1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Borewell

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 30, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    போர்வெல்லில் விழுந்த குழந்தைக்கு பிரார்த்தனை செய்துகொண்டே, பிதுங்கி வழியும் பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் 3 குழந்தைக்கு தகப்பன் ஒருவன்.

    போர்வெல் குழந்தைக்கு பரிதாபப்பட்டுக்கொண்டே 16 பள்ளி பிள்ளைகளை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றான் ஒருவன்.

    போர்வெல்லை மூடாதவனை திட்டிக்கொண்டே ஒன்வேயில் பைக்கை ஓட்டிச் சென்றான் ஒருவன்.

    லஞ்சம் வாங்கிக்கொண்டு பஸ்ஸுக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்கிறான் ஒருவன்.

    சந்திராயனுக்கும் போர்வெல்லுக்கும் முடிச்சுப் போட்டு அரசாங்கத்தை திட்டிக்கொண்டே 1500 ருபாய்க்கு டிக்கெட் எடுத்து கூத்தாடியின் சினிமாவை பார்க்க சென்றான் ஒருவன்.

    சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக்கொண்டே ரோட்டோர டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒருவன்.

    மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து அப்லோட் செய்கிறான் ஒருவன்.

    மக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும்வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு, 50000 ஆயிரம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் வாங்குகிறான் ஒருவன்.

    பொருளாதாரம் சரிந்து போனதால் மனம் உடைந்து தினமும் 500 ரூபாய் டாஸ்மாக் க்கு வரி கட்டுகிறான் ஒருவன்.

    நீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டே, தொழிற்சாலைகளால்தான் காற்று மாசு படுகிறது என்கிறான் ஒருவன்.


    நிர்பயாவிற்கு பிறகு 40000 நிர்பயாவை பார்த்தாச்சி.

    சுஜித்துக்கு பிறகு பல சுஜித்தையும் பார்க்கத்தான் போகிறோம்.

    அடுத்தவர் முதுகை பார்த்து சிரிக்கும் எவனும் தன் முதுகை சுத்தமாக வைப்பதில்லை.

    முன்னெச்சரிக்கை என்று ஏட்டில்தான் படித்திருக்கிறேன். பின்னெச்சரிக்கை என்பதை மட்டும் தான் நாட்டில் பார்க்கிறேன்.

    இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய பொழுதுபோக்கு வந்தால்.

    ஆம் அனைத்தையும் பொழுதுபோக்காகத்தான் விற்பனை செய்கிறான் ஒருவன்.

    தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கு பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது. நமக்கு உணவு இல்லை என்றாலும் பொழுதுபோக்குதானே முக்கியம்.

    பொழுதை போக்குவோம் நன்றாக.


    jayasala42
     
    joylokhi and nemesis like this.
    Loading...

  2. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,518
    Trophy Points:
    283
    Gender:
    Male
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    It is reported thus

    சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை வீட்டில் டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரின் 2 வயது மகள், தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் அடுத்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். மீன்பிடித் தொழில் செய்துவரும் இவரின் மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் சிறிது நேரம் கழித்து தன் சிறுமியை இருவரும் தேடியுள்ளனர். அக்கம் பக்கத்து உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், லிங்கேஸ்வரன், தனது வீட்டின் குளியலறையை திறந்து பார்த்துள்ளார். அங்கிருந்த தண்ணீர் டிரம்மிற்குள், தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் முச்சுப் பேச்சின்றி சிறுமி கிடந்துள்ளார்.


    jayasala42
     

Share This Page