Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. dave08

    dave08 New IL'ite

    Messages:
    346
    Likes Received:
    135
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Hi olivellam,

    Thank you for your reply. Indeed, this particular verse is beautiful as it exhibits the beauty of Tamil language.
     
  2. sruthi1981

    sruthi1981 Junior IL'ite

    Messages:
    84
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Thanks for the slokas
     
  3. BaminiV

    BaminiV Senior IL'ite

    Messages:
    81
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Gender:
    Female
    lovely collects & thanks for your posts
     
  4. umapillai

    umapillai Gold IL'ite

    Messages:
    151
    Likes Received:
    349
    Trophy Points:
    123
    Gender:
    Female
    செல்வம் உண்டாக சிவபெருமான் துதிப் பாடல்

    முதுகுன்றம், விருத்தாசலம்
    சிவன் வழிபாடு துதி.

    செல்வம் உண்டாக சிவபெருமான் துதிப் பாடல்.
    சிவன், ஈசுவரன், முக்கண்ணன் ஸ்துதி, பாட்டு.

    நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
    நன்றும் ஏத்துவீர்க்கு, என்றும் இன்பமே.

    அத்தன் முதுகுன்றைப் பத்தி ஆகி நீர்
    நித்தம் ஏத்துவீர்க்கு, உய்த்தல் செல்வமே.

    ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
    கைகள் கூப்புவீர், வையம் உமதாமே.

    விடையான் முதுகுன்றை, இடையாது ஏத்துவார்
    படை ஆயின் சூழ, உடையார் உலகமே.

    பத்துத் தலையோனைக், கத்த விரல் ஊன்றும்
    அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.

    இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
    உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.

    உமையம்மையால் பாலூட்டப் பெறும் பாக்கியம் பெற்ற தெய்வக்குழந்தை
    ஞானசம்பந்தர் வாக்கு தெய்வவாக்கு அல்லவா?

    திருமுதுகுன்றம் ஈசனை வழிபட்டால்

    செல்வம் பெருகி, உலகமே நம் வசப்படும் என்கிறார்.

    ஞானசம்பந்தரை குருவாக நினைத்து வணங்கி இப்பாசுரத்தை
    தினமும் ஓதுங்கள். செல்வம் பெருகும்.

    ஓம் சிவ சிவ ஓம்!!!
    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!!! ஓம் சிவ சிவ ஓம்!!!
     
    1 person likes this.
  5. umapillai

    umapillai Gold IL'ite

    Messages:
    151
    Likes Received:
    349
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ஸ்ரீ சித்ரகுப்தர் வழிபாடு துதி

    சித்திரகுப்தா! சித்திரகுப்தா!
    சேவித்தேன் நான் சித்திரகுப்தா,
    நானே செய்த பாவங்களனைத்தும்
    நல்லவனே நீ கடுகளவாக்கு.
    நானே செய்த புண்ணியமனைத்தும்
    நல்லவனே நீ மலையள வாக்கு.
    வானும், நிலவும் உள்ள வரைக்கும்
    வாழ்க்கைப் பாதையை வளமாய்
    மாற்று! உணவும், உடையும்,
    உறைவிடம் அனைத்தும் தினமும்
    வழங்க திருவருள்காட்டு.
     
  6. umapillai

    umapillai Gold IL'ite

    Messages:
    151
    Likes Received:
    349
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ஸ்ரீ ராமர் திருப்பள்ளி யெழுச்சி, ஆஞ்சநேயர் அருளியது.

    அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-

    தேவானு குலவா, தேவி கௌசலை பாலா
    தசரத ராமனே எழுந்திரும்.

    ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை
    அன்புடன் காத்தவனே எழுந்திரும்.

    கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே
    கல்யாண ராகவா எழுந்திரும்.

    வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை
    விவாஹம் செய்தோனே எழிந்திரும்.

    அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து
    அயோத்தி வந்த துரையே எழுந்திரும்.

    தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன்
    தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும்.

    சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு
    சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும்.

    பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
    பாதுகை அளித்தோனே எழுந்திரும்.

    மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை
    மூக்கை அறுத்தவரே எழுந்திரும்.

    ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு
    அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும்.

    சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த
    கோதண்ட ராமரே எழுந்திரும்.

    வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட
    காருண்ய ராகவா எழுந்திரும்.

    அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல்
    துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும்.

    வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன்
    வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும்.

    தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
    திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும்.

    திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை
    அயோத்தி வந்தவரே எழுந்திரும்.

    உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட
    மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும்.

    உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி
    அருளவேணும் எழுந்திரும்.

    சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே
    ஜனகரின் மருகரே எழுந்திரும்.

    ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண
    அருள வேண்டும் எழுந்திரும்.
    ------------------

    வனவாசம் முடிந்து அயோத்தி வந்த மறுநாள் காலை ஸ்ரீராமபிரான் விழித்தெழ
    ஹனுமார் பாடிய திருப்பள்ளி யெழுச்சி.

    இதைத் தினமும் அதிகாலையில் பாராயணம் செய்து வந்தால்

    ஸ்ரீ சீதாராமரின் அருளோடு ஆஞ்சநேயரின் அருளும் கிட்டும்.

    இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் இராமாயணம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

    ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்.
     
    1 person likes this.
  7. soubosophie

    soubosophie Junior IL'ite

    Messages:
    29
    Likes Received:
    9
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Thanks... i can read it , nice tamil fonts
     
  8. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male

    Pl. continue I will follow you
     
  9. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Dear Umapillai,

    Very nice and unknown slokas. Thank you very much for sharing.
     
  10. bossomfall

    bossomfall Bronze IL'ite

    Messages:
    102
    Likes Received:
    18
    Trophy Points:
    33

Share This Page