1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Pennalla ,pennalla Devathai !!!

Discussion in 'Posts in Regional Languages' started by Ragavisang, Oct 20, 2016.

  1. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    438
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்*.

    *ஒரு நாள், இரு நாள் அல்ல*.

    *தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்*.

    *இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது*.

    *அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்*.

    *இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்*.

    *அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்*.

    *சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்*.

    *அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்*.

    *இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்*.

    *“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை*.

    *ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை*.

    *அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்*.

    *ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்*.

    *அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்*.

    *அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்*.

    *கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*.

    *கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு*.

    *தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்*.

    *மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்*.

    *“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது*.

    *“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல*.

    *அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்*.

    *அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது*.

    *“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்*.

    *ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்*.

    *இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை*.

    *“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்*.

    நன்றி
    படித்தால் மட்டுமல்ல பகிரும்போதும் சந்தோசமே.
     
    Thyagarajan, suryakala and vaidehi71 like this.
  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Hi,
    Nice one and true as well.
    I remember reading it long time ago.
    Thanks for sharing.
    Vaidehi
     
    Ragavisang likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,558
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed reading the post. It is in shades of sujatha's writings.
    Regards.
     

Share This Page