தமிழ்த்திரையுலகில் கிருஷ்ணன் - பஞ்சு சகாப்தம் ஒரு தனித்துவம் வாய்ந்தது. அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் சமுதாய நோக்கத்தோடு வார்த்தெடுக்கப்பட்ட கதைகள், பொருள் பொதிந்த வசனங்கள், காதிற்கினிய கானங்கள் இருப்பது நிச்சயம். கிருஷ்ணனின் பூர்வீகம் தஞ்சாவூர். தந்தை ராகவேந்திரன். தாய் காமாட்சி பாய். மராட்டிய சமூகத்தை சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் காலத்தில் பேசும் படங்கள் கிடையாது. ஊமைப்படங்கள் பார்ப்பதே பாக்கியம் என்று மக்கள் நினைத்த காலம். கிருஷ்ணனுக்கு சினிமா பார்ப்பதில் அலாதிபிரியம். ஊமைப்படங் களையே பார்த்து ரசித்தார். வெளியூர் சென்று வேலை பார்க்க விரும்பாத கிருஷ்ணன், வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ராகவேந்திரரும் மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. கோவையில் சினிமா ருசி அறிந்த ஒருவர் மருதாசலம் செட்டியார். கோவையில் பிரிமியர் சினிடோன் என்ற சினிமா ஸ்டூடியோவை ஆரம்பித்தார். கிருஷ்ணனின் திறமையை அறிந்த செட்டியார் தனது புதிய ஸ்டூடியோவில் லேபாரட்டரி பொறுப்பாளராகப் பணிபுரியுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டார். புதிய இடம் என்பதால் சற்று தயக்கத்துடன் இந்த வேலையை கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். இங்கு தான் ஒட்டிப்பிறக்காத இரட்டையரை சந்திக்க போகிறோம் என்பதை கிருஷ்ணன் அப்போது தெரிந்து கொள்ளவில்லை. அப்படி சந்தித்தவர் தான் பஞ்சு! மருதாசலம் செட்டியாரின் லேபாரட்டரி பொறுப்பேற்றிருந்த கிருஷ்ணன் டங்கனுடன் ஒல்லியான ஒரு இளைஞனைப் பார்த்தார். அவன் தான் டங்கனுடைய 'கன்டின்யூடி அஸிஸ்டென்ட்' 'பஞ்சு' என்று சுருக்கி அழைக்கப்படும் பஞ்சாபகேசன் என்பதை கிருஷ்ணன் தெரிந்து கொண்டார். டங்கனின் இயக்கத்தில் ‘சதிலீலாவதி’யைத் தவிர, ‘சீமந்தினி’, ‘அம்பிகாபதி’, ‘இருசகோதரர்கள்’ போன்ற படங்களுக்கெல்லாம் பஞ்சு உதவியாளராக இருந்து பின் டங்கனிடமிருந்து விலகினார். கிருஷ்ணனோ, தன் நண்பர் பஞ்சுவை இயக்குனராக முயற்சிக்கும் படி அறிவுறுத்தினார். அம்முயற்சியில் அவருக்கு துணைநின்றார். பிறகு பஞ்சு மருதாசலம் செட்டியாரின் அழைப்பின் பேரில் டி.கே.எஸ். பிரதர்ஸ் - மூர்த்தி பிலிம்ஸ் இணைந்து கந்தன் ஸ்டூடியோவில் தயாரித்த 'குமாஸ்தாவின் பெண்' என்ற படத்திற்கு பி.என்.ராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பின் அந்த ஸ்டூடியோவில் எடிட்டராக சேர்ந்துவிட்டார். கிருஷ்ணன் ஏற்கனவே அங்கு ஸ்டூடியோ லேபாரட்டரி பொறுப்பிலிருந்தார். இப்படி நண்பர்கள் இருவரும் ஒரே ஸ்டூடியோவில் பணியாற்றும் சந்தர்ப்பம் நிகழ்ந்தது. இது நடந்தது 1942-ம் ஆண்டு. ஆராய்ச்சி மணி கந்தன் கம்பெனியின் அடுத்த படம் மனுநீதி சோழனைப் பற்றியது. படத்தின் பெயர் 'ஆராய்ச்சி மணி'. இயக்குனர்: ராஜா சாண்டோ. படத்தின் உச்சகட்ட காட்சியில், ஆராய்ச்சி மணியை மாடு அடிக்கும் காட்சியை படமாக்க வேண்டும். எவ்வளவு பயிற்சி அளித்தும் மாடு மணியை முட்டி அடிக்கவேயில்லை! ராஜா சாண்டோ பலமுறை முயன்றும் தோல்வியுற்று தளர்ந்து போனார். அருகிலிருந்த கிருஷ்ணன் - பஞ்சு, 'கந்தன் பணம் கரிகரியாய்ப் போகிறது' என்று கிண்டலாக சொல்ல இது ராஜாவின் காதுக்கு எட்டியது. உடனே ராஜா சாண்டோ நண்பர்களை அழைத்து, 'டேய் பசங்களா! கிண்டலா அடிக்கிறீர்கள்! இந்த காட்சியை நீங்கள் படமெடுங்கள் பார்க்கலாம்' என்றார். கிருஷ்ணனும் - பஞ்சுவும் ராஜா சாண்டோவின் கட்டளையை பணிவோடு ஏற்றுக்கொண்டு வேலையில் இறங்கினர். ஒரு மிருக வைத்தியரிடம் பசுவையும் அதன் கன்றையும் காட்டினர். படப்பிடிப்பின் போது கன்றுக்குட்டிக்கு மயக்கமருந்து கொடுத்து அது மயங்கி விழுந்து கிடந்தது. தாய்ப்பசு கன்றின் அருகில் சென்று 'ம்மா' என்று சோகத்தோடு குரல் கொடுத்தது. மயங்கிய கன்றை நக்கிப் பார்த்து இங்கும் அங்குமாக ஓடித்தவித்தது. பசுவை நிற்கவைத்து ஒரு குளோஸப் எடுக்கப்பட்டது. மணியை பசுவின் கொம்பினால் தள்ளி முட்டச்செய்து அதையே எதிர்புறமாக (க்ஷீமீஸ்மீக்ஷீsமீ sலீஷீt) படமாக்கப்பட்டது. எடுத்த படத்தை போட்டுப் பார்த்தபோது பசு உக்கிரத்தோடு மணி அடிக்கும் காட்சி அற்புதமாக பதிவாகியிருந்தது. மயங்கிய கன்றைக் கண்ட பசு கண்ணீர் விட்ட காட்சியும் பதிவாகி அந்த கட்டத்தின் சிறப்பை உயர்த்தியது. கிருஷ்ணன் - பஞ்சுவை ராஜா சாண்டோ பாராட்டினார். விநியோகஸ்தர்களும் பாராட்டினர். மகிழ்ச்சியில் மிதந்த ராஜா சாண்டோ, 'டேய் பசங்களா! நீங்கள் ரெண்டு பேருந்தாண்டா அடுத்த படத்திற்கு இயக்குனர்கள்!' என்று கூக்குரலிட கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு நல்ல காலம் பிறந்தது! பூம்பாவை ராஜா சாண்டோ சொன்ன வாக்கைக் அடுத்து லியோ பிலிம்ஸாரின் 'பூம்பாவை' படத்திற்கு கிருஷ்ணன் - பஞ்சுவை இயக்குனர்களாக சிபாரிசு செய்தார். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்பட வரிசையில் மாமியார் மெச்சிய மருமகள் (1959), தெய்வப்பிறவி (1962), அன்னை (1962), வாழ்க்கை வாழ்வதற்கே (1964), சர்வர் சுந்தரம், பூம்புகார் (1964), குழந்தையும் தெய்வமும் (1965), பெற்றால் தான் பிள்ளையா (1966), உயர்ந்த மனிதன் (1968), எங்கள் தங்கம் (1970), ரங்கராட்டினம் (1971), இதய வீணை (1972), பிள்ளையோ பிள்ளை (1972), பூக்காரி (1973), பூம்புகார் (1974), பத்துமாத பந்தம் (1974), கலியுகக் கண்ணன் (1974), அணையாவிளக்கு (1975), பேர் சொல்ல ஒரு பிள்ளை (1978), அன்னபூரணி (1978), நாடகமே உலகம் (1979), நீல மலர்கள் (1979), வெள்ளிரதம் (1979), மங்கல நாயகி (1980) முதலான படங்களாகும். எனினும் 1963-ல் வெளிவந்த ‘குங்குமம்’ மற்றும் 1970-ல் வந்த ‘அனாதை ஆனந்தன்’ ஆகிய இரு திரைப்படங்கள் சரியாகப் போக வில்லை. இவர்கள் தமிழுடன் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழிப்படங்களையும் இயக்கினர். இவர்கள் இயக்கிய படங்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாகும். கிருஷ்ணன், பஞ்சு, இருவரும் இன்று இல்லை என்றாலும் அவர்கள் இயக்கிய படங்கள் மக்கள் இதயங்களில் வாழ்கின்றன. இயக்குனர் கிருஷ்ணன் அவர்களின் புகழ் போற்றுவோம்! FORWARS AS RECD JAYASALA 42