1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Marukka Mudiyatha Unmaikal

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Sep 12, 2022.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    • மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!
      தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்!
      “உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை!⛱✈
      OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க!
      குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!
      ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று... ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது!’
      ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். ஆணாதிக்கச் சமூகம்!‍♂
      கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க... அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல!
      நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?
      சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது... யாருக்கு யார் அடிமை என்பது!
      முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே!⛈☔
      Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்!‍♀‍♀‍
      ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!
      நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!⚡
      யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!‍‍‍
      வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.
      ‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!⛄
      ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!!‍♂
      அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது!
      காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில
      கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்!

    • Jayasala 42
    • ,
    • or
     

Share This Page