Happiness A seminar was proceeding on in a large hall. Then the speaker handed a balloon to everyone and requested them to blow and write their name gently on it with white board sketch pen. Then when every one completed that action and was ready for the next stage, the speaker told them to leave those balloons in another room. Now the room is filled to the brim with air-filled-name-written large and medium balloons of various hues. A while later, the speaker tequested the audience that they get into the room and pick up and bring their balloon in which his or her name written on it. Immediately everyone rushed and gate crashed fall one over the other in chaotic manner attempted to enter the room and pick up their balloon. Time was ticking by but none could get the particular balloon. Several minutes later as none could emerge out of the room with their balloon, the speaker announced to stop their method of search & said I steady of searching for your balloon, each of you just enter the room and pick up one balloon whatever name written on it and hand it to the person concerned and this way the purpose would be achieved soon". The members of audience heed to this advice and in a jiffy got in hand their balloon with minimal effort. A while later, the disciplined audience heard the speaker telling them, “So my dear friends, this is what is in life. We all always looking for happiness elsewhere, but we don't think where, how and in what way we can access it mutually quickly & efficiently. Our happiness seem to be always lying in helping others. Extend happiness to others and you get the happiness you seek several times multiplied returning to you”. மகிழ்ச்சி பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர். ஒருவருக்கொருவர் நெக்கித்தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், “ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்” என்றார். அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், “இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை”. “நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்”. (Heard a father in church exhorting the assemblage)