1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Independent India And The Secret Uk-us Deal That Changed It All

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 8, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,576
    Likes Received:
    10,779
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Independent India and the Secret UK-US Deal That Changed It All
    How India’s dream of using her wartime loan to finance development went up in smoke.
    இந்தியவை அடிமை படுத்தி 200 வருடங்கள் சுரண்டியது மட்டுமல்லாது 1947 ல் சுதந்திரம் அடைந்த போதே எப்படி பிரிட்டன் தான் வாங்கிய கடன் மற்றும் பொருள்களுக்கு பணத்தை தராமல் வஞ்சித்து ஏமாற்றியது என்று இப்போது வெளிவந்துள்ளது. இரண்டாம் உலக போரில் மட்டும் இங்கிலாந்துக்கு பொருளாகவும், தளவாடங்களாகவும், போரிடும் ஆட்களுக்கு (சுமார் 20 லட்சம் பேர் ) சம்பளமாகவும். இப்படி பல வகையில் கடனாக இந்தியா கொடுத்தது.
    அதற்காக இந்தியர் மீது கடுமையான வரி விதிக்கப் பட்டது. உடனே நேரு மீது பாய்வதில் அர்த்தமில்லை ! ராஜாஜி, படேல் என்று பலரையும் வைத்து கொண்டே பேசி பேசி ஓப்பந்தமிட்டு பின் சுதந்திரம் அடைந்த 5 ம் நாள் கழுத்தை அறுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.
    ஒரு கோடி அல்ல இரண்டு கோடி அல்ல ! சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் 4800 பில்லியன் பவுண்டுகள் ) நமக்கு பிரிட்டன் தர வேண்டும். இந்திய ரூபாயில் கணக்கு போட்டால் தலை சுத்துகிறது. இப்படி பல ஒப்பந்தகளின் அடிப்படையில் தான் திரு. சசி தரூர் பிரிட்டன் நமக்கு 45 டிரில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்று வாதிட்டார். இன்றுவரை அவரது பேச்சை விமர்சித்து ஒரே ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி கூட பேசவில்லை ! காரணம் முக்கால் வாசி பேருக்கு இது தெரியாது. தெரிந்தவன் பேச மாட்டான்.
    இப்படி ஆகஸ்ட் 14 ல் 1947 ல் பணம் தருவதாக ஒப்பந்தம் போட்டு விட்டு அடுத்த 5 நாட்கள் கழித்து 20 ஆகஸ்டில் பணம் இல்லை என்று கை கழுவியது பிரிட்டன். இடையே 15 ஆகஸ்டில் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம். இனி அது இரு நாடுகளுக்கான பிரச்சனை. பேசி தீர்த்து கொள்வோம் என்று ஓடி விட்டது. கடைசிவரை தரவில்லை.
    இத்தகைய மோசடியை பற்றி அடுத்து 17 வருடம் ஆண்ட நேருவோ / இந்திராவோ காங்கிரசோ ஏன் பேசவில்லை ? பேசி உலகின் பார்வையில் வைக்க வில்லை? பின்னாளில் அதே பிரிட்டனிடம் நாம் சென்று கையேந்தி நிற்பது போல உருவகம் செய்யப் பட ஏன் அனுமதிக்கப் பட்டது ?? இத்தனைக்கும் சுதந்திரம் அடைந்த 6 மாதத்தில் நம் பங்காளி நம்முடன் சண்டையை தொடங்கி விட்டான். இன்று வரை அவனுக்குதான் இந்த பிரிட்டன் சொம்பு தூக்குகிறது.
    5 டிரில்லியன் பவுண்டுகள்.... இன்று 140 கோடி மக்கள் தொகையுடன் நாம் பெருவளர்ச்சி கண்டதாக சொல்லிக் கொள்ளும் போதே நமது ஒரு வருட ஜிடிபி எவ்வளவு தெரியுமா? 3.55 டிரில்லியன் தான். ஆக 1947ல் வெறும் 40 கோடி மக்கள் தொகை இருந்த போது அந்த பணம் கிடைத்திருந்தால் நமது தொடக்கம் எப்படி இருந்திருக்கும். ?? நினைத்தே பார்க்க முடியவில்லை !
    இந்த சதியில் அமெரிக்காவும் தன் சுயநலம் காரணமாக பங்கு கொண்டது. இப்படி தொடங்கும் போதே காலை உடைத்தும் இந்தியா இன்று எழுந்து நிற்பதுதான் அவர்களால் தாங்க முடியவில்லை !
    பி. கு:- கீழ் கண்ட லிங்கில் உள்ள கட்டுரையில் எப்படி இந்த சதி நடந்தேறியது? அதில் யார் யார் பங்கு என்று விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. பிடித்தால் படியுங்கள். முக்கியமான விஷயம். இந்த கட்டுரை வெளிவந்த தளம் பாஜக ஆதரவு தளம் அல்ல. காங்கிரஸ் ஆதரவு தளம்.

    Independent India and the Secret UK-US Deal That Changed It All
    jayasala42
     
    Loading...

Share This Page