Jokes regarding Vijay's Films

Discussion in 'Jokes' started by Soldier, May 25, 2010.

  1. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi friends.

    I received these jokes as forward and wanted to share with you all. Go ahead, read and enjoy.



    சுறாவை தெரியாத்தனமா பார்த்த யாரோ ஒருவர்
    சுரம் வந்த வேகத்தில் வகை வகையா எழுதி
    அசுரத்தனமா நம்மை அசத்திட்டாருங்கன்னா !

    அன்பன்


    டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
    விஜய்: இல்லை 200நாள் ஓடணும்
    டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
    விஜய்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


    சுறா படம் வெளியாவதை முன்னிட்டு தமிழக அரசு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
    "சுறா படத்தை யாரும் ஒரு முறைக்கு மேல் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால் நேரும் விபரீதங்களுக்கு அரசு பொறுப்பல்ல..!! முதல் முறை பார்ப்பவர்களுக்கு மட்டுமே கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொறுப்பேற்கும்."


    எமன் : நான் உன் உயிரை எடுக்கப் போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
    விஜய்: நான் நடிச்ச சுறா படத்தை நீங்க பாக்கனும்.
    எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல வந்தா, நீ என்ன கொல்லப் பாக்குறியே....


    அரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் நேற்று அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக சுறா பட ரிலீசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை


    டாக்டர்1: என்ன ஆச்சு! கேஸ் பெயிலியரா?

    டாக்டர்2: ஆமா, தற்கொலை முயற்சி. விஷமா இருந்தாக்கூட காப்பாத்தியிருக்கலாம். பையன் விவரமா, ‘விஜய்’படத்தை முழுக்க பார்த்திருக்கான்!



    நிருபர் : சார் உங்களோட சுறா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?


    விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்தைப் பார்க்க பயப்படுறாங்க.

    நிருபர்: Sura படம் முடிஞ்சதும் என்ன பண்ணுவீங்க?
    விஜய்: ரொம்ப சிம்பிள்! பக்கத்திலே இருக்கிற சர்ச்சுக்குப் போய் பாவ மன்னிப்பு கேட்பேன்!!

    ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு சுறா படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
    உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

    விஜய் – நான் நம்ப பையனை சுறா படத்துக்கு கூட்டிட்டுப் போகப் போரேன்.
    சங்கீதா - அப்பனாயா நீ, பெத்த புள்ளையையே கொல்ல பார்க்கறியே
    விஜய் –????????

    ரசிகர்- தலைவா !உன் படம் ஒன்னு விடாம நான் திருட்டு விசிடியில பார்த்திருக்கேன்
    விஜய் – அண்ணா ! தியேட்டருல்ல போயி படம் பார்த்தே இல்லையிங்களாண்ணா
    ரசிகர் – போ, தலைவா ! தனியா பார்க்க் பயமா இருக்குதில்ல

    விஜய் – ஒரு தடவ முடிவெடுத்துட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்
    ஒருவர் – உங்க பொண்டாட்டி..........
    விஜய் – நானே கேட்க மாட்டேன்னு சொல்லறேன்
    எம் பொண்டாட்டி எப்படியா கேப்பா (அழுகிறார்)


    அமெரிக்க உளவுதுறையின் மிகமிக ரகசியமான எச்சரிக்கை இது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அடுத்த மாசம் பல பேர் சாகப் போராங்கலாம்.அதைப் பத்தி தீவிரமாக விசானை செஞ்சதுள்ள சுறா படம் வெளிவரதுக்கு தயாரிப்பாளர் சம்மதம் தெரிவிச்சாச்சுன்னு தெரிஞ்சதாம்.எல்லாரும் படத்த பார்க்காம எச்சரிக்கையா இருங்க நமக்கு உயிர் தான் முக்கியம்.

    விஜயும், மகேஷ் பாபுவும் (தெலுங்கு நடிகர்) தேர்வு அறையில்....
    விஜய் – அண்ணா கொஞ்சம் பேப்ரை காமியேன், பார்த்து எழுதிக்கிறேன்
    மகேஷ் – டேய் நான் எழுதுரது தெலுங்கு பரிட்சை
    விஜய் – நீ காட்டு மட்டும் காட்டு அண்ணா, நான் ரீமேக் பண்ணி எழுதிக்கிறேன்
    மகேஷ் – அடப்பாவி !


    காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?

    கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.

    காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?

    கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்


    விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
    நாலுமாசம் தூங்க மாட்டே

    ரசிகர்: டேய் ! நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா
    நீ நடிச்சாத்தான் தாங்க முடியல



    பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...
    நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க
    விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க
    நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..


    அதோ போறாரே அவர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.
    அவ்வளவு தீவிர விஜய் ரசிக...?
    ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

    விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?
    அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தார்கள்னு சொல்லலாம்.


    கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?
    மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....
     
    Loading...

Share This Page