"Maha Periavaa AruL Vakku" [Thanks to Kalki]

Discussion in 'Religious places & Spiritual people' started by bharathymanian, May 8, 2013.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    அருள்வாக்கு
    பணிவே பத்தியம்!
    உலகத்துக்கு நல்லது செய்வதும் மூட்டை தூக்குகிற மாதிரிதான். அதைச் செய்ய சக்தி வேண்டும். சக்தியை நன்றாக வளர்த்துக் கொள்ளாமல் இந்த மூட்டையைத் தூக்குகிறேன் என்று ஆரம்பித்தால் இடுப்பைப் பிடித்துக் கொள்ளும். உடம்புக்குப் பிடிப்பு வியாதி உண்டாகிற மாதிரி உள்ளத்துக்கும் வியாதி ஏற்படும். சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.
    ஏற்கெனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒருவிதத்தில் மூட்டைதூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புகள் செய்தோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக்கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப்போகும். தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.
    பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது. ‘நமக்கு எல்லாம் தெரியும், நாம் புத்திசாலி’ என்ற அகம்பாவம்தான் வெறும் படிப்பினால் உண்டாகும். இப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் துணை புரியமாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல் எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம் பெற முடியாது.
    பழைய தப்பு மூட்டை என்கிற வியாதிக்கு மருந்து படிப்பு. இந்த மருந்தைக் கவனமாகச் சாப்பிட்டு அந்த மூட்டையை இலேசாக்கிக் கொண்ட பிறகுதான், உலகத்துக்கு நல்லது செய்வதற்காக வேறு மூட்டையைத் தூக்கலாம். டாக்டர், நோயாளிக்கு மருந்து கொடுப்பதோடு நிற்க மாட்டார். இன்னின்ன ஆகாரம் சாப்பிடு, இன்னின்ன சாப்பிடாதே" என்று பத்தியமும் வைப்பார். இந்தப் பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்பு தான் மருந்து என்றால், அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு என்பதே. :thumbsup
    --------------------------------------------------------------------------
    Few quotes to ponder over :


    When pride comes, then comes disgrace, but with humility comes wisdom”

    Bible quotes


    “Humility is attentive patience.”

    Simone Weil quotes


    “Humility is the solid foundation of all virtues.”

    Kong Fu Zi quotes
    -------------------------
    "BharathyManian"
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Dear bharathymanian,

    Very nice. Nice to read and good information is being learnt. Thank you for sharing.
     
  3. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    "Maha Periavaa AruL Vakku" {Thanks a lot to Kalki Magazine}

    அருள்வாக்கு
    நல்லதை விருத்தி செய்!

    [​IMG]
    லோகம் என்று இருந்தால் அதில் எல்லாமே நல்லதாக இல்லாமல் கெட்டதும் இருக்கத்தான் செய்யும். ஸ்ருஷ்டி தோன்றிய நாளாக இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ‘முடிவிலே, இந்த லோக வாழ்க்கையே - அதிலே நல்ல வாழ்க்கை என்று சொல்கிறதும் உள்படத்தான் - நிஜமில்லை; லோகாதீதமான, மாயாதீதமான ஒன்றுதான் நிஜம்; இதிலிருந்து அதற்குப் போய்ச் சேருவதுதான் நமது முடிவான லக்ஷ்யமாக இருக்க வேண்டும்’ என்று நமக்குக் காட்டுவதற்காகவே ஸ்வாமி இந்த லோகத்தில் கெட்டதுகளையும் வைத்திருக்கிறார் போலிருக்கிறது.
    நாம் வாழுகிற இந்த பூலோகத்துக்கு ‘மிச்ரலோகம்’ என்று பெயர். அப்படியென்றால் ‘கலப்பு உலகம்’. என்ன கலப்பு என்றால் நல்லதும் கெட்டதும் கலந்து இருப்பதுதான். தேவலோகத்தில் எல்லாம் நல்லதே. அஸுர லோகத்தில் எல்லாம் கெட்டதே. மநுஷ்யர்களான நம்முடைய இந்த லோகத்திலோ இரண்டும் கலந்து மிச்ரமாயிருக்கும். அப்படித்தான் ஈச்வர நியதி. ஆனாலும் இதில் நல்லதை விடக் கெட்டது ரொம்ப ஜாஸ்தியாகி விட்டால் நாம் அந்தக் கெடுதலிலேயே அழுந்தி அழுக்காகி இங்கேயிருந்து போய்ச் சேர வேண்டிய லக்ஷ்யமான நிஜத்தை அடைய முடியாமலே போய்விடும். அப்படி ஆகுமாறு விடப்படாது.
    ஏனென்றால் அப்போது ‘கலப்பு லோகம்’ என்ற இதன் பேரே பொய்யாகி இது அஸுர லோகமாக அல்லவா ஆகிவிடும்? அதோடுகூட, கலியின் கொடுமைக்கும் அதே சாஸ்திரங்களில் பரிஹாரம் - நிவாரணம் சொல்லியிருப்பதால், இங்கே இந்த யுகத்திலும் நல்லதற்குப் பாதியளவு இடமில்லாவிட்டாலும், நாற்பது சதவிகிதமாவது இடமுண்டு என்று காட்டுவதாகவே ஏற்படுகிறது. தற்காலத்தில் ஆகியிருப்பது போல் அந்த அளவுக்கும் கீழே நல்லது போய்விடுவதற்கு நாம் இடம் தரப்படாது. லோகம் பூராவும் இப்போது காணப்படுகிற மாதிரி கெட்டதிலேயே மேலும் மேலும் போய் விழுந்து மீட்சியே இல்லாமலாகி விடக்கூடாது. அதற்கு நல்லதை விருத்தி செய்து, கெட்டதைக் குறைக்க வேண்டும்.
    ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
    ---------------------------------------------------------------------------

    மேலும், மேலும் நல்லவைகளையே செய்திட முற்படவேண்டும். அருமையான அருளுரை.

    "பாரதிமணியன்"
     
    Last edited by a moderator: May 12, 2013
    vaidehi71 likes this.
  4. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :welcome to IL family Bharathy Manian Sister,

    Thanks for sharing the important messages from Maha Periavaa, the thoughts which are the need of the hour.

    Please also if you can translate the contents in a nutshell other sisters can also enjoy its nectar, Thanks for understanding.

    May Baba guide you and bless you always.

    Sairam
     
  5. dave08

    dave08 New IL'ite

    Messages:
    346
    Likes Received:
    135
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Hi bharathymanian

    As Saisakthi has mentioned, it would be appreciated if you could translate to English. I have read a bit about Maha Periyavar and he was a great soul.
     

Share This Page