Daily Slogans

Discussion in 'Pujas Prayers & Slokas' started by durgadeviramesh, Apr 23, 2016.

  1. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    3106ef5d244bf7f63dd136788f506a43.jpg ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி

    சுக்லாம்பரதரம் விஷ்ணும்
    சசிவர்ணம் சதுர்புஜம்
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
    ஸர்வ விக்ணோபசாந்தயே

    வகாதுண்ட மஹாகாய
    ஸூர்ய கோடி ஸமப்ரப
    அவிக்னம் குருமே தேவ
    ஸர்வ கார்யேஷு ஸர்வதா

    கஜாநநம் பூதகணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூபலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக விநாச காரணம்
    நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்

    அகஜானன பத்மார்க்கம்
    கஜானனம் அஹர்நிசம்
    அநேகதம் தம் பக்தானாம்
    ஏகதந்தம் உபாஸ்மஹ
     
    Loading...

  2. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    VISHNU_copy.jpg ராம கோவிந்த ஹரி


    பஜோரே பையா ராம கோவிந்த ஹரி
    ராம கோவிந்த ஹரி

    ஜப தப சாதன கச்சு நஹி லாகத்
    கரசத் நஹி கத்ரி (பஜோ)

    சந்தத் சம்பத் சுக கே காரண
    ஜாசோ போல் பரீ (பஜோ)

    கஹத கபீரா ஜாமுத் ராம நஹீ
    வா முக் தூள் பரீ (பஜோ)

    பொருள் :

    ராம கோவிந்தன் ஹரி இவர்கள் நாமங்களை ஜெபியுங்கள், நீங்கள் செய்யும் மற்ற ஜபங்கள், தவங்கள் எத்தினாலும் உங்கள் பழைய வினைப் பயன்கள் இருக்கும் பாண்டம் காலியாவதில்லை. புத்திரர்கள், சொத்துக்கள் ஆகிய மற்ற சுகம் தரும் சாதனங்களால் தவறுகள் தான் பாவங்கள்தான் சேருகின்றன. எந்த முகமானது ராமனை காணவில்லையோ, அந்த முகம் புழுதி நிறைந்ததே. அதனால் ராமனை விடாது ஜெபி.
     
  3. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    FB_IMG_1452186694820.jpg சிவ தரிசனம் செய்யும் போது பாட வேண்டிய பாடல்


    நாம் இறைவனை வணங்கும்போது, அப்பர் சுவாமிகள் அருளிய கீழ்க்கண்ட தேவாரப் பாடலை ஓதி வழிபட வேண்டும். இதனால் வழிபாட்டில் குறை இருந்தாலும் இறைவன் மன்னித்தருள்வார்.

    `பக்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ!
    எத்தினாற் பக்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
    முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடுகின்ற
    அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே!
     
  4. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    th(4).jpg தன்வந்திரி மந்திரம்‬


    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.

    ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |
    அமிர்தகலச ஹஸ்தாய |
    சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |
    ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||

    - கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தால் வியாதிகள் நீங்கும். வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம். மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.
     
    Savibas likes this.
  5. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    நவக்கிரக தோஷம் நீங்க ஸ்லோகம்

    ராஹுர் மந்த: கவிர் ஜீவ:
    புதோ பௌம ஸஸீ ரவி:
    கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:
    ஸ்தாவரோ ஜங்கமோஜகத்

    - இதைப் தினமும் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
     
    Savibas likes this.
  6. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    th.jpg அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:-

    ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
    பக்ஷீ சதுர் பாஹுக:
    பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
    காலாக்னி கோடித்யுதி:
    விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
    பிரும்மேந்திர முக்யைஸ்துத:
    கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
    ஸத் யோரிபுக் னோஸ்து

    (சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

    - இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்
     
    Savibas likes this.
  7. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    depositphotos_8935807-Hindu-god-Hanuman.jpg யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
    தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
    பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
    மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

    - என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள்.

    கடைசி வரியில் உள்ள 'ராக்ஷஸாந்தகம்’ என்பது, 'அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும்.

    அனுமனை உபாஸித்து அருள் பெற, 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.

    அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
     
    Savibas likes this.
  8. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    குருவின் சந்நிதியில் பாட வேண்டிய பாடல்

    வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
    காணா இன்பம் காண வைப்பவனே!
    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
    நிலையாய் தந்திட நேரினில் வருக!'
    நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    - என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம்.
     
    Savibas likes this.
  9. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female
    Lord Brahma 3.jpg வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பமும், நிம்மதியும் தரும் மந்திரம்


    சாவித்திரி வேதமாதாச காயத்ரி சரஸ்வதி
    சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ சதாசர்வ அர்த்த சாதினீ
    சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச

    ஸ்ரீ கருட புராணத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்லோகமானது, எமது பாவவினைகளை தீர்க்கும் தன்மை பெற்றது. இறைவனை தொழும் போது செம்பில் தண்ணீர் கொண்டு இடக்கரத்தில் ஏந்தி இம்மந்திரத்தை 3 தடவை உச்சரித்து, அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்து,

    சிறிதளவை அருந்தி வந்தால் சிறந்த பலன்கள் கிட்டும்.

    குளிக்க செல்லும் முன் தண்ணீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை உச்சரிக்க வேண்டும்.

    அவ்வாறு ப்ராயணம் செய்த பின்னர் குளித்தால் நம்மில் உள்ள பாவ கருமங்கள் நீங்கி நமக்கு வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பமும், நிம்மதியும் பெருகும்.
     
    Savibas likes this.
  10. durgadeviramesh

    durgadeviramesh Platinum IL'ite

    Messages:
    209
    Likes Received:
    690
    Trophy Points:
    225
    Gender:
    Female

Share This Page