Lalitha Sahasranamam - Tamil Meaning

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jun 14, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஸதா(3)துஷ்டாயை நம:
    ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி

    ஓம் தருணாதி(3)த்ய-பாடலாயை நம:
    ஓம் காலைப்பருவக் கதிர் போல் சிவந்தவளே போற்றி

    ஓம் த(3)க்ஷிணாத(3)க்ஷிணராத்(4)யாயை நம:
    ஓம் அறிவுளார் அறிவிலார் பூசனைகள் ஏற்பவளே போற்றி

    ஓம் த(3)ரஸ்மேர-முகாம்பு(3)ஜாயை நம:
    ஓம் மலர் நிலைத் தாமரை போல் புன்சிரிப்புடையாளே போற்றி

    ஓம் கெளலினீ-கேவலாயை நம:
    ஓம் சிற்றறிவைப் பேரறிவாய் மாற்றி இணைப்பவளே போற்றி

    ஓம் அனர்க்(4)ய-மைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
    ஓம் மதிப்பீடில்லாத் தனிப் பதம் தருபவளே போற்றி

    ஓம் ஸ்தோத்ரப்ரியாயை நம:
    ஓம் துதிகளில் மகிழ்பவளே போற்றி

    ஓம் ஸ்துதி-மத்யை நம:
    ஓம் துதிசெயின் அறிவும் செல்வமும் தருபவளே போற்றி

    ஓம் ச்(h)ருதி-ஸம்ஸ்துத-வைப(4)வாயை நம:
    ஓம் மறைகள் போற்றிடும் பெருமைகள் படைத்தவளே போற்றி

    ஓம் மனஸ்வின்யை நம:
    ஓம் தன்வசம் ஆன நன் மனத்தினாளே போற்றி

    ஓம் மானவத்யை நம:
    ஓம் பெருந்தன்மை மிக்கவளே போற்றி

    ஓம் மஹேச்(h)யை நம:
    ஓம் பெருமாகேச்வரியே போற்றி

    ஓம் மங்க(3)ளாக்ருத்யை நம:
    ஓம் மங்கல வடிவினளே போற்றி

    ஓம் விச்வமாத்ரே நம:
    ஓம் உலகீன்ற நற்றாயே போற்றி

    ஓம் ஜகத்(3)தா(4)த்ர்யை நம:
    ஓம் உலகினைத் தாங்கிடுவாளே போற்றி

    ஓம் விசா(h)லாக்ஷ்யை நம:
    ஓம் தடம் பெரு கண்ணினாளே போற்றி

    ஓம் விராகி(3)ண்யை நம:
    ஓம் பற்றிலாளே போற்றி

    ஓம் ப்ரக(3)ல்பா(4)யை நம:
    ஓம் துணிவும் திறமையும் கொண்டவளே போற்றி

    ஓம் பரமோதா(3)ராயை நம:
    ஓம் வள்ளண்மை மிக்கவளே போற்றி

    ஓம் பராமோதா(3)யை நம:
    ஓம் பெருங்களிப்புடையவளே போற்றி -940

    அன்புடன்
    சித்ரா.
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் மனோன்மய்யை நம:
    ஓம் மனோமய கோசத்தாளே போற்றி

    ஓம் வ்யோமகேச்(h)யை நம:
    ஓம் விண்ணாகிய பெருங்குழலாளே போற்றி

    ஓம் விமானஸ்தாயை நம:
    ஓம் அளவிறந்த நிலையினாளே போற்றி

    ஓம் வஜ்ரிண்யை நம:
    ஓம் இந்திர சத்தியாளே போற்றி

    ஓம் வாமகேச்(h)வர்யை நம:
    ஓம் வாமவழிப் பெருந்தலைவியே போற்றி

    ஓம் பஞ்சயஜ்ஞப்ரியாயை நம:
    ஓம் ஐவேள்வியில் பிரியமுள்ளவளே போற்றி

    ஓம் பஞ்சப்ரேதமஞ்சாதி(4)-சா(h)யின்யை நம:
    ஓம் ஐந்தொழிலுக்குரியாரை அரசு கட்டிலாக்கி வீற்றிருப்பாய் போற்றி

    ஓம் பஞ்சம்யை நம:
    ஓம் எண்வகைத்தாயருள் வாராகி யன்னையே போற்றி

    ஓம் பஞ்ச பூ(4)தேச்(h)யை நம:
    ஓம் ஐவகைப் பரம்பொருளின் அரும்பெரும் தலைவியே போற்றி

    ஓம் பஞ்சஸங்க்யோபசாரிண்யை நம:
    ஓம் ஐவகை பூசனைகள் அன்புடன் ஏற்பாளே போற்றி

    ஓம் சா(h)ச்(h)வத்யை நம:
    ஓம் நிலைத்தென்றும் உள்ளவளே போற்றி

    ஓம் சா(h)ச்(h)வதைச்(h)வர்யாயை நம:
    ஓம் நிலையான வளமுடையாளே போற்றி

    ஓம் ச(h)ர்மதா(3)யை நம:
    ஓம் இன்பமே அளிப்பவளே போற்றி

    ஓம் ச(h)ம்பு(4)மோஹின்யை நம:
    ஓம் சிவன் மனதைக் கவர்பவளே போற்றி

    ஓம் த(4)ராயை நம:
    ஓம் நிலமாகத் தாங்குபவளே போற்றி

    ஓம் த(4)ரஸுதாயை நம:
    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் த(4)ன்யாயை நம:
    ஓம் சகல சம்பத்தும் நிறைந்தவளே போற்றி

    ஓம் த(4)ர்மிண்யை நம:
    ஓம் அறம்நிறை மனத்தினாய் போற்றி

    ஓம் த(4)ர்மவர்ததி(4)ன்யை நம:
    ஓம் அறம்வளர் செல்வியே போற்றி

    ஓம் லோகாதீதாயை நம:
    ஓம் உலகுகளுக்கு அப்பாலாளே போற்றி -960

    அன்புடன்
    சித்ரா
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் கு(3)ணாதீதாயை நம:
    ஓம் முக்குணத்தைக் கடந்தவளே போற்றி

    ஓம் ஸர்வாதீதாயை நம:
    ஓம் அனைத்தையும் கடந்தவளே போற்றி

    ஓம் ச(h)மாத்மிகாயை நம:
    ஓம் சாந்தத் திருவுருவாளே போற்றி

    ஓம் ப(3)ந்தூ(4)ககுஸுமப்ரக்யாயை நம:
    ஓம் பொன்வேங்கைப் பூவனையாளே போற்றி

    ஓம் பா(3)லாயை நம:
    ஓம் பாலா திரிபுர்சுந்தரியே போற்றி

    ஓம் லீலா-விநோதி(3)ன்யை நம:
    ஓம் பிரபஞ்ச விளையாட்டில் மகிழ்பவளே போற்றி

    ஓம் ஸுமங்க(3)ல்யை நம:
    ஓம் சுமங்கலியே போற்றி

    ஓம் ஸுககர்யை நம
    ஓம் சுகம்பல தருபவளே போற்றி
    :
    ஓம் ஸுவேஷாட்(4)யாயை நம:
    ஓம் நன்மங்கலத் தோற்றத்தாளே போற்றி

    ஓம் ஸுவாஸின்யை நம:
    ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி

    ஓம் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதாயை நம:
    ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி

    ஓம் அசோ(h)பனாயை நம:
    ஓம் நிறைவழகுத் திருவுருவாளே போற்றி

    ஓம் சு(h)த்(3)த(4)மானஸாயை நம:
    ஓம் மிகத்தூய மனம் படைத்தாளே போற்றி

    ஓம் பி(3)ந்து(3)-தர்ப்பண-ஸந்துஷ்டாயை நம:
    ஓம் பிந்துவில் தருப்பணம் செய்வதால் மகிழ்பவளே போற்றி

    ஓம் பூர்வஜாயை நம:
    ஓம் இயற்கையின் முதல் உருவமே போற்றி

    ஓம் த்ரிபுராம்பி(3)காயை நம:
    ஓம் திரிபுராம்பிகையாளே போற்றி

    ஓம் த(3)ச(h)முத்(3)ரா-ஸமாராத்யாயை நம:
    ஓம் பத்துவகை முத்திரையால் வழிபடற்கு உரியவளே போற்றி

    ஓம் த்ரிபுராஸ்ரீவச(h)ங்கர்யை நம:
    ஓம் திரிபுரா ஸ்ரீதேவியினைத் தன்வசத்தில் வைத்திருப்பாளே போற்றி

    ஓம் ஜ்ஞான-முத்(3)ராயை நம:
    ஓம் சின்முத்திரை வடிவினளே போற்றி

    ஓம் ஜ்ஞான-க(3)ம்யாயை நம:
    ஓம் சிறப்பறிவால் கிடைத்திடுவாளே போற்றி -980

    அன்புடன்
    சித்ரா.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிண்யை நம:
    ஓம் அறிவாயும் அறிபடு பொருளாயும் உல்ளவளே

    ஓம் யோனிமுத்(3)ராயை நம:
    ஓம் யோனி முத்திரை வடிவாய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் த்ரிகண்டே(3)ச்(h)யை நம:
    ஓம் திரிகண்டா முத்திரையின் தலைவியாய்த் திகழ்வாளே போற்றி

    ஓம் த்ரிகு(3)ணாயை நம:
    ஓம் முக்குணங்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பா(4)யை நம:
    ஓம் முக்குணங்களின் தாயே போற்றி

    ஓம் த்ரிகோணகா(3)யை நம:
    ஓம் முக்குணம் அடைந்தவளே போற்றி

    ஓம் அனகா(4)யை நம:
    ஓம் பாபமணுகாதவளே போற்றி

    ஓம் அத்(3)பு(4)த-சாரித்ராயை நம:
    ஓம் வியப்பினை அளிக்கும் வரலாறு படைத்தவளே போற்றி

    ஓம் வாஞ்சிதார்த்தப்ரதா(3)யின்யை நம:
    ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி

    ஓம் அப்(4)யாஸாதிசய-ஜ்ஞாதாயை நம:
    ஓம் பயிற்சியின் பெருமையால் அறிந்துணரத் தக்கவளே போற்றி

    ஓம் ஷட(3)த்(4)வாதீத-ரூபிண்யை நம:
    ஓம் ஆறுதனிப் பெருவழிகள் கடந்திட்ட வடிவுடையாய் போற்றி

    ஓம் அவ்யாஜ- கருணா மூர்த்தயே நம:
    ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

    ஓம் அஜ்ஞானத்(4)வாந்த-தீ(3)பிகாயை நம:
    ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி

    ஓம் ஆபா(3)ல-கோ(3)ப-விதி(3)தாயை நம:
    ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி

    ஓம் ஸர்வானுல்லங்க்(4)ய-சா(h)ஸனாயை நம:
    ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி

    ஓம் ஸ்ரீசக்ரராஜ-நிலயாயை நம:
    ஓம் சீர்மிகு சக்கரம் இருப்பிடம் கொண்டாளே போற்றி

    ஓம் ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தர்யை நம:
    ஓம் சீர் மிகுற திரிபுரனின் அழகிய மனைவியே போற்றி

    ஓம் ஸ்ரீ சிவாயை நம:
    ஓம் சிறப்புறு சிலையாளே போற்றி

    ஓம் சிவச(h)க்த்யைக்ய-ரூபிண்யை நம:
    ஓம் சிவமும் சக்தியும் இரண்டறக் கலந்த ஒரு தனித் திருவுருவாளே போற்றி

    ஓம் ஓம் லலிதாம்பி(3)காயை நம:
    ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி-1000

    எல்லாம் வல்ல அன்னையே போற்றி

    அன்புடன்
    சித்ரா.
     
    johnthanjavur and GUNAMATHI like this.
  5. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear Ilites,

    I am going to post the PDF in 13 parts 7 pages per file due the filesize.

    Here comes the part 1 of 13

    Thanks,
    kb2000
     

    Attached Files:

    johnthanjavur and krishnaajay like this.
  6. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Here comes the part 2 of 13

    Thanks,
    kb2000
     

    Attached Files:

    johnthanjavur and krishnaajay like this.
  7. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Here comes the part 3 of 13

    Thanks,
    kb2000
     

    Attached Files:

    johnthanjavur and krishnaajay like this.
  8. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Here comes the part 4 of 13

    Thanks,
    kb2000
     

    Attached Files:

    johnthanjavur and krishnaajay like this.
  9. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Here comes the part 5 of 13

    Thanks,
    kb2000
     

    Attached Files:

    johnthanjavur and krishnaajay like this.
  10. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Here comes the part 6 of 13

    Thanks,
    kb2000
     

    Attached Files:

    1 person likes this.
Thread Status:
Not open for further replies.

Share This Page