1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Home Remedies - Tamil

Discussion in 'Posts in Regional Languages' started by swamy24598, Mar 6, 2013.

  1. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    பொதுவாக வறட்டு இருமலுக்கு, நன்கு காய்ச்சிய பசும் பாலில் அரை டீஸ்பூன் விரலி மஞ்சள் பொடியை கலக்கி, மிதமான சூட்டில் இரண்டு நாட்கள் படுப்பதற்கு முன் குடித்து வந்தால் வறட்டு இருமல் தானாய் மறைந்து விடும் மேலும் இரண்டு நாட்களுக்கு காய்ச்சி வடிக்கட்டிய வென்னீரும் குடித்து வந்தால் இருமல் நிற்கும்.
     
    1 person likes this.
  2. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Yea true. I just replied in tamil :) as it was a thread in Tamil. thanks Anusha
     
  3. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 50

    கூந்தல் வறண்டு போய் வேதனை அளிக்கிறதா?

    50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாகும். பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசுவென முடி வளரும்.
     
  4. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 51

    தலை முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் - 4 கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை.
     
  5. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 52

    கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க... தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்.
     
  6. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 53

    கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்.
     
  7. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 54

    HOME MADE HENNA POWDER

    மருதாணி பவுடர் - கால் கிலோ
    கடுக்காய் - 25 கிராம்
    துளசி பவுடர் - 25 கிராம்
    நெல்லிக்காய் - 50 கிராம்
    டீத்தூள் டிகாஷன் - 50 கிராம்
    2 எலுமிச்சம்பழங்களின் சாறு
    யூகலிப்டஸ் ஆயில் - 4 துளி
    ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன்

    இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள். இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த "பேக்"கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.
     
    Last edited: Mar 17, 2013
  8. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 55

    நரை தோன்றாமல் இருக்க

    அடுக்கு செம்பருத்தி என்று ஒரு வகை மலர் உண்டு. அந்த மலரைத் தேவையான அளவிற்குக் கொண்டு வந்து நிழலில் வைத்து உலர்த்துதல் வேண்டும். நன்றாக உலர்ந்த பின்னர் காய்ந்த அம்மலர்களை எடுத்துப் போதிய அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்தல் வேண்டும். நன்றாக ஊறிய பின்னர் உபயோகிக்கவும். இந்தத் தைலத்தை நாள்தோறும் தலை மயிர்க்குத் தடவி வந்தால், தலையில் நரை தோன்றாமல் இருக்கும்.
     
  9. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 56

    உதடுகளை பாதுகாக்க - Tips

    முட்டை வெண்கரு, பாதாம் பவுடர், பாலேடு இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். பின்பு தேங்காய் எண்ணெய் தடவி விடவும்.

    உதடு வெடிப்பு கண்டவர்கள் ரோஜா இதழ்களைப் பால் விட்டு நன்றாக அரைத்து, பின் உதடுகளில் தடவி வரலாம்.

    வெயிலினால் உதடு கறுத்தவர்கள் கொத்துமல்லிச் சாற்றை இரவில் உதடுகளின் மீது பூசி வர, கறுத்த நிறம் மாறும். விளக்கெண்ணெயும் தடவலாம்.

    வெப்பத்தால் உதடுகள் வாட நேரிடலாம். இதனைத் தவிர்க்க உதடுகளின் மீது வாசலைன் பூசிக் கொள்ளலாம்.
     
  10. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 57

    முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயிறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் பாக் போல் வாரம் ஒரு முறை போட்டு சில நிமிடங்கள் ஊறி பிறகு கழுவ வேண்டும்.
     

Share This Page