Oh, It Is Margazhi And Time For Thiruppavai!

Discussion in 'Religious places & Spiritual people' started by suryakala, Dec 16, 2018.

  1. ChandrikaV

    ChandrikaV IL Hall of Fame

    Messages:
    2,826
    Likes Received:
    2,654
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Dear @suryakala sister, first picture above is so beautiful. Thank you.
     
    mangaii and suryakala like this.
  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    MANARKUDI.jpg
    MARGAZI 24.jpg

    மார்கழி 25ம் நாள். புதன்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 25.

    ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Behaag, Adi.


    பொருள்:

    தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

    விளக்கம்:

    பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்தவரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

    மழைக்காலமாகிய ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கம்சனுடைய சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்து, அந்த இரவில் ஒருவருக்கும் தெரியாமல் வசுதேவரால் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீநந்தகோபரின் வீட்டில், யசோதைக்கு மகனாய் வளர்ந்தாய். உனக்குத் தாய், தகப்பனார் என்று ஒருவரும் இல்லாதபோதும், அவதாரத்துக்கு தேவகியை தாயாகவும், வசுதேவரை தகப்பனாகவும் கொண்டாய். கம்சனுக்குத் தெரியாமல் இவை நடந்தாலும், உன்னுடைய பிறப்பை அவனால் பொறுக்க முடியவில்லை. உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். பல அசுரர்களை ஏவினான். ஆனால் அவனது எண்ணம் நிறைவேறவில்லை. அவனுடைய வயிற்றில் எப்போதும் நெருப்பாக இருந்தாய். எங்கள் மீது அன்பு கொண்ட பெருமானே! நீ அந்தப் பறையைக் கொடுத்தால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறார்கள்.

    Being born to woman, and in the same night in hiding. You became the son of another, but this he could not tolerate, and wanted to cause more harm to you, and you great one, became, The fire in the stomach of that Kamsa, we have come here with desire for a drum, and if you give the drum to us, we would sing about thine great fame and wealth, and would end our sorrows and become happy, and worship our Goddess Pavai.

     
    mangaii, joylokhi and ChandrikaV like this.
  3. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    AVATAR.jpg
    ANDAL AMMA.jpg

    மார்கழி 26ம் நாள். வியாழ்க்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 26

    மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam-
    Kunthala Varali, Adi.

    பொருள்:

    பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

    விளக்கம்:

    பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
    மாலே! மணிவண்ணா! நாங்கள் மார்கழி நீராட்டம் என்ற நோன்பை அனுஷ்டிக்கிறோம். இது சாஸ்திரங்களில் சொல்லப்படும் அனுஷ்டானமா என்று கேட்காதே, இது பெரியோர்கள் செய்துவரும் ஒரு செயல். பெரியோர்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று நீ கீதையில் சொன்னாய். ஆகையால் நாங்களும் செய்கிறோம். இதற்கு வேண்டிய சில பொருள்களை உன்னிடம் வேண்டுகிறோம். திருவாய்ப்பாடி முழுவதும் நடுங்கி உயர்விக்கும்படி உன் கையில் பாலின் நிறத்தைப்போல் இருக்கும் பாஞ்சசன்னியத்தைப் போன்ற சங்குகள், எல்லா இடங்களிலும் கேட்கும்படியாக ஓசை ஏற்படுத்தும் மிகப்பெரிய பறை, உனக்கு பல்லாண்டு பாடுகிறவர்கள் இருப்பதுபோல், எங்கள் கோஷ்டிக்கும் பல்லாண்டு பாடுவோர், அழகிய விளக்கு, ஒரு கொடி, மேலே பனிச்சாரல் விழாதபடி ஒரு மேற்கட்டு ஆகியவையும், இவற்றைப் போன்று பல பொருள்களும் எங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.

    Oh Lord Vishnu, Oh lord who is like the blue sapphire, If you ask us what we need, In your great grace and great deeds, For our holy bath of Marghazhi, we will ask for very many conches Like the milk white conch of yours called Pancha Janya, Very many big drums whose sound can be heard everywhere, several musicians of fame to sing “Pallandu” Several beautiful pretty lamps, Several flags and cloths to make tents, Oh, He who sleeps on a banyan leaf at time of deluge, Please give us them all, So that we worship our Goddess Pavai.
     
    mangaii, joylokhi and ChandrikaV like this.
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PERUMALLL.jpg
    A24.jpg

    மார்கழி 27ம் நாள். வெள்ளிக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 27.

    கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவார
    கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam-
    Poorvi Kalyani, Misrachapu.

    பொருள்:

    எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

    விளக்கம்:

    "கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

    Hey Lord Govinda, who is known for victory over enemies, after singing you we will get drums and many gifts, And after being praised by all the people, wear we will the golden flower on our hair, wear we will golden bracelets, Wear we will golden ear studs, wear we would then the golden flowers on the ear, wear we will ornaments on the legs, Wear we will pretty new dresses, eat we will rice mixed with milk, covering the rice fully with ghee, and with the ghee dripping from our forehands, we will be together and be happy, and worship our Goddess Pavai.

     
    joylokhi, ChandrikaV and mangaii like this.
  5. mangaii

    mangaii Finest Post Winner

    Messages:
    1,533
    Likes Received:
    1,986
    Trophy Points:
    283
    Gender:
    Female
    @suryakala just saw this thread. Enjoyed reading the meaning associated with Thirupaavai .
    Thanks for posting this. Koodaravalli festival is celebrated widely in some communities. It marks day 27 . The special about this day is Aandal apparently prayed to Perumal that she will offer Him akkara adisal and butter if He grants her wish to join him. After joining Ranganathar, it didn't make any sense for her to complete this promise. Ramanusan who appeared several decades later, when he read the pasuram decided to complete the promise and considered himself as annan for her and offered the same for Rangamannar. Generally on this day these two are offered as prasadam . The recipe is very simple. Take 1 cup of raw rice + 3 spoons of moong dhal. Wash, roast in ghee and cook in 4 cups of milk. Once cooked well add jaggery(not white sugar) and offer it to perumal .
     
    joylokhi and suryakala like this.
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    TAYAAR.jpg
    ASHTALAXMI.jpg

    மார்கழி 28ம் நாள். சனிக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 28.

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Kambhoji, Adi.

    பொருள்:

    குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

    விளக்கம்:

    "குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

    Belonging to the ignorant family of cow herds, drive we would the cattle to the forest, and there we would all eat together, But We are blessed that you are one of us.. oh Govinda who does not have any short comings. none can ever break the ties that we have with you, Oh Lord, we are but ignorant girls, who do not know the world, and in ignorance and love we have called you by name. so please be not be angry on us, and please give us drums, Oh Lord, so that we can worship our Goddess Pavai.

     
    ChandrikaV and joylokhi like this.
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PERUMAL TODAY.jpg
    LAXMI.jpg

    மார்கழி 29ம் நாள். ஞாயிற்றுக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 29.

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Malayamarutam, Misrachapu.

    பொருள்:

    கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

    விளக்கம்:

    விடியற்காலையில் எல்லோரும் வந்து, உன்னை சேவித்து, உன் திருவடித் தாமரைகளை போற்றிக்கொண்டு எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம். நீ அதற்கு செவிசாய்க்க வேண்டும். மாடு கன்றுகளை மேய்த்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு உண்டு பிழைக்கிறோம். அப்படிவாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், இந்தக் குலத்தில் வந்து பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடாது. நாங்கள் பறையைக் கேட்டோம் என்பதற்காக, பெரிதும் ஒலிக்கின்ற பறையைக் கொண்டுவந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றுமில்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல் போயிற்றா? "கோவிந்தா' எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே ஆகவேண்டும். உனக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு நேரத்தில் எங்களுடைய மனம் வேறுவழியில் சென்றால், செல்லாமல் தடுத்து திருப்பி உன் கைங்கர்யத்திலே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கோபியர்கள் பல பாடல்களில் கேட்டுக்கொள்ள வந்த "பறை' என்ற சொல்லின் பொருளை, அந்தரங்கக் கைங்கர்யம் என்று வெளியிட்டார்கள்.

    Please hear why, in this very early dawn, we have come to worship, Your golden holy feet. You were born in our family of cow herds, and we are but there to obey your every wish, and not come to get only the drums from you, Oh Govinda. For ever and for several umpteen births, we would be only related to you, and we would be thine slaves, And so please remove all our other desires, and help us to worship Goddess Pavai.

     
    joylokhi and ChandrikaV like this.
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDALNEW.jpg
    GOVINDA ANDAL.jpg

    மார்கழி மாதம் 29ம் நாள். திங்கள்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 30.

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Surutti, Misrachapu.

    பொருள்:

    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

    விளக்கம்:

    இந்தத் திருப்பாவையைச் சொன்னால் என்ன பயன் ஏற்படுகிறது என்பதைக் கூறுகிறது இந்தப் பாசுரம். கடலுக்குள் இருக்கும் அமுதத்தை எடுத்து, பகவான் தேவர்களுக்குக் கொடுத்தான். இப்படிப்பட்ட மாதவனை சந்திரன் போன்ற திருமுகத்தைக் கொண்டவர்களும், சிறந்த ஆபரணங்களை அணிந்த கோபியர்கள் அடைந்து, அவனைப் போற்றிப் புகழ்ந்து பறை என்ற ஒலிக்கருவியையும் கைங்கர்யத்தையும் கேட்டுப் பெற்றார்கள். அதை எப்படிப் பெற்றார்கள் என்பதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பட்டர்பிரான் என்ற பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த சங்கத் தமிழ் மாலையாகிய திருப்பாவை முப்பது பாசுரத்தையும், ஒரு பாசுரத்தையும் விடாமல் பக்தியோடு கூறுகிறார்கள். சதுர்ப்புஜனாயும் தாமரைக் கண்ணனாயும் இருக்கும் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று இப்பாசுரம் கூறுகிறது.

    கோபாலனைக் கோபியர் வழிபட்டு மார்கழி நோன்பு முடித்த விதத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் பிரான் மகளான கோதை பாடியருளினான். இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் திருமாலின் திருவருளை எங்கும் பெற்று இன்புறுவர்.

    He who sings with out error, The thirty odes in sweet Tamil, of the story of how the rich ladies, with faces like moon, Who worshipped and requested, the Madhava who is also Lord Kesava, who churned the ocean of milk, for getting a drum to worship Goddess Pavai, as sung by Kodhai who is the dear daughter, of Vishnu Chitta the bhattar, from the beautiful city of Puduvai, will be happy and get the grace, of our Lord Vishnu with merciful pretty eyes and four mountain like shoulders, for ever.

    May EmPerumal and Andal Thayar of Srivilliputtur bless you all and May the Birth of 'Thai' bring in happy solutions for any problem in your life and fill it with prosperity and cheers.

     
    ChandrikaV and joylokhi like this.
  9. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    A12.jpg
    AN30.png
    PONGAL2018.jpg


    ஆண்டாள் வாழித் திரு நாமம்.

    மங்களம்.

    திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!

    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

    பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!

    ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே!

    உயர ரங்கர்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!

    மறுவாறும் திருமல்லி வளநாடு வாழியே!

    வண் புதுவை நகர் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

    ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

    ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஸ்ரீராம் ஜெயராம் பாதகமலம் பவே மன பாரிதம்!

    இன்றுடன் மார்கழி நிறைவடைகிறது!

    இனிக்கும் இப்புனிதத் திருப்பாவையும், இதை அருளிய அருள் நிறைந்த ஆண்டாளும், அன்னை போற்றிய பெருமாளும், அழகுத்தமிழும், தமிழ் இல்லப்பாரம்பரியங்களும், நம் நினைவை நிறைக்கின்றனர். மீண்டும் மார்கழியும், ஆண்டாளும் காண்போம்.

    அன்னை அருள் நிறைக!

     
    Last edited: Jan 14, 2019
    ChandrikaV and joylokhi like this.
  10. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    A15.JPG

    Dear DD @mangaii ,
    Is it not so inspiring to know the origin of the Koodaravalli Thirunal!

    And self-assumed the Annan of Andal to fulfill the promise of his little sister to Perumal!

    Thanks a lot for this lovely bit of history, tradition and recipe.

    May Thayar Andal bless us all!
     
    ChandrikaV and joylokhi like this.

Share This Page