1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kambarin Viswamiththirar

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 10, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    'எண்ணிலா அருந்தவத்தோன் 'என விச்வாமித்திரரைக் குறிப்பிடுகிறார் கம்பர்.

    இரண்டே சொற்கள் தான். ஆனால் தமிழ் அறிஞர்கள் எட்டு வெவ்வேறு பொருள்களைக் காட்டுகிறார்கள்.

    1.எண் இலா அருந்தவத்தோன் ---எண்ணிக்கை இல்லாத அரிய

    தவத்தை உடையவன்.


    2.எண் நிலா அருந்தவத்தோன் ---எண்ணிக்கை நில்லாத அருந்தவத்தோன்


    3.எண்ணில் ஆவரும் தவத்தோன்--எண்ணில்லாத உலக நன்மைக்காக வரும் தவத்தோன்


    4.எண்ணில் ஆ வரும் தவத்தோன்-- எண்ணில் -நினைத்துப் பார்க்கையில் 'ஆ' என வியக்கும் வண்ணம் அருந்தவத்தைச் செய்பவர்.


    5.எண்ணில் ஆ வரும் தவத்தோன்--நினைத்தால் ஆ எனும் காமதேனுவையே வரவழைக்கும் தவத்தோன்.


    6.எள் நிலா அருந்தவத்தோன்--தான் செய்யும் வேள்வி அரக்கர் செய்யும் செயல்களால் எள்ளளவும் தடை பெறாது தொடர வைக்கும் அருந்தவத்தோன்


    7.எண் நிலாவு அருந்தவத்தோன் --எட்டு திசைகளிலும் விளங்கும் புகழுடைய அருந் தவத்தோன்


    8.எண்ணிலா அருந்தவத்தோன்--இராமனை தசரதனின் உயிர் என்று எண்ணாமல் கேட்டுப் பெற வந்த ,நம்மால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாத அருந்தவத்தோன்.


    இப்படி அறிஞர்கள் பல விதப் பொருள் கொள்ளுவார்கள் என்று கம்பரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

    Jayasala 42
     

Share This Page