மெடிக்கல் இன்சூரன்ஸ் ஃப்ராடுகள் 'பாலிசி பஜார்' என்ற ஒரு கம்பெனி விளம்பரம் பார்க்கிறீர்களா..? அதில் அந்த கம்பெனி ரெப்ரசண்டேட்டிவ் ஆஸ்பத்திரிக்கே வந்து, 'மொத்த' மெடிக்கல் பில்லையும் செட்டில் செய்வார், அவரை ஹாஸ்பிடல் நர்ஸ், நோயாளியிடம் "உங்க பிள்ளை" அப்டின்னு சொல்வார்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் எனும் மோசமான அனுபவம் இருப்பவர்களுக்கு, அந்த விளம்பரம் பார்க்கும் போது, எழுந்து டிவியை உடைக்கலாமா என்ற கடும் ஆத்திரம் வரும்..! நம்மைப் போன்ற நடுத்தரவர்க்கம், இன்றைய மருத்துவ செலவு பற்றிய பயத்தினாலும், விளம்பரங்களினாலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கிறோம்..! ஆவரேஜாக ஒருவருக்கு வருடம் 25000 முதல் 50000 வரை பிரிமியம் கட்டுகிறோம். "மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்துடோம்..! இனி நமக்கு ஆஸ்பத்திரி செலவு பற்றிய பயமே இல்லை..!" என்று நினைத்துக் கொண்டு வருடா வருடம் பிரிமியம் கட்டுகிறோம்..! ஆனால், நாம் பயப்படும் அந்த மெடிக்கல் எமர்ஜென்ஸி நேரம், அந்த கிரிடிக்கல் தருணம் வரும்போது, ஆஸ்பத்திரியில்தான் நமக்குத் தெரிய வரும் : நாம் மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றி எவ்வளவு குழந்தைத்தனமாக நினைத்துக் கொண்டு, ஏமாளியாக இருந்திருக்கிறோம் என்பது..! கிரிட்டகலான நேரத்தில் ஒரு ஆஸ்பத்திரிக்குள் செல்லும்போதுதான் நமக்குத் தெரிய வரும்: எல்லா ஹாஸ்பிடலிலும் எல்லா இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் கேஷ்லெஸ் வசதி கிடையாது என்று..! வெவ்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகள் சிற்சில ஆஸ்பத்திரிகளோடு மட்டுமே கேஷ்லெஸ் அரேஞ்மெண்ட் வைத்திருக்கும்..! ஏன்..? ஏன் எல்லா ஆஸ்பத்திரிகளும், எல்லா கம்பெனிகளோடும் கேஷ்லெஸ் இருக்கக் கூடாது..? என்ன காரணம் என்று பார்த்தால்: அது அந்தந்த ஆஸ்பத்திரிகள், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு திருப்பிக் கொடுக்கும் 'கமிஷன்' பொறுத்த அரேஞ்மெண்ட்டாம்..! அடப்பாவிகளா..? ஸோ, மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும், நாம், எமர்ஜென்ஸிக்காக கையில் கேஷ் வைத்திருக்கத்தான் வேண்டும்..! இல்லையென்றால் அந்த எமர்ஜென்ஸி நேர்த்திலும் தகுந்த ஹாஸ்பிடல் தேடிக் கொண்டிருக்க வேண்டும்..! நீங்கள் இறந்து கொண்டிருக்கும் உங்கள் இதயத்தைப் பார்ப்பீர்களா அல்லது ஹாஸ்பிடல் இன்சூரன்ஸ் எலிஜிபிலிட்டி போர்டைப் படித்துக் கொண்டிருபபீர்களா..? ஆச்சா..? அது உங்களுக்கான முதல் அதிர்ச்சிதான்..! அடுத்து வரும் இன்னும் பெரிய அதிர்ச்சி..! நாம் சென்று அந்த ஹாஸ்பிடலில் இன்சூரன்ஸிற்கென இருக்கும் ஆளிடம் பேசுவோம். அப்போதுதான் நமக்குத் தலையில் இடி விழுவது போலத் தெரிய வரும்: ஆஸ்பத்திரி கேட்கும் தொகையில் அதிக பட்சம் 60% மட்டுமே நமக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும் என்பது..! மெடிக்கல் இன்ச்சூரன்ஸ் கம்பெனிகள் ஒவ்வொரு வகை நோய்/ஆபரேஷனுக்கும் அதிக பட்ச செட்டில்மெண்ட் இவ்வளவுதான் என்று சொல்வார்கள்..! அதென்னய்யா அதிகபட்சம்? நாம் 500000த்துக்கு பாலிஸி எடுத்திருந்தால் ஒரு வருடத்தில் 500000 வரை தரத்தானே வேண்டும்..? அதுக்கு பேர்தானே இன்சூரன்ஸ்..? அதான் கிடையாது..! உதாரணமாய் கண் கேடராக்ட் ஆபரேஷன் என்றால் அதிகபட்சம் 30000 தான் தருவார்கள்..! ஆனால் சென்னையில் எந்த டாக்டரும் 50000க்கு குறைந்து கேடராக்ட் செய்யவே மாட்டார்..! 50000த்தோட நம்மை வுட்டாலே பெரிய விஷயம்..! அதில் என்னென்னவோ லென்ஸ் வகை, அதுஇதுன்னு நம்மை ஏமாற்றி, 200000 வரை கூட புடுங்குவார்கள்..! ஆனால், இன்சூரன்ஸ் கம்பேனி 30000தான் தருவான்..! "ஏன்டா..? ஏன் ..? ஏன்..? இத்தனை வருஷமா பிரிமியம் கட்டறேனே.. ஏன் தர மாட்ட..?" என்று நமக்கு கோபத்தோடும் பதட்டத்தோடும் கேள்வி எழும்..! நீங்கள் ஆஸ்பிடலிடமோ அல்லது இன்சூரன்ஸ் கம்பெனியிடம் ஃபோனிலோ பொங்குவீர்கள்..! ஆனால், அவர்கள் கருணையே காட்டாமல், உங்களை வாத்து மடையர்கள் போல நடத்தி, போயிட்டே இருப்பாங்க..! நீங்க ஒண்ணியும் பண்ண முடியாது..! அயற்சியில், "சரி கொடுக்றது கொடுங்கடா ஃப்ராடுப் பசங்களா.. எங்க விதி.." என்று அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வருவீர்கள்..! இதுதான் இந்தியாவின் மெடிக்கல் இன்சூரன்ஸ்..! பக்கா ஃப்ராடு..! பாலிஸியில் கண்ணுக்கே தெரியாத சின்ன்ன்ன எழுத்துகளில் இருக்கும் விஷயங்கள் அதற்காகத்தான்..! நாம அதுல சைன் பண்ணிட்டு, அவன் கேக்கற பிரிமியம் வருஷா வருஷம் ஒழுங்கா கட்டிகிடடு, 'நமக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இருக்கு..! இனி ஆஸ்பத்திரி செலவு பத்தி கவலையே நமக்கு இல்ல..!"ன்னு முட்டாத்தனமா நினைச்சிகிட்டு ஏமாளியா வாழ்ந்துட்ருப்போம்..! எல்லா வகையிலும் ஏமாறப் பிறந்தவர்கள்தானே இந்திய நடுத்தரவர்க்கம் நாம்..? .....JAYASALA 42