1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    DP,
    Welcome to the thread! Your user name reminds me of one of my favorite friends on IL (Devapriya).

    உங்களை எங்க சங்கத்தில் சேர்க்கணும்னா நான் உங்களை rag பண்ணனும்..இதோ ராக்கிங் கேள்விகள்:

    கீழே குறிப்பிட்ட படங்களில் ஒவ்வொன்றில் இருந்து ஒரே ஒருவரை மட்டும் தப்பு சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் யாரை சொல்வீர்கள்? ஏன் அந்த நபர் கெட்டவர் என்பதற்கு காரணமும் தேவை.

    1) சிந்து பைரவி
    2) இறைவி
    3) ஒரு நாள் கூத்து
     
    Sairindhri likes this.
  2. deeprapriya

    deeprapriya Gold IL'ite

    Messages:
    393
    Likes Received:
    285
    Trophy Points:
    123
    Gender:
    Female
    அடக்கடவுளே... இதுக்கு கூட ராகிங் ஆ....என்ன கொடுமை சரவணா இது....

    Ok friend...I will answer your question...

    1. சிந்து பைரவி - சிந்துவின் அம்மா - சிந்துவை கைவிட்டதற்கு.
    2,3 padam innum parkalai:)thumbup::thumbup::thumbup: - escaped)....
     
    Sairindhri likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks DP for your response.

    ரூம் போட்டு இப்படி எல்லாம் யோசிப்பீங்களா?

    ஊரே பத்தி எரியுது. எப்படி தீப்பற்றியது னு தீவிரமா விசாரணை நடக்குது. அப்ப ஒருத்தர் வந்து ஒரு எரிந்து போன தீக்குச்சி/தீப்பெட்டிகொண்டு வந்து இந்த தீப்பெட்டி உற்பத்தி பண்ண முதலாளி தான் காரணம் னு சொன்னா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?

    இருந்தாலும் இப்படி எல்லாம் யோசிக்கறதுக்கு தனி திறமை வேணும். பாராட்டுக்கள். :smile:

    நல்ல வேளை நீங்க அந்த இரண்டு படங்களும் பார்க்கவில்லை.. நாங்களும் எஸ்கேப்.. :grinning:
     
    deeprapriya likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - நெஞ்சோரமா ஒரு காதல் - தனி ஒருவன்

    நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது
    கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
    கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
    கைதாக்கிட நான் நினைச்சேனே
    கண்ணீருல ஒரு மை போலவே
    உன்னோடு சேர துடிச்சேனே
     
    Caide likes this.
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - சொல்லட்டுமா ஒன்று சொல்லட்டுமா - Darling 2

    விரல்களோடு விரல்கள் சேர கனவுதான் தினம் காண்கிறேன்
    கனவென்றாலும் நினைவென்றாலும்எனக்கு நீயே உறைவிடம்
    விழிகள் பேசும் மொழிகள் போதும் உயிரும் உறைந்திடுமே
    தெறிக்கும் சிரிப்புகள் இதழ்கள் சிரித்திட வழிகள் பிறந்திடுமே


    Cute song.....
     
    Last edited: Jul 6, 2016
    Caide likes this.
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - உயிரே உன் உயிரென - Zero
    விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
    இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்

    உனக்கென எனக்கென முதலெது முடிவெது
    எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
    யார் நீ யார் நான் வான் நீ மீன் நான்
    உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே
    மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
     
    Last edited: Jul 6, 2016
    Caide likes this.
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - உன்னாலே எந்நாளும் - Theri

    உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
    என் கண்கள் ஓரம் நீர்த்துளி

    உன் மார்பில் சாய்ந்தே சாகத்தோணுதே
    விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்
    மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
    முடியாத பார்வை நீ வீச வேண்டும்
    முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
    இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை
    நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
     
    Caide likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    APS,

    'தெறி' பாடல் வரிகள் எனக்கு பிடித்தது. சைந்தவி இதே 'modulation' ல சில பாடல்கள் பாடி இருப்பதால் பாடி இருக்கும் விதம் அவ்ளோவாக மனதை தொடவில்லை. இயல்பாகவே பாடி இருக்கலாம்.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சமீபத்தில் 'whatsapp' ல எனக்கு வந்த message la எனக்கு பிடித்தது:

    நாம விரும்புற பாட்டை போட்டுக் கேக்க வாழ்க்கை MP3 PLAYER இல்ல.
    அது FM RADIO மாதிரி. அது போடுற பாட்டை ரசிக்க நாம தான் கத்துக்கணும்.


    ~~~~~~~~~~~~~~~
    சமைத்துக் கொண்டிருக்கும்போது Tambura app ல LankaSri FM கேட்பது எனது வழக்கம். நேற்று இரவு இந்த பாடலை கேட்டேன். திரும்ப திரும்ப கேட்கும் பாடல் ரகம் இல்லை என்றாலும் ஒரு தடவையாவது இந்த பாடலை கேட்கலாம்.

    YT - என்னமோ செய்தாய் நீ - காதலன்னா சும்மா இல்லை

    என்னதான் செய்தாய் நீ
    குடைகள் கையில் இருக்கும் போதும்
    மழையில் நனைந்து பார்க்கத் தோன்றும்
    கொஞ்சம் இறங்கி பார்க்கத் தோன்றும்
    கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்

    ~~~~~~~~~~~~~~~
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இசை விரும்பிகள் அனைவருக்கும் ஒரு சில பாடல்கள் பிரத்யேகமாக இருக்கும். இந்த பாடலை பாடிய விதத்தில் எனக்கு என்னவோ மயக்கம். கேட்கும்போது எல்லாம் என்னை எங்கோ இழுத்து செல்லும் பாடல். அதனால் இதுவரை ஒரு முறை கூட பாடல் வரிகளை முழுவதும் கவனித்து கேட்டதில்லை.

    குடித்தால் எந்த விதமான போதை கிடைக்கும் என்பதில் எனக்கு சொந்த அனுபவமில்லை. ஆனால் பாடல்கள் கேட்டு நான் போதையில் இருந்த அந்திப்பொழுதுகள் எத்தனையோ இருக்கிறது இன்றையும் சேர்த்து.

    ஆனால் எல்லோருக்கும் இந்த பாடல் கண்டிப்பாக பிடிக்கும் என சொல்ல முடியாது.


    TP - இசை வீசி நீ தேட - இசை
     
    AbhiSing, jskls and Sairindhri like this.

Share This Page