MESSAGE AS RECD கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். அது போல சங்கீதம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அதி மேதாவி நான். ஏனுங்க சார்வாள்களே எல்லோருமே நண்பர் கஸ்தூரி ரங்கன் போல இசையை கரைத்து குடிதவராக இருக்க முடியுமா? . கவிஞர் கல்பனாசன் புண்ணியத்தில் நாம், அநேகமாக எல்லா அந்த நாள் இசையமைப்பாளர்களை பற்றி, அவர்களின் சாதனைகள் பற்றி அவர்கள் இசை அமைத்த காலத்தால் அழியாத பாடல்களை விவரம் தெரிந்து ரசித்து வருகிறோம். ஆனாலும் பாருங்கள் இவரை இசை ஞானி என்று போற்றுகிறார்கள். இவரை கண்டால் அப்படி கூழை கும்புடு போடுகிறார்கள். அட இவர் சங்கீத நோட்ஸ் எழுதுவார். சிம்பனி நடத்துவார். இவர் தலைக்கு பின்னால் ஒளி வீசும் ஒரு கண் கூசும் ஒளி வட்டம் உண்டே. சரி அதற்காக இத்தனை அகங்காரமா. அகம்பாவமா? நிறைக்கூடம் தழும்பாது என்பது தானே வழக்கு. நேற்றுதான் படித்தேன், இவரின் சுய பிரதாபம். இவர்தான் அதிக பாடால்களுக்கு இசை அமைத்த வராம்; அதிக பாடல்கள் எழுதியவராம்; அடேங்கப்பா, அதிகமாக பாடியாவராம். இவருடன் ஆரம்ப காலங்களில் பயணித்த நண்பர்களில் ஒருவர் இன்று உண்டா? ஏமானாத பாகவதரின் இன்றைய அவதாரம் இவர். இவர் திருவண்ணாமலை சென்றால் அங்கு இவர் ரமண மகேரிஷி தான் என்று பேசுவார். கொஞ்ச நாள் முன்பு ஒரு பிரமுகர் தான் மனித அவதாரமே இல்லை, தெய்வீக lபிறவி என்று சொன்னார்! நினைவிருக்கும் இந்த இசை மேதைக்கு கூட அப்படி ஒரு எண்ணம் தலை தூக்கி ஆட்டி படைப்பது தெளிவு. நேற்று கூட ஒரு நடிகை இப்படியாக பேசினார். இவர் ஒரு இசைக்கடவுளாக கர்ப்பக்கிரக்கத்தில் இவர் நிற்க வேண்டியவராம். கோதை ஆண்டாள்தான் கொஞ்சம் மனம் இறங்கி வந்திருக்கலாம். அன்று திருமாலிருஞ்சோலையில் 200 தடா அக்காரா வடிசல் பிரார்த்தனையை தானக்காக நிறைவேற்றிய ஸ்ரீ ராமானுஜர், ஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாராம். ஆண்டாள் மூலஸ்தனாதிலிருந்து ஒரு அடி முன் வைத்து அண்ணாரே வாரும் என்று வரவேற்றளாம். எனக்கு வருத்தமெல்லாம் ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ ராமானுஜரை வரவேற்றது போல எங்கள் கடவுள் இசை ஞானி, கான தேவன், இளைய ராஜாவை வரவேற்க வில்லை என்பதுதான். JAYASALA42