1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kamakshi

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 1, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Tamil poets are very good in composing poems with 2 or 3 meanings.
    கஞ்சி குடியாளே கம்பஞ்சோறுஉண்ணாளே வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே-நெஞ்சுதனில் அஞ்சுதலையரவாருக்கு ஆறுதலை யாவாளே
    கஞ்சமுகக் காமாட்சியே!
    (காமாட்சி அம்மன் கஞ்சி குடிக்கமாட்டாள்.
    கம்பஞ்சோறு சாப்பிடமாட்டாள்.
    காய் கறி உண்ணமாட்டாள்.
    ஐந்து தலைப் பாம்புக்கு ஆறாவது தலையாக மாறி வற்றிய முகத்துடன் காணப்படுகிறாள்)
    உட்பொருள்
    ------------
    கஞ்சி குடியாள்=காஞ்சியில் குடியிருப்பவள்
    கம்பஞ்சோறுஉண்ணாள்=
    ஏகாம்பரநாதன் எனும் கம்பனின் நிவேதனத்தை உண்ணாமல் ,தனிக் கோவில் கொண்டு தனக்கென்று வரும் நிவேதனத்தை மட்டும் உண்பவள்
    வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாள்=சினத்தை விரும்பாதவள் ,மன்னிக்கும்
    குணம் கொண்டவள்.
    அஞ்சுதலைஅரவாருக்கு=ஐந்து முகம் கொண்ட சிவனை ஆராதிப்பவர்களுக்கு
    ஆறுதலை ஆவாள் =அமைதி தருபவள்.
    அஞ்சுதலைஅறிவார்க்கு
    என்று வைத்துக் கொண்டால் 'பயத்தை உடையவர்க்கு அச்சம் நீக்குபவள்' என்று பொருள் படும்.
    தமிழில் இது மாதிரி சிலேடைக் கவிதைகள் ஏராளம் .
    jayasala42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,749
    Likes Received:
    12,566
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ரசித்து படித்து மகிழ்ந்தேன். நன்றி.
     

Share This Page