1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    TuffyShri: ஒரு Feb மாதத்தில் நான் போட்ட படங்களுக்கு செம பொருத்தமான ரொமான்டிக் பாடல்கள் போட்டு கலக்கி இருந்தீங்க. கொஞ்ச நாட்கள் இங்கு வந்தாலும் மின்னலாய் மிண்ணிட்டு போனீங்க. நீங்க என்னையும் நான் உங்களையும் மாத்தி மாத்தி கலாய்ச்சிருக்கோம். கலக்கல் கலாட்டா நினைத்தால் இனிக்கிறது. உங்களுக்கும் SPB பிடிக்கும். அஜித் சைட் அடிக்க பிடிக்கும். இதோ உங்களுக்கான பாட்டு:

    YT - உன்னை பார்த்த பின்பு - காதல் மன்னன் - SPB
     
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    sunflower: சூரிய காந்தி பூவும் சூரியனும் வைத்து நான் கேட்ட ராக்கிங் கேள்விக்கு அசத்தலா பதில் குடுத்தீங்க. அது மட்டும் இல்லாம concave/convex lens வச்சு கேட்ட கேள்விக்கும் ரொமான்டிக்கா பதில் சொல்லி இருந்தீங்க. கொஞ்சமே கொஞ்ச நாட்கள் இங்கு வந்தாலும் போட்ட பாடல்கள் வரிகள் அருமை. இதோ உங்களுக்கு ஒரு பாடல்:

    YT - இது ஒரு பொன்மாலை பொழுது - நிழல்கள் - SPB
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Karthika: வீடியோ லிங்க் குடுத்து உங்களுக்கு பிடித்த ரொமான்டிக் சீன்ஸ் குறிப்பிட சொல்லி ராகிங் பண்ணி இருக்கிறேன். அதில் இருந்து நீங்க எந்த பாடல் போட்டாலும் பிடித்த சீனும் போஸ்ட் பண்ணுவீங்க. நீங்க Professor என்று குறிப்பிட்டு இருந்தீங்க. வாழ்க்கைக்கு ரொமான்ஸ்அவசியம் னு சொன்னதா எனக்கு நினைவு. இப்படி கூலா ஒரு Professor என்று நினைத்து இருக்கிறேன். உங்களுக்கு இந்த பாடல் காட்சியும் பாடலும் பிடிக்கும்:

    YT - யாரோ யாருக்குள் இங்கு யாரோ - சென்னை 28 - SPB
     
    suryakala likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Shmira/Mira: நீங்க ஸ்கூல் படிக்கும் காலத்தில் 30 பைசா குடுத்து பாட்டு புத்தகம் வாங்கி உங்களது சிஸ்டர் உடன் சேர்ந்து பாடி ஒரு கழுதைக்கு tough குடுத்து இருக்கீங்க. படிக்கும்போது ரொமான்டிக் கனவு மட்டும் கண்டு வேலைக்கு சேர்ந்த பிறகு உங்க கனவை நிறைவேத்தி இருக்கீங்க. உங்களவருடன் சேர்ந்து இந்த பாட்டில் வருவது போல யாருக்கும் தெரியாமல் சுத்தி இருக்கீங்க. உங்களுக்கு இளையராஜாவும் ரஜினியும் இருக்கும் 80s பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இதோ உங்களுக்காக:

    YT - காதலின் தீபம் ஒன்றை எற்றினாளே - தம்பிக்கு எந்த ஊரு - SPB
     
    Thyagarajan and suryakala like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Vinitha: உங்க மாமா பையோனோடு வெளியே சென்று உங்க வீட்டில் மாட்டிக்கிட்டிங்க. உங்க ஆளோட கார்ல அல்லது பைக் ல போக விருப்ப படுவீங்களா என்ற ராக்கிங் கேள்விக்கு பைக் என்று சொல்லி அதற்கு மூன்று காரணம் சொன்னீங்க. உங்க bit காரணங்கள் கேட்டு நான் சொன்ன பதில்: நல்லவேளை நீங்க கார் ல போகல. உங்க மாமா பையன் இந்த பாடலை பாடி இருக்கலாம்..

    YT - மாமா உன் பொண்ண கொடு - ராஜாதி ராஜா - SPB
     
    Thyagarajan and suryakala like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Aruna/ARS: நான் கேட்ட ராகிங் கேள்விகளுக்கு சூப்பர் பாடல்கள் போஸ்ட் பண்ணிட்டு ஒரு 6 pm கேள்வி பாடல் மட்டும் கோட்டை விட்டுடீங்க. நல்ல பாடல்கள் இங்கு பகிர்ந்து இருக்கீங்க. ஒரு தொலைக்காட்சியில் ஏதோ ஒரு ப்ரோக்ராம் ல பங்கு பெற்று வென்றதாக நீங்க சொன்னதாக நினைவு இருக்கிறது. இதோ பாடல்:

    YT - ஒரு நாளும் உன்னை மறவாத - எஜமான் - SPB
     
    Thyagarajan and suryakala like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    Light at the end of the tunnel - இருட்டுக்கு/ இரவுக்கு பிறகு விடியல்/ காலை, இதுவும் கடந்து போகும் என்று நினைத்து கொண்டே வெளிச்சத்தை வெளியே மட்டும் தேடி கொண்டிருக்காமல் வாழ்க்கையில் எப்படியும் ஜெயிப்போம் என்று எண்ணத்தில் தீ வளர்த்து/ வைத்து வெளிச்சம் உள்ளுக்குள்ளே ஏற்றி கொண்டு பட்டாசாய் வாழ்வை கொண்டாடுவோமாக!! :grinning::grinning:

    YT - மடை திறந்து பாயும் நதி அலை நான் - நிழல்கள் - SPB
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் தற்போது வசிக்கும் இடத்தில நாலு நண்பர்கள் இருக்கிறார்கள் - தீபாவளி அன்று வீட்டில் செய்த பலகாரங்கள் தருவார்கள். எனக்கு இனிப்பு என்றால் உயிர். நான் ஸ்வீட் செஞ்சு சாப்பிட்டு எனது உயிரை நானே எடுப்பேனா? அதனால் வீட்டில் ஸ்வீட் செய்யும் வழக்கம் கிடையாது. கடையில் வாங்கி நண்பர்களுக்கு திருப்பி கொடுப்பது வழக்கம்.

    இந்த முறை நாம சாப்பிடா விட்டால் என்ன நண்பர்கள் சாப்பிடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் முயற்சியில் இறங்கி விட்டேன். அந்த நேரத்தில் பலகாரங்கள் குடுக்க ஒரு தோழியின் கணவர் வீட்டிற்கு வந்தார். நெய் வாசனை தூக்கலா இருக்கு? என்ன ஸ்வீட் பண்றீங்க? என்று கேட்டார். உங்க வீட்டுக்கு ஸ்வீட் பார்சல் வரும். சாப்பிட்டு விட்டு நீங்களே ஸ்வீட் க்கு பேர் வச்சுக்கோங்க என்று சொல்லிட்டேன். அவரும் சிரித்து விட்டு சென்று விட்டார்.

    வீட்டில் செய்தது கடையில் வாங்கியது நம்ம ஊரு சாக்லட்ஸ் சேர்த்து கொடுத்தாச்சு. நண்பர்களுக்கு ஸ்வீட் கொடுத்ததோடு சரி. எப்படி இருந்தது என்று கேட்கவில்லை. சாப்பிட்டவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதே சந்தோஷம். :grinning::grinning:

    இன்னொரு நண்பர் தாய் நாட்டில் இருந்து ஸ்வீட்ஸ் ஆர்டர் பண்ணிருக்காங்க. இதை தான் நான் இனிமேல் செய்ய போகிறேன். நண்பர்கள் வைத்து ரிஸ்க் எடுப்பது இல்லை என்று முடிவு எடுத்து விட்டேன். :grinning::grinning:
     
    suryakala likes this.

Share This Page