High IQ Thief A wife had written a letter to a prisoner, "Dear husband. After you go to jail, our children and I are left with no income. I think i must cultivate the rocky land behind our house, plant a kitchen-garden and grow vegetables and raise our family. But I don't know how to get the land dug up." The prisoner got the letter read it and replied. He wrote "Find some other way to support the family. Don't put your hand on the rocky land at the back of our home . That's where I buried the gold bars I smuggled in. If you do something in that land, then the Mark's on the spot where exactly I hid the gold bar would be wiped out and I may not be able to get that hidden gold." A week later, thief received a letter from his wife. "Dear husband, A few men came with a bogline machine and dug up our backyard and removed all the rocks. Now the ground is level. But there was no gold bars?" The prisoner again wrote to his wife. "They're the police. I know they'll read my letter to you and dig up the land in search of gold bars. But darling, actually, I didn't bury any gold. Now you grow a vegetable garden!" A wise man achieves the purpose without stirring from his chair.
புத்திசாலி காரியம் சாதிப்பான் ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். "அன்புள்ள கணவருக்கு. நீங்கள் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் “செல்லலாம் என்று | எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை." கைதி பதில் எழுதினான். "குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன். நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்." ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். "அன்புள்ள கணவருக்கு. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே. ?" கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். "அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு! ! " புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.