ச்ச... இந்த US-கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள போர் அடிக்குது. வந்த புதுசுல நல்லா தான் இருந்தது. அப்போல்லாம் கார்ல வரும்போது எல்லா இடத்தையும் நல்ல தான் சொல்லிட்டு வந்தான் இந்த அருண். ஆனா அதுக்கப்புறம் என்னை எங்கியாவது வெளில கூட்டிட்டு போயிருப்பானா? அதிகமா போன இடம் இந்தியன் shop-ம், வால்மார்ட்-ம் தான். அதுவும் வீட்டுக்கு சாமான் வாங்க தான்! வெக்கத்தை விட்டு கேட்டாலும் ஏற இறங்க பாத்துட்டு "அப்புறம் போகலாம், எனக்கு வேலை இருக்கு" என்கிறான். அப்படி என்ன தான் வேலை இருக்குமோ... எப்ப பாரு கம்ப்யூட்டர்-ம் கையுமா தான் இருக்கான். இந்த பாழாப்போனவன் TV ஏதும் வாங்கல. அதனால கம்ப்யூட்டர்-ல தான் எதாவது படம் பாத்து பொழுது கழிக்க வேண்டி இருக்கு. அதுவும் இவன் இல்லாத போது தான்... இருக்கறச்சே தான் அவன் வேலை பாக்கறானே. friends எல்லாம் programs / சினிமா பத்தி கேக்கறச்சே அழுகையா வருது. "ஊருக்கு போன் போட்டுதா அம்மாவோட பேசணும்"னா மொறைக்கிறான். "எல்லாம் அடுத்த வாரம் பேசிக்கலாம்" ங்கறான். அப்படி இப்படி பேசி போன் பண்ணி பேசும்போது அம்மா இவன பத்தி விசாரிச்சா மட்டும், 'ஆன்டி, ஆன்டி' னு நடிக்கிறான். எப்போ பாரு எதாவது சமைச்சி போட்டுட்டே இருக்கேன் இவனுக்கு. அதுவும் யாராவது வீட்டுக்கு வந்துட்ட போச்சு. நான் kitchen - ஏ கதி. அடங்க மாட்டேன் என்கிறான். காணாதத கண்ட மாதிரி எல்லாத்தையும் - எனக்கு மிச்சம் கிச்சம் வெக்காம, மனசாட்சியே இல்லாம திங்கறான். இதுல, 'சமையல் இன்னும் improve பண்ணு' என்கிறான். நானே இப்போ தான் வேற வழி இல்லாம சமைக்கறேன். அம்மாவோட கையால ஆசையா சாப்ட்டு வளந்த உடம்பு இது. அப்டி இப்டி, அம்மா வாங்கி தந்த book பாத்து, அம்மாக்கு போன் பேசறச்சே கேட்டு, friends , இன்டர்நெட் னு ஆராய்ச்சி பண்ணினு கஷ்ட பட்டு சமைக்கறேன், இவனுக்கு என்ன ஈஸியா சொல்லிட்டான். நான் வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணானு தெரியல. தண்ணி வேற அடிக்கறான். வார கடைசி எல்லாம் ஒரே கூத்து தான். ஊர்ல இருந்தப்போ இப்டி இல்ல. தண்ணி போட்டு, கண்ட படி பேசிகிட்டு, ச்ச... அதுவும் ராத்திரி வந்தா அம்மா.. என்ன கொடுமை... bend நிமிருது எனக்கு. இவன் துணியையும் சேத்து நான் லாண்டரி போட்டு, iron பண்ணி வக்கிறேன். வீடு தொடச்சி, பாத்ரூம் clean பண்ணின்னு... ச்ச! என்ன வாழ்கை இது! மவனே, H1 விசா ல வந்து ஏதோ தெரிஞ்சவனாச்சேனு உன் கூட இருந்தா, இப்படியா பொம்பள பிள்ளை மாதிரி எல்லா வேலையும் வாங்குவ... நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணின பொண்டாட்டியா.. இல்ல சம்பளமில்லாத வேலைக்காரனா... இருடீ.. எனக்கு நேத்து வேலைக்கு interview call வந்து நான் select -m ஆகிட்டேன். அடுத்த வாரம் நான் என்னோட சொந்த கால்-ல நின்னுகறேன். அப்போ நீயுமாச்சு உன் friendship -ம் ஆச்சு, குட் பை சொல்லல.. என் பேரு வசந்த் இல்ல. BTW நைட் bend நிமித்துரானு எத சொன்னேன்னா... அவன் வாந்தி எடுத்து அத துடைச்சி, carpet -எ vaccum போட்டு.. அத தான் சொன்னேன். நீங்க என்னடானா... உங்க கற்பனைக்கு அளவே இல்ல!