1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Indians In U. S. And Other Countries

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jun 6, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Too long a mail. Read with patience and respond.


    This is the mail I recd from my friend.


    நண்பர்களே

    இந்தியாவில் இந்தியனாக இந்தியாவுக்கு உழைக்க மாட்டோம்.
    அமெரிக்காவில் வல்லுக்கு முன் நின்று அமெரிக்க பிரஜா உரிமை பெற்று
    அமெரிக்க அரசுக்கு சாஸ்வதகமாக் கடினமாக் சேவை செய்து கொண்டு
    டாலர் செல்வம் குவித்து அதுவும அலுத்துப்போன பின், அமெரிக்காவில் இந்தியனாக பாவனையில்
    கோவில் பஜனை என்று ஒரு போலி, ஆமாம், சரியாகச் சொல்லுகிறேன்
    போலியாக ஒருஇந்திய வாழ்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நம்மவர்கள்.
    ஆரம்ப காலங்களில் அவசர லீவில் வந்து திருமணம் முடிந்த மாலை மணம் மாறு முன்பே புதிய மனைவியுடன்
    அமெரிக்க சென்று கொண்டிருந்தார்கள்.
    பிரசவத்திற்கு மட்டிலும் தாய் நாட்டில், பெற்ற அன்னையின் துணை
    வேண்டும் என்று இங்கு இந்தியாவில் பிள்ளை பேறு நடந்தது.
    இன்று திருமணம் செய்ய அவர்களின் பூர்விக நாடான இந்தியா வர வேண்டிய
    நிர்பந்தங்கள் இல்லை.
    அங்கேய இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறை என்று
    தோன்றி விட்டதால் அங்கேயே தனது சொந்த மொழி பேசும்
    பெண்/மாப்பிள்ளை கிடைத்தால் உத்தமம்.
    இல்லை எதாவது ஒரு இந்திய வம்சா வழியினராக இருந்தாலும் பரவாய் இல்லை.
    இல்லை அமெரிக்க அல்லது வேறு
    நாட்டு பெண்/மாப்பிள்ளை தான் கிடைத்தாலும் என்ன குறைந்து போயிற்று?
    சுஜாதாவின் ஒரு மருமகள் ஜப்பானிய பெண். திருமதி சுஜாதா அந்த பேரனிடம் ஜப்பானிய மொழியிலேயே எளிதாக பேசுவதாக பெருமிதமாக எழுதி இருந்தார்கள்
    மாறும் காலத்திற்கேற்ற கோலம்.
    தவிறில்லை.
    பிறக்கும் குழந்தை நேரடி அமெரிக்க பிரஜையாக இருக்க வேண்டும் என்று
    இபோழுதெல்லாம் --- பிரசவ நேரத்தில் மலையை தேடி வந்த முகமது, இன்று
    - அதாங்க இன்று அட்லாண்டிக்கையும் பசிபிக்கையும் தாண்டி பயணம் செய்யும் வயதான பெற்றோர்களுக்கு வரவேற்ப்பு அதிகம்.
    இன்று அங்கெ ஒரு கல்பனா சாவ்லா ( அமெரிக்கரை மணந்த அமெரிக்க பிரஜை, மதம் மாறியதாலே செனட்டராகும் தகுதி பெற்ற பாபி ஜிண்டால், நிக்கி ஹேலி, MICROSOFT , PEPSI மற்றும் GOOGLE நிறுவனங்களின்
    தலைமை பொறுப்பில் இருக்கும் திறமைசாலிகள், அட SILICON VALLEY , NASA இங்கெல்லாம் இந்த இந்திய வம்சா வழியினர்களின் பெரும் கூட்டம் என்று மலைத்துப் போகிறோம்.
    இது போல இன்னும் பலர் அமரிக்க வானில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் இந்திய வம்ச வழியினர் என்று நாம்தான் பெருமிதம் கொண்டு பேசுகிறோம்.
    ஆனால் அவர்கள் அமெரிக்க தேசிய கொடிக்கு விசுவாசமான் அமெரிக்க பிரஜைகள் என்ற உண்மையை வசதியாக மறந்துவிடுகிறோம்.
    அது அமெரிக்க ஜனாதிபதி REPUBLICAN அல்லது DEMOCRAT கட்சி என்று
    கொள்கைகளில் எதிர் துர்வங்களாக இறந்தாலும் அவர்கள் அமெரிக்காவிற்கே சேவை செய்யும் தன்னலமுள்ள விசுவாசிகளாக இருப்பார்கள்.
    நமது பெருமைக்குரிய அமெரிக்க இந்திய பிரஜைகளின் விசுவாசம்
    அமெரிக்காவிற்கு மாத்திரமே சொந்தமானது.
    நாங்கள் இந்திய வம்சாவளியினர், இது எங்கள் கோவில்; கொள்கை; பஜனை சங்கீதம் என்பதெல்லாம் மேனா மினுக்கியான ஒரு தம்பட்டம் அடிக்கும் போலி விசுவாசம் தான்.
    இதுதான் நிதரிசன, சத்தியமான உண்மை.
    அவர்களின் அமெரிக்க விசுவாசம் இயற்கையான அமெரிக்க பிரஜைகளை விட மேலானது.
    அப்படி காட்டிக் கொள்ளவே அவர்களும் விரும்பிகிறவர்கள்.
    அனேகமாக தத்தெடுக்கும் பழக்கம் இந்து சமுதாயத்தில் உண்டு.
    அதாவது தத்துப் போகும் குழந்தை தான் பிறந்தகுடும்பத்தை உறவை ஒட்டு மொத்தமாக அறுத்து செல்வதே ஐதீகம்.
    தத்து எடுத்த பெற்றோர்களுக்கே அவர்கள் பாத்திதியதைப் பட்டவர்கள்.
    அமெரிக்காவிற்கு இவர்கள் முழு மனதுடன் சொந்த சிந்தனையுடன் தத்தாகப் போனவர்கள்
    எனவே இந்த இரண்டு குதிரைகளின் மீது சவாரி என்பதெல்லாம் கதைக்கு உதவாத கானல் நீர்..
    எத்தனை இந்திய வம்சா வழி பெருந்தனவந்தனர்கள் இந்திய கல்வி, தொழில் சமூதாய ஏற்றம், மற்றும் ஆபத்துக் காலத்தில் ஆபத்பாந்தனாக நின்றார்கள்.
    பட்டியல் போட்டு சொல்லுங்கள்.
    நான் எனதுசிந்தனையையும் கருத்தையும் மாற்றிக் கொள்ள தயார்.
    YES ! IT IS TRUE AND UNDENIABLE TRUTH
    THEY ARE MORE LOYAL TO THE QUEEN THAN THE QUEEN HERSELF



    My Reply mail

    ---------------------



    maaற்றம் என்ற ஒன்றுதான் மாற்றமில்லாதது.அதை மனப் பூர்வமாக அங்கீகரிப்பது தான் யதார்த்தம் ' என்று பக்கம் பக்கமாக ஆண்டாண்டுகாலமாக அறிவுறுத்தப் படுகிறது.அதைக் கஷ்டப் பட்டு அனுசரிக்க ஆரம்பித்தா our friend இப்படி எங்களையெல்லாம் குழப்புகிறார்.
    அங்கு நம் ஹிந்து கோவில்களில் நடை பெரும் விழாக்களும் பூஜைகளும்,விழாக்களும், கர்நாடக சங்கீத வகுப்புக்களும் சர்வ நிஜம்.'மேனா மினுக்கித்தனமாக யிருந்தால் தான் என்ன? குழந்தைகளுக்கு இயற்கையாகவோ, செயற்கையாகவோ எதோ நல்ல விஷயம் காதில் படுகிறதே என்று நாங்கள் சந்தோஷப் படுகிறோம்.
    அதே கல்யாணி ராக வர்ணம் தான்.என் பேரன் நன்றாகவே பாடுகிறான்.இங்கு local வித்வானிடம் கற்றுக் கொண்டதைவிட பல நுட்பமான விஷயங்கள் சங்கீதம் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரிந்துள்ளது என்பதே உண்மை.அதைக் கண்டு சந்தோஷப் படுவதை விட்டு,'ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே பேனும் ஈறும் புழுத்து நெளியுதாம்'என்று அலங்காரத்தை ரசிப்பதையே நிறுத்திக் கொண்டால் எப்படி?
    பெரிய மனோதத்துவ நிபுணர்களும், வேதாந்திகளும் கூட 'perception'என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்

    'citizenship'என்பது ஒரு அட்டைதான். உலகமே உள்ளங்கையில் அடங்கிப் போன யுகத்தில் ,universal brotherhood பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், நடைமுறைக்கு ஒத்து வரும் விஷயங்களை மனதார ஏற்றுக் கொள்வதே முறை என்று நாங்கள் ஒரு மாதிரி சஹஜ நிலைக்கு இப்போது தான் திரும்பி உள்ளோம்.
    பேன்,ஈறு எது இருந்தாலும் கணை மூடிக் கொண்டு அலங்காரத்தை ரசிக்க த தொடங்கியுள்ளோம்.
    கலை ஆர்வம் என்பது உண்மைதான். மேனா மினுக்கித்தனம் அல்ல என்பது கலை ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்துள்ளது.
    நீங்கள் கரடியாய்க் கத்தினாலும் யாரும் கேட்பதாக இல்லை.
    ஊரோடு ஒத்து வாழ்ந்தால் கோடி நன்மை .



    His Reply Mail

    ---------------------

    ஆமாம்! நான் மாற்றங்களுக்கு பெரிய எதிரி என்று நினைத்தால் அதுசரியில்லை.

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
    ஆனால்,என்ன மாற்றம், எதற்கு மாற்றம் என்பதில் எனக்கு கொஞ்சம் வேறுவிதமான் சிந்தனை.
    அவ்வளவுதான்.
    நாமெல்லாம், மேல்படிப்புக்காக இந்தியாவில் இருந்துதான் அதிக மாணவர்கள் செல்லுவதாக நினைத்து இருந்தால் அது தவறு.
    சீன மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா சென்றதுதான் உண்மை,
    அவர்களும் ஆரம்ப காலங்களில் படிப்பு ஆராய்ச்சி என்று தேர்ந்து அங்கு அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேறி விட்டார்கள்.
    அனால் சீன அரசு நமது இந்திய அரசைப்போல நமக்குதான் டாலர் வருமானம் வருகிறதே என்று மெத்தனமாக இருந்து விட வில்லை .
    இந்த ஒட்டுமொத்த BRAIN DRAIN என்ற நிலையை மாற்றி, இன்று மேல் கல்விபயின்ற சீன மாணவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் என்று அத்தனைபேரும் சீனா திரும்பி தனது நாட்டிற்கு சேவை செய்ததாலே தான் சீன இன்று நாம் அதிசயமாக அண்ணாந்து வியக்கும் அளவிற்கு குறுகிய கால் அளவில் ராஷச வளர்ச்சி பெற்று நிமிர்ந்து நிற்கிறது.
    அநேக இந்திய குடும்பங்களுக்கு பில் கேட்ஸ் தான் டாலர்
    படி அளக்கும் பெருமாள் என்பதால் அவருடைய படம் கூட பூஜை அறையை அலங்கரிக்கலாம்.
    ஆச்சரியம் இல்லை.
    அவரின் சிந்தனைகளையும் செயல் பாட்டையும் நாம் கடைபிடித்து இருந்தால் நாம் நாட்டு முன்னேற்றத்தில் பெரிய உயரங்களை எட்டிப் பிடித்திருக்க முடியும்.
    அவர் சொன்னது இரண்டேதான்
    ஒன்று அமெரிக்க பல்கலை கழகங்களில் மேல்கல்வி பயின்ற இந்தியர்களின் சேவை அமெரிக்காவிற்கு மாத்திரமே பயனளிக்க வேண்டும்.அவர்களை இந்தியாவிற்கு திரும்ப அனுப்பக் கூடாது.
    அடுத்து இந்தியாவில் நல்ல கல்வி தேர்ச்சி பெற்ற அராய்ச்சி, அறிவில் சிறந்தவர்களுக்கு தங்கு தடை இன்றி H1B விசாக்கள் வழங்க வேண்டும்.
    அதாகப் பட்டது அத்தனையும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கே அற்பணிக்க படவேண்டும் .
    அதிசயம் ஆனால் கேவலமான உண்மை!
    இதே எண்ணம் நமது அரசாங்கத்திற்கும் மற்ற ஆர்வலர்களுக்கும் இருந்தது..
    ஆமாம் நம்துசிறந்த TECHNOCRATS விஞ்ஞானிகள் அமெரிக்கா செல்லுட்டுமே என்று நாமும் இந்த H1B விசாவிற்கு கட்டணம் குறையவேண்டும்,
    H1B எண்ணிக்கை அதிகமாக நமக்கு அமெரிக்க அரசு வழங்கவேண்டும்.
    நாமெல்லாம் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அதிசயபிறவிகள்.
    இந்திய .கோமேதகங்களை வந்த விலைக்கு விற்றுவிடும் குறுகிய பார்வை கொண்டவர்கள்.
    அதனால்தான் இந்திய IIT, IIM மாணிக்கங்களை மனம் உவந்தே டாலர்கள் பரிவர்த்தனையில் விற்று விடுகிறோம்.
    நமது IIT கண்மணிகளும், பட்டம் வாங்கியவுடன் விமானம் ஏறி இந்த புதிய உலகம் சென்று GREEN CARD வரிசையில் நின்று அதை வென்று, இன்னுமா குடியுரிமை கிடைக்கவில்லை என காலில் வெந்நீரை ஊற்றியவன்போல பறந்து பரிதவிப்பவ்ர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
    இவர்களுக்கு இந்திய முன்னேற்ற வேரில் ஊற்றிவிட்டு போகிற குற்ற உணர்வு கூட இருப்பதில்லை.
    அட உங்களது குழந்தைகள், பேரன்/பேத்தி மார்கள் வசதியான, வாழ்வு, கல்வியில் தேர்ந்த கல்வி பெறட்டும்.
    எங்களுக்கும் அது மகிழ்ச்சியே.
    அனால் அதற்காக உங்களது இந்திய குடி உரிமையை எதற்கு தாரை வார்க்க வேண்டும்?
    இந்த K.J. ஜேசுதாஸ் குரல் ஒலிக்காத மொழியே இல்லை.
    சபரி மலை ஐய்யப்பனே இவரது ஹரிவராசனம் கேட்டுதான் இரவு பள்ளி கொள்ளுவார்.
    இவருக்கும் இபோழுதெல்லாம் அமெரிக்காவின் FLORIDA தான் வாசம்.
    அங்கு இவருக்கு தொழில் மற்றும் சொத்துக்கள் எல்லாம் உண்டு,
    இவர் இந்திய குடியுரிமை விட்டுக் கொடுத்து அமெரிக்க குடி உரிமை எல்லாம் பெற வில்லை. .அது தகாது எனபதுதான் இவரது தேசபக்தி.
    இந்த இந்திய நோபெல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் சர் சிவி ராமனுக்குபின் அமெரிக்க குடிஉரிமை பெறுவதும் நோபலுக்கு தகுதியைக் கொடுக்கும் என்பது போல மாற்றி விட்டார்கள்.
    அப்படி எல்லாம் இல்லையாம்.
    இதை நான் சொல்லவில்லை .
    OXFPRD மற்றும் HARVARD பல்கலைகழகங்களில் பேராசிரியர்,
    ஆரய்ச்சியில் அதே நோபெல் பரிசு அங்கீகாரம் என்று இன்னும் பெரிய எட்டாத உயரத்தில் இருக்கும் AMRTYA SEN தான் சொல்லுகிறார்.
    அவர் இன்றும் இந்திய பிரஜை தான்.
    இதில் இன்னும் சிலர் சொல்வது போல, தனது வம்சாவழி பிள்ளைகளும், பேரன்/ பேத்திகளும் அமெரிக்க கல்வி பயின்று அமெரிக்க குடியுரிமையும் பெற்று சேவை செய்வது எல்லாம், உலக ஷேமத்திற்கு என்று சொன்னால் அது கொஞ்சம் OVER .
    இந்த குழந்தைகள் நன்றாக இருக்கட்டும்,
    நல்ல முன்னேற்றம் எல்லாம் அடையட்டும்
    வேண்டாம் என்பதில்லை.
    அது அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்க்கும், அவர்கள் குடி புகுந்த அமெரிக்க நாட்டிற்கும் நல்லது,
    IT IS AS SIMPLE AS THAT
    இங்கு பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் என்று நீட்டி முழக்க வாய்ப்பே இல்லை.
    அது வேண்டாம் சாரே!
    அமரிக்காவில்,வேங்கடவன் கோவில், கர்நாடக இசை கதாகாலாட்சேபம், வேத பாராயணம், இந்திய கலச்சார விழா என்று என்ன இல்லை என்று சொல்லுகின்றீர்கள் உண்மை.
    அந்த கால மன்னர்கள் பெரிய கலைஞர்களை தங்களது அரசைவைக்கே வரவழைத்து பாட, ஆடச் சொல்லுவது வழக்கம்.
    அதைத்தானே இன்று செல்வத்தில் மிதக்கும் நீங்கள் இந்திய கலைஞர்களை டாலரால் அபிஷேகம் செய்து, சுதா ரகுநாதனையும் நித்ய ஸ்ரீ யையும் அங்கு உங்கள் அவையில் பாட செய்கின்றீர்கள்,
    திருப்பதி வேங்கடவனையே உங்கள் வசதிக்கு இடம் புலம் பெறச் செய்த சாதுரிய தனவான்கள் ஆயிற்றே நீங்கள்.
    எனக்கு ஒரு சந்தேகம்.
    கோவில்களில் மூலவரின் திருவடிக்கு கீழே மந்திரிக்கப் பட்ட செப்பு தகடுகள் இருக்கும் என்பார்கள்.
    எனக்கு என்னவோ இந்த PITTSBURGH அமரிக்க ஆலயத்தில் அந்த வேங்கடவனின் GREEN CARD மற்றும் AMERICAN PASSPORT இருக்கலாமோ என்ற சம்சயம் உண்டு.
    அந்த கல்வியில் மேலான . செல்வசெழிப்பு நிறைந்த சீமையில் அப்படி ஒன்றும்
    வசந்தம் இல்லை.



    My Reply mail

    ---------------------



    திறமையான புலமை எனில் வெளி நாட்டவர் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று பாரதியார் சொன்னாரே அது தவறா?
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாரே கணியன் பூங்குன்றனார் அது தவறா?

    Avvai also has said"thirai kadal odiyum dhiraviyam thedu"-Is it wrong?

    தேச பக்தி .... இந்தியாவில் உள்ள அனைவரும் நாட்டிற்காக உயிரை விடுபவர்களா?
    கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அதிசய பிறவிகள் என்றீர்கள்.ஆனால் இந்த அதிசய பிறவிகளை உருவாக்கியது யார் , எப்படி என்பதை யோசித்து பாருங்கள்
    இந்திய முன்னேற்ற வேரில் வெந்நீர் ஊற்றிய, ஊற்றிக்கொண்டு இருப்பவர்கள் யார் என்பதை மனசாட்சியுடன் யோசித்து பாருங்கள்
    இவர்கள் பாவம் படிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு , பிழைக்கவும் வேறு வழி இல்லாததால் வாய்ப்பும் வேலையும் தந்து திறமைகளை போற்றும் ஒரு நாட்டிற்கு சென்றார்கள்.அதில் என்ன ஐய்யா குற்றம்
    ஏதோ இந்தியாவில் இருப்பவர்கள் எல்லாம் நாட்டு முன்னேற்றம் மட்டுமே சிந்தனையாக இருந்து தங்கள் வாழ்க்கை வசதிகளை பார்த்து கொள்ளாதது
    போல ஒரு தோற்றம் உருவாக்குகிறீர்கள்
    pittsburg ஆலயத்தில் வேங்கடவனின் க்ரீன்கார்ட் மற்றும் அமெரிக்கன் பாஸ்போர்ட் இருக்கலாமோ என்று தங்களுக்கு சந்தேகம்.
    உலகம் யாவையும் தாம் உளவாக்கி ,நிலை பெறுதலும் , நீக்கலும் நீங்கலா
    அலகிலா விளையாட்டு உடையவனுக்கு எதற்கு ஐய்யா பாஸ்போர்ட்,விசா?
    உங்களுக்கு தெரியாததா?
    ஒருவேளை வேங்கடவனையும் அங்கே போனால் நிறைய காணிக்கை கிடைக்கும் என்று போய் விட்டார் என நினைக்கிறீர்களோ?குபேரனுக்கு பட்ட கடனை அடைக்க இதுவும் ஒரு வழி என்கிறீர்களா?
    இறுதி காலத்தில் மகன் அருகில் இருக்க மாட்டான் என மறைமுகமாக சொன்னீர்கள்.அதனால் சொர்க்கம் கிட்டாமல் போய் விடுமோ என்ற பயம் இல்லை.ஏன் என்றால் நிம்மதியாக வாழும் வாழ்க்கை தான் சொர்க்கம்..


    I have tens and tens of mails on this subject both in English and Tamil.The correspondence gets extended.The social changes cannot be stopped.In those days girls were given in marriage to boys of the same village.,when agriculture was the main livelihood.Slowly as job opportunities were available in towns and cities,migration started.Then people moved to other states and the actual migration to other countries started in 1970s in small measures,now every family has their children/grand children in overseas countries.

    In fact the very Aryan race is stated to have migrated from Persia.Originally Indians

    seem to have migrated from Africa, as per Research scholars.When vijaya Nagar Empire was in decline and many Telugu families migrated to Thanjavur District and we are proud of Musical trinity-Thyagaraja, Deekshitar and Syama Sastri .This pride is associated with Tamil nadu.Why? The migration made it possible.The entire human civilization is based on immigration, adjustment and the experiences learnt.

    Unless India makes all efforts to provide grants/scholarships to Research scholars and plenty of job opportunities to all the highly educated akin to those available in overseas countries, this immigration cannot be stopped even if they are branded disloyal to the motherland.



    jayasala 42
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மாமி, இருவருமே ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....ரசித்துப் படித்தேன், விஷயங்கள் தெரிந்து கொண்டேன் :)
     

Share This Page