காதலி என்னைப் பார் நமது இடைவெளிகள் குறைந்தவிட்டன நான் இங்கு தான் இருக்கிறேன் உன் அருகில் தான் இருக்கிறேன் எத்தனை கஷ்டங்கள் எத்தனை நிர்பந்தங்கள் இருந்தும் நான் இங்கு தான் இருக்கிறேன் உன் அருகில் தான் இருக்கிறேன் உன்னால் மறைக்க முடியாத ரகசியங்கள் நான் உன்னால் மறக்க முடியாத அனுபவங்கள் நான் கேட்க முடிந்தால் கேட்டுப்பார் உன் இதயத் துடிப்பின் வார்த்தைகளை அவை சொல்லும் நான் இங்கு தான் இருக்கிறேன் உன் அருகில் தான் இருக்கிறேன் உன் இதயத்தில் நான் உலவுவதைக் கண்டு ஏன் அஞ்சுகிறாய் நான் உன் இதயத்தின் குரல் தானே நீ எங்கு என்னைத் தேடுகிறாய் நான் இங்கு தான் இருக்கிறேன் உன் அருகில் தான் இருக்கிறேன் Tamil translation of 'Mein Yahan hoom' song from Hindi movie 'Veer Zara'
TDU, nice translation work..at last the suspense is broken for who is that person saying those words.. Arumaiyaana explanation idhu: