1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"Bakthi VishayangaL" [Thanks to Depaam Magazine.]

Discussion in 'Posts in Regional Languages' started by bharathymanian, Mar 11, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    [h=1]சௌந்தர்யலஹரி தோன்றிய இடம்[/h][​IMG]
    ஆசார்ய சங்கரர் அருளிய துதிகளில் விசேஷமானவை ‘சௌந்தர்யலஹரி’யும், ‘சிவானந்தலஹரி’யும். இவை தோன்றிய இடம் ஸ்ரீசைலம் அருகே இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் வியந்து போனோம். அதற்காகவே நடந்தது இந்தப் பயணம்.
    ஜோதிர்லிங்க மூர்த்திகளில் ஒருவரான மல்லிகார்ஜுனர் - பிரமராம்பிகையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீசைலம் ஆலயத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சதாரா. பால்தாரா - பஞ்சதாரா எனப்படும் இப்பகுதி - அடர்ந்த செடிகொடிகள், மரங்களின் இடையில் சில்லென்ற ஓசை, காற்று எழுப்பும் ஒலி என அமைந்த பள்ளத்தாக்கு. பிரதான சாலையிலிருந்து கீழ்நோக்கி இறங்குகிறோம். இறங்கியவுடன் இடப்புறம் சிறிய நீரோடை. அதன் அருகில் ஆறு நீர் ஊற்றுகள்.
    [​IMG]
    முதலாவது ஊற்று சிவன் பாதத்தில் இருந்தும், பிற ஐந்தும் சிவனின் பஞ்ச முகங்களிலிருந்தும் தோன்றியவை என்கிறார்கள். இவற்றை பால்தாரா, பஞ்சதாரா என்று அழைக்கின்றனர். பஞ்சதாரை என்ற ஐந்து ஊற்றுகளும் தற்போது ஒன்றாகக் கலந்து ஒரே ஊற்றாகப் பாய்கிறது. இங்கு பால்தாரை நீரின் சுவையும் பஞ்சதாரை நீரின் சுவையும் வித்தியாசப்படுகிறது.
    இங்குதான் ஆதிசங்கரர் நீண்டகாலம் தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுதுதான் புகழ்பெற்ற ‘சௌந்தர்ய லஹரி’, ‘சிவானந்த லஹரி’ மற்றும் ‘பிரமராம்பிகா அஷ்டகம்’ ஆகியவற்றைப் பாடினார் என்கிறார்கள். அவர் உட்கார்ந்து தவம் செய்த இடத்தின் மேல் உள்ள சுவரில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக இதை எழுதி வைத்திருக்கிறார்கள்.
    [​IMG]
    அந்த இடத்தில் உள்ள சன்னிதியில் ஆதிசங்கரரின் பாதங்கள், அவரின் திருஉருவம், சிவலிங்கம் மற்றும் அன்னை சாரதா தேவியின் உருவத்தையும் சலவைக் கற்களில் செய்து வைத்திருக்கிறார்கள்.
    ஆசார்யரை நாம் தரிசிக்காவிட்டாலும், அவர் பாதம் படிந்த திருநிலத்தைத் தரிசித்ததும்கூட நம் பூர்வபுண்ணியம். அங்கிருந்து புறப்படும்போது, நமக்குள் தோன்றிய எண்ணம் இதுதான்!
    - கே.ராஜலக்ஷ்மி, சென்னை
    தகவல் பலகை:
    ஸ்ரீசைலத்திலிருந்து 5 கி.மீ.. பிரதான சாலையில் உள்ளது. பஸ் / ஆட்டோவில் செல்லலாம்.
    தரிசன நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை
     
    1 person likes this.
    Loading...

Share This Page