Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. birraj

    birraj Senior IL'ite

    Messages:
    313
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Suja,
    Please go through the following link. They have the Varalaksmi Rave ma intiki song in tamil.

    Varalakshmi Vratham - Slogans

    Also From Raaga.com/tamil/ you can play the song.

    Hope this helps.

    Regards
    Birraj

     
  2. sssaustin

    sssaustin Senior IL'ite

    Messages:
    218
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hello,

    Can anyone give me a link for lakshmi sahasranamavali lyrics in tamil?(the 1008 names of Goddess Lakshmi)

    I googled but was not able to get it.

    It would be of great help if someone could help me in this regard.
     
  3. birraj

    birraj Senior IL'ite

    Messages:
    313
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi SSSAustin,
    Lakshmi Sahasranamam is available in praptti.com.

    Regards
    Birraj

     
  4. sssaustin

    sssaustin Senior IL'ite

    Messages:
    218
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Many thanks for the info brindha...:2thumbsup:
     
  5. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:-

    இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.

    கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை.

    அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.
    இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.

    உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.
    எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

    பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன் பின்வருமாறு காண்போம்.


    ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்:-


    அங்கம் ஹரே:புனகபூஷன
    மாச்ரயந்தீ
    ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
    தமாலம்
    அங்கீக்ரு தாகில விபூதி
    ரபாங்கலீலா
    மாங்கல்ய தாஸ்து மம
    மங்கல தேவதாயா: 1



    மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.


    முக்தா முஹீர்விதததீ
    வதனே முராரே:
    ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
    கதாகதானி
    மாலா த்ருசோர் மது கரீவ
    மஹோத்பலே யா
    ஸாமே ச்ரியம் திசது
    ஸாகர ஸம்பவாயா: 2



    ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.


    ஆமீலிதாட்ச மதிகம்ய
    முதா முகுந்தம்
    ஆனந்த கந்த மநிமேஷ
    மனங்கதந்த்ரம்
    ஆகேகர ஸ்தித கனீனிக
    பக்ஷ்ம நேத்ரம்
    பூத்யை பவேன்மம
    பூஜங்க சயாங்கனாயா 3



    ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.


    பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
    கெளஸ்துபே யா
    ஹாராவலீவஹரி நீலமயி
    விபாதி
    காமப்ரதா பகவதோபி
    கடாட்ச மாலா
    கல்யாண மாவஹதுமே
    கமலாலயாயா: 4



    மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.


    காலாம்புதாலி லலிதோரஸி
    கைடபாரே:
    தாராதரே ஸ்புரதியா
    தடிதங்கனேவ
    மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
    மஹனீய மூர்த்தி
    பத்ராணி மேதிசது
    பார்கவநந்தனாயா: 5



    மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.


    ப்ராப்தம் பதம் ப்ரதமத:
    கலு யத்ப்ரபாவாத்
    மாங்கல்ய பாஜி மதுமாதினி
    மன் மதேன
    மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
    மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6



    ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.


    விச்வாம ரேந்த்ர பதவீ
    ப்ரமதான தட்சம்
    ஆனந்த ஹேதுரதிகம்
    முரவித்விஷோ அபி
    ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
    மீக்ஷணார்த்தம்
    இந்தீவரோதர ஸஹோதர
    மிந்திராயா 7



    அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.


    இஷ்டா விசிஷ்ட மதயோபி
    யயா தயார்த்ர
    திருஷ்ட்யாத்ரி விஷ்டப
    பதம் ஸ லபம் லபந்தே
    திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
    திப்திரிஷ்டாம்
    புஷ்டிம் க்ருஷீஷ்ட
    மம புஷ்கர விஷ்டராயா 8



    எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.


    தத்யாத் தயானுபவனோ
    த்ரவிணாம் புதாராம்
    அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
    சிசெள விஷன்ணே
    துஷ்கர்ம தர்மமபனீய
    சிராயதூரம்
    நாராயண ப்ரணயனீ
    நயனாம் புவாஹ: 9



    எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.


    கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
    சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
    ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
    மேலிஷீ ஸம்ஸ்திதாயை
    தஸ்யை நமஸ்த்ரி புவனைக
    குரோஸ்தருண்யை! 10



    திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.


    ஸ்ருத்யை நமோஸ்து
    சுபகர்ம பலப்ரஸீத்யை
    ரத்யை நமோஸ்துரமணீய
    குணார்ணவாயை
    சக்த்யை நமோஸ்து
    சதபத்ர நிகேதெனாயை
    புஷ்ட்யை நமோஸ்து
    புருஷோத்தம வல்லபாயை 11



    நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.


    நமோஸ்து நாலீக நிபானனாயை
    நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
    நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
    நமோஸ்து நாராயண வல்லபாயை: 12



    பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.


    நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
    நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
    நமோஸ்து தேவாதி தயாபராயை
    நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13



    முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.


    நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
    நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
    நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
    நமோஸ்து தாமோதர வல்லபாயை 14



    சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.


    நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
    நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
    நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
    நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15



    சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.


    ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
    நந்தனானி
    ஸாம்ராஜ்யதான
    விபவானி ஸரோருஹாணி
    த்வத் வந்தனானி துரிதா
    ஹரணோத்யதானி
    மாமேவ மாதரனிசம்
    கலயந்து மான்யே 16



    எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.


    யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
    ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
    ஸந்தனோதி வசனாங்க மானஸை
    த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17



    தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.


    ஸரஸிஜ நிலயே ஸரோஜ
    ஹஸ்தே
    தவல தராம்சுக
    கந்த மால்ய சோபே
    பகவதி ஹரிவல்லபே
    மனோஜ்ஞே
    த்ரிபுவன பூதிகரி
    ப்ரஸீத மஹ்யம் 18



    சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.


    திக்தஸ்திபி கனக கும்ப
    முகாவஸ்ருஷ்ட
    ஸ்வர்வாகினி விமலசாரு
    ஜலாம்னு தாங்கீம
    ப்ராதர் நமாமி ஜகதாம்
    ஜனனீம் அக்ஷே
    லோகாதி நாதக்ரு ஹிணீம்
    அம்ருதாப்தி புத்ரீம் 19



    பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.


    கமலே கமலாட்ச வல்லபேத்வம்
    கருணாபூர தரங்கிதைரபாங்கை
    அவலோகய மாமநிஞ் சனானாம்
    ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20



    எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.


    ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
    த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
    குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
    பவந்தி தே புவி புத பாவிதாசயா 21



    மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.
     
  6. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம்


    நமஸ்தே லலிதே! தேவி ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி! பக்தாநாம் இஷ்டதே! மாத: ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    சந்த்ரோதயம் க்ருதவதி! தாடங்கேந, மஹேச்வரி ஆயுர் தேஹி ஜகத்மாத: ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    ஸடதாகடேச ஸ்ரீகாந்தே! சரணாகதவத்ஸலே. ஆரோக்யம் தேஹிமே நித்யம் ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    கல்யாணி! மங்களம்ஸ்ரீதேஹி, ஜகந்மங்கள காரிணி! ஐச்வர்யம் தேஹிமே, நித்யம். ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    சந்த்ர மண்டலமத்யஸ்தே! மஹாத்ரிபுரஸஞ்ந்தரி! ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    ராஜீவலோசனே, பூர்ணே! பூர்ண சந்த்ரவிதாயினி! ஸௌபாக்யம் தேஹிமேநித்யம், ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    கணேசஸ்கந்த ஜநதி! வேதரூபே! தனேச்வரி! வித்யாம் ச தேஹி மே கீர்த்திம் ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    ஸஞ்வாஸி நிப்ரியே மாத: ஸௌமங்கல்ய விவர்த்தினி! மாங்கல்யம், தேஹிமே நித்யம் ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    மார்க்கண்டேய மஹாபக்த ஸஞ்ப்ரஹ்மண்ய ஸஞ்பூஜிதே. ஸ்ரீ ராஜராஜேச்வரீ த்வம்ஹி! ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.


    ஸாந்நித்யம் குரு கல்யாணி மம பூஜா க்ரஹே சுபே பிம்பே தீபே ததா புஷ்பே ஹரித்ரா குங்குமே மம


    ஸ்ரீ அபிராம்யா இதம் ஸ்தோத்ரம் ய: படேத் சக்திஸந்நிதௌ ஆயுர் பலம் யசோ வர்ச்சோ மங்களம் ச பவேத் ஸஞ்கம்.
     
  7. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்


    மார்க்கண்டேய மஹரிஷியால் செய்யப்பட்டது. யமபயம், கெட்ட ஸ்வப்னம், சத்ரு பயம் முதலிய கஷ்டங்களை நீக்கும்.


    ஸ்ரீ கணேசாய நம:ll ஒம் அஸ்ய ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜயஸ்தோத்ரமந்த்ரஸ்ய ஸ்ரீ மார்க்கண்டேய ருஷி: l அனுஷ்டுப் சந்த்: ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜயோ தேவதாl கேளரீ ஸக்தி: l மம ஸர்வாரிஷ்ட ஸமஸ்த ம்ருத்யு ஸாந்த்யர்த்தம் ஸகலைஸ்வர்ய ப்ராப்த்யர்த்தம் ஜபே விநியோக:l அத த்யானம்:ll


    சந்திரன், ஸடர்யன், அக்னி இவர்களைக் கண்களாக உடையவனும், புன்சிரிப்புடன் கூடிய முகமுள்ளவனும், இரண்டு தாமரைப் பூக்களில் அமர்ந்தவனும், சின் முத்திரை பாசம், மான், ருத்திராக்ஷ மாலை இவைகளால் பிரகாசிக் கின்ற கைகளையுடைவனும், சந்திரனுக்கொப்பான காந்தியுடையவனும், கோடி சந்திரமண்டலங்களிலிருந்து பெருகுகின்ற அமிருதத்தினால் நனைக்கப்பட்ட சரீரத்தையுடையவனும், முக்தாஹாரம் முதலிய ஆபரணங்களால் பிரகாசிக்கின்றவனும், அழகு வாய்ந்தவனும், உலகங்களை மோஹிக்கப்பண்ணுகிறவனும், பசுபதியும், ம்ருத்யுவை ஜெயித்தவனுமான பரமசிவனை த்யானிக்கவேண்டும்.


    மார்க்கண்டேய மஹரிஷியால் செய்யப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை சிவஸந்நிதியில் எவன் படிக்கிறானோ அவனுக்கு ம்ருத்யு பயம் கிடையாது. நெருப்பு, திருடர்கள் இவர்களால் ஏற்படக்கூடிய பயம்
    ஒரிடத்திலும் கிடையாது.

    யமனை ஜெயித்தவனே, மஹாதேவனே, கர்மாவின் பயன்களான பிறப்பு, இறப்பு, கிழத்தனம், வியாதி இவைகளால் பீடிக்கப்பட்டவனும், சரணாகதி செய்கிறவனுமான என்னைக் காக்கவேண்டும்.

    ஸ்ரீ ஸஞ்கத்தையளிப்பவரே, நான் எப்பொழுதும் என்னுடைய பிராணனையும் என் மனதையும் தங்களிடத்தில் அர்ப்பணம் செய்திருக்கின்றேன். நான் தங்களைச் சேர்ந்தவன் என்று பரமேச்வரனிடத்தில் தெரியப்படுத்தி


    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸஞ்கந்திம் புஷ்டிவர்தநம்|
    உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர்முக்ஷஞயமா(அ)ம்ருதாத்|


    அம்பாளுடன் கூடினவனும், பாபங்களைப் போக்குகின்றவனும், பரமாத்மாவும், நமஸ்கரித்தவர்களுடைய மனக்கவலையைப் போக்குகின்றவனும், ஞானிகளுக்குப் பதியுமான பரமசிவனை நஸ்கரிக்கின்றேன்.

    மஹாம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரம் முற்றிற்று
     
    Last edited: Sep 10, 2007
  8. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    தசாதர் செய்த சனைச்சர ஸ்தோத்ரம்



    ஸ்ரீகணேஸாய நம:ll



    அஸ்ய ஸ்ரீஸனைஸ்சர ஸ்தோத்ர மந்த்ரஸ்ய தஸரத ரிஷி:l ஸனைஸ்சரோ தேவதா l த்ரிஷ்டுப் சந்த:l ஸனைஸ்சரப்ரீத்யர்த்தம் ஜயே வினியோக:ll




    கோணன் முடிவைச் செய்பவன். ரெளத்ரன் இந்திரியங்களை அடக்குபவன். பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், ஸடர்யபுத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனைச்சரன் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவனாகவாகி சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய ஸடர்ய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.



    கெட்டஸ்தானத்தில் இருக்கும் பொழுது தேவாஸஞ்ரர்கள், கிம்புருஷ்ர்கள், நாகர்கள், கந்தர்வர், வித்யாதரர், பன்னகர் முதலியோரையும் பீடிக்கும் ஸடர்யபுத்திரனான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.



    மனிதர், அரசர், பசுக்கள், ஸிம்ஹங்கள், காட்டில் உள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய யாவும் சனைச்சரன் கெட்ட ஸ்தானத்தில் இருப்பதால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய ஸடர்ய புத்திரனான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.



    சனைச்சரன் கெட்டஸ்தானத்திலிருப்பதால் தேசங்களும், நெருக்கமான காடுகளும், ஸேனையின் கூடாரங்களும், நகரங்களும் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சூர்ய புத்திரனான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.



    தனது நாளான சனிக்கிழமையில் எள்ளு, யவை, உளுந்து, சர்க்கரான்னம் இவற்றை தானம் செய்வதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தானம் செய்வதாலும், தனது மந்திரங்களாலும் சனைச்சரன் ப்ரீதி அடைகிறான். அத்தகையஸடர்யபுத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.



    ஸடக்ஷ்ம ரூபியாயிருந்தும், ப்ரயாகை டீக்ஷத்திரத்திலும், யமுனை ஸரஸ்வதி இப்புண்ணிய நதிக்கரைகளிலும், குகையிலும் இருக்கும் யோகிகளின் த்யானத்துக்கு விஷயமான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.



    சனிக்கிழமையில் வெளி இடத்திலிருந்து தன் வீட்டை அடைபவன் ஸஞ்கமடைவான். அன்றைய தினம் வீட்டை விட்டுக் கிளம்பியவன் திரும்ப அக்காரியத்தற்காக வெளியே போகவேண்டியிராது. இத்தகைய சக்திபடைத்த சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.


    மூவுலகின் சிருஷ்டிகர்ததாவான ப்ரம்மாவாகவும், ரக்ஷகனான விஷ்ணுவாகவும், ஸம்ஹர்த்தாவான சிவனாகவும், மேலும் ருக், யஜுஸ், ஸாம ரூபியாகவும் விளங்கும் சனைச்சரனுக்கு நமஸ்காரம். இந்த சனைச்சர அஷ்டகத்தை தினம் காலை வேளையில் ஆசாரத்துடன் படிப்பவர் ஸத்புத்திரர், பசுக்கள், பந்துக்கள் இவர்களுடன் செளக்கியத்தை அனுபவிப்பதுடன் முடிவில் மோக்ஷத்தையும் அடைவர்.



    த்ரிகோணத்திலிருப்பவன், பிங்களரூபி, பிரகாசிப்பவன், கருப்பு நிறமுள்ளவன், பயங்கரன், அழிவைச் செய்பவன், அடக்குபவன், ஸடர்யபுத்திரன், ராசிகளில் தாமதமாக ஸஞ்சரிப்பவன், மந்தகதி உள்ளவன் என்று பிப்பலாதரால் துதிக்கப்பட்டவன்.
    இந்தப் பத்து நாமாக்களையும் காலையில் எழுந்ததும் படித்தால் சனைச்சரனால் ஏற்படும் பீடை ஒரு போதும் ஏற்படாது.



    சனைச்சர ஸ்தோத்ரம் முற்றிற்று
     
  9. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    நவக்ரஹ த்யானம்




    அர்கஸோம குஜம் ஸெளம்ய குரு ஸஞ்க்ர ஸனைஸ்சர
    ராஹஞ்கேது க்ரஹம் தேவம் வந்தனம் பாதபங்கஜம்

     
  10. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்




    நமஸ் தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸஞ்ரபூஜிதே ஸ்ரீ சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே 1


    நமஸ் தே கருடாருடே டோலாஸஞ்ர பயங்கரி I ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே II 2


    ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி I ஸர்வதுக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே 3


    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரமதாயினி I மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே II 4


    ஆத்யந்தரஹிதே தேவி ஆதிசக்தி மஹேச்வரி I யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ(அ) ஸ்து தே II 5


    ஸ்த்தூல ஸஞ்க்ஷ்ம மஸாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே I மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே II 6


    பத்மாஸன் ஸ்த்திதேதேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி I பரமேசி ஜகந்மாத : மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே II 7


    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்காரபூஷிதே I ஜகத்ஸ்த்திதே ஜகந்மாத : மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே II 8


    மஹாலக்ஷ்மி யஷ்டகஸ்தோத்ரம் ய: படேக் பக்திமான்நர : I ஸர்வஸித்தி மவாப்னேதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா II 9


    ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாசநம் I த்விகாலே ய: படேந் நித்யம் தனதாந்ய ஸமந்வித : II 10


    த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம் I மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா II 11
     

Share This Page