*Whatsapp* லையே இருக்கியே உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா???!!! ரகுவரன்: தம்பி புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது...!!! ஒரே ஒரு நாள் நீ இங்கன வந்து பாரு...!!! *ஒரே ஒரு நாள்...* *Whatsapp* ல நீ இருந்து பாரு...!!! அப்ப புரியும் எங்க வலி என்னன்னு...!!! எவ்வளவு post எவ்வளவு டென்ஷன் எத்தனை லைக் எத்தனை கமெண்ட் ,நக்கலு எத்தனை வம்பு தும்பு எத்தனை சண்டை எத்தனை பஞ்சாயத்து ஒரே groupக்குள்ளாற எத்தனை குரூப்பிஸம் எத்தனை பொறந்த நாளு, எத்தனை நினைவு நாளு எத்தனை பாட்டு எம்பூட்டு தகவலு என்னமோ.... லேசா சொல்லிட்ட..♂️ இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான்யா தெரியும்... கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்... திருமணநாள் வாழ்த்து சொல்லனும்... அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்... இது இல்லாம puzzle.....quiz.. னு வரும்.... வாரம் ஒரு வாட்டி... அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்... பெண்கள் தினம்... பேய்கள் தினம்... பெரியம்மா தினம்னு... வரிசை ...வரிசையா வரும்... அதுக்கு எல்லாம் ஞாபகமா வாழ்த்து சொல்லனும்... இது இல்லாம... புரஃபைல் பிக்சரை சூழ்நிலைக்கு தகுந்தாப்ல அடிக்கடி மாத்தி தொலைக்கணும்.. நடு வுல எத்தனை Good morning, எத்தனை Good afternoon, எத்தனை Good night, அது மட்டுமா... சாப்ட்டாச்சா... எங்க வூட்ல தோசை... உங்க வூட்ல பூரி... சின்னம்மாவுக்கு இப்ப தேவலையா.. பாட்டு சூப்பர்ர்ர்... இப்டில்லாம் அள்ள்ளி விடணும்... அவங்க பையன் பொண்ணு ..ஏதாவது perform பண்ணா... Wow, Nice, Super, Excellent னு வாய் கூசாம பொய் சொல்லனும்... பெண் மக்களுக்கு சோப் போடனும்... ஆத்திர அவசரத்துக்கு நமக்கு support பண்றதுக்கு ரெண்டு பேர செட் அப் பண்ணனும்... நெட் பூரா நாயா நடந்து share பண்ண மீம்ஸ்களை பொறுக்கணும்.. மச்சி, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி, தங்கச்சி, தோழா, தோழின்னு உறவுமுறை வைத்து கமெண்ட் போடனும்...இல்லைன்னா ....வம்பிழுக்கணும்... குரூப்பை அமைதியா இருக்க விடாம....அட்மின் தலையை உருட்டிகிட்டே இருக்கணும்... முக்கியமா அப்ப்ப வீட்டில் தயார் பண்ணாத நெட் உணவு பதார்த்த படங்களை போடனும்... பசியை தூண்டனும் எல்லாத்துக்கும் மேல ... எத்தனை நல்ல post போட்டாலும்.. பாராட்டவே தெரியாதவங்களை கடந்து போகனும்... ♂️♂️♂️♂️♂️♂️ எதையும் வந்து பார்த்தா தான்யா தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு... தீக்குள்ள விரலை விட்டால் சுடும்னு சொல்றேன் உனக்கு புரியல... So... Whatsapp லயே இருக்கிறவனை மட்டமா எடை போடாதே. ☘️
Hi uncle, I would like to read your shared article but I forgot to read Tamil script a long ago. If possible, please provide translation to above text.
Chee niya sir, How to understand your blog people like me who do not know Tamil???? Translation please. Syamala
@Mistt @shyamala1234 It's all in typical slang and translating it into English may miss the spirit of it. Nevertheless I will try and do it. Give me a bit of time