1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Conversation( Sambaashanai)

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 5, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு சம்பாஷணை

    ஒரு கிராமத்தின் பாதையில் இயற்கையின் பூரிப்பில் மூழ்கி திளைத்து நடந்து சென்று கொண்டிருந்தேன். எங்கும் பச்சைப் பசேல். கண்ணுக்கெட்டியவரை வரப்பு கட்டிய பாத்திகள், சுற்றிலும் வித விதமான அடர்ந்த மரங்கள், ஜிலு ஜிலு வென்ற காற்றில் சல சல என்று ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால், அதற்கு ஆதாரமான ஒரு ஏரியிலிருந்து புறப்பட்டு வந்த குளிர் தென்றல் என்னை குளிப்பாட்டியது. நான் ஒரு மண் பாதையில் நடந்து வந்தவன் ஒரு கண்மாயியின் சுவற்று விளிம்பில் உட்கார்ந்திருந்தேன். மேலே மரத்திலிருந்து பவழமல்லி மலர்கள் என் மேல் அபிஷேகம்.

    சூரியன் இன்னும் மறையவில்லை. மெதுவாக மேற்கே இறங்கிக்கொண்டிருந்த வேளை . நான் அமர்ந்த இடத்தில் இருந்த மரத்தின் மேலே ஒரு தாயிடம் ஒரு கிளிக் குஞ்சு பேசிக் கொண்டிருந்தது எனக்கு திடீரென்று புரிந்தது. எப்படியோ எனக்கு ஒரு தெய்வீக சக்தி வந்ததாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?


    ''அம்மா பட்டாசு பட்டாசு என்று எதையோ சத்தம் பண்ணுகிறார்களே அது எதற்கு அம்மா? ரொம்ப பயமா இருக்கே எனக்கு?''

    ''ஆமாண்டா கண்ணு, நானும் எல்லா இடத்திலேயும் பார்த்தேன். ஏதோ பண்டிகை, விழா, என்னவோ காரணம் எல்லாம் சொல்லி கூட்டமா சேர்ந்து, நிறைய காசை செலவு பண்ணி படார் படார் னு வெடிக்கிறவழக்கம் இந்த மனுசங்களுக்கு. அது நம் வர்கத்தை மட்டுமில்லே, மிருகங்களைக் கூட கதி கலங்க அடிக்குது''


    ''சில இடத்திலே நிறைய பளிச் பளிச்சுன்னு வெளிச்சம் எல்லாம் கூட இருக்கே.''

    ''ஆமாம் ஆமாம். அதெல்லாம் மத்தாப்பு வகை என்பாங்க. திடீரென்று நமக்கு இருக்கிறமாதிரி ரெக்கை முளைச்சது போல் விர்ரென்று கீழே இருந்து மேலே பறந்து போவுது. சிலது நிறைய கலர் கலரா சுறு சுறுன்னு எரியறது. சிலது மேலே பறந்து போய் படார்னு வெடிக்கிறது. கலர் கலர் துண்டுகளாக சிதறுது. நமக்கு பயமா இருக்கு. இறை தேட கூட எங்கும் போக முடியலே. புகை நெஞ்சை கமருது. இருமல் வருது. பட்டணத்திலே ரொம்ப ஜாஸ்தி.

    ''பட்டணம் என்றால் என்னம்மா?''

    ''அதுவா, நாம இருக்கிற மரமே இல்லாம எங்கேயுமே உயர உயரமா கல்லுக் கட்டிடமா இருக்குமாம். தண்ணி இருக்காதாம். ஒரே சத்தமா இருக்குமாம். டீசல் பெட்ரோல் என்று என்னமோ சொல்றாங்க அதோட நாற்றம் மூச்சை அடைக்குமாம். அங்கிருந்து வந்த ஒரு கொக்கு சொல்லிச்சு. நாம அங்கே தங்கவே இடமே இல்லையாம்''

    ''அம்மா எனக்கு அங்கேயெல்லாம் பறக்கவே பயமா இருக்கே.'' மரத்திலேயே இருப்போம்னு பார்த்தா மரமே இல்லை என்கிறியே.''

    '' கொக்கு கூட இதே தான் சொல்லிச்சு. அதுக்கு உக்காரவாவது ஒரு குச்சிககாடு கிடைச்சதேன்னு சந்தோஷமாம் .

    நீ சொன்ன பட்டணத்திலே எம்மா இப்படி நமக்கு மரமே இல்லை.

    '' அவங்க நம்ம வீட்டை எல்லாம் அழிச்சிட்டு அவங்க வீடு கட்டிட்டாங்கம்மா.''

    '' அப்படின்னா, மழையிலேயும் வெயிலில்லெயும் நாம் அலைஞ்சு பாதுகாப்பா ஒரு இடம் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம் இப்போ அங்கே ''

    ''அது மட்டுமில்ல கண்ணு, கொஞ்சம் அசந்தா நம்மை பிடிச்சு வித்துடறாங்களாம் இல்லேன்னா கொன்னு தின்னுடுவாங்களாம் . கொக்கு சொல்லிச்சு..
    இன்னும் கொஞ்ச நாள் தான் நாம எல்லோரும் இருக்கப்போறோம். இப்பவே நம்ம கூட்டம் குறைஞ்சிண்டே வரதாம் பட்டணத்திலே''

    ''அம்மா இந்த ஊரும்மாதிரி அங்கேயும் குழந்தைகளுக்கெல்லாம் நம்மை பிடிக்கும் இல்லே?''

    ''ஆமாம். அவங்களுக்கு நம்ம பொம்மையை எல்லாம் கலர் கலரா போட்டு புஸ்தகத்திலே காற்றான்கலாம். ப்லாச்டிக்காம், ரப்பராம் , அதிலே பண்ணி தருவாங்களாம். அந்த குழந்தைகள் எல்லாம் பெரியவங்களாகரத்துக்குள்ளே அவங்க மனசெல்லாம் மாத்திடுவாங்க. யாராவது ஒத்தர் ரெண்டு பேர் தான் நம்மை பத்தி கவலைப்படறாங்களாம். வெயிலுக்கு கொஞ்சமாவது தண்ணியாவது வைக்கறாங்களாம்''

    இது அக்ரமம் இல்லையா.?

    இல்லை இது பேரு நாகரிக வளர்ச்சியாம்.

    இயற்கையை அழிச்சு அவங்க உண்டாக்கற பேய்த்தோற்றம் இது என்று கூட சொல்லலாமா?

    தெரியலே.

    Jayasala 42
     
    Maithilli likes this.
  2. Maithilli

    Maithilli New IL'ite

    Messages:
    21
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    A thought provoking thread written really in a nice humourous way..
     
  3. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    (அ)நாகரிக வளர்ச்சி. இயற்கையை வளர்ப்போம். இயற்கையாக வாழ்வோம்.

    சரவண குமார்
     

Share This Page