழத்தை உரித்து கப் ல போட்டு சாப்பிட கொடுப்பது

  ********************************************
   
  Thyagarajan and suryakala like this.
 5. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  அவனது பளீர் சிரிப்பு

  அவளுக்கென்றே பதுக்கி வைத்த அவனது சிரிப்பு பற்றி அவள் கவிதை எழுதி இருப்பாள். புத்தகத்தில் வெளியிட்ட அந்த கவிதை:

  சின்ன நிலவு துண்டங்கள் செதுக்கி
  சிந்தாமல் வைர பூச்சில் குழைத்து
  பண்ணிய அடுக்காய் உன் பல் வரிசைகள் தான்
  பளிச்சென மின்னி ஒளிரும் போதெல்லாம்
  சிரிக்கிறாயாம்..
  சொல்லிக் கொள்கிறார்கள்..

  உன் வெள்ளை(ளி)ச் சிரிப்பில்
  மனதை பறிகொடுத்தவர்கள்
  மயங்கி சிரிக்கிறார்கள்
  ..

  கவிதையை புத்தகத்தில் படித்து விட்டு அவளிடம் போனில் பேசுவான். கவிதை பெண்ணே என்று கொஞ்சுவான். இது எப்போதைய சிரிப்புக்கு கிடைத்த பரிசு கண்ணம்மா?
  எனக்கு செயின் போட்ட அன்று சிரிச்சீங்க.
  அந்த சிரிப்பு அழகாய் இருப்பதற்கு நியாயம் இருக்கிறது. மேடம் என் கைப்பிடியில் இருந்தீங்க.

  ஓசையின்றி என் உள்ளம் இறங்கி
  காசெறிந்தாற் போல் கலகல சிரிப்பில்
  ஆசை நிறைத்தாய் அன்பு பயிர் வளர்த்தாய்
  பூசை எப்போது புதுமை பெண்ணே


  வந்துடீங்களா..எங்கே பாயிண்டை காணோமேன்னு பார்த்தேன். :wink::wink:
  தம்பி எனக்கு ஒரு போட்டோ குடுத்தான். நீங்க வெடி சிரிப்போடு இருப்பது போல.
  ஓ அதை வச்சு தான் கவிதையாக்கும்?
  மக்கு.. மக்கு..இதை கேளுங்க..கண்ணில் கருத்தில் நிறைந்தவனை பற்றி எழுத போட்டோவாம் போட்டோ.. மக்கு என்றாள்

  ***********************************

  நாவலில் வந்த ஹாட் வரிகளுடன் இந்த Feb 2021 special assignment முடித்து கொள்கிறேன்.

  Osho's lines:
  உணர்வுகளை எதிர்த்து போராடாதே. குதித்து விடு.
  காதலை மறுக்காதே. மூழ்கி காமம் கடந்து செல்.

  Kannadasan's lines:
  நீ பசியாற நானே உன் விருந்தாகினேன்
  பரிமாறும் போதே நான் பசியாறினேன்

  Sri Sri's line:
  True intimacy is when you feel you are already intimate.

  YT - மாலை மங்கும் நேரம் - ரௌத்திரம்
   
 6. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  MR - உலகத்தில இருக்கற அத்தனை வெஜ் ஐட்டம்ஸ் சாப்பிட்டு பார்க்கணும் னு விருப்பம் உள்ளவர். சாப்பாட்டில் எதையும் ஒதுக்க மாட்டார். ஒரு குறிப்பிட்ட வெஜ் ஐட்டம் அதிகமாக விரும்பி சாப்பிடுவார். இனிப்பு என்று சொல்லை கேட்டாலே ஓடி விடுவார். ஆனால் அதிசயமா ஒரே ஒரு ஸ்வீட் மட்டும் விரும்பி சாப்பிடுவார்.

  KK - மொத்தமாகவே 5 வெஜ் ஐட்டம்ஸ் மட்டுமே சாப்பிட பிடிக்கும். சாப்பாடு என்ற சொல்லை அகராதியில் இருந்து ஒதுக்கி வைக்கணும் என்று எண்ணம் கொண்டவர். MR அதிகமாக விரும்பி சாப்பிடும் அந்த ஒரு குறிப்பிட்ட வெஜ் ஐட்டம் அறவே பிடிக்காது. இனிப்பு என்று சொல்லை எவ்ளோ தூரத்தில் இருந்து கேட்டாலும் சாப்பிட ஓடோடி வந்து விடுவார் கால நேரம் பார்க்காமல். MR க்கு பிடித்த அந்த ஒரே ஒரு ஸ்வீட் சுமாரா தான் பிடிக்கும்.

  சாப்பாட்டு விஷயத்தில் முரணான டேஸ்ட் கொண்டவர்கள். மாம்பழம் பிடிக்காத ஆளை கேள்வி பட்டு இருக்கீங்களா? அது KK தான். எவ்ளோ புளிப்பான மாங்கா என்றாலும் விரும்பி சாப்பிடுவார். ஆனால் மாம்பழம், மாம்பழம் ஜூஸ் ஆகவே ஆகாது.

  ஒரு தரம் மேங்கோ ஐஸ்கிரீம் வாங்கி MR வீட்டில் வைத்து இருந்தார். KK வை எதற்குமே MR வற்புறுத்த மாட்டார். என்னவோ MR க்கு அந்த ஐஸ்கிரீம் டேஸ்ட் ரொம்ப பிடித்து இருந்ததால் KK வை ஒரே ஒரு முறை சாப்பிட கேட்டு கொண்டிருந்தார். வழக்கம் போல KK கேக்கல.

  ஒரு நாள் இரவில் வீட்டில் MR and KK படம் பார்த்து கொண்டிருந்தார்கள். படம் செம மொக்கை. KK அரை தூக்கத்தில் அந்த படத்தை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, ஐஸ்கிரீம் சாப்பிடறயா? என்று MR கேட்டார்.

  கொஞ்சமா என்னோட சாக்லேட் ஐஸ்க்ரீம் உங்களோட கப் ல எடுத்திட்டு வாங்க. எனக்கு தனி கப் வேணாம்.

  MR ஐஸ்கிரீம் குடுத்தார். பத்து செகண்ட்ஸ் க்கு அப்புறம் தான் KK க்கு மேங்கோ ஐஸ்கிரீம் டேஸ்ட் தெரிந்தது. :wink::wink: திட்டலாம் என்று கண் விழித்து முகம் பார்க்க, MR முகத்தில் அப்படி ஒரு வசீகரிக்கும் பளீர் புன்னகை. KK's ஆழ்மனதில் பதிந்து போன MR's அந்த பளீர் புன்னகை KK's ஆயுள் முழுதும் மறக்காது.

  புன்னகையுடன் இந்த போஸ்ட் போட்டு MR and KK வழி அனுப்பப்படுகிறார்கள்.:grinning::grinning:

  YT - ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ - டும் டும் டும்
   
  Thyagarajan and suryakala like this.
 7. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  என்னை வெகுவாக மயக்கிய பாடகர்களில் ஜெயச்சந்திரனும் இடம்பெறுவார். இவர் பாடிய பாடல்கள் சில எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு தித்திக்கும். திகட்டவே திகட்டாது. உங்களுக்கும் அதே உணர்வு தான் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. என்னவோ மாயம் இருக்கு இவரது குரலில் என்று எனக்கு தோணும்.

  என்றென்றும் ராஜாவான IR இசையில் எனது அபிமானத்துக்குரிய SJ இவருடன் சேர்ந்து பாடிய பாடல்கள் இன்று போஸ்ட் பண்றேன். கொல்லாமல் கொல்றதுனு இவங்க பாடல்களை சொல்லலாம்.

  கொஞ்ச நாட்கள் இடைவெளி விட்டு பாடல்கள் கேட்ட மயக்கத்தில் இப்போ இருக்கிறேன். எந்த வரிகள் குறிப்பா போடணும் னு யோசிக்கற தெளிவில்லை. :wink::wink:

  JC songs Playlist 44

  YT - கொடியிலே மல்லிகப்பூ - கடலோர கவிதைகள்
  YT - பூவ எடுத்து ஒரு மால தொடுத்து - அம்மன் கோவில் கிழக்காலே
  YT - தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்
  YT - அதிகாலை நிலவே - உறுதி மொழி
  YT - எனது விழி வழி மேலே - சொல்ல துடிக்குது மனசு
   
  Last edited: Mar 10, 2021
  Thyagarajan and suryakala like this.
 8. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  JC songs Playlist 45

  முதல் மூன்று பாடல்களில் காதல் ரசம் பொங்கி வழியும், நான்காவது பாடலில் என்ன ரசம் என்பதை பாடல் கேட்டு ரசித்து தெரிந்து கொள்ளுங்கள், ஐந்தாவது பாடல் நித்திரை ரசம். எல்லா பாடல்களுக்கும் என்ன தொடர்பு எந்த வரிசையில்/அலைவரிசையில் இருக்கிறது என்பது அவரவர் கற்பனைக்கு உட்பட்ட விஷயம். :wink::wink:

  கொல்லையிலே தென்னை - காதலன்
  என் மேல் விழுந்த மழை துளியே - மே மாதம்
  சித்திரை நிலவு - வண்டிச்சோலை சின்னராசு
  காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி
  ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள்
   
 9. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  Hi SB,

  Eppadi irukkeenga? Thread kku vandhu paattu podaama poreengale? Neenga paatu potta dhaan ungalai andha padal varigal vaithu ekku thappu kelvi ketka enakku thonum..:wink::wink: neengalum nerthiyaana bathil kuduppeenga..namma thread padikravangalukku swarasiyama pozhudhu poganumaa vendaamaa? :grinning::grinning:
   
  stayblessed and Thyagarajan like this.
 10. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,200
  Likes Received:
  2,023
  Trophy Points:
  338
  Gender:
  Female
  இது தான் என்னுடைய இப்போதைய மனநிலை.

  பத்து மணி நேரங்கள் தொடர்ந்து மைண்ட் க்கு வேலை குடுத்தா தலை பாரமா இருக்குமா ?இருக்காதா? தலை வலி என்றால் என்னவென்று அறியாமல் இத்தனை வருடங்கள் கடந்தாச்சு/கொடுத்து வச்சாச்சு. கடைசிவரைக்கும் இந்த குடிப்பினை இருக்குமா? அமிர்தாஞ்சன் தைலம் தேடி போகும் காலம் வருமா தேவ அமிர்தமாக கானங்கள் இருக்கும்போது? தலை வலிக்கு ஆப்பு வைக்கும் பில்ட் அப் எப்படி? :grinning::grinning:

  JC songs Playlist 46

  சின்ன பூவே மெல்ல பேசு - சின்ன பூவே மெல்ல பேசு
  இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்
  வசந்த காலங்கள் - ரயில் பயணங்களில்
  அழகாக சிரித்தது அந்த நிலவு - டிசம்பர் பூக்கள்
  மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
   

Share This Page