1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Lines forever - tamil

Discussion in 'Books & Authors in Regional Languages' started by kuccoo, Mar 7, 2010.

  1. kuccoo

    kuccoo New IL'ite

    Messages:
    33
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Male
    Hai there!

    We come across variety of stories & Novels. Among those certains words or lines are stored with us always. U may feel often those words or lines. I'd like to expose some few. Give ur lines also.. Let me start first..

    குதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கவனித்தாள். "தம்பி! வெகு தூரம் வந்தாய் போலிருக்கிறது. களைத்திருக்கிறாய்! குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!" என்றாள்.
    உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒரு பக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒருகணம் சிந்தித்தான். அப்படிச் சென்றால் அங்கே நின்ற இளமங்கைமார்கள் பலரும் அவனைச் சூழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன? அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா? அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவுமே தோன்றினார்கள்!
     
    Loading...

  2. kuccoo

    kuccoo New IL'ite

    Messages:
    33
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Male
    "சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனை பெயர்" என்பதாகத் தற்கால அறிஞர் ஒன்று கூறியிருக்கிறார். கடவுள் தாம் செய்யும் காரியத்தைத் தாம் செய்தது என்று காட்டிக் கொள்ள விரும்பாத போது "சந்தர்ப்பம்" என்னும் புனை பெயரைச் சூட்டிக் கொள்ளுகிறாராம்! உலக சரித்திரத்தில் மிகப் பிரசித்திபெற்ற வீரர்கள், அரும் பெரும் காரியங்களைச் சாதித்த மகான்கள், - இவர்களுடைய வரலாறுகளைப் பார்க்கும்போது, சந்தர்ப்பம் இவர்களுக்கு மிக்க உதவி செய்திருக்கிறது என்பதை அறியலாம்.
     
  3. kuccoo

    kuccoo New IL'ite

    Messages:
    33
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Male
    //1 2 3 4 5 6 7 8 9 0
     
  4. kuccoo

    kuccoo New IL'ite

    Messages:
    33
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Male

    "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
    நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
    காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
    வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே

    வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
    மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
    வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
    காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"
     

Share This Page