1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Other Pearls of Wisdom---Mudhumozhi Kaanchi

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, Oct 19, 2012.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நல்கூர்ந்த பத்து

    1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
    முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று.


    நீதி நெறி இல்லாத அரசன் கீழ் இருக்கும் நாடு துன்புறும்.

    The regime under the King who give partial judgment, will suffer.

    2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.

    வயது மிக்க மூத்தோர் அனுபவிக்கும்/நினைக்கும் காம இன்பம், சிறப்பானதல்ல/ துன்பமே தரும்.

    Thinking of lust/ enjoying the same, during the old age, only gives suffering.

    3. செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று.

    கோபமும், வெறுப்பும் இருப்பவரோடு சேர்ந்து இருத்தல் துன்பம் தரும்.

    Life will be nothing but suffering when living together with a person, who has (uncontrolled) anger and enemity ( to others)

    4. பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.

    நோயாளி பெறும் உடல் இன்பம், துன்பம் தரும்.

    Patients who go through intimacy, will suffer (later on)

    5. தற் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.

    அன்பில்லாதவரிடத்தே கொண்ட ஊடல், ஒருவர்க்கு துன்பத்தையே தரும்..

    Having intimacy with a person who has no love, brings suffering.

    6. முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.

    முதியோர் அணியும் நகை, அவர்களுக்கு அழகைத் தராது.

    Adorning jewels during the old age, does not give any (extra) beauty to them.

    7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.

    தன் வார்த்தைக்கு மதிப்பு இல்லாத இடத்தில, சொல்லும் ஒவ்வொரு சொல்லும், பயனற்றதே.

    Where there is no respect for one's words, uttering each and every word (in that place) is (considered as) a waste.

    8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று.

    மனதில் அன்பு, இரக்கம் இல்லாத வறியவரிடம் சென்று இருத்தல், துன்பத்தையே தரும்.

    Living with a person who has no love or mercy towards others, brings nothing but suffering.

    9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று.

    (நம்மிடம்) மதிப்பு இல்லாதவரிடம் கோபம் கொள்வது பயன் தராது.
    மதிப்பில்லாதவன் கொள்ளும் கோபம் பயன் தராது..

    Getting angry with those who has no respect for us (or our words) is useless.
    If a person has no respect from others, his anger is useless too.

    10. நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று.

    நட்பு பாராட்டாத ஒருவரிடம், உதவி கேட்பது, பயனற்றதே.

    Getting help from those who do not know the value of friendship, is useless.

    Sriniketan
     
    Loading...

Share This Page