1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Idli Memories

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 7, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    There has been some talk on idli in the snippet section.Though a traditional item, still discussions are going on about preparation and consistency of idlies. Our Meena Sankaran has written a humorous snippet on making idlies for some festive occasion ina temple in US.
    Lhave heard of Ki. Vaa. Jaa Ja talking about idli ina different angle

    ஒரு முறை கி.வா.ஜ .காலையில் குளித்து விட்டுத் திருநீறணிந்து நண்பர் இல்லத்தை அடைந்தார்.நண்பர் கி.வா.ஜ வை உபசரித்து 'நீங்கள் சிவப் பழமாகக் காட்சி அளிக்கிறீர்கள்.கொஞ்சம் இட்டிலி சாப்பிடுங்கள் என்று சொல்லி வாழை இலையில் இட்டிலியும் சாம்பாரும் அளித்தார்.
    உடனே கி.வா.ஜ."எனக்கு இட்டிலியைப் பார்த்ததும் சிவபெருமான் நினைவு வருகிறது " என்றார்.
    நண்பருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
    கி.வா.ஜ.கீழ்க் கண்ட செய்யுளைச் சொன்னார்.
    ஆட்டியபின் ஆவியிலே
    பக்குவங்கண்டு எடுக்கும்
    ஈட்டால் பொடி வெண்மை
    ஏயுரலால்- போட்ட இலை
    மேல் உறவால் சாம்பாரில்
    மேவி இன்பம் தந்திடலால்
    கோலும் அரன் இட்டிலியா கொள் ."
    சாதாரணமாக இட்டிலி என்று பொருள் கொண்டால்
    மாவை ஆட்டியபின் ஆவியிலே பக்குவமாக வேக வைத்து ஒரு ஈடு எடுத்து வெண்மையான இட்டிலியில் மிளகாய்ப் பொடி தூவி ,வாழை இலையின் மணமும் சாம்பாரும் சேர்ந்து நல்ல சுவை தரும் இட்டிலி என்று பொருள்.
    சிவன் என்று பொருள் கொள்ளும்போது ,

    ஆட்டியபின் =உயிர்களை பிறக்கச் செய்து அலைத்தபிறகு
    ஆவியிலே பக்குவங்கண்டு =அவ்வுயிர்களின் பக்குவத்தை அறிந்து
    அங்கு எடுக்கும் ஈட்டால் =மேல் கதிக்கு எடுத்துச் செல்லும் பெருமையுடன்
    பொடி வெண்மை எயுறலால்=திரு நீற்றால் வெண்ணிறம் பெறுதலால்
    போட்ட இலை மேல் உறவால் =அன்பர்கள் அர்ச்சித்த வில்வ இலை தன மேல் இருப்பதால்
    சாம் பாரில் மேவி =மக்கள் சாவை அடைந்து மேல் உலகத்தை அடையும்போது
    இன்பம் தந்திடலால்=அன்பர்களுக்கு இன்பம் அருளும் பொருட்டு
    கோலும் அரன்= அலங்காரமாக எழுந்தருளும் சிவபெருமான்.
    திருநீறு அணிந்து சிவனை வில்வ இலை கொண்டு வணங்குபவர்கள் இறந்த பிறகும் சிவனின் அருள் பெறுவார்கள் என்பது பொருள்.
    கி.வா.ஜ. இலங்கை சென்றபோது நடந்த நிகழ்ச்சி
    இனி இட்டிலியைப் பார்க்கும் போதெல்லாம் சிவனின் நினைவு வருமா?அல்லது சிவன் கோவிலுக்குச் செல்லும்போது இட்டிலி நினைவு வருமா? தெரியவில்லை.

    jayasala 42
    .
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான பகிர்வு...........கண்டிப்பாக இட்லியை பார்க்கும்பொழுதும் சிவபெருமான் நினைவு வரும் :)
     

Share This Page