1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

pillaiyar pidikka kurangaai mudinthathu

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Sep 23, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    'பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது' இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வசனம்.

    நாம் ஒன்று நினைக்க அது வேறு விதமாக முடிந்து விடுகிறது. நல்லதை நினைத்துச் செய்யும் காரியங்கள் தீமையில் முடிகிறது எனும் பொருளில் தான் பயன்படுத்தப் படுகிறது.


    சிவன், விஷ்ணு,முருகன், கண்ணன் அனைவருமே விநாயகரை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.திரிபுரம் எனும் மூன்று அரக்கர்களை அழிக்கப் புறப் பட்டபோது சிவன் பிள்ளையாரை வழிபட மறந்ததால் அவரது தேரின் அச்சு முறிந்தது.அச்சு முறிந்த இடம் அச்சிறுப்பாக்கம்.சிவன் விநாயக பூஜை செய்த பிறகு தான் சிவ பிரானால் திரிபுர சம்ஹாரம் நிறைவேறியது.


    விநாயகர் எப்படி தொடக்கத்தில் வழிபடும் தெய்வமோ, அதேமாதிரி நாம் எடுத்த காரியத்தை முடிக்கும் பொது வழிபட வேண்டிய தெய்வம் ஆஞ்ச நேயர் .


    'கம்' முனு கெட.'காரியம் நடக்கும் என்பார்கள்.'கம்' என்பது விநாயகரின் மூல மந்திரம்.விநாயகரை ஜெபித்தால் எல்லாத் தடைகளும் நீங்கி வெற்றி கிட்டும் .காரியம் வெற்றிகரமாக நிறைவேறினதும் ஹனுமத் பூஜை செய்வர்.

    மஞ்சள் பிள்ளையார் பிடித்து ,விநாயகர் பூஜை செய்து காரியத்தைத் தொடங்கினாலே போதும்.தானாகவே அது வெற்றிகரமாக ஹனுமத் பூஜையில் முடியும் என்பதையே 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடியும்' என்ற வசனம் எடுத்துக்காட்டுகிறது.

    Jayasala 42
     
    sindmani, jskls and sreeram like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Ethai nan kelvipatu erukiren. Ninaivu paduthiyatharku nandri.

    Ungal tamizh migavum nandraga erukiradhu. Vazhthukal.
     
  3. Visasri

    Visasri Platinum IL'ite

    Messages:
    1,103
    Likes Received:
    1,146
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Apt explanation. Thanks for sharing
     

Share This Page