1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

En Kanavar-extracts Of Speech By Chellammal Bharathi In 1951in All India Radio

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Sep 22, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,667
    Likes Received:
    10,817
    Trophy Points:
    438
    Gender:
    Female
    காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.
    ஸ்நானம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதத்தில் அமையும்.
    சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது.
    வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல்.
    சூரியகிரணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம்.
    காலைக் காப்பி, தோசை பிரதானமா யிருக்க வேண்டும் அவருக்கு.
    தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
    அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும், குருவியும்
    அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள்.
    எதை வேண்டு மானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
    சிஷ்யருக்குக் குறைவு இராது.
    செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை.
    கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும்.
    களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும்.
    அதுதான் கவலை!
    இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை.
    எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது.
    இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
    புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது.
    சிறைச்சாலை என்ன செய்யும்?
    ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான்.
    எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு.
    ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்கு சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
    புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின.
    புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி,
    புதுக் கவிதை இவை தோன்றின.
    இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.
    பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா, வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே,
    பெண் விடுதலை அவசியம் என்ற முடிவுகண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.
    இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்டபாடு சொல்லுந் தரமன்று.
    புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும்,
    தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார்.
    வானொலியில்
    என் கணவர்
    என்ற தலைப்பில்
    செல்லம்மாள்
    பாரதி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
    JAYASALA 42
     
    Loading...

Share This Page