1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Drive The Horse

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 12, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    துறவி ஒருவர் ஒருஊருக்கு சென்றார்.
    பலர்வந்து அவரைதரிசித்து ஆசிபெற்று சென்றனர்.
    இளைஞன் ஒருவன் வந்தான்
    "சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப்போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனிதகுலத்திற்கு பலஅறிவுரைகள் சொல்லியுள்ளனர்.
    ஆனால்இன்றும்
    மனிதன் தீயவழியில்தான்செல்கிறான் , உங்களைப்போன்றவர்களின்
    அறிவுரைகளால்என்னபயன்......??? என்றுகேட்டான்.
    துறவிஅவனிடம்சொன்னார்......
    தம்பி,நான் இன்னும் சில நாட்கள் இங்கேதான் தங்கி இருப்பேன், நான் இந்தஊரைவிட்டு செல்லும்பொழுது நீ கேட்டகேள்விக்கு பதில்சொல்கிறேன் , அதற்குமுன்ஒருவேலைசெய்.
    "ஒரு குதிரையை கொண்டுவந்து இந்தகோயில் மண்டபத்தில் கட்டிவை.
    நான்ஊரைவிட்டு செல்லும்வரை குதிரைஅங்கே கட்டி இருக்கட்டும்.
    தினமும் இரவு அதற்கு உணவு வைத்துவிடு" என்று சொல்லிவிட்டு அருகில்உள்ளசத்திரத்துக்கு சென்றார்.
    மறுநாள் காலைதுறவி அந்தகோயில் மண்டபத்திற்கு வந்தார்.
    அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்தசாணத்தையும், அதுமிச்சம்வைத்த உணவு குப்பைகளையும்சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தான்.
    இவ்வாறு நான்குநாட்கள் தொடர்ந்து நடந்தன.
    அடுத்தநாள் காலை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த இளைஞர்கிட்டே வந்தார் துறவி.
    இன்று சுத்தப்படுத்தினாலும் இந்தஇடத்தை குதிரை மீண்டும் மீண்டும்அசுத்தம் செய்துவிடுகின்றதே;பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்றுகேட்டார்.
    அதற்கு அவன்,
    என்னசாமிஎல்லாம்தெரிஞ்சநீங்கஇப்படி கேட்கரீங்க.....???
    திரும்பதிரும்ப அசுத்தம்ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்கமுடியுமா....???
    இதைகேட்ட துறவி அப்போது சொன்னார் "தம்பி அன்று நீ என்னிடம் கேட்டகேள்விக்கு இதுதான்பதில்.
    நீ செய்யும்வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும்சுத்தம்செய்வதுபோல் , மனிதர்களை நல்வழிபடுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.
    இளைஞன்கேட்டான்” சாமிஇதற்கு நிரந்தர தீர்வுஎன்ன....???
    அவர் உடனே அங்கு கட்டிஇருந்த குதிரையை அவிழ்த்துவிட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப்பார்த்துக்கேட்டார்
    “இனிஇந்தஇடம்அசுத்தம்ஆகுமா......???
    ஆகாதுசாமி. என்றான்
    துறவிகூறினார் ” உன்கேள்விக்குஇதான்பதில்.
    நீ செய்தவேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
    இப்பொழுது நான் செய்த வேலையைப்போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீயஎண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டிவிடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப்படுத்தும் கடமைமுடிந்துவிடும், அன்றுவரை மனிதனை நன்னெறிபடுத்துவது ஆன்மிகத்தின்கடமைஎன்றார்...
    jayasala 42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Sollammal sollum padilkalil ganum radhika than. Eliyadhum koda. Purinthu maghivadthu adhanal than. Arpuda oviyama xilai kaviyamaa.
    NANRI NANRI NANRI
    MEENDUM VARUGA.
    KADAVUL ENNRUM NAM PAKKAM.
     

Share This Page