1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Jagannatha Prasadam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jun 24, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிரசித்தி பெற்ற திவ்ய ஸ்தலங்களில் 'ஸ்ரீஜெகன்னாத் புரி' குறிப்பிடத்தக்கதாகும். ஒரிசா மாநிலத்தின் புவனேஷ்வரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள 'பூரி' நகரத்தில் இந்த ஜெகன்னாதர் கோயில் அமைந்துள்ளது.

    ஜெகன்னாதர் என்றால் பிரபஞ்சம் முழுமைக்கும் இறைவன் என்று பொருள். 'ஜெகன்னாதர்' சாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார். 'ஜெகன்னாதர்' என்ற புகழ்பெயருடன், தனது சகோதரர் பலராமருடனும் மற்றும் சகோதரி சுபத்ராவுடனும் 'மரத்திலான' திருமேனியுடன் அருள்பாலிக்கிறார்.

    உலகம் முழுவதும் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் ஜெகன்னாதரை தரிசனம் செய்ய வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜெகன்னாதரின் 'மஹாபிரசாதம் பெற்று பெரிதும் ஆனந்தமடைகின்றனர்.

    இக்கோயிலை உலகறியச் செய்தது இரண்டு. ஒன்று ஜெகன்னாதரின் மஹா பிரசாதம். மற்றொன்று, 'ஜெகன்னாதர் ரதயாத்திரை'.

    ரதயாத்திரை போன்ற விழா காலங்களில் ஜெகன்னாத் புரி நகரமே, பக்தர்களின் கடல் போல் காட்சி அளிக்கும். அதில் விசேஷம் என்னவென்றால் இப்படி தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் பகவான், தனது விசேஷ கருணையை 'மஹா பிரசாதம்' மூலம் வழங்கி கொண்டே இருப்பது தான்.

    இக்கோயிலை நிர்மாணித்த மன்னர் இந்திரத்யும்னர், பகவான் ஜெகன்னாகரி அன்புடன் ஒரு வேண்டுகோள விடுத்தார். "பகவானே! தாங்கள் வீற்றிருக்கும் இந்த ஜெகன்னாதர் கோயில் நீண்ட நேரம் திறந்திருக் வேண்டும். எப்போதும் வகை வகையான நிவேதனங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் சாப்பிட்ட கரங்கள் உலர்வதற்கு முன்னே, நான் அடுத்த உணவுகளையும் கொண்டு வந்து விடுவேன். அதையும் ஏற்றுக் கொண்டு கருணை செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் தங்கள் தரிசனத்தையும், மஹா பிரசாரத்தையும் எப்போதும் பெற்று மகிழ வேண்டும் ''.

    மன்னரின் வேண்டுகோளை ஜெகன்னாதரும் ஏற்றார். அன்று முதல் இங்கு பகவானுக்கு நிவேதனங்கள் மிக விமரிசையாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு 'மஹாபிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 56 வகையான உணவு வகைகளை ஜெகன்னாதருக்கு நைவேத்யம் செய்கின்றனர். தினசரி லட்சபோலட்சம் பேர் மஹாபிரசாதங்களை உண்டு மகிழ்கின்றனர்.

    "உலகிலேயே மிகப் பெரிய சமையலறை"

    யார் எப்போது வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் ஜெகன்னாதர் கோயிலில் விநியோகம் செய்யப்பட்டு கொண்டே இருக்கும். இவ்வளவு பிரசாதங்களை எங்கு சமைக்கிறார்கள்? எப்படி சமைக்கிறார்கள்? என்பது தான் சிறப்பிற்குரியது.
    நீங்கள் நம்புகிறீர்களோ, இல்லையோ, ஜெகன்னாதர் கோயிலின் 'மடப்பள்ளியில் தான் இவ்வளவும் தயாராகிறது. உலகிலேயே மிகப்பெரிய சமையலறை இது தான் என்றால் அது மிகையில்லை. அப்படி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது இக்கோயிலின் உள்ளே உள்ள மன்னர் காலத்து 'மடப்பள்ளி'.
    ஒருபுறம் நூற்றுக்கணக்கானவர்கள் காய்கறிகள் வெட்ட, மறுபுறம் ஒரு குழுவினர் தானியங்களை பொடி பொடியாக்க மடப்பள்ளி சேவை ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட சேவையாளர்களுடன் மடமடவென நடக்கிறது.
    இவர்களுக்கு உதவ 400 உதவியாளர்களும் உள்ளனர். அதற்கேற்றாற் போல் 32 சமையலறைகளுடன் உள்ள இந்த மடப்பள்ளி, சுமார் 150 அடி நீளமும், 100 அடி அகலத்துடனும் 20 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தினசரி லட்சக்கணக்கான பேர் உணவருந்தும் வகையில் உணவு தயாரிக்கலாம். ஆக மொத்தம் ஒரு பெரிய உணவு தொழிற்சாலை போல செயல்படுகிறது. 'ஜெகன்னாதரின் மடப்பள்ளி',

    அணையா நெருப்பு

    இந்த சமையலறைகளில் மூன்று வகையான திறந்த அடுப்புகள் உள்ளன அவை அன்னகுலி, அஹியா சூலி மற்றும் பித்த சூலி. அரிசி வேக வைக்கும் திறந்த அடுப்பின் பெயர் 'அன்ன சூலி'. பருப்பு மற்றும் காய்கறிகள் 'அஹியா சூலி 'யில் சமைக்கப்படுகிறது. இவற்றில் மூட்டப்படும் நெருப்பு 'வைஷ்ணவ அக்னி' என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால், அது பகவான் ஜெகன்னாதரின் சமையலறையில் உள்ள நெருப்பு ஆகும். அது விஷ்ணுவிற்கு சேவை செய்கிறது. இந்த நெருப்பு என்றும் அணைக்கப்படுவதில்லை.

    மண்பானைகள் மட்டும்

    மேலும் இங்கு சிறப்பு என்னவென்றால், அனைத்து பதார்த்தங்களும் மண்பானைகளில் மட்டுமே சமைக்கப்படுகின்றன. எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல், பராம்பரிய முறைப்படி அனைத்து உணவும் தயாரிக்கப்படுகின்றன. கேஸ் கிடையாது, மிக்ஸி கிடையாது, கிரைண்டர் கிடையாது. அனைத்தும் பழங்கால முறைப்படி மிகப்பெரிய உரல்களை கொண்டும், உயரத்திலிருந்து கனமான. உலக்கைகளை பயன்படுத்தியும், விறகு அடுப்பு கொண்டும் செய்யப்படுகிறது.

    விறகு அடுப்புகளில், மண்பானைகளை பயன்படுத்தும் விதம் மிக அருமையாக உள்ளது. ஐந்து மண்பானைகள் ஒரே அடுப்பில் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலே உள்ள பானையில் உள்ள பதார்த்தம தான் முதலில் வெந்து விடுவது,

    மடப்பள்ளி கிணறுகள்

    சமையலுக்கான தண்ணி எடுக்க கோயில் வளாகத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. சுமார் 100 அடி ஆழம் உள்ள இந்த கிணற்றிலிருந்து தான் தினசரி பூஜைக்கும், சமையலுக்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது. எப்போதும் தெளிந்த நீர் காணப்படும் இந்த இரண்டு கிணறுகளும், கங்கை, யமுனை' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன,

    அது போக முக்கியமாக இந்த சேவையில் ஈடுபட்டுள்ள பலர் பகவான் ஜெகன்னாதருக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்னர், நல்ல படிப்பு மற்றும் பெரிய பதவியில் இருந்தவர்கள் கூட அனைத்தையும் விட்டு பகவான் சேவைக்காக இங்கு வந்துள்ளனர். இது ஜெகன்னாதர் அவதரித்த மண்ணின் பெருமையாகும்.

    ஒருவர் எப்படியாவது பெரிய பதவியை பெற்று விடலாம். அல்லது நம்பர் ஒன் செல்வந்ராகி விடலாம். ஆனால் பகவானின் பத்தராகி பக்தி சேவை செய்வது என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது என்பதை இங்கு சேவை செய்யும் சேவகர்களே சாட்சி,

    சாஸ்திரங்கள் கூறுவது போல், ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பிறவிகளுக்குப் பின், அதுவும் யாரேனும் ஒரு தூய பக்தரின் கருணை கிடைக்கால் தான் பக்தியும், பக்தி சேவையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மஹாலக்ஷ்மியின் சமையல்

    குறிப்பாக இந்து சமையலறையில் மஹாலக்ஷ்மியே வந்து சமைப்பதாக கருதப்படுகிறது, மற்ற அனைவரும் அவரது சேவையாளர்களாக கருதப்படுகின்றனர். 'மஹாலக்ஷ்மியால் நிர்வகிக்கப்படும் மடப்பள்ளி என்பதால் நிவேதனங்களும் மிக மிக சுவை மிக்கதாக பகவானுக்கு படைக்கப்படும், ஆனால் வருடத்தில் சில நாட்கள் மட்டும், அதாவது ரத யாத்திரைக்கு முன்பு ஜெகன்னாதருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு பிறகு ஜெகன்னாதருக்கு ஜூரம் வந்து விடும். எனவே அப்போது லக்ஷ்மி தேவி சமையலில் வழக்கம் போல் அக்கறை செலுத்த மாட்டார்.
    எனவே அந்த நாட்களில் மட்டும் நிவேதனங்கள் சற்று சுவை குறைந்ததாக காணப்படும்.

    பகவானுக்காக உணவு தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. தூய்மையான முறையிலும் ஆழ்ந்த பக்தியுடனும் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் சமைப்பவர்கள் மற்றும் சாப்பிடுபவர்கள் இருவருமே உயர்ந்த ஆன்மீக பலனைப் பெறுகின்றனர்.
    ஜெகன்னாதரின் மஹாபிரசாதம் மூலமாகமக்கள் கிடைப்பதற்கரிய 'கிருஷ்ண பக்தியை பெறுகின்றனர்.

    தூய்மைக்கு ஒரு பரிசோதனை

    சமையல் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் ஒரு 'நாய்' கோயிலில் தென்படும். அப்படி தென்பட்டால், சமைத்த உணவை எல்லாம் பூமியில் புதைத்து விட்டு, மறுபடியும் சமைப்பார்கள். இப்படி தோன்றும் நாய் 'குடம சந்தி' என்று அழைக்கப்படுகிறது. அதாவது உணவு தூய்மைக்குப் பொறுப்பான தேவதை என்று இதற்கு பொருள்.

    மஹா பிரசாதம்

    இப்படி ஜெகன்னாதரின் சேவகர்களால் பக்தியுடன் சமைக்கப்படும் உணவு, குறிப்பிட்ட நேரத்தில் ஜெகன்னாதருக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. அப்போது அந்த பதார்த்தங்கள் எல்லாம் பெரிய பெரிய மண்பானைகளில் ஜெகன்னாதரின் சன்னதிக்குள்ளே கொண்டு செல்லப்படும். அப்படி செல்லும் போது அந்த உணவுகளில் இருந்து எந்த வாசனையும் வெளியே வராது. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நைவேத்யம் முடிந்து திரும்பும் போது மிக அருமையான வாசனை வரும்.பகவான் ஜெகன்னாதர் தனது கருணையை வழங்கி அதில் ஆன்மீக சுவையை அதிகப்படுத்துவதால் அவை “மஹா பிரசாதமாக பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
    பார்வதி தேவி பெற்ற வரம்
    மேலும் இந்த மஹாபிரசாதம் முதலில் பார்வதி தேவியான 'விமலாதேவிக்கு படைக்கப்படுகிறது. பிறகு எல்லா தரப்பு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஏனென்றால் ஒரு முறை பார்வதி தேவிக்கு பகவானின் பிரசாதம் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் வருத்தமுற்ற தேவி, பகவானிடம், ''எனக்கும், எல்லா தரப்பு மக்களுக்கும் பகவானின் பிரசாதம் கிடைக்க வேண்டும்'' என்று வரம் வேண்டினார். பகவானும் அவ்வரத்தை வழங்கி, இந்த பூலோகத்தில் ஜெகன்னாதராக நான் அவதரிப்பேன் என்றும், அப்போது உனக்கும், எல்லா தரப்பு மக்களுக்கும் எனது மஹாபிரசாதம் தாராளமாக வழங்கப்படும் என்றும் கூறினார். அதனால் தான் ஜெகன்னாதர் கோயிலின் மஹாபிரசாதம் இவ்வளவு பிரசித்தி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    'காஜா' பிரசாதம்

    பிரசாதங்களை, சாதம், பருப்பு, காயம், இனிப்புகள் என்று விருந்து வீட்டில் அமர்ந்து உணவருந்துவது போல் மக்கள் இங்க ஜெகன்னாதரின் பலவகையான சுவை மிக்க மஹா பிரசாதங்களை உண்டு மகிழ்கின்றனர். அதுமட்டுமா? விருந்திற்கு வராத தங்கள் பிரியமானவர்களுக்கும், உறவினர்களுக்கும், நீண்ட நாள் தாங்கக் கூடிய மஹா பிரசாதங்களை வாங்கிச் செல்கின்றனர்.அதில் பெயர் போனது தான் 'காஜா' பிரசாதம். காஜா என்றால் ஜெகன்னாதர் சுவைத்த இனிப்பு வகை பிரசாதங்களில் ஒன்றாகும். இது ''கோதுமை, சர்க்கரை, பசுநெய் '' கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். இது தான் ஜெகன்னாதர் கோயிலின் விசேஷமான மஹாபிரசாதமாகும்.
    இவை பல மாதங்கள் தாங்கக் கூடியது. தினசரி லட்சக்கணக்கான காஜா பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்கென பிரத்யேகமான பிரசாத ஸ்டால்களும் உள்ளன.ஜெகன்னாதர் ரத யாத்திரைக்கு முந்தைய 14 நாட்கள் மட்டும் ஜெகன்னாதரின் தரிசனமும், பிரசாதமும் கிடைக்காது என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயமாகும். ஏனென்றால் இச்சமயத்தில் ஜெகன்னாதர் ஜுரத்துடன் இருப்பதால், இந்த நாட்களில் ஜெகன்னாதருக்கு தினமும் கஷாயம் மட்டும் தான் நைவேத்தியம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் ஜெகன்னாதரின் ரத யாத்திரை அன்று பல நூற்றுக்கணக்கான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிகரமான ஒன்றாகும்

    'பிரசாதம்' உண்போம்

    ஜெகன்னாதர் மஹாபிரசாதம் போல், நாமும் தினசரி கிருஷ்ண பிரசாதம் உண்ணலாம். இது மிகவும் எளிதானது. இதற்கு நமக்கு தேவை 'கிருஷ்ணர் மீதான அன்பு' ஒன்று தான்.
    ஸ்ரீலபிரபுபாதா கூறுகிறார், "பகவானின் பக்தர்கள், பகவானுக்கு படைக்காத எந்த ஒரு உணவையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்”என்று.
    பக்தர்கள் பகவானை மிகவும் நேசிக்கின்றான். எனவே கிருஷ்ண பக்தராக இருக்கும் ஒருவர்,கிருஷ்ணருக்கு உணவு நிவேதனம் செய்யாமல், தான் மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.
    எப்படி ஒரு தாயோ, தந்தையோ தாங்கள் பிரியம் செலுத்தும் குழந்தைக்கு முதலில் தாங்கள் உண்ணுவதை விரும்புவதில்லை. சில நேரங்களில் தங்களுக்கு கூட கிடைக்காமல் போக நேரிட்டாலும், குழந்தைக்கு கிடைத்தால் அதிலேயே மிகவும் சந்தோஷப்படுவார்கள். இது தங்கள் குழந்தைகளிடம் அவர்கள் செலுத்தும் பிரியத்தை காட்டுகிறது.

    அதே போல் ஒரு பக்தர், பகவானுக்கு தினசரி நிவேதனம் செய்து பிரசாதமாக உண்பதை தனது பக்திக் கடமையாகக் கொள்கிறார். பிரசாதம் செய்வது மிகவும் எளிதானது. நாம் சமைக்கும் உணவை சுவை பார்க்காமல், கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக வைத்து ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரித்து பக்தியுடன் பிரார்த்திக்க வேண்டும். பிறகு பகவான் கருணையால் அது பிரசாதமாகிறது.
    பிரசாதம் என்றால் 'பகவானின் கருணை' என்று பொருள்.
    பகவத்கீதை, "பகவானுக்கு படைக்கப்பட்ட உணவுகளை உண்பவர், எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள்” என்று கூறுகிறது.
    எனவே "ஜெகன்னாதரின் மஹாபிரசாதம் '' மூலமாக நாம் பிரசாதத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தினசரி பகவானுக்கு நிவேதனம் செய்து கிருஷ்ண பிரசாதமாக உண்போம் என்ற உறுதி கொள்ள வேண்டும்.

    ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து !

    ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

    Jayasala 42
     
    Ragavisang, joylokhi and Thyagarajan like this.
    Loading...

  2. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,727
    Likes Received:
    2,525
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Very nice information. Although known to some extent, nice to get the detailed story of the temple prasadam
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    @jayasala42
    அருமையான பகிர்வுக்கு நன்றி.
    இந்த கட்டுரைப்படி இந்த கொரான லாக்அவுட் காலத்திலும் இந்த மஹாபிரசாதம் உண்டா? பக்தர்கள் திரளாக இல்லாமல் தலைமை நீதிபதி ஆணைப்படி உற்சவம் சோபையற்று நிகழ்ந்ததா என சந்தேகமுற்று Hindu வில் படித்தேன்.
    More info from internet edition the hindu today.
    Quote(.) Lord Jagannath was ensconced in the largest of the three chariots -- the 45-foot-high ‘Nandighosh’, Balabhadra in 44-foot-high ‘Taladhwaja’ and Subhadra in 43-foot- high ’Darpadalan’

    Gajapati Maharaja of Puri Dibyasingha Deb performed the ‘Chhera Pahanra’ ritual. He offered prayers to the deities and then swept the platforms of the chariots with a golden broom and sprinkled flowers and fragrant water.

    The chariots were then pulled by devotees amid gaiety and devotion on ‘Bada Danda’ -- the grand avenue leading to Shri Jagannath Temple - up to the Lion’s Gate in front of the Jagannath Temple, where they would be stationed till July 25.

    The deities, who had embarked on the nine-day sojourn to the Sri Gundicha Temple during the Rath Yatra on July 14, would finally re-enter the 12th century shrine and again be placed on the ‘Ratna Simhasana’, the bejewelled throne, following a ceremony called ‘Neeladribije’. (.) unquote

    But am more awed by the images appeared in the hindu - huge crowd in lacs reported thronging around chariots in wide street disregarding court covenants disregarding social distancing , minimal gathering etc in COVID times & related news about record high deaths, astounding low recovery rate 54. 5% and new cases in last twenty four hours.

    Thanks and Regards.

    God(s) & Their entourage would come to rescue our world*.

    * I am sad of the belief fourteendays before Rathyathra, Lord supposed to “have” - not suffer- FEVER & instead of Prasad the huge kitchen factory would prepare and offer only potion கஷாயம் to Lord as neivedyam which is not distributed among devotees!
     
    Last edited: Jun 24, 2020
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்கள் டிவி இல் பார்க்கவில்லையா அந்த ரத யாதி ரையை?.... எள் போட்டால் விழ இடம் இல்லாமல் இருக்கும் மக்கள் கூட்டம்... ஆனால் இந்த முறை ஜெகந்நாதரின் தேர் வரும் வழி முழுவதும் சனடைசர் அடித்து ரதத்தை இழுத்தார்கள்.... என்றாலும் காண கண்கொள்ளாக் காட்சி....:)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    //ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து !

    ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !//

    மிக மிக அருமையான பதிவு.... ஏற்கனவே நான் நிறைய முறை படித்திருக்கிறேன் என்றாலும் படிக்க படிக்க இன்பம் தருவது இந்த சரிதம்.:worship2::worship2::worship2:
     
    Thyagarajan likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    The celeberation of juggernaut of chariots in Puri began. This festival aka jagganath yathra. Starting today (20th June,’23) this will go on for next nine days. A short account is already available about the temple and festival prasad etc in thisthread.
    Additional info is as below:

    On June 20, the king &Lord of Jagannath Puri dressed up in gold during the Yatra. Mahaprabhu Jagannath is believed to be the Lord of Kali Yuga. It is believed since centuries that Jagannath Mahaprabhu lives in Puri with his sister Subhadra and brother Balarama. There are such secrets associated with this place which no one has been able to unravel till date.

    Every 12 years the idol of Mahaprabhu is changed, at that time the whole city of Puri is blacked out i.e. the lights of the entire city are extinguished. After the lights are switched off, the CRPF forces surround the temple premises from all sides. At that time no one permitted to enter the temple.

    Because it is dark inside the temple. The chief or senior mist priest is blindfolded. The priest has gloves on his hands. They take out the "Brahma substance" from the old idol and put it into the new-idol. Till date, no one knows what this Brahma substance is. No one has seen it till date. No infra red camera inside. No photos or video of this transfer taking place in pitch dark. It is said since thousands of years this transfer of miracle substance from one idol to another has been taking place.
    This “Brahma substance” is related to Lord Shri Krishna. This whole process happens once in every 12 years, at that time the security around temple is tightened. But till date, no priest has been able to tell that what is there in the idol of Mahaprabhu Jagannath?

    Some priests say that “when we took him in our hands, he was jumping like a rabbit. There was a bandage on our eyes, there were gloves on the hands, so we could only feel. But that is the heart of Lord Krishna”.

    Features of Jagannath Temple. The sound of ocean waves is not heard inside the Lord Jagannath Temple as soon as you take the first step inside the temple, while the surprising thing is that as soon as you take a step outside the temple, the sound of the ocean is heard. You must have seen birds sitting and flying on the top of most of the temples, but no bird passes over the Jagannath temple.

    The flag always waves in the opposite direction of the forward looking lord. The shadow of the main spire
    (gopuram - tower) of Lord Jagannath Temple is not cast on ground at any time during the day. The flag on the 45-storey spire of Lord Jagannath Temple is changed daily, it is believed that if the flag is not changed even for a day, the temple will be closed for 18 years. Reason not known. ( there are18 chapters in Bhagavat Gita)

    Similarly, there is also a Sudarshan Chakra on the top of the Lord Jagannath Temple, which looks as if it is looking at you wherever you are.

    In the kitchen of Lord Jagannath temple, 7 earthen pots are kept on top of each other to cook Prasad, which is cooked on wood -fire only, whence the dish of the topmost pot is cooked first.

    The prasad made every day in the Lord Jagannath temple never falls short for the devotees, but the surprising thing is that as soon as the doors of the temple are closed, the prasad also exhausts.
    JAGGANTH KI JAI.
     
    Last edited: Jun 20, 2023
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Addendum to #6:
     

    Attached Files:

  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    More of Jagannath Rath Yatra.

    1. The chariots of Lord Jagannath, Balabhadra and Subhadra are made of coconut wood, as it is lighter than other woods.
    2. The color of Lord Jagannath's chariot is red and yellow and it is also slightly bigger in size than other chariots.
    3. Lord Jagannath's chariot has names like- Garudhwaj, Nandighosh and Kapidhwaj etc. The name of the charioteer of this chariot is Daruk.
    4. The names of the horses of Lord Jagannath's chariot are Balahak, Shankha, Shweta and Haridasva. Their color is white. The guard of the chariot is the king of birds, Garuda.
    5. There is also the symbol of Hanumanji and Narasimha and the Sudarshan pillar on the chariot of Lord Jagannath. This is the symbol of the protection of the chariot.
    6. The flag of the chariot is called Trailokyavahini. The rope with which the chariot is pulled is called Shankhchud.
    7. Lord Jagannath's chariot has 16 wheels. The height is 13 and a half meters. The chariot is covered with about 1100 meters of cloth.
    8. The name of Balramji's chariot is Taladhwaj. There is a symbol of Mahadev.
    9. The name of Subhadra's chariot is Devadalan. There is a symbol of Goddess Durga on his chariot. The protector of the chariot is Jaydurga and the charioteer is Arjuna.
    10. The color of Lord Jagannath's chariot horses is white, Subhadra's chariot horses are coffee and Balabhadra's chariot horses are blue.
    11. The peak of Lord Jagannath's chariot is red-green, the peak of Balarama's chariot is red-yellow and the peak of Subhadra's chariot is red
     

Share This Page